சர்வதேச ஆண்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியானது கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் இடம்பெற்று வருகின்றது. 

GettyImages-1071948692.jpg

நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் 1000 ஆவது ஆண்களுக்கான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின.

இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. 

இந் நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்ற 1000 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு : 20 போட்டிகளில் மறக்க முடியாத 20 பதிவுகளில் உங்களை மிகவும் கவர்ந்த பதிவு எது என்பதை அறிவதற்காக 'ESPN' என்ற முன்னணி விளையாட்டு செய்தி இணையத்தளமொன்று கருத்திக் கணிப்பினை மேற்கொண்டது.

இந்த 20 பதிவுகளில் இலங்கை அணி குறித்த 3 பதிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை பதிவாகியுள்ள கருத்துக் கணிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங் 6 ஆயிரம் வாக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

 

1. 2007 : யுவராஜ் சிங் - 6 X 6 (5.3k)

01.JPG

கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற 20:20 உலகக் கிண்ணத் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் சிங் 6 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

அத்துடன் 12 பந்துகளில் 50 ஓட்டங்களை வேகமாக பெற்ற வீரர் என்ற சாதனையையும் அவர் பதிவுசெய்தார்.

 

2. 2016 : கர்லொஸ் பிரித்வெய்ட் -  மே.இ.தீவுகள் அணிக்காக உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தமை - (6 k)

02.JPG

கடந்த 2016 ஆம் ஆண்டு 20:20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள் என்ற நிலையிலிருக்க பிரித்வெய்ட் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி கிண்ணத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தமை.

 

3. 2007 : இறுதிப் போட்டியில் இந்தியா திரில் வெற்றி - (3.4 k)

03.JPG

கடந்த 2007 ஆம் ஆண்டு 20:20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டுக்கள் மாத்திரம் மீதமிருக்க 6 பந்துகளுக்கு 13 ஓட்டம் தேவை என்ற நிலையும், 4 பந்துகளில் 6 ஓட்டங்கள் என்ற நிலையுமிருந்தது. 

மிஸ்பா உல்ஹாக் 43 ஓட்டங்களுடன் இந்தியாவுக்கு மரண பயம் காட்டி வந்தார். எனினும் ஓவரின் 3 ஆவது பந்தில் ஜொகிந்தர் சர்மாவின் பந்தில் ஸ்ரீசாந்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 3 ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

 

4. 2014 : 190 என்ற வெற்றியிலக்கை 13.5 ஓவரில் கடந்த நெதர்லாந்து -(1.9 k)

04.JPG

கடந்த 2014 ஆம் ஆண்டு 20:20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணி நிர்ணயித்த 190 என்ற வெற்றியிலக்கை 13.5 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து துரத்தியடித்த நெதர்லாந்து.

 

5. 2010 : அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றியை தட்டிப்பறித்த மைக்ஹஸி - (1.7 k)

05.JPG

கடந்த 2010 ஆம் ஆண்டு 20:20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 192 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியை தோல்வியின் விளிம்பிலிருந்து காப்பாற்றிய மைக்ஹஸி.

இப் போட்டியில் மொத்தமாக அவர் 24 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள், 6 சிக்ஸர்கள் அடங்கலாக 60 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

 

6. 2019 : 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் மலிங்க (1.5 k)

06.JPG

கடந்த செப்டெம்பர் மாதம் நியூஸிலாந்துடனான போட்டியில் 20:20 கிரிக்கெட் அரங்கில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை மலிங்க படைத்தார்.

அத்துடன் இப் போட்டியில் அவர் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களையும் சாய்த்தார்.

 

7. 2009 : ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரராக உமர்குல் - (1.2k)

07.JPG

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச 20:20 உலகக் கிண்ணத் தொடரில் நியூஸிலந்துக்கு எதிராக உமர் குல் 3 ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 6 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

 

8. 2012 : முதன் முறையாக மேற்கிந்தியத்தீவுகள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியமை - (1.1k)

08.JPG

கடந்த 2012 ஆம் இடம்பெற்ற 20:20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த 138 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை  அணி 101 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன்மூலம் 36 ஓட்டங்களினால் திரில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் முதன்முறையாக 20:20 உலகக் கிண்த்தை கைப்பற்றியது.

