Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர்

  image_19f6bc75fe.jpgநூற்றுக்கணக்கான பொலிஸார், ஆயுதந்தரித்த இராணுவத்தினர், சாதித்திமிர் பிடித்த ஒரு கூட்டம், ஒரு பிணத்துடன் ஒருபக்கம். இழப்பதற்கு எதுவுமற்ற சாதாரண மக்கள், கூலி உழைப்பாளர்கள், பெண்கள் மறுபக்கம். 

இவை கடந்த வாரம் இலங்கையின் வடபுலத்தில் ஒரு கிராமத்தில் அரங்கேறிய காட்சி.  
புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் இன்னொருமுறை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு நடுவே பிணத்தை எரித்தே தீருவது என்று சிலர் முடிவெடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சிகள் ஊர்மக்களின் தளராத தீரமான போராட்டத்தின் விளைவால் தடுக்கப்பட்டுள்ளது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கலைமதி கிராம மக்கள் தங்கள் ஊருக்கு நடுவே உள்ள மயானத்தை நிரந்தரமாக அகற்றக் கோரி மேற்கொண்ட நீண்ட தளராத போராட்டத்தின் விளைவாக, நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த முரண்பாட்டின் மய்யம் சாதி. 

தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிற தமிழ்த் தேசியவாதிகள் யாரும் திரும்பிப் பார்க்காத ஆதரவு தராத களம் கலைமதி கிராமம். 700 குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன. இங்குள்ள யாரும், தங்களின் பிணங்களை இந்த மயானத்தில் எரிப்பதில்லை. மாறாக, இதன் அடுத்த கிராமத்தில் உள்ள ஆதிக்கசாதியினரே தங்களின் பிணங்களை இங்கு எரிக்க முயல்கிறார்கள். மீண்டும் முளை விட்டுள்ள இந்த நெருக்கடி, இன்றைய சூழலில் ஆழமாகவும் விரிவாகவும் அதிகரிக்கின்ற சாதிய மனப்பாங்கின் வெளிப்பாடுகளாகும். 

image_452df4da01.jpg

இந்தப் பிரச்சினை வெறுமனே ஒரு கிராமத்துக்கு மட்டும் உரியதல்ல. புன்னாலைக்கட்டுவன், ஈவினையை அண்டியுள்ள திடற்புலம் மயானம், புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானம், கரவெட்டி வடக்கு மயானம் என்பன சில உதாரணங்கள். 

ஈவினை, திடற்புலம் மயானப் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கரவெட்டி வடக்கில் அமைந்துள்ள மயானத்தில் உயர் சாதியினர் எனப்படுவோர், தமக்கான ஒரு பகுதியை மதில் எழுப்பிப் பிரித்து, அதில் தாங்கள் மட்டும் தம்மவர்களை எரிப்பதற்கு முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், அதைத் தடுக்கும் வகையில், அப்பிரதேச மக்களால் அம்மதில் உடைத்தெறியப்பட்டது. இதனால் சாதிய மோதலுக்கான முறுகல் நிலை தோன்றியது. அதில் பிரதேச சபை தலையிட்டு, அவ்வாறு தனியாகப் பிரித்து மதில் கட்டமுடியாது எனக் கூறி, அப் பிரச்சினையைத் தணித்தாலும், இன்னமும் முரண்பாடு நிலவுகிறது. 

மக்களுக்காகவே மயானங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சனத்தொகை குறைவாக இருந்த  காலத்தில், குடியிருப்புகளுக்குத் தூரத்தில் மயானங்கள் அமைக்கப்பட்டன. சனத்தொகை பெருகி மக்கள் குடியிருப்புகளுக்கு நிலம் இல்லாதபோது, வசதியற்ற அன்றாடம் உழைத்து வாழும் சாதாரண மக்கள் மயானங்கள் என்றும் பாராது, அவற்றை அண்டிய காணிகளை விலைக்கு வாங்கிக் குடியமர்ந்தனர். 

புதிய மின்மயானங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தங்கள் கிராமத்தில் உள்ள மூன்று மயானங்களையும் பயன்படுத்தாமல் அண்டைய கலைமதி கிராமத்துக்கு நடுவில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மயானத்தில் பிணத்தை எரிக்க முயல்வது சாதியத்திமிரன்றி வேறல்ல. 

