Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்!

பகலவன்

_22454_1574267548_2B06CB7B-49EE-40C5-AA4B-88E6A1029AA9.jpeg

சமத்துவச் சிந்தனைகளை இந்தியாவின் காமராஜர் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது வாழ்வு அந்த நெறியில் தான் அமைந்திருந்தது. இலங்கையிலோ இதற்கு எதிர்மாறு. "ஒரு மொழியெனில் இரு நாடு; இரு மொழியெனில் ஒரு நாடு" என முழங்கித் தள்ளிய பிரபல இடது சாரி கொல்வின் ஆர்.டி சில்வாதான் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும்  புதிய அரசியல் அமைப்பை 1972 ல்  உருவாக்கினார். 
இன்னொரு இடதுசாரி( கம்யூனிஸ்ட்)   சரத்முத்தெட்டுவே கம பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போது ஐ.தே.க உறுப்பினர்கள் (ஆளுங்கட் சி) குறுக்கிட்டனர். அப்போதைய பிரதமர் பிரேமதாச "அவரைப்  பேசவிடுங்கள்; அவர் அண்மையில் ரஷியாவுக்கு சென்று வந்திருக்கிறார். அங்கே அவர்கள் அவருக்கு மூளைச் சலவை செய்திருப்பார்கள்"   எனக் குறிப்பிட்டார்.  உடனே  சரத்முத்தெட்டுவே கம "சலவையைப் பற்றி பிரதமருக்குத்தான் தெரியும்" எனப் பதிலடி கொடுத்தார். ஒரு உண்மையான இடதுசாரிக்கு மனதில் இவ்வாறான எண்ணங்கள் வந்திருக்க முடியாது. நாக்கில் மட்டுமே இடதுசாரித்துவம்;மனம் முழுக்க விஷம்; சாதித் திமிர் என்பதை அவரது கூற்று நிரூபித்தது. 
அண்மையில் இன்னொரு இடதுசாரித் தலைவரான வாசு தேவா நாணயக்கார "இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு பௌத்த சிங்களவராக இருந்தால் மட்டும் போதாது.   அவர் கொவிகம சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்" என சிங்களப் பத்திரிகையொன்றுக்குத்  தெரிவித்தார். அவரது கூற்றை சிங்கள மக்கள் வழிமொழிந்துள்ளார்கள்.   


அவர்களிலிருந்து மாறுபட்டு  நடைமுறைச் சமத்துவ வாதிகளாக வடகிழக்கு தமிழர்கள் தம்மை இனங்காட்டியுள்ளனர். எதில் முரண்பட்டாலும் இந்த விடயத்தில் முஸ்லிம்மக்களும் தமிழருடன் கைகோர்த்துள்ளனர்.  


ஜனாதிபதியாகத்  தெரிவுசெய்யப்பட்டுள்ள திரு.கோத்தபாயாவுக்கு வடக்கில் ஈபிடிபி, சு.க, சிறிலங்கா பொதுஜன  பெரமுனை முதலான கட்சிகள் தமது முழுமையான ஆதரவை வழங்கின. இவை கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளை அவதானிப்போம். ஈபிடிபி 69,266 வாக்குகள்; சு .க  52,596, பெரமுன 16,394 வாக்குகள் பெற்றிருந்தன. அதாவது மொத்தமாக 138, 256 வாக்குகளைப் பெற்றிருந்தன. தேர்தலில் போட்டியிடாமலேயே போனஸ் ஆசனம் மூலம் இணைந்த வடகிழக்கு மாகாண முதலமைச்சரான திரு.அண்ணாமலை வரதராசப்பெருமாளின் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளை கவனத்தில் எடுக்காமலேயே விடுவோம். 


இந்த ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 256  வாக்குகளைப் பெற்ற கட்சிகள் முழுமனதுடன் கோத்தபாயாவுக்கு வாக்களிக்க கோரியபோதும் அவரால் 49 ,366 வாக்குக்களையே வடமாகாண  மக்களிடம் இருந்து பெற முடிந்தது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஈபிடிபி க்கு இருந்த  60,239 வாக்குகளையேனும் வடக்கு முழுவதுமாக அவரால் பெறமுடியவில்லை. உள்ளுராட்சித் தேர்தலில் ஈபிடிபி க்கு57,679  யாழில்  மற்றும் கிளிநொச்சியில் 2560 வாக்குகளும் கிடைத்தன. இரண்டும் சேர்த்துத்தான் யாழ்.தேர்தல் மாவட்டமாக ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் கணக்கிடப்படுகின்றன.   