 

9. 2009 : லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த நெதர்லாந்து - (1k)

09.JPG

கடந்த 2009 ஆம் ஆண்டு 20:20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 163 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நெதர்லாந்து அணி 20 ஓவரின் நிறைவில் கடந்து, இங்கிலாந்து மண்ணில் சரித்திர வெற்றியை பதிவுசெய்தமை.

 

10. 2007 : சர்வதேச 20:20 கிரிக்கெட் அரங்கில் முதல் சதம் விளாசிய கெய்ல் - (998)

10.JPG

கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச 20:20 உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ் கெய்ல் 57 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 117 ஓட்டங்களை பெற்றார். கிறிஸ்கெயிலின் இந்த சதமே சர்வதேச 20:20 கிரிக்கெட் அரங்கில் வீரர் ஒருவர் பெற்ற முதல் சதம் ஆகும்.

 

11. 2012 : சர்வதேச 20:20 போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டை கைப்பற்றிய அஜந்த மெண்டீஸ்  - (762)

11.JPG

கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிம்பாப்வே அணியுடனான சர்வதேச 20:20 போட்டியில் அஜந்த மெண்டீஸ் 4 ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

 

12. 2014 : இலங்கை அணி முதன்முறையாக சர்வதேச 20:20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது - (957)

12.JPG

கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச 20:20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி நிர்ணயித்த 131 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை 17.5 ஓவரில் கடந்து, முதன் முதலாக இலங்கை அணி 20:20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

13. 2017 : 35 பந்துகளில் சதம் விளாசிய டேவிட் மில்லிர் - (917)

13.JPG

கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றர் மில்லர். 

எனினும் அடுத்த இரண்டு மாதத்தில் இந்த சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.

 

14. 2019 : சர்வதேச 20:20 கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய ஓட்டங்களை பதிவுசெய்த ஆப்கானிஸ்தான் - (873)

14.JPG

கடந்த பெப்ரவரி மாதம் அயர்லாந்து அணியுடனான 20:20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை குவித்தது.

இப் போட்டியில் ஹஸ்ரத்துல்லா ஸசாய் 62 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 164 ஓட்டங்களை பெற்றார்.

 

15. 2017 உலக 11 பேர் கொண்ட வீரர்களுடன் மோதி பாகிஸ்தான் சம்பியனானமை - (736)

15.JPG

 

16. 2005 : முதலாவது சர்வதேச 20:20 கிரிக்கெட் போட்டி - (614)

16.JPG

கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதலாவது சர்வதேச 20:20 கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஆக்லண்டில் இடம்பெற்றது.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 44 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

 

17. 2013 : 70 பந்துகளில் 156 ஓட்டங்களை விளாசிய பிஞ்ச் - (423)

17.JPG

கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச 20:20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆரோன் பிஞ்ச் 63 பந்துகளில் 11 நான்கு ஓட்டம், 14 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 156 ஓட்டங்களை பெற்றார்.

 

18. கிரிக்கெட் விளையாடும் 85 க்கும் மேற்பட்ட நாடுகளை ஐ.சி.சி. புள்ளிகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியமை (356)

 

19. 2006 : போல்ட் முறையில் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து - (301)

19.JPG

கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற 20:20 போட்டியில் நியூஸிலந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணி தலா 126 ஓட்டங்களுடன் சமநிலையில் இருந்தபோது.

போல்ட் முறையில் விக்கெட்டினை கைப்பற்றி வெற்றியைத் தீர்மானிக்க ஐ.சி.சி. முடிவுசெய்தது. இதில் நியூஸிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

 

20. 2011 : உலகக் கிண்ணத்தை முதன் முதலாக முத்தமிட்ட இங்கிலாந்து - (288)

20.JPG

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச 20:20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து முதன் முதலாக இங்கிலாந்து அணி கிரிக்கெட் அரங்கில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

https://www.virakesari.lk/article/68162