Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சினிமாவின் தந்தை

Featured Replies

தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தியவர்.

கே.சுப்பிரமணியம்

"காளிதாஸ்" படம் வெளிவந்தபின், வரிசையாகப் படங்கள் வரத்தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. புகழ் பெற்ற நாடகங்களையெல்லாம் சினிமாவாகத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை பெரும்பாலும் புராணக் கதைகள்.

சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். புகழும், பணமும் ஒருங்கே வரக்கூடிய துறை. எனவே, படத்தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம், படித்த இளைஞர்கள் சிலருக்கும் ஏற்பட்டது.

அப்படி படத்தொழில் மீது ஆர்வம் கொண்டவர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர்.

தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் 1904_ம் ஆண்டு ஏப்ரல் 20_ந் தேதி கே.சுப்பிரமணியம் பிறந்தார். தந்தை சி.எஸ்.கிருஷ்ணசுவாமி அய்யர். தாயார் வெங்கலட்சுமி அம்மாள்.

கிருஷ்ணசாமி அய்யர் பெரும் செல்வந்தர். நிலக்கிழார். எனவே, மகன் உயர் கல்வி கற்று வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதன்படி சுப்பிரமணியம் கும்பகோணத்தில் "பி.ஏ" தேறிய பின் சென்னையில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து "பி.எல்" பட்டம் பெற்றார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் ஊமைப்படங்கள் வரத்தொடங்கின. அவற்றைப் பார்த்த சுப்பிரமணியத்துக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. எனினும் தந்தையின் விருப்பப்படி, சொந்த ஊருக்குச் சென்று வக்கீல் தொழிலில் ஈடுபட்டார்.

இருப்பினும், ஆங்கிலப் படங்கள், தமிழ்ப்படங்கள், இந்திப் படங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து பார்த்து வந்தார். ஆர்வம் அதிகமாகியது. திரைப்பட உலகில் ஈடுபட முடிவு செய்தார்.

பாகவதர்

இந்தக் காலக்கட்டத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழர் ராஜா சாண்டோ, பம்பாயில் நடிகராகவும், டைரக்டராகவும் புகழ் பெற்று விளங்கினார். ஊமைப்பட காலத்தில் இருந்து சினிமாவின் சகல துறைகளிலும் பயிற்சி பெற்று, அனுபவம் பெற்றவர்.

தமிழ்ப்படங்களை டைரக்ட் செய்வதற்காக அவர் சென்னைக்கு வந்தார். ராஜா சாண்டோவிடமும், ஆர்.பத்மநாபன் என்ற இன்னொரு டைரக்டரிடமும் கே.சுப்பிரமணியம் டைரக்ஷன் துறையில் நேரடிப் பயிற்சி பெற்றார்.

வக்கீல் வேலைக்குப் படித்து பட்டம் பெற்ற சுப்பிரமணியம், திரைப்படத் துறையில் Žழைந்தது அவருடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பெரும் திகைப்பை அளித்தது. "வேண்டாம், விஷப்பரீட்சை" என்று எச்சரித்தவர்களும் உண்டு.

காரைக்குடியைச் சேர்ந்த ஏ.எல்.ஆர்.எம். அழகப்ப செட்டியாரும், "மானகிரி லேனா" என்று அழைக்கப்பட்ட லெட்சுமணன் செட்டியாரும், சினிமா படம் தயாரிக்க முடிவு செய்தனர்.

(பிற்காலத்தில், எம்.ஜி.ஆர்., பானுமதி, பத்மினி ஆகியோர் நடித்த "மதுரை வீரன்" படத்தை தயாரித்தவர் மானகிரி லேனாதான்)

அந்தக் காலத்தில், நாடகங்களில் பெரும்பாலும் சிறுவர்களே நடிப்பார்கள். அழகான சிறுவனுக்குப் பெண் வேடம் கிடைக்கும்! இந்த நாடக் குழுக்கள் "பாய்ஸ் கம்பெனி" என்று அழைக்கப்பட்டன. இந்தக் கம்பெனியில் நடிக்கும் சிறுவர்கள், நடிப்பையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் ஊர் ஊராகச் சென்று மாதக்கணக்கில் முகாமிட்டு நாடகங்கள் நடத்துவார்கள்.

(எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, எம்.கே.ராதா ஆகியோர் எல்லாம் பாய்ஸ் கம்பெனிகளில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான்)

கம்பெனிகளில் இல்லாத பிரபல நடிகர் _ நடிகைகள், குறிப்பிட்ட ஊரில் ஒரே நாள் நாடகம் நடத்துவார்கள். அதற்கு "ஸ்பெஷல் நாடகம்" என்று பெயர்.