இதற்கு முந்திய தேர்தலில் மகிந்தவினால் 108,831வாக்குக்களைப் பெறமுடிந்தது. அதில் அரைப்பங்கேனும் கோத்தாவினால் பெறமுடியவில்லை. அதில் மகிந்த தோற்றார். இதில் கோத்தா  வென்றார்.  


கிழக்கில்  பிள்ளையானின் கட்சி, ஈபிடிபி , சு .க, பெரமுனை,என்பவற்றுடன் வியாழேந்திரனும் தனது கல்வி நிலைய  ஆசிரியர்கள் மூலமாக பகீரதப்  பிரயத்தனம் செய்தார். இவர்களுடன் வடக்குக்கெதிரான உணர்வைக்கொண்டுள்ள கோபாலகிருஷ்ணனின் கட்சியும் தலைகீழான முயற்சிகளை  மேற்கொண்டது.
உள்ளுராட்சித் தேர்தலில் இவர்களால்333,481 வாக்குகளைப்  பெறமுடிந்தது. கோத்தபாயாவுக்கு227,653  வாக்குகளையே திரட்ட முடிந்தது என்பது கவனத்துக்குரியது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெற்ற 135058 வாக்குகளும் இதில் அடங்கும்.   
  மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 61071, சுதந்திரக்கட்சி63196, ஈபிடிபி782, பெரமுனை7349 வாக்குகள் என132,398 வாக்குகளை உள்ளுராட்சித் தேர்தலில் பெற்றிருந்தும்  (கருணா- வரதராஜபெருமாள் நீங்கலாக) கோத்தபாயாவுக்கு 38,460 வாக்குகளை பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கிறது. இதேவேளை மகிந்த கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கோத்தா கூடுதலாக அம்பாறையில் பெற்றுள்ளார். (மகிந்த 121 ,027 - கோத்தா 135, 058 ) 


***  
ஜேவிபி காலத்தில் அநேகமான படுகொலைகள் நடந்த தென்மாகாணத்தில் போதுமான வாக்குகளை திரட்ட அனுர குமார திஸாநாயக்கவினால் முடியவில்லை. ஒரு தொகுதியில் கூட  மூன்றாவது வேட்பாளர் வெல்லமுடியவில்லை என்றால் மாற்றுத் தலைமை பற்றி சிந்திக்க முடியுமா? (ஜனாதிபதி  தேர்தல் வரலாற்றில்   மூன்றாவது வேட்பாளர் எதாவது தொகுதியில் வென்றார் என்றால் அது குமார் பொன்னம்பலம் மட்டுமே. )இதனை விட  சில விடயங்களில் சஜித்தின் அவசரம் சொந்தக் கட்சியினராலேயே சகிக்கமுடியவில்லை. ஜனாதிபதியானதும் புதிய பிரதமரை நியமிப்பேன் போன்ற அறிவிப்புக்கள் அவருக்கு பாதகமாக முடிந்ததன. சந்திரிக்காவால் எவ்வளவு அவமானம் ஏற்பட்டாலும் அதைச் சகித்துக்கொண்டு தன்னை  நிலைப்படுத்தி ஜனாதிபதியான மகிந்தவின் வரலாற்றை உற்றுக் கவனித்திருந்தால் நிதானித்திருப்பார்.    


ஒரு பிள்ளைக்கு முன் பள்ளி போவதற்கு ஒரு உடுப்பு தைத்திருந்து அதை எதோ வொரு காரணத்தால் அணி விக்கமுடியாமல் போயிருக்கலாம். அதற்காக அவன் உயர்தரம் வந்த பின்பு  உனக்காகத்தான் தைத்த உடுப்பு ;நீ போட்டுத்தான் ஆகவேண்டும் என அடம்பிடிக்க கூடாது. 2005 தேர்தலில் முன்வைக்கப்பட்ட தமிழ் வேட்பாளரைக்  களமிறக்குவது; இரண்டாவது வாக்கு தொடர்பாக பேரம்பேசுவது போன்ற யுக்தி அந்தக்காலத்துக்குப் பொருத்தமானது தான். அது சாத்தியமாக்காமற்போனது தமிழரின் துரஷ்டம்தான். அதற்காக அதேயுக்தியை 2019ல் செயற்படுத்த முனைவது கள யதார்தத்துக்குப் பொருத்தமானது அல்ல. சாணக்கியரின் கூற்று ஒன்று உண்டு "போருக்குச் செல்பவன் வியூகங்களை வெளியிடுவது தில்லை“   


