Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் செய்திகள்

Featured Replies

புகைப்பிடித்தலின் காரணமாக காச நோய்க்கான தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பலர் இந்நோயின் தாக்கத்து உள்ளாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் பில்லியன் கணக்கானோர் காச நோய்க்கான பற்றீரியாவை (Mycobacterium tuberculosis) தமதுடலில் கொண்டுள்ள போதும் மில்லியன் கணக்கானோரே கடும் பாதிப்புக்குள்ளாகி நோய் கண்டு இறக்கின்றனர் அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!

Edited by வானவில்

  • தொடங்கியவர்

உலக வெப்பமுறுதலின் (Global Warming) பக்க விளைவால் 160,000 பேர் வருடம் தோறும் மரணிப்பதாக விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது...மலேரி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் நிபுணர்கள், மற்றும் டாக்டர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி செயற்கை ரத்தத்தை உருவாக்கி உள்ளனர்.இந்த செயற்கை ரத்தம் பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் ஆனது. அவற்றில் உள்ள இரும்பு அணுக்கள் ஹீமோ குளோபின்களாக செயல் படும். இவை ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும்.

இந்த புதிய செயற்கை ரத்தத்தை போர் முனைகளில் ராணுவத்தினர், மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர தேவையாக செலுத்தி உயிர் இழப்பை தடுக்க முடியும். ஆம்புலன்சுகளில் அதிக அளவு இந்த செயற்கை ரத்தத்தை எளிதாக எடுத்துச் செல்லவும் முடியும்.

  • தொடங்கியவர்

இந்திய அமெரிக்கர்கள் உட்பட ஆசியாவைச் சேர்ந்த 90 சதவீத அமெரிக்கர்களுக்கு இண்டர்நெட் முக்கியப் பங்காற்றுகிறது.

சுமார் 90 சதவீத ஆசிய அமெரிக்கர்கள் ஆன்லைனில் இருப்பதாகவும், 70 சதவீதம் பேர் குறிப்பிட்ட இணைய தளங்களை பார்த்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் 50 சதவீதம் பேர் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரட்டிப்பாகியிருப்பதாகவும் 3-வது ஆண்டு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டில் இணைய தளத்தைப் பயன்படுத்தும் வரிசைப்பட்டியலில் ஆசிய அமெரிக்கர்கள் 8வது இடத்தில் இருந்து, கடந்த ஆண்டில் 5வது இடத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆசிய இந்தியர்களும், சீனாவைச் சேர்ந்தவர்களும் இண்டர்நெட்டில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும், 25 முதல் 34 வயது வரையுள்ள இளம் அமெரிக்கர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இண்டர்நெட்டை பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஆசிய அமெரிக்கர்கள் அதிகமாக ஆன்லைனில் வாங்கியிருப்பது ஜவுளி மற்றும் புத்தகங்களே என்று தெரிய வந்துள்ளது.

சுமார் 80 சதவீத ஆசிய இந்தியர்கள் பிரபல் செய்தித் தாள்களை இணைய தளத்தில் படிப்பதுடன் ரேடியோ மற்றும் டிவியையும் பார்ப்பதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது

  • 2 months later...
  • தொடங்கியவர்

சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்கும்

வேர்க்க விறு விறுக்க உடற்பயிற்சி செய்தால் தான் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில்லை. சின்னச் சின்ன பயிற்சிகள் கூட ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்து வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் என்று அறிவியல் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. அளவான உடற்பயிற்சி 18 சதவிகிதம் முதல் 84 சதவிகிதம் வரையான இருதய நோய்களைக் குறைத்து 18 சதவிகிதம் முதல் 50சதவிகிதம் வரையான மரணங்களைத் தள்ளிப் போடுகிறது. சியாட்டிலில் நடத்தப்பட்ட ஆய்வு, வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் தோட்டங்களைப் பராமரிப்பது கூட திடீர் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து 66சதவிகிதம் வரை பாதுகாக்கிறது எனச் சுட்டிக் காட்டுகிறது. வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் வாக்கிங் சென்று வருபவர்களுக்கு 73 சதவிகிதம் வரை இருதயப்பிரச்னைகளைத் தள்ளிப் போடுகிறது. நெதர்லாந்தில் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலைபார்ப்பவர்களை விட வாரம் ஒரு முறை வாக்கிங் போவது அல்லது சைக்கிள் ஓட்டுவது ஆகிய ஏதேனும் ஒன்றில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தது 29 சதவிகிதம் வரை மரணம் ஏற்படுவது தள்ளிப் போடப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான உடற்பயிற்சிகள் கூட உயர் ரத்த அழுத்தத்தை 20 புள்ளிகள் வரை குறைத்து விடுகிறது. மார்பகப் புற்று நோய், நீரிழிவு, பக்க வாதம் பேன்ற பல பிரச்னைகளைத் தவிர்க்க குறைந்த அளவிலான உடற்பயிற்சிகள் கூடப் போதுமானது. விஸ்கான்சினில் இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு, துண்டு துண்டாகச் செய்யப்படும் முயற்சிகளும். ஒரே நேரத்தில் செய்யப்படும் முயற்சிகளும் சம அளவிலேயே பலன்களைத் தருகின்றன என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. அதாவது 45 நிமிடம் தொடர்ச்சியாக வாக்கிங் போவதும், 15 நிமிடம் முதலிலும், 2 நாள் கழித்து 30 நிமிடம் வாக்கிங் போவதும் ஒரே பலனைத் தான் கொடுக்கின்றன என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது

  • தொடங்கியவர்

புகைப்பிடித்தலின் காரணமாக காச நோய்க்கான தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பலர் இந்நோயின் தாக்கத்து உள்ளாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் பில்லியன் கணக்கானோர் காச நோய்க்கான பற்றீரியாவை (Mycobacterium tuberculosis) தமதுடலில் கொண்டுள்ள போதும் மில்லியன் கணக்கானோரே கடும் பாதிப்புக்குள்ளாகி நோய் கண்டு இறக்கின்றனர் அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!

  • தொடங்கியவர்

மண்புழுக்களை பயன்படுத்தி கழிவு நீரை சுத்தம் செய்யும் தொழினுட்பம் சில நாட்டு விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

மண்புழுக்களை பயன் படுத்தி கழிவு நீர்களை சுத்தம் செய்யும் புதிய தொழினுட்ப மொன்றை சில நாட்டு விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளார்.

சில நாட்டில் கோழி பண்ணையொன்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தம் செய்வதற்கு மண்புழுக்களை பயன் படுத்தும் முறையொன்றை சில நாட்டு விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

மண்புக்கள் கழிவுநீரிலுள்ள நுண்ணங்கிகளை உட்கொள்வதில் நீரை சுத்திகரிக்கும் பணியில் பங்குபற்றுவதாக சில நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

இம் முறைகள் சில நாட்டிலுள்ள 50% தொழிற்சாலை பயன்படுத்துகின்றனர்

  • தொடங்கியவர்

இருவகையான எரிப்பொருளில் ஒடும் கார்களை உற்பத்திச் செய்யப் போவதாக இரான் அறிவிப்பு

பெட்ரோலில் ஓடும் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தப் போவதாகவும், அதற்குப் பதிலாக இரு வகையான எரிபொருட்களில் ஓடும் கார்களை, அதாவது எரிவாயுவிலும் ஓடும் கார்களை அதிகமாகத் தயாரிக்கப் போவதாக எவரும் எதிர்பாராதபடி இரான் அறிவித்துள்ளது.

பெட்ரோலில் ஓடும் கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அந்த நாட்டின் தொழில்வள அமைச்சர் அறிவித்துள்ளார்.

இவற்றுக்குப் போதுமான எரிவாயுவைத் தயாரிக்கவோ அல்லது எரிவாயுவை நிரப்பும் நிலையங்களுக்கு அவற்றை விநியோகிக்கவோ தேவையான உட்கட்டமைப்பு இருக்கிறதா என்பது தெளிவாகவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்

விற்றமின் டி யும் புற்றுநோயும்.

உடலில் உள்ள விற்றமின் டி புற்றுநோய் ஆபத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விற்றமின் டி யின் இயற்கை வடிவமான டி3 இயற்கையாக ஆரோக்கியமான தோலினால் இளங்காலை சூரிய ஒளிக்கு முகம் கொடுக்கும் போது உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு மேலதிகமாக சில வகை உணவுகள் மூலமும் விற்றமின் டி பெறப்படலாம். உதாரணமாக மீன் எண்ணெய்,மாஜரீன் மற்றும் இறைச்சி வகைகளில் விற்றமின் டி போதிய அளவு காணப்படுகிறது.