எம்.எஸ்.சுப்புலட்சமி

காரைக்குடியில் நடந்த "பவளக்கொடி" என்ற ஸ்பெஷல் நாடகத்தை, அழகப்பசெட்டியாரும், மானகிரி லேனாவும் பார்த்தார்கள்.

கதாநாயகன் அர்ஜ×னனாக நடித்த இளைஞர் அழகாக இருந்தார்; இனிய குரலில் பாடினார். கதாநாயகி பவளக்கொடியாக நடித்த இளம் நடிகை, கணீர் கணீர் என்று வசனம் பேசி சிறப்பாக நடித்தார்.

அந்த நாடகத்தை கே. சுப்பிரமணியம் டைரக்ஷனில் படமாகத் தயாரிப்பது என்று மானகிரி லேனாவும், அழகப்பச் செட்டியாரும் முடிவு செய்தார்கள்.

சுப்பிரமணியமும் நாடகத்தைப் பார்த்து விட்டு "ஓகே" சொன்னார்.

நாடகத்தில் அர்ஜ×னனாக நடித்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பிற்காலத்தில் தமிழ்ப்பட உலகின் முடி சூடா மன்னராக விளங்கியவர். பவளக்கொடியாக நடித்தவர் எஸ்.டி.சுப்புலட்சும். பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றதுடன், பிற்காலத்தில் கே.சுப்பிரமணியத்தின் வாழ்க்கைத் துணைவி யானவர்.பாகவதரையும் , எஸ்.டி. சுப்புலட்சுமியையும் மானகிரி லேனாவும், அழகப்ப செட்டியாரும் அழைத்துப் பேசி, படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அக்காலத்தில், தமிழ்ப் படங்களும், பிற மொழிப் படங்களும் பெரும்பாலும் பம்பாய், புனா, கல்கத்தா ஆகிய நகரங்களில்தான் தயாரிக்கப்பட்டன.

டைரக்டர் கே.சுப்பிரமணியம், "பவளக் கொடி"யின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்தார். அடையாறில் இருந்த "மீனாட்சி சினிடோன்" ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது.

(இந்த ஸ்டூடியோ, "சுந்தரம் சவுண்ட் ஸ்டூ டியோ", "நெப்டின் ஸ்டூடியோ" என்றெல்லாம் பெயர் மாறி, கடைசியில் எம்.ஜி.ஆர். கைக்கு வந்து, "சத்யா ஸ்டூடியோ"வாக பல ஆண்டுகள் இயங்கி வந்தது. இப்போது, "எம்.ஜி.ஆர் _ ஜானகி மகளிர் கல்லூரி"யாக மாறியுள்ளது.)

எஸ்.டி.சுப்புலட்சுமி

பவளக்கொடி, 1934_ம் ஆண்டு வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்றது. ஒரே படத்தில் தியாகராஜபாகவதர் "சூப்பர் ஸ்டார்" ஆனார். எஸ்.டி.சுப்புலட்சுமியின் அழகும், வசன உச்சரிப்பும் எல்லோரையும் கவர்ந்தது.

பவளக்கொடியில் மொத்தம் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பாகவதரால் பாடப்பட் டவை.

"பவளக்கொடி" படத்தில் நடித்ததற்காக பாகவதருக்கு ஆயிரம் ரூபாயும், எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு 2 ஆயிரம் ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டது! டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சம்பளம் 700 ரூபாய்தான்!

சுப்பிரமணியம் அடுத்து டைரக்ட் செய்த படம் முருகன் டாக்கீசாரின் "நவீன சாரங்க தரா." இதிலும் பாகவதரும், எஸ். டி.சுப்புலட்சுமியும் ஜோடியாக நடித்தனர்.

"சாரங்கதரா" என்பது புராணக்கதை. சித்ராங்கி என்ற அழகிய இளவரசிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அக்கால வழக்கப்படி, பல தேச இளவரசர்களின் படங்கள் அவளுக்குக் காட்டப்படுகின்றன. சாரங்கதரன் என்ற இளவரசன் படத்தைக் கண்டு மயங்கிய சித்ராங்கி, அவனையே மணக்க விரும்புகிறாள்.