2005 ல் ஒரு யோசனையை முன்வைத்தால் பிரபாகரன் - தமிழ்ச்செல்வன் - இக்கருத்தை முன்வைப்பவர் ஆகிய மூன்று பேருக்கும் மட்டும் தெரிந்திருக்கும். 2019ல் அப்படியா நிலைமை? அக்குவேறு,ஆணிவேறாக  அலசி  அதை இணையத்திலும் பரவவிட்டு  நாறடித்து சிங்களவரை ஓரணியில் திரளவைத்தனர் இந்தப் புத்திஜீவிகள், வளவாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள். உண்மையில் சிங்களவர்களை ஓரணியில் திரள்வைத்த புண்ணியத்துக்காக கோத்தபாய இவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். எமது  ஜனாதிபதியை நாமே தீர்மானிப்போம் ; தமிழ்- முஸ்லீம் மக்கள் இந்த நாட் டை ஆள்வது யார்ரென இனிமேல் தீர்மானிக்க முடியாது  என்ற செய்தியை மிகத் தெளிவாகவே உணர்த்தியுள்ளனர் சிங்களவர்கள்.   


"திரு .பிரபாகரன் இல்லாத அரசியல் வெற்றிடம் பௌத்த பேரெழுச்சியாக மாறி நிற்கிறது“    என்ற ஒரு முஸ்லீம் பிரமுகரின் கருத்து மிகச் சரியான காலக்கணிப்பு.


  தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரை தமிழருக்கெதிரான விஷக்கருத்துக்களை வெளியிடும் ஹிஸ்புல்லா போன்றோரும்,முஸ்லீம் களுக்குக்கெதிரான கருத்துக்களை காரசாரமாக வெளியிடும் வியாழேந்திரனும் கோத்தபாயவின் அணியில்தான் உள்ளனர். இருவருமே தத்தம் இன மக்களை ஏமாற்றியே வருகின்றனர்.இருவருமே தமது இனத்துக்கு உண்மையில் விசுவாசம் இல்லாதவர்கள்.நீண்டகாலநோக்கில்  சிந்திக்காதவர்கள்.  

கோத்தா அணியில் உள்ள டக்ளஸ், கருணா, பிள்ளையானுக்கு எவ்வளவுதான் கறை படிந்த அத்தியாயம் இருந்தாலும் அவர்களுக்கென போராட்ட வரலாறு உண்டு. ஆகவே அவர்களை விட தான் அதிக விசுவாசம் மிக்கவர் எனக்காட்ட முஸ்லீம் எதிர்ப்பு என்ற விஷத்தைக் கக்குகின்றார் வியாழேந்திரன் .       


 இந்தப் போராட்ட வரலாற்றில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு பற்றி அவர் அறியார்.எத்தனை மாவீரர்கள், அரசியல் கைதிகளானோர் முஸ்லிம்களில்  உள்ளனர் என்ற விபரம் தெரியாது.
 இது போலவே வடக்குக்கெதிரான கருத்துக்களை விதைக்கும் கோபாலகிருஷ்ணன் சம்பந்தனையும் வடக்கைச் சேர்ந்தவர் என்று நிறுவ முற்படுகிறார்.ஏற்கெனவே வடகிழக்கு இணைப்புக்கு எதிராக செயற்படும் பிள்ளையான், அதாவுல்லா, ஹிஸ்புல்லா ஆகியோருடன் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் டக்ளசும் சேர்ந்துதான் கோத்தாவுக்கு ஆதரவு தேடினர்.   


தமிழரின் துரதிஷ்டம் வாய்ப்புக்களைத் தவறவிடுவது. கிழக்கு மாகாண மற்றும் கொழும்பு அரசியலில் இதுதான் நடந்தது. சரத் பொன்சேகாவுக்கு பீல்ட்  மார்ஷல், ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு மீண்டும் பிரதம நீதியரசர் கௌரவங்களை வழங்கவும் , ரணிலின் பதவியைக் காப்பாற்றவும் எடுத்த அக்கறையை அரசியல் கைதிகள் முதலான விடயங்களில் காட்டவில்லை. கிழக்கு மாகாண அரசமைக்கும் போது அமைச்சுப்பதவிகள் பற்றித்தான் பேசினார்களே தவிர இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்ற தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரவளிக்க வேண்டும் என்று பேரம் பேசவில்லை.  