வடபுலத்தின் சாதி ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக, மக்கள் குடியிருப்புகள் நடுவே மயானங்களைப் பேணும் சாதியாதிக்க முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட காலத்திலும் போர்ச் சூழலிலும் மறைந்து வருவதாகத் தோற்றம் காட்டி நின்ற சாதியம், போர் முடிவுற்றதைத் தொடர்ந்த கடந்த பத்தாண்டுகளில் வடக்கில் சாதியம் வெவ்வேறு தளங்களிலும் வழிகளிலும் தனது இருப்பை நிலைநிறுத்த முனைந்து நிற்கின்றது.

இந்தச் சாதியத்திமிரைக் கட்டமைப்பதில் ஊடகங்களினதும் சமூகவலைத்தளங்களினதும் பங்கு பெரிது. குறிப்பாக, உண்மைச் செய்திகளை மறைப்பது, செய்திகளைத் திரிப்பது, பொய்களைப் பரப்புவது என்பன தொடர்ந்து நடந்து வருகின்றன. மறுபுறம், சாதியப் பிரச்சினைகள் பற்றிய தமிழ் அரசியல் தலைவர்களின் மௌனம் தொடர்ந்து நீடிக்கிறது. 

‘சாதித் திமிருடன் வாழும் தமிழனோர் பாதித் தமிழனடா’ என்றார் கவிஞன் சுபத்திரன். இன்றும் சாதிய மனங்களோடு தான், ஊடகங்கள் தமது வியாபாரத்தையும் தமிழ்த்தேசியம் தனது  அரசியலையும் முன்னெடுக்கின்றன. ‘சாதியம் மறுப்போம் சமத்துவம் காண்போம் மனங்களை விரிப்போம் மனிதராய் எழுவோம்’ என்பது இந்நூற்றாண்டிலேனும் ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு இயலுமாகுமா?

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வீட்டு-முற்றத்தில்-பிணமெரிக்கும்-சாதித்-திமிர்/91-246436

3 hours ago, nunavilan said:

வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர்

தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதாகச்

தமிழ் மக்களின் விடுதலை வெளியே இருந்து வரத் தேவையில்லை. முதலில் உள்ளேயிருந்து வரட்டும். சிங்கள அடக்குறை என்று கூக்கிரலிடும் எம்மவர்கள் தாங்கள் எத்தனை பேரின் உரிமைகளை காலால் மிதித்து துவசம் செய்கிறார்கள் என்பது பற்றி சிறிதும் சிந்திப்பதேயில்லை. 

இனவிடுதலை என்ற கோசம் எம்மில் பலருக்கு ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்பதே

3 hours ago, nunavilan said:

கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சிகள் ஊர்மக்களின் தளராத தீரமான போராட்டத்தின் விளைவால் தடுக்கப்பட்டுள்ளது. 

மக்கள் போராட்டம் வென்றது. மீண்டும் இவ்வாறான அடாவடித்தனமான செய்கைகளை எமது மக்கள் நிறுத்தல் வேண்டும். ஒரு சமத்துவமான சமூகம் உறுதியாக வளர்க்கப்பட்டு பேணப்படல் வேண்டும்.

ஜாதி

Edited by ampanai
Addional info

26 minutes ago, manimaran said:

தமிழ் மக்களின் விடுதலை வெளியே இருந்து வரத் தேவையில்லை. முதலில் உள்ளேயிருந்து வரட்டும். சிங்கள அடக்குறை என்று கூக்கிரலிடும் எம்மவர்கள் தாங்கள் எத்தனை பேரின் உரிமைகளை காலால் மிதித்து துவசம் செய்கிறார்கள் என்பது பற்றி சிறிதும் சிந்திப்பதேயில்லை. 

இனவிடுதலை என்ற கோசம் எம்மில் பலருக்கு ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்பதே

எமது இனத்தின் விடுதலைக்கும் எமது இனத்திற்குள் உள்ள சமூக குறைபாடுகளுக்கும் முடிச்சு போடுவது தவறு. இரண்டும் வேறான தேவைகள்.

நாம் ஒரு சுதந்திரமான நாடாக இருந்திருப்பினும் எமக்குள் சமூக மேம்பட்டுக்கான தேவைகள் இருந்தே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

எமது இனத்தின் விடுதலைக்கும் எமது இனத்திற்குள் உள்ள சமூக குறைபாடுகளுக்கும் முடிச்சு போடுவது தவறு. இரண்டும் வேறான தேவைகள்.

நாம் ஒரு சுதந்திரமான நாடாக இருந்திருப்பினும் எமக்குள் சமூக மேம்பட்டுக்கான தேவைகள் இருந்தே இருக்கும்.

சமூகம் விடுதலை அடையாமல் தேசம் முற்று முழுதாக சுதந்திரம் அடைந்ததாக எடுக்க முடியாது.

