Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவளி: இன நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட உறுதுணையாகட்டும்

Featured Replies

ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

சமூக நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்றைய தீபாவளி பண்டிகை உறுதுணையாக அமைகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தமது முயற்சியினால் வெற்றிகளாக மாற்றிக்கொள்ளும் மானிட சமூகம் அவ்வெற்றியையும் அதனால் கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை பல வழிகளில் கொண்டாடுவது உலக வழக்காக இருந்து வருகின்றது. அதேபோல் மனிதர்களின் தீய குணங்களாக கருதப்படுகின்ற அகங்காரம், பொறாமை, கோபம், குரோதம் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமை, பாசம் ஆகிய நற்குணங்களை வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கில் உலகவாழ் இந்துக்களால் தீபமேற்றிக் கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது பௌத்தர்களின் வெசாக் பண்டிகையை போன்று தென்பட்ட போதிலும் இந்துக்களின் இந்த தீபத் திருநாளாகிய தீபாவளியின் அர்த்தம் தீமையின் பக்கமிருந்த நரகாசுரனை அழித்து நன்மையின் பக்கமிருந்த கிருஷ்ணன் பெற்ற வெற்றியின் மூலம் மானிட சமூகத்திற்கு விடுதலையை பெற்றுக்கொடுத்த ஒரு வரலாற்று நிகழ்வின் நினைவுகூரலே என தெரிய வருகின்றது.

அந்தவகையில் சமூக நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய கலாசார விழாக்கள் உறுதுணையாக அமைகின்றன என்பது எனது எண்ணமாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் மட்டுமன்றி இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளில் செறிந்து வாழும் இந்து பக்தர்களால் பக்தியுடனும் விமரிசையாகவும் கொண்டாடப்படும் தீபத் திருநாளாகிய தீபாவளி கலாசார விழாவானது, நம் நாட்டுக்குள் மாத்திரமன்றி ஏனைய நாடுகளுடனும் சகோதரத்துவ பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாதகமான ஒரு நிலைமையாகவே அமைகின்றது. ஆகையால் மனித மனங்களில் படர்ந்திருக்கும் மடமை எனும் இருளைப் போக்கி அறிவொளி ஏற்றுவதாக இத்திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி அமைய வேண்டும். உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் இத்தீபாவளி திருநாளில் அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நீண்ட ஆயுளும் அவர்களுக்கு கிட்ட வேண்டுமென மனமார வாழ்த்துகின்றேன் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.thinakaran.lk/2019/10/27/உள்நாடு/42772/தீபாவளி-இன-நல்லிணக்கம்-புரிந்துணர்வு-ஏற்பட-உறுதுணையாகட்டும்

 

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்

ஐக்கியம், சமாதானம், ஒற்றுமை ஏற்பட திடசங்கற்பம் பூணுவோம்
பிரதமர் வாழ்த்து

ஐக்கியத்துடனும், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை இன்றைய தீபாவளி தினத்தில் நினைவுகூருவதுடன், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர இந்து மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தீபாவளி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று அனைத்து அம்சங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும், பொது சமூக ரீதியிலும் ஆன்மீக விடுதலைக்கான போராட்டத்தை வெற்றிகொள்வதை அடையாளப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களுக்கு கேடுவிளைவித்த நரகாசுரனைத் அழித்த தினம் மற்றும் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை என்பன விசேடமாக தீபாவளி தினத்தில் நினைவு கூரப்படுகிறன.

இந்த அனைத்து புராண இதிஹாசக் கதைகள், சம்பிரதாயங்கள், சமய அனுட்டானங்கள் ஊடாகவும் மனிதனிடமும் சமூகத்திலும் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டியடித்து நன்மை எனும் ஔியை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.

தீபாவளி அனுட்டானங்கள் ஊடாக தன்னிடமுள்ள அகங்காரம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நீக்கி நலன்மிகுந்த அம்சங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்பது இந்துமதத்தின் நம்பிக்கையாகும்.

மானிடம் மேலோங்கி, சமாதானம் நிலைபெற்று மனிதன் தனது தனிப்பட்ட அபிலாசைகள் தொடர்பாக மாத்திரம் கவனம் செலுத்தாது, ஏனையோரின் நலன்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும் எனத் தீபாவளி எடுத்தியம்புகிறது.

