Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய

Featured Replies

(ஆர்.யசி)

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது.

karujayasuriya.jpg

இது  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம், இதனை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை என  சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ள கட்சியில் பாராளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. 

அடுத்த பாராளுமன்ற அமர்வுகளை கூட்டும் காலம், அடுத்ததாக ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் ஆசன ஒதுக்கீடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் அதிகமாக பேசப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, தினேஷ் குணவர்த்தன, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, நிமல் சிறிபால.டி.சில்வா, அமீர் அலி, அஜித்.பி.பேரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்தே ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இருவரின் பெயர்களும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று பாராளுமன்றத்தில் கூடிய  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.  

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சையும் இதன்போது எழுப்பப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி பிரதான எதிர்கட்சியாக மீண்டும் பாராளுமன்றத்தில் அமரவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை ஒரு தரப்பினரும் சஜித் பிரேமதாசவின் பெயரை இன்னொரு தரப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ரணில்  - சஜித் என்ற  இருவருடைய பெயர்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 

எனினும் இதன்போது பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்த சபாநயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்தும் யாரை தெரிவுசெய்ய வேண்டும் என்பது குறித்தும்  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேசி அர்த்தமில்லை.

இந்த விடயமானது குழுவின் விடயப்பரப்புக்கு உட்பட்டதும் அல்ல.  ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அமரவுள்ள நிலையில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பது  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம், இதனை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை என  சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/69455

  • தொடங்கியவர்

சபாநாயகருக்கு இரு கடிதங்கள்..! ஐ.தே.கட்சிற்குள் குழப்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இக் கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவர்களான முன்னாள் தவிசாளர் கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 45 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.

74388230_553917715394142_306325435435502

75580229_798613120582714_575510969678036

76720892_471611210127241_188747991288171

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பு மற்றும் எதிர்க் கட்சித் தலைமை பதவியை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/69435

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.