Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திடீர் வெள்ளப் பெருக்கு - ஒரு அபசகுனம்

Featured Replies

திடீர் வெள்ளப் பெருக்கு - ஒரு அபசகுனம்

கொழும்பு, தமிழ் போராளிகளின் விமானங்கள் கடந்த வாரம் இலங்கையின் தேசிய தலைநகருக்கு மேலான வான்பரப்பை முற்றுகையிட்டுப் பறந்த வேளையில் தரையில் தோன்றிய மோசமான இயற்கை அழிவான திடீர் வெள்ளப் பெருக்கிலிருந்து அரசியல் தலைவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டது. காலநிலை மாற்றமே இந்த திடீர் வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அதிகரித்து வரும் வெப்பம், உயர்ந்து வரும் கடல்மட்டம் ஆகியவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து இதே வாரத்தில் ஐக்கிய நாடுகள் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தினாலோ அல்லது துரிதமாக செயல்பட்டு வரும் தன்னார்வ நிறுவனங்களாலோ பூமி வெப்பமடைவதை தடுப்பது குறித்து எதுவித ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உடனடியாக ஏற்படுவதில்லை என்ற காரணத்தினால் இம்மாற்றம் குறித்து எவரும் சிரத்தை கொள்வதில்லை என்று ஜெனீவாவில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் மொஹான் முனசிங்க, குழுவின் பாங்கொக் மகாநாட்டிற்கு சில நாட்கள் முன்னதாக ஐ.பி.எஸ்.ஸுக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார்.

ஆனால், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் எதிர்காலத்தில் வரப்போகும் அழிவுகளுக்கு எதிர்வு கூறுவதாக அமைந்துள்ளது. கடலை எதிர்நோக்கியபடி இருக்கும் தலைநகரில் வியாபார மையங்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கின. போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததுடன், பலர் உயிரிழந்தனர். பாதுகாப்பற்ற கழிவுநீர்க் கால்வாய் ஒன்றினுள் இளம் பெண் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை ஆரம்பித்த கடும் மழை சனிக்கிழமை வரை நீடித்தது.

சில வேளைகளில், பல நாட்களுக்கு பரவலாகப் பெய்யும் மழை ஒரே நாளில் பெருமழையாகப் பெய்துவிடுகிறது. அதுதான் அன்றைய தினமும் இடம்பெற்றதாக நீர்வள நிபுணரான குசும் அத்துகோரள தெரிவித்தார்.

இதுதான் காலநிலை மாற்றத்தின் தாக்கமாகும். விவசாயக் காணிகள், ஈரலிப்பான பிரதேசங்கள், ஆறுகள் ஆகியவற்றில் அத்துமீறிப் பிரவேசிபப்தற்கும் சட்டவிரோத கட்டிடங்களை கட்டுவதற்கும் அனுமதியளிக்கும் சீரற்ற ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளுமே இந்த நிலைமைக்கு காரணமாகும் என்று இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக உள்ளூர் அரசியல்வாதிகளுடன் பல வருடங்களாக போராடிவரும் அத்துகோரள தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய துறைமுக நகரான மும்பாயில் நூற்றுக் கணக்கானோரை பலிகொண்ட பெருமழை போன்றதே அன்று இலங்கையில் கொழும்பைத் தாக்கிய திடீர் மழையுமாகும். நீரோடைகளை பாதிக்கும் வகையிலான சட்டவிரோத கட்டிடங்களும் பயிர்ச் செய்கை தடைப்படுத்தப்பட்டதுமே மும்பாய் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாகும்.

முக்கியமாக, மும்பாய் வெள்ளப் பெருக்கிற்கு காலநிலை மாற்றமே காரணம் என்று காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் தலைவர் ராஜேந்திரா பச்சேரி உட்பட உயர் விஞ்ஞானிகள் பலர் தெரிவித்துள்ளனர். அவசரமாக பாரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆசியாவின் ஏனைய துறைமுக நகரங்களும் இதேபோல பாதிக்கப்படலாம் என்றும் இவ்விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் பேராசிரியர் சாந்தி டீ சில்வா கருத்து தெரிவிக்கையில், வெப்ப அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுகளில் பலத்த மழையின்போது கொழும்பு பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறினார். நகரில் வெள்ளப் பெருக்கை சமாளிப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பு எம்மிடம் இல்லை என்றும் கடந்த வருடம் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் தாம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலிருந்து தாம் இந்த விவரங்களைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் காலநிலை மாற்றம் தொடர்பான தாக்கங்களை அறிந்து கொள்வதற்கான நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டுள்ளது என்று பேராசிரியர் டீ சில்வா மேலும் தெரிவித்தார்.

பேராசிரியரின் ஆய்வின்படி, இந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் கொழும்பு உட்பட ஈரவலையப் பிரதேசங்களில் கூடுதல் மழை வீழ்ச்சியும் வரண்ட பிரதேசங்களில் மூடுதல் வெப்பமும் நிலவும் என்று தெரியவந்துள்ளது. உயிரியல் பல்லின தாக்கமும் மிக மோசமாயிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பூமி வெப்பமடைவதால் இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி காலநிலை மாற்றம் பற்றிய விவாதத்தின் போது சிறிதும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பூமி வெப்பமடைவதால் வறிய நாடுகளுக்கு ஏற்படும் தாக்கம் கைத்தொழில்மய நாடுகளுக்கு நன்மை கிடைக்குமென கொழும்பு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பூமி வெப்பமடைவதால் இலங்கை போன்ற வெப்பவலய நாடுகளில் உணவு உற்பத்தி வீழ்ச்சி அடையும் என்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் குறைவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு நாடுகளில் குளிர்காலம் குறைவதால் உணவுற்பத்தி அதிகரிக்கும். இதேவேளை, எமது நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மேற்கு நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் எதிர்நோக்கப்படும் என்று சுற்றாடல், இயற்கை ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பியால் பராக்கிரம கூறுகிறார்.