சாரங்கதரனின் தந்தையான கிழட்டு மன்னன், சித்ராங்கி மீது மோகம் கொள்கிறான். சாரங்கதரன் ஊரில் இல்லாததால், அவனுடைய வீரவாளுக்கு பதிலாக, தன்னுடைய வாளை சித்ராங்கிக்கு அனுப்பி வைக்கிறான். அதற்கு சித்ராங்கி மாலையிடுகிறாள்.

தன் அரண்மனைக்கு வந்த சித்ராங்கியிடம், "நான்தான் உன் கணவன். நீ அணிவித்த மாலை என் வாளுக்குத்தான்" என்று கூறுகிறான், கிழட்டு ராஜா. திடுக்கிட்ட சித்ராங்கி, "நான் விரதம் இருக்கிறேன். அது முடியும் வரை இல்லறத்தில் ஈடுபட முடியாது" என்று கூறி தப்பித்துக் கொள்கிறாள்.இதன்பின், சாரங்கதரன் பறக்கவிடும் புறா, சித்ராங்கியிடம் போய்விடுகிறது. அதை கேட்கப் போகும் சாரங்கதரனிடம், "நீங்கள்தான் என் கணவர். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறாள், சித்ராங்கி. "இல்லை. நீங்கள் என் சிற்றன்னை" என்று மறுத்து விடுகிறான், சாரங்கதரன்.

இந்த சமயத்தில், அங்கே மன்னன் வந்து விடுகிறான். சாரங்கதரன் தன்னை ஏற்றுக்கொள்ளாததால், அவன் மீது பழி சுமத்துகிறாள், சித்ராங்கி.

சாரங்கதரனின் ஒரு கை, ஒரு காலை வெட்டும்படி கிழ மன்னன் கட்டளையிட, அந்த தண்டனை நிறைவேற்றப்படுகிறது. பிறகு கடவுள் அருளால், கை _ காலை திருப்பப் பெறுகிறான், சாரங்கதரன். சித்ராங்கி, தற்கொலை செய்து கொள்கிறாள்.

டி.ஆர்.ராஜகுமாரி

கே.சுப்பிரமணியம் டைரக்ஷனில், பாகவதர் சாரங்கதரனாகவும், எஸ்.டி.சுப்புலட்சும ;ி சித்ராங்கியாகவும் நடிக்க "சாரங்கதரா" தயாராகிக் கொண்டிருந்தபோது, பம்பாயில் லோட்டஸ் பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி அதே "சாரங்கதரா" கதையை படமாக எடுக்கத்தொடங்கியத& #3009;. அதன் கதாநாயகன் கொத்தமங்கலம் சீனு.

இதனால், கே.சுப்பிரமணியம் "சாரங்கதரா" படத்தயாரிப்பை சிறிது காலம் நிறுத்தி வைத்தார்.

பம்பாயில் தயாரான "சாரங் கதரா" படம் ரிலீஸ் ஆகி, படு தோல்வி அடைந்தது.

பார்த்தார், கே.சுப்பிரமணியம். சாரங்கதரா கதையின் பிற்பகுதியை மாற்றினார். இதன்படி, சித்ராங்கி நல்லவள். அவளும், சாரங்கதரனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கிழட்டு ராஜா கோபம் கொண்டு, சாரங்கதரனின் ஒரு கையையும், காலையும் வெட்டும்படி கட்டளையிட, அது நிறைவேற்றப்படுகிற& #2980;ு.

இந்த சமயத்தில் ஒரு பெண் துறவி வந்து, சாரங்கதரனுக்கு கை_கால் வருமாறு செய்கிறார். கிழ மன்னன் திருந்துகிறான். சாரங்கதரன் _ சித்ராங்கி திருமணம் நடைபெறுகிறது.

இந்த மாறுதலுடன், படத்தின் பெயரும் "நவீன சாரங்கதரா" என்று மாற்றப்பட்டது.

"நவீன சாரங்கதரா" படம் வெளிவந்து ஓகோ என்று ஓடியது. பாகவதர் பாடிய "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல், பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.

கல்கத்தாவைச் சேர்ந்த இந்து பாலா என்ற பாடகி, பெண் துறவியாகத் தோன்றி மீரா பஜன் பாடல்களை அருமையாகப் பாடினார்.

சுப்பிரமணியம் _ பாகவதர் _ எஸ்.டி.சுப்புலட்சும ;ி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது.

