(ஆர்.விதுஷா)

சுகாதார அமைச்சராக பதவியில் இருந்தபோது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட  6 இலட்சம்  ரூபா பெறுமதியான  எரிபொருள் பற்றுச்சீட்டுக்களை அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  பதவியிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.  

rajitha.jpg

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபவத்தின்போது ராஜித சேனாரத்ன அமைச்சின்  செயலாளர் வசந்த  பெரேராவிடம்  அந்த  எரிபொருளுக்கான பற்றுச் சீட்டுக்களை ஒப்படைத்தார்.

இவ் வைபவத்தில் முன்னாள்  சுகாதார  இராஜாங்க  அமைச்சர்  பைசால் காசிம், முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக  செயலாளர்  விசேட  வைத்திய  நிபுணர்  சுஜாதா  சேனாரத்ன,  உட்பட  அமைச்சின்  அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

https://www.virakesari.lk/article/69440