Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு இராணுவத்தினரை வெளியேற்றும் சட்டமூலம் ஈராக் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

Featured Replies

ஈராக் பாராளுமன்றில் இன்றைய தினம் வெளிநாட்டு இராணுவத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

51893321_303.jpg

ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் படு கொலை செய்யப்பட்டமைக்கிணங்கவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்ததை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

ஈராக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5000 இராணுவத்தினர் உள்ளனர்.

இதேவளை ஜெனரல் குவாசிம் சுலைமான் உடல் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/72570

Qasem Soleimani: Iraqi MPs back call to expel US troops

Iraqi MPs have passed a resolution calling for foreign troops to leave the country after the US killed top Iranian general Qasem Soleimani in a drone strike at Baghdad airport last week.

Parliament in Baghdad also called for a ban on foreign forces using Iraqi land, airspace or water for any reason.

The US has some 5,000 military personnel in Iraq, mainly as advisers.

Thousands of Iraqis attended a funeral procession for Soleimani before his body was flown to Iran.

https://www.bbc.com/news/world-middle-east-50998065

  • தொடங்கியவர்

இராசதந்திர ரீதியாக மேற்குலகம் ஈரானுடன் இராக் விடயத்தில் தோற்றுவிட்டது. 

அன்று சதாம் ஹூசைன் ஒரு  சிறுபான்மை   சுனி இஸ்லாமியத்தை சேர்ந்தவர். ஈராக்கில் உள்ள ஷியா இஸ்லாமியத்தை சேர்ந்தவர்களை இவர் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததுடன் ஈரானையும் போர் மற்றும் வேறு வழிகளில் வெற்றிகரமாக கையாண்டனர். 

சதாம் அழிக்கப்பட்ட பின்னர் ஈரான் படிப்படியாக வழக்கு பெற்று வந்துள்ளன. மேற்கொண்டு, ஈராக்கும் இழக்கப்பட்ட நாடாகும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம்...  போர் ஒன்று நடப்பதற்கான, சாத்தியங்கள் தெரிகின்றது.

  • தொடங்கியவர்

அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை - டிரம்ப்

அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

புளோரிடாவில் இருந்து வாஷிங்டன் வரும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா மீதோ அல்லது அமெரிக்கர்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் விரைவாகவும், பயங்கரமாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

ஈரானில் உள்ள 52 இடங்களை இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும், ஈரான் இனி எச்சரிக்கை விடுத்தாலே, அடுத்த கட்ட தாக்குதல் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க ராணுவத்தை ஈராக்கில் இருந்து வெளியேற்ற அந்த நாடு தீர்மானம் கொண்டு வந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது என்ற அவர், ஈராக் இந்த விஷயத்தில் தொடர்ந்து வலியுறுத்தினால் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வரப்படும் என்றார்.

https://www.polimernews.com/dnews/95725/அமெரிக்க-படைகளைவெளியேற்றினால்-ஈராக்-மீதுபொருளாதார-தடை---டிரம்ப்

 

  • கருத்துக்கள உறவுகள்

இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றினால் கடும் தடைகள்: டிரம்ப் எச்சரிக்கை

டொனால்டு டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடொனால்டு டிரம்ப்

இராக்கில் இருந்து அன்னியப் படைகள் வெளியேறவேண்டும் என்று இராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டால், அவர்கள் பார்த்திராத வகையில் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இராக் தலைநகர் பாக்தாத்தில், அண்டை நாடான இரான் புரட்சிகர ராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது. பழிவாங்கப் போவதாக இராணுவம் சபதம் செய்துள்ளது.

இந்நிலையில், இரானில் இருந்து அன்னியப் படைகள் வெளியேற வேண்டும் என்று இராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "எங்களுக்கு அங்கு (இராக்கில்) அசாதாரணமான, விலை மதிப்பு மிக்க விமான தளம் உள்ளது. அதைக் கட்டுவதற்கு பல நூறு கோடி டாலர்கள் செலவு பிடித்தது. எங்களுக்கு அந்தப் பணத்தை திருப்பித் தந்தால் ஒழிய நாங்கள் வெளியேறமாட்டோம்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபருக்கான விமானத்தில் இருந்து பேசிய டிரம்ப், "நட்பற்ற முறையில் அமெரிக்கப் படைகளை வெளியேறும்படி இராக் கூறுமானால், அவர்கள் முன்பு பார்த்திராத வகையில் தடைகளை விதிப்போம். இரான் மீது விதிக்கப்பட்ட தடைகளே சாதாரணம் என்று தோன்றும்படி அது இருக்கும்" என்று கூறினார்.

சுலேமானீபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசுலேமானீ

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். குழுவுக்கு எதிரான சர்வதேச கூட்டணியில் அமெரிக்கா உறுப்பு வகிப்பதால், 5,000 அமெரிக்கப் படையினர் இராக்கில் நிலை கொண்டுள்ளனர்.

இராக்கில் ஐ.எஸ். குழுவுக்கு எதிரான நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைத்தது இந்தக் கூட்டணி. இராக் எம்.பி.க்கள், வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்று கோரி, கட்டுப்படுத்தாத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள இரானுக்கு நெருக்கமான ஷியா முஸ்லிம் பிரிவினர் அழுத்தத்தினால் இந்தத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட 62 வயதான சுலேமானீ, மத்தியக் கிழக்கு நாடுகளில் இரான் ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். இவரை பயங்கரவாதி என்று அறிவித்திருந்தது அமெரிக்கா.

இரான் கொண்டு செல்லப்பட்ட சுலேமானீயின் உடலுக்கு, பல்லாயிரம் மக்கள் வீதிகள் முழுவதும் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர். சுலேமானீ தலைமை வகித்து வழிநடத்திய குத்ஸ் ஃபோர்ஸ் என்ற படையின் புதிய தலைவரான இஸ்மாயில் கானி, மத்தியக் கிழக்கில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது என்று சபதம் செய்துள்ளார்.

"தியாகி சுலேமானீயின் பாதையில் அதே வேகத்தில் செல்வோம். அமெரிக்காவை இந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவதே எங்களுக்கு இழப்பீடாக இருக்கும்" என்று அவர் அரசு வானொலியில் பேசினார்.

https://www.bbc.com/tamil/global-51011478

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.