பாகவதரை மட்டும் அல்ல, "இசைவாணி" எம்.எஸ்.சுப்பு லட்சுமி, "கனவுக்கன்னி" டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை அறிமுகப்படுத்தியவ& #2992;ும் கே.சுப்பிரமணியம்தா ன்.

அத்துடன், அந்தக்காலத்திலேயே புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட "சேவாசதனம்", "தியாகபூமி" முதலிய படங்களை உருவாக்கியவரும் அவரே. எனவே "தமிழ்ப் பட உலகின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.

திரைப்படத் துறையில் கே.சுப்பிரமணியம் நடத்திய புரட்சி!

பாகவதரை திரை உலகுக்கு அளித்த கே.சுப்பிரமணியம், "பவளக்கொடி", "நவீன சாரங்கதரா" ஆகிய படங்களை எடுத்து, "பக்த குசேலா" என்ற படத்தை தயாரித்தார்

எம்.எஸ்.சுப்புலட்ச 009;மி, எஸ்.டி.சுப்புலட்சுமி, பேபி சரோஜா ஆகியோருடன் கே.சுப்பிரமணியம். (1937)

இதில், கிருஷ்ணன், குசேலரின் மனைவி ஆகிய இரு வேடங்களில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித் தார். எஸ்.டி.சுப்புலட்சுமியின் "முல்லைச் சிரிப்பு" அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆண் வேடத்தில் கிருஷ்ணனாக அவர் அற்புதமாக நடித்தது, அனைவரையும் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. இப்படத்தில் குசேலராக நடித்தவர் பாடலாசிரியர் பாபநாசம் சிவன். 27 குழந்தைகள் பெற்று, வறுமையுடன் போராடிய ஏழை பிராமணர் வேடத்துக்கு அவர் மிகவும் பொருத்தமானவராக இருந்தார்.

சாதி வெறியை சாடும் சமூக சீர்திருத்த கதை ஒன்றை "பாலயோகினி" என்ற பெயரில் பட மாக்க விரும்பினார், கே.சுப்பிரமணியம். வேலை இல்லாத் திண்டாட்ட பிரச்சினையையும் படம் பிடித்துக் காட்டக்கூடிய விதத்தில், கதை அமைந்திருந்தது.

இதில் ஒரு சிறுமியின் கதாபாத்திரம் முக்கியமானது. அந்த வேடத்தில் தன் தம்பி விசுவநாதனின் மகளான பேபி சரோஜாவை நடிக்க வைத்தார். படத்தில் விதவையாக, பிராமண விதவைப் பெண் ஒருவரையே நடிக்க வைத்தார்.

படம் பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக பேபி சரோஜா பெரும் புகழ் பெற்றார். அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களில் ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமாக நடித்து உலகப்புகழ் பெற்றிருந்தார். பேபி சரோஜா "இந்தியாவின் ஷெர்லி டெம்பிள்" என்று போற்றப்பட்டார்.

அது மட்டுமல்ல; அப்போது தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் "சரோஜா" என்று பெயர் சூட்டினார்கள்!

பேபி சரோஜா இப்படத்தில் "கண்ணே பாப்பா... மிட்டாயி வாங்கி தருகிறேன் உனக்கே" என்ற பாடலைப் பாடினார். அக்காலத்தில் பட்டி தொடடி எங்கும் ஒலித்த பெரிய "ஹீட்" பாடல் இது.

பின்னர், "பாலயோகினி"யை தெலுங்கில் தயாரித்தார், சுப்பிரமணியம். தெலுங்கிலும் அப்படம் பெரிய வெற்றி. பேபி சரோஜா வேடத்தில், தெலுங்கில் சுப்பிரமணியம் அறிமுகம் செய்த ஒரு சிறுமி பிற்காலத் தமிழிலும், தெலுங்கிலும் பெரிய நட்சத்திரமாகப் புகழ் பெற்றார். அவர்தான் எஸ்.வரலட்சுமி!

படங்கள் மூலம் ஒருபுறம் பிரபலமாகிக் கொண்டிருந்த சுப்பிரமணியத்துகு, மறுபுறம் எதிர்ப்பும் வலுத்துக் கொண்டிருந்தது. பழமையில் ஊறிய சில வைதீக பிராமணர்கள், "சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், பிராமணர்களின் பழக்க வழக்கங்களைக் கண்டிக் கிறார்; வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய பிராமண விதவையை படத்தில் நடிக்க வைக்கிறார்" என்று சுப்பிரமணியத்தைக் கண்டித்தனர். தஞ்சாவூரில் சில பிராமணர்கள் கூடி, சுப்பிரமணியத்தை சாதிப்பிரஷ்டம் செய்வதாக (பிராமண குலத்தை விட்டு நீக்குவதாக) அறிவித்தனர்.