பிளவுபட்டுப் பிரிந்து செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும், தமது உள்ளங்களிலுள்ள ஞானத்தின் ஒளி அகன்று விடாது பேணிச் சென்று ஐக்கியத்துடனும், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதுடன், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர இந்துமக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும்தெரிவித்துள்ளார்.

https://www.thinakaran.lk/2019/10/27/உள்நாடு/42771/தீபாவளி-பண்டிகையைக்-கொண்டாடும்-அனைவருக்கும்-வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

அர்த்தம் புரியப்படாத தீபாவளித் திருநாள்

இன்று தீபத்திருநாள். உலகு வாழ் இந்துக்கள் தீபாவளித் திருநாளை கொண்டாடுகின்ற வேளையில், தீபாவளித் திருநாளின் தத்துவத்தை ஒரு கணம் பார்ப்பது பொருத்தமானது.

நரகாசுரன் என்பான் தேவர்களை இம்சை செய்யலானான். அவனின் அக்கிரமம் தாங்க முடியாத தேவர்கள் இறைவனிடம் முறையிட, காத்தல் கடவுளாகிய கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்கிறார்.
அசுரத்தனம் அழிந்துபோக, எங்கும் இன்பம் சூழ்கிறது. இன்பத்தின் அடையாளம் ஒளி. துன்பத்தின் அடையாளம் இருள். நரகாசுரன் அழிக்கப்பட்டதனால் தீபங்கள் ஏற்றி வழிபடு கின்ற நாளாக இன்றைய தீபாவளித் திருநாள் அமைகிறது.

 

புராணக்கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததாக அறிகின் றோம். ஆனால் எங்கள் நிஜ வாழ்வில் இன்னமும் நரகாசுரர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆம், இங்கு நரகாசுரர் என்பது எங்கள் மனத்திடை இருக்கின்ற அழுக்காறு, அவா, வெகுளி என்பனவாகும் என்பது புரிதற்குரியது.
ஆக, எங்கள் மனத்தின் இருளை முதலில் நாம் அகற்ற வேண்டும். மனத்தின் இருள் அகல்வதாயின் மனத்தில் ஒளியை ஏற்ற வேண்டும். மனத்தினது ஒளி என்பது அன்பால், இரக்கத்தால், ஈகையால், மனிதநேயத்தால், பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுவதால், பிறர்க்கு உதவுவதால், அன்பின் வடிவமாகிய இறைவனை அனுதினம் தொழுவதால் ஏற்படுவதாகும்.

ஆகவே தீபாவளி பண்டிகையின் உண்மையான அர்த்தம் எங்களிடம் இருக்கக்கூடிய அசுரத்தனமாகிய இருளை இல்லாது செய்வதற்காக மனதினில் ஒளியை ஏற்றுவதற்கான திருநாளாகும். இங்கு நரகாசுரன் வேறு எங்குமிலன். மாறாக அவன் எங்களுக்குள்ளேயே இருக்கிறான்.ஆம், மற்றவர்களை உதாசீனம் செய்வது, பிறர்க்குக் கெடுதி இழைப்பது, செய்ய வேண் டிய கடமையைச் செய்யாமல் விடுவது என்ற நரகாசுரத்தனம் எங்களுக்குள் இருந்து, எங் களை அதர்மத்தவர்களாக்கி நிற்கின்றன.

இந்த அதர்மத்தனங்கள் அரசியல் முதல் பொது நிர்வாகம் வரை விரிந்து பரந்து கிடக் கின்றது.
அரசியல் முதல் பொதுநிர்வாகம் வரையான அத்தனையும் பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்கானது.
எனினும் அந்த உண்மையை மறந்து தாம் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற கர்வம் தலைக்கேறியுள்ளது.

இங்குதான் தீபாவளித் திருநாள் அர்த்த மற்றுப் போகிறது.
 

பாருங்கள் அடுத்த தீபாவளிக்குள் எமக்குத் தீர்வு என்றார் சம்பந்தர் ஐயா.  ஆனால் ஏதும் நடந்ததுண்டா. ஆக, பொறுப்பானவர்கள் ஏமாற்றுவதையே ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிட்ட பின்பு; தீபாவளித் திருநாள் வெறும் பண்டிகை என்றே பொருள்படும். அவ்வளவுதான். 

http://valampurii.lk/valampurii/content.php?id=19642&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.