Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக்கில் அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை

Featured Replies

ஈராக் சிரியாவில் உள்ள ஈரானிய ஆயுத குழுக்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட விமானதாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள்  ஈராக்கிய தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள்  நுழைந்துள்ளது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக்கில்  கடும்பாதுகாப்பிற்கு மத்தியில் காணப்படும் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள்ளேயே  ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்தின் மதில் மற்றும் வாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

us_embassyiraq1.jpg

வழமையாக தடை செய்யப்பட்ட பச்சை வலயத்தின் ஊடாக ஈரானின் ஆதரவாளர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு பேரணியாக சென்ற பின்னர் தூதரகத்திற்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

ENG7KV-XYAAB48u.jpg

தூதரகத்தின் ஜன்னல்கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைப்பதையும் தூதரகத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாதுகாப்பு காரணங்களிற்காக அமெரிக்க தூதுவரும் தூதரக பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ENG7KT4XYAAdCuj.jpg

ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களே இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரொய்ட்டர்ஸ் அவர்கள் தூதரகத்தின் வாயில்கதவில் வாசகங்களை எழுதியதுடன் கற்களால் கண்காணிப்பு கமராக்களையும் ஜன்னல்களையும் சேதப்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/72242

  • கருத்துக்கள உறவுகள்

 

LIVE: Thousands of protesters, most of them members of the pro-Iran Popular Mobilisation Forces, have entered the fortified Green Zone in Iraq’s Baghdad and have tried to storm the US embassy.

They’re condemning US air attacks on bases belonging to the Iran-backed Kataib Hezbollah armed group.

Developing story: https://aje.io/bjwzb

  • தொடங்கியவர்

பாக்தாத் தூதரக தாக்குதல்-ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையான கத்தேப் ஹிஸ்புல்லாவின் 25 பேரை அமெரிக்க விமானப்படை குண்டு வீசி கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈராக் தலைநகர் பாக்தாதின் உச்சபட்ச பாதுகாப்புப் பகுதியில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது.

இந்த  தாக்குதலில், அமெரிக்க தூதரக அதிகாரிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள டிரம்ப், தூதரக சொத்துகளுக்கோ, அதிகாரிகளுக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் எச்சரித்துள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து  பாக்தாத் தூதரகத்திற்கு கூடுதல் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

https://www.polimernews.com/dnews/95138/பாக்தாத்-தூதரகதாக்குதல்-ஈரானுக்குடிரம்ப்-எச்சரிக்கை

  • தொடங்கியவர்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 4 ஆயிரம் வீரர்களை ஈராக்கில் களமிறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

இந்த குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்துள்ளது. இந்நிலையில் தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குவைத்தில் நிலை கொண்டுள்ள 750 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் 4 ஆயிரம் வீரர்களை அனுப்பவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவில் போராட்டம் நடத்தக் குவிந்ததிருந்த மக்கள் மீது அமெரிக்க ஹெலிகாப்டர்கள் சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/95224/ஈராக்கில்-அமெரிக்க-தூதரகம்தாக்கப்பட்ட-விவகாரத்தில்டிரம்ப்-புதிய-முடிவு

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு பயலே

 

  • தொடங்கியவர்

ட்ரம்ப் மூன்று வருடங்கள் பதவி முடித்து இறுதி ஆண்டில், அதாவது தேர்தலை இந்த கார்த்திகை சந்திக்க உள்ள நிலையில், ஈராக்கில் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதாவது, ஒரு போரை மத்தியகிழக்கில் ஆரம்பிக்க உள்ளார் என நம்பப்படுகின்றது. 

தான் மீண்டும் வெல்வதற்காக இதை செய்யும் சாத்தியங்களும் உண்டு. காரணம், அவர்  மீதான  சனநாயக கட்சியின் உக்ரைன் மீதான அதிகார துஸ்பிரயோகம் வழக்கு. இதன் மூலம் அவர் பதவி விளக்கு சாத்தியங்கள் குறைவாக இருந்தாலும் இதனால் மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை இழக்கப்படும் நிலையில் உள்ளார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.