இதைப்பற்றி, சுப்பிரமணியம் கவலைப்படவில்லை. தன் லட்சியத்தில் உறுதியோடு இருந்தார்.

மதுரை முருகன் டாக்கீசாருக்காக, "உஷா கல்யாணம்" என்ற படத்தை தயாரித்தார், சுப்பிரமணியம். அது சிறிய கதை. எனவே, படமும் சிறிதாக இருந்தது.

காசு கொடுத்து ஆனந்தமாகப் படம் பார்க்க விரும்புகிறவர்களு்க்கு, 3 மணி நேரமாவது படம் ஓடவேண்டும். எனவே, என்.எஸ்.கிருஷ்ணன்_ டி.ஏ.மதுரத்தை வைத்து, "கிழட்டு மாப்பிள்ளை" என்ற நகைச்சுவை குறும் படத்தைத் தயாரித்து, உஷா கல்யாணத்துடன் சேர்ந்து வெளியிட்டார்.

"ஒன்றில் இரண்டு" என்று அழைக்கப்பட்ட இந்த முறையைப் பின்பற்றி, பின்னர் "வாயாடி_ போலி பாஞ்சாலி", "நவீன விக்கிரமாதித்தன் _ புத்திமான் பலவான்" என்று பல படங்கள் வெளிவந்தன. மாடர்ன் தியேட் டர்ஸ் தயாரித்த "சௌ_சௌ" என்ற படத்தில், மூன்று படங்கள் அடங்கியிருந்தன!

அக்காலத்தில், சென்னையில் வசதியான சினிமா ஸ்டூடியோக்கள் இல்லை. சுப்பிரமணியத்தின் படங்கள் பெரும்பாலும் கல்கத்தாவில்தான் தயாராகி வந்தன.

சென்னையில் சிறந்த ஸ்டூடியோ ஒன்றை அமைக்க சுப்பிரமணியம் விரும்பினார். சில தயாரிப்பாளர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு, மவுண்ட் ரோட்டில் (இன்றைய அண்ணா சாலையில்) அண்ணா மேம்பாலம் அருகே புதர்களும், மரங்களும் அடர்ந்து, காடு போல் காட்சி அளித்த "ஸ்பிரிங் கார்டன்ஸ்" என்ற இடத்தை வாங்கினார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலிய ராபர்ட் கிளைவ், அங்கிருந்த படிதான் ஆட்சி நடத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

அந்த இடத்தை வாங்கிய சுப்பிரமணியம், "மோஷன் பிக்சர் புரொடிசர்ஸ் கம்பைன்ஸ்" என்ற பெயரில் அங்கு திரைப்பட ஸ்டூடியோவை நிறுவினார். (இதுதான் பிற்காலத்தில் ஜெமினி ஸ்டூடியோ ஆகியது.)

தமது ஸ்டூடியோவில் வேலை பார்க்க, கல்கத்தா ஸ்டூடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த திறமை மிக்க ஒளிப்பதிவாளர்கள் சைலன் போஸ், கமலாகோஷ், லேபரட்டரி நிபுணர் திரன்தாஸ் குப்தா, ஒலிப்பதிவாளர் சின்ஹா, மேக்கப் கலைஞர் ஹரிபாபு ஆகியோரை சென்னைக்கு அழைத்து வந்தார்.

சுப்பிரமணியம் தயாரித்த படங்களில் பணியாற்றிய இவர்கள், பிற்காலத்தில் அவரவர் துறைகளில் உச்சத்தைத் தொட்டனர்.

1937_ம் ஆண்டு, சுப்பிரமணியத்துக்கு பொற்காலம் என்றே கூறலாம். ராயப்பேட்டையில் குடியிருந்து வந்த அவர், மைலாப்பூர் சாந்தோம் சர்ச்சுக்கு எதிரே 40 கிரவுண்டில் இடம் வாங்கி, பெரும் மாளிகை கட்டி குடியேறினார்.

முதல் மனைவி மீனாட்சியுடன் சுப்பிரமணியம்

சுப்பிரமணியத்துக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. திருமணமானபோது அவருக்கு வயது 16. மணமகள் மீனாட்சிக்கு வயது 9.