அதுமட்டுமல்ல  இத் தீர்மானத்தைக்  கொண்டுவந்ததற்காக வடக்கு      முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினார்கள். இச் சதித் திட்டத்தை ஒழுங்கமைத்தவருக்கு மேயர் பதவி வழங்கியதன் மூலம் சுமந்திரன்தான் கட்சி என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தினர்.      போராட்டத்தின் வலி தெரியாதவர்கள் முடிவெடுக்கும் தகுதியில் உள்ளனர். 


இன்று அமைச்சுப்பதவி ஏற்பது குறித்துச் சிந்திக்கின்றனர்.அமைச்சுப் பதவியென்றால் டக்ளஸ் வழியில் போகிறார்களா? அப்படியென்றால் எப்போதே செய்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. வாய்ப்புக்களைத் தவற விட்டவர்கள் அமைச்சு பதவிகளை பெற்று என்ன கிழிக்கப்போகிறார்கள்.   அமைச்சுப் பதவி ஏற்பது குறித்து சுமந்திரன் அறிவிக்கிறார் என்றால். செயற்குழு, மத்திய குழு அங்கீகாரம் வழங்கியதா?இது கட் சியா சுமந்திரன் அன்&கோ வா    
ஏனைய தேர்தல்களில் டக்கிளசுக்கு , பிள்ளையானுக்கு வாக்களித்தவர்கள் கூட கோத்தாவுக்கு வாக்களிக்கவில்லை இந்த ஆதரவாளர்கள் மாகாண , உள்ளுராட்சி தேர்தல்களில் மீண்டும் அவர்களுக்கே  வாக்களிப்பர். இந்த யதார்த்தத்தை முதலில் கூட்டமைப்பு உணரவேண்டும்.      


மாற்றுத் தலைமையே என்று காட்ட முயலுவோர் சோத்துக்கு வழியில்லாமல் தான் தமிழ் இளைஞர்கள் போராட வந்தார்கள் என நிறுவ முற்படுகின்றனர். இந்நிலையில் இவர் தேசியத் தலைவர். அவர் திலீபன் என்று ஒவ்வொருவரைச் சுட்டிக்காட்ட முயன்றால் தமிழர்கள் ஏற்பார்களா ?   ஒரு எழுக தமிழ் நடக்குதென்றால் அதைச் கொச்சைப்படுத்த இன்னொரு அணி எந்தக் கீழ்தரத்துக்கும் போகும் அதனை விட  அன்றைக்கே இன்னொரு  போராட்டத்தை நடத்த ஏற்பாடுசெய்யும். இத் தேர்தலைப் பகிஷ்காரித்து உலகத்துக்கு காட்டுவதைவிட ஓரணியில் நின்று தமது வாக்குக்களைப்  பதிவு செய்து காட்டியுள்ளனர் தமிழ் பேசும் மக்கள் .  


 நாம் சிங்களத்திடமிருந்து கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு தமிழருக்கு ஆதரவான விடயமென்றால் கட்சிபேதத்தை மறந்து ஒன்றாக நின்று அதை எதிர்ப்பர். தாம் தீர்மானிக்கும் சக்தி என்று தமிழர்  பீற்றிக்கொள்ள முயன்றால் இனி கனவிலும் அது நடக்காது. என ஒற்றுமையாக நின்று தமது கருத்தை நிரூபிப்பர்,
இனியாவது தமிழ் முஸ்லீம் சமூகங்கள் யதார்த்தைதை உணர்ந்து வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் சக்திகளை நிராகரிக்கவேண்டும்.இந்த இரு சமூகங்களும் இந்தக்கால கட்டத்திலாவது ஒண்றிணையா விட்டால் எவருக்குமே மீட்சியில்லை. இதைஉணர்ந்து தமிழ் முஸ்லீம் இன உறவை விரும்பும் சக்திகள் தமது முதல் காலடியை எடுத்து வைக்கட்டும்.

 

http://www.battinaatham.net/description.php?art=22454

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.