இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என ஐ.சி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, பயிற்சியில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார் ரோரி பேர்ன்ஸ்.

hhWfGIsc.jpg

இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை லண்டனில் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரை நான்கு மாதங்கள் வரை ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனால் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் அவர் பங்கு கொள்ள மாட்டார் எனவும் ஐ.சி.சி.சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் மாதம் இலங்கை வரும் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியுடன் பலப் பரீட்சை நடத்துகின்றது.

முதல் போட்டி மார்ச் மாதம் 19 - 23 ஆம் திகதி வரையும், இரண்டாவது போட்டி 27 - 31 ஆம் திகதி வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்கத்கது.

https://www.virakesari.lk/article/72729