"பவளக்கொடி" படப்பிடிப்பின்போது சுப்பிரமணியத்துக்கும், எஸ்.டி.சுப்புலட்சுமிக்கும் ஆழ்ந்த அன்பு அரும்பியது. இருவரும் கூட்டாகச் சேர்ந்து பட நிறுவனத்தைத் தொடங்கினர். அப்போது அன்பு வளர்ந்து, அது திருமணத்தில் முடிந்தது.

இத்திருமணத்தினால் ஆரம்பத்தில் வருத்தம் கொண்டிருந்த மனைவி மீனாட்சி அம்மாள், பின்னர் எஸ்.டி.சுப்புலட்சுமியின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரை தன் தங்கையாகவே ஏற்றுக்கொண்டார்.

எனவே, கே.சுப்பிரமணியத்தின் இல்லற வாழ்க்கை சிறப்பானதாகவே அமைந்தது.

சுப்பிரமணியம் _ மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு எஸ்.பாலகிருஷ்ணன், எஸ்.வி.ரமணன், டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, சந்திரசேகர் என்ற நான்கு மகன்கள்; லலிதா, பாமா, நீலாயதாட்சி, பத்மா சுப்பிரமணியம் ஆகிய நான்கு மகள்கள்.

இவர்களில் ரமணன் "ஜெயஸ்ரீ பிக்சர்ஸ்" என்ற பட நிறுவனத்தை நடத்துகிறார். டெலிவிஷன் விளம்பரப் படங்களில் இவர் குரல் தினமும் ஒலிக்கிறது.

அமெரிக்காவில் படித்துப் பட்டம் பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்குமெண்டரி படங்களை தயாரிக்கும் "கிருஷ்ணசாமி அசோசியேட்" என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். "சிந்து சமவெளி முதல் இந்திரா காந்தி வரை" என்ற டாக்குமெண்டரி படத்தைத் தயாரித்து அகில இந்தியப் புகழ் பெற்றவர்.

சந்திரசேகர், கனடா நாட்டில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

பத்மா சுப்பிரமணியம், புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடனக் கலை பற்றி ஆராய்ச்சி நடத்தி "டாக்டர்" பட்டம் பெற்றவர்.

சுப்பிரமணியம் _ எஸ்.டி.சுப்புலட்சும ;ியின் தம்பதிகளின் ஒரே புதல்வர். "அபஸ்வரம்" ராம்ஜி, இசைக்குழு நடத்தி புகழ் பெற்றவர். ஓட்டல் நிர்வாகக் கல்வியில் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்.

சுப்பிரமணியத்தின் முதல் மனைவி மீனாட்சி இசையிலும், வீணை முதலான இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர். சில திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்; இசை அமைத்திருக்கிறார்.

--------------------------------------------------------------------------------

என்ன ஜம்மு இவளவு பெரிய கட்டுரையா இருக்கு இது படிக்க எனக்கு 1 கிழமையாகுமே

  • தொடங்கியவர்

படித்து கொண்டு இருகட்டும் நாம அங்கால எங்கண்ட வேலையை பார்கலாம் என்று தான் போட்டனான்

படித்து கொண்டு இருகட்டும் நாம அங்கால எங்கண்ட வேலையை பார்கலாம் என்று தான் போட்டனான்

சுப்பிரமணியத்தின் மகன் ரமணன் - இதயம் பேசுகிறது மணியன் எழுதிய நாவல் படமாகியபொழுது அதில் கதாநாயகனாக நடித்தவர். "சப்தஸ்வரங்கள்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியவர். அதனால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரது மனைவி உமா ரமணன் ஒரு பின்னணிப்பாடகியும் கூட.

சந்திரசேகரன் என்ற மகன் கனடாவில் ATN என்ற பெயரில் பல மொழிகளில் தொலைக்காட்சி சேவைகள் நடத்தி வருகிறார். இம்முறை உலகக் கிண்ண கிரிக்கற் போட்டி இவர்கள்தான் ஒளிபரப்பினார்கள்.

ஜம்மு.. நீண்ட கட்டுரை என்றாலும் என்போன்றவர்களுக்கு பிரயோசனமானது.

<_<

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

ஜம்மு.. நீண்ட கட்டுரை என்றாலும் என்போன்றவர்களுக்கு பிரயோசனமானது.

:unsure:

நான் இப்படியான கட்டுரைகளை சேர்த்து வைக்கிறனான் இன்னும் இருக்கு ஆனால் ஒருத்தரும் பார்க்க மாட்டினம் என்று போடுறதில்லை

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.