  • தொடங்கியவர்

சிகரெட் கொள்ளி..!

சின்னஞ் சிறு கொள்ளிக்கட்டை போன்ற சிகரெட்டை அணைக்காமல் எறிவது கொஞ்சமும் சரியல்ல. சிகரெட் நுனியில் கனன்று கொண்டிருக்கும் தீயின் உஷ்ணம் 800 முதல் 1,200 டிகிரி பாரன்ஹீட் (F) இருக்கிறது. தீப்பிடித்துக் கொள்ள காகிதத்துக்கு 45 டிகிரியும் மரத்துக்கு 47 டிகிரியும் போதும் என்பதை இங்கே நீங்கள் கவனிக்கவேண்டும்.'படுக்கையில் சிகரெட் குடிக்காதே என்று அமெரிக்காவில் ஓயாமல் எச்சரிக்கிறார்கள். அப்படியிருந்தும், அதை இலட்சியம் செய்யாமல், படுக்கையில் சிகரெட் குடித்து அப்படியே தூக்கத்தில் ஆழ்நததால், 2,500 அமெரிக்கர் அண்மையில் தங்களுக்கே கொள்ளி வைத்துக் கொண்டு மாண்டார்கள. அவர்களில் பலர் தாங்கள் படுத்த கட்டடங்களையும் சாம்பலாக்கி விட்டுப் போய்விட்டார்கள்.

மருத்துவமனைகள், அறைகளை வாடகைக்கு விடும் வீடுகள், ஓட்டல்கள் இப்படிப் பல இடங்களில் சிகரெட் கொள்ளியால் பல தீ விபத்துக்கள் நேர்ந் திருக்கின்றன ஆகவே, சிகரெட் பிடிப்பவர் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1 சிகரெட் குடித்த மிச்சத்தைக் கையால் தேய்த்தோ, காலால் அழுத்தியோ அணைத்துவிட்டே எறியுங்கள்.

2 சிகரெட் நுனி எரிந்து கொண்டிருக்கும்போது தானாகவே அது உள்ளே விழுந்துவிடக் கூடியபடியோ, அணைந்துவிடக் கூடியபடியோ அமைந்த 'சாம்பல் தட்டில" தவிர வேறு எங்கும் அதை வைக்காதீர்கள்.

3 'புகை பிடிக்காதே" என்ற எச்சரிக்கை போட்டிருக்கும் இடங்களில் குடிக்காதீர்கள்.

4 சன்னல் அல்லது மோட்டார் காரிலிருந்து சிகரெட் கொள்ளியை எறியாதீர்கள்.

5 தாழிட்ட அறைகளுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள்.

6 கர்ப்பூர தைலம், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களின் அருகே சிகரெட் பிடிக்காதீர்கள்.

7 படுக்கையில் அதுவும் தனியே இருக்கும்போது ஒருபோதும் சிகரெட் பிடிக்காதீர்கள்.

  • தொடங்கியவர்

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் வழி கணணிகளின் மின்னியல் இலத்திரனியல் உபகரணங்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உயிரியல் தொழில்நுட்பத்தின் வழியும் உலகம் பலப்பல புதுமைகளை சாதித்து வருகிறது..!

கடலில் வாழும் ஜெலி (விழுது மீன்கள்) மீன்களில் இருந்து பெறப்பட்ட டி என் ஏ (DNA) அலகுகளை பன்றி முளையத்துள் (embryo) செலுத்தி பச்சை நிறப் புளொரொளிர்வுப் (fluorescent) பன்றிகளை தாய்வான் நாட்டு உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். பகலில் பச்சையாகவும் இரவில் நீலமாகவும் இந்தப் பன்றிகள் மின்சூல் அளவு ஒளியை வெளிவிட்டபடி உலா வருகின்றனவாம்.!

பன்றிகளின் உடற்தொழிற்பாட்டுக்கும் மனிதர்களின் உடற்தொழிற்பாட்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதால் இந்தப் புளொரொளிர்வுப் பன்றிகளை பயன்படுத்தி மனிதனில் உள்ள நோய்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தப் பன்றிகளை சாதாரண பன்றிகளுடன் இனக்கலப்புச் செய்வதன் மூலம் இன்னும் பல புளொரொர்வுப் பன்றிகளை சுலபமாகப் பெறவும் முடியும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.