பூமி வெப்பமடைவதால் உயிரின பன்முகத் தன்மையில் ஏற்படும் தாக்கம் ஏற்கனவே உணரக்கூடியதொன்றாகும். காலநிலை மாற்றம் காரணமாக பல செடி வகைகள் பருவம் தப்பி பூக்கின்றன என்றும் பராக்கிரம கூறினார்.

தென்னிலங்கை கரையோரத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாப் பிரதேசமான ஹிக்கடுவையில் வனப்புமிக்க பவளக் கற்பாறைகள் நன்கு பிரகாசிப்பதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என்று சர்வதேச ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையை சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்களையும் காலநிலை மாற்றம் நிச்சயம் பாதிக்கும் என்று தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விலங்கியல் நிபுணரான தீப்தி விக்கிரமசிங்க, நுளம்புகள் மற்றும் நோய் பரப்பிப் பூச்சிகளை உண்டு வாழும் தேரைகள், தவளைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகளிலும் காலநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். இந்தத் துறையிலான ஆராய்ச்சிகள் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நீர்வீழ்ச்சிகள், மழைக்காடுகள், தேயிலை வளரும் மலைநாடுகள், வனப்புமிக்க கடற்கரைகள் ஆகிய சுற்றுலா களிப்பிடங்களும் அருகிவரும் ஆபத்தும் காணப்படுகிறது. ஏற்கனவே, கொடுமையான இனப்பிரச்சினை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக பதவி வகித்து வந்த ஜனாதிபதிகளுக்கு தாம் ஆலோசனை தெரிவித்த போதிலும், அவை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சக்தி, காலநிலை மாற்றம் ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் நிபுணத்துவம் வாய்ந்த முனசிங்க தெரிவித்தார். அரசாங்கம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தீங்குகளை தவிர்ப்பது பற்றி சிந்திப்பதிலும் பார்க்க யுத்தம் புரிவதிலேயே அக்கறை காண்பித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழ் தீவிரவாதிகளும் அரசாங்க படைகளும் தீவிரமாக போராடிவந்த இடமான வடக்கு, கிழக்கு பிரதேசம் அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் கடலில் மூழ்கிவிடலாம் என்று முனசிங்க மேலும் கூறினார்.

காலநிலை மாற்றத்தினால் நுளம்புகள் தாழ்ந்த பிரதேசங்களிலிருந்து மலைப் பிரதேசங்களுக்கு படையெடுக்கக்கூடுமெனவும் இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மலைநாட்டில் பரவலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தமிழ்வின்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தீவிரவாதிகளும் அரசாங்க படைகளும் தீவிரமாக போராடிவந்த இடமான வடக்கு, கிழக்கு பிரதேசம் அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் கடலில் மூழ்கிவிடலாம் என்று முனசிங்க மேலும் கூறினார்.

அப்ப தமிழீழம் மூன்று தசாப்தத்தின் பின்பு இருக்க மாட்டுதா?

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் துகளைக் கண்டு பிடித்துக் கடவுள் ஆன, பெருமான்கள் தான் இதற்கும் பதில் சொல்ல வேண்டும். மனிதனால் எல்லாம் முடியும், என்று மார்தட்டியது இது தானா?

அப்ப தமிழீழம் மூன்று தசாப்தத்தின் பின்பு இருக்க மாட்டுதா?

எல்லா இடமும் என்றில்லை. கிட்டத்தட்ட அரை மீட்டருக்கு குறைவான பகுதிகள் மூழ்கக் கூடும். பெரும்பாலும் யாழ்பாணத்தில் சில பகுதிகள், தீவுப்பகுதிகளில் சில பகுதிகள், புத்தளம், மன்னார் கரையோரங்கள் என்பன மூழ்கக் கூடும்.

இதற்கு வழியில்லை என்று அர்த்தமல்ல. சில நாடுகள் கடல்மட்டத்தில் இருந்து கீழே இருந்தும் அணை கட்டி நாட்டைக் காக்கின்றன. நாங்களும் அப்படிச் செய்யலாம். ஆனால் எவ்வளவு விரைவாக போரில் வெற்றிபெறுகின்றமோ, அப்போது தான் இதைச் சாத்தியமாக்கலாம்.

Edited by தூயவன்

ஆற்றாமையின் இறுதிகட்டத்தில் முனசிங்க சொல்லி இருகிறார் பாவம்

கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படுவது இலங்கை மட்டுமல்ல. தென்னாசியாவின் பலநாடுகளுமே.

உலக வெப்பமடைதலுக்குக் காரணம் மனிதனே. வெப்பமடைதலைக் குறைத்து இதனால் ஏற்படக் கூடிய இயற்கை அழிவுகளைத் தடுப்பதும் மனிதனின் கைகளிலேயா தங்கியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.