1 minute ago, nunavilan said:

சமூகம் விடுதலை அடையாமல் தேசம் முற்று முழுதாக சுதந்திரம் அடைந்ததாக எடுக்க முடியாது.

அப்படியானால், உலகில் எதுவுமே சுதந்திர நாடாக இல்லை.

21 minutes ago, ampanai said:

எமது இனத்தின் விடுதலைக்கும் எமது இனத்திற்குள் உள்ள சமூக குறைபாடுகளுக்கும் முடிச்சு போடுவது தவறு. இரண்டும் வேறான தேவைகள்.

நாம் ஒரு சுதந்திரமான நாடாக இருந்திருப்பினும் எமக்குள் சமூக மேம்பட்டுக்கான தேவைகள் இருந்தே இருக்கும்.

சுதந்திரம் என்பது அடக்குமுறையிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுதல்.

சாதிய அடக்குமுறைக்குள்ளாகும் ஒரு நபருக்கு/குழுமத்திற்கு அது சொந்த இனத்தால் அடக்கப்பட்டாலும் வேறு இனத்தால் அடக்கப்பட்டாலும் அதன் விளைவு ஒன்றே.

பல சமயங்களில் சொந்த இனத்தினால் வரும் அடக்குமுறையின் தாக்கம் வேற்று இனத்தால் அடக்கப்படுவதிலும் பார்க்க அதிகம். 
 
4 minutes ago, manimaran said:

நீங்கள் குறிப்பிடும் சுதந்திரம் என்பது ஒரு இனத்திற்குள், சமூகத்திற்குள் பெற வேண்டிய சுதந்திரம். அது அமெரிக்காவிலும் உள்ளது, இந்தியாவுக்கும் உள்ளது, சிங்கள சிறிலங்காவிலும் உள்ளது. அவைக்கான போராடடத்தை அமெரிக்கர்கள் அமெரிக்காவிலும், இந்தியர்கள் இந்தியாவிலும், சிங்களவர்கள் சிறிலங்காவிலும் நாளாந்தம் முன்னெடுத்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் கூறுவது, பிரித்தானியாவில் இருந்து அமெரிக்க பெற்ற சுதந்திரம், பிரித்தானியாவில் இருந்து இந்தியா பெற்ற சுதந்திரம், சிங்களத்திடம் இருந்து நாம் பெறவேண்டிய தமிழீழம் என்ற ஒட்டுமொத்த இனத்தின் சுதந்திரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ampanai said:

அப்படியானால், உலகில் எதுவுமே சுதந்திர நாடாக இல்லை.

ஒப்பீட்டளவில் கணிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையினருக்கு  உள்ள

சுதந்திரம் சிறிலங்காவில் உள்ள சிறுபான்மையினருக்கு உள்ளதா??

2 minutes ago, nunavilan said:

ஒப்பீட்டளவில் கணிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையினருக்கு  உள்ள

சுதந்திரம் சிறிலங்காவில் உள்ள சிறுபான்மையினருக்கு உள்ளதா??

இல்லை என்றுதான் நானும் கருதுகின்றேன். அதனால் தான் அங்கு போராட்டம் பெரிதாக உள்ளது  ஒப்பீட்டளவில்.

35 minutes ago, ampanai said:

நீங்கள் குறிப்பிடும் சுதந்திரம் என்பது ஒரு இனத்திற்குள், சமூகத்திற்குள் பெற வேண்டிய சுதந்திரம். அது அமெரிக்காவிலும் உள்ளது, இந்தியாவுக்கும் உள்ளது, சிங்கள சிறிலங்காவிலும் உள்ளது. அவைக்கான போராடடத்தை அமெரிக்கர்கள் அமெரிக்காவிலும், இந்தியர்கள் இந்தியாவிலும், சிங்களவர்கள் சிறிலங்காவிலும் நாளாந்தம் முன்னெடுத்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் கூறுவது, பிரித்தானியாவில் இருந்து அமெரிக்க பெற்ற சுதந்திரம், பிரித்தானியாவில் இருந்து இந்தியா பெற்ற சுதந்திரம், சிங்களத்திடம் இருந்து நாம் பெறவேண்டிய தமிழீழம் என்ற ஒட்டுமொத்த இனத்தின் சுதந்திரம்.

இந்தியா உள்பட்ட பல நாடுகளின் சுதந்திரம் என்பது உயர்சாதியினர் அல்லது மேல் தட்டு மக்கள் தங்கள் மீதான அடக்குமுறையை முதலில் இல்லாது செய்து (சுதந்திரப் போராட்டம்) அதிகாரத்தை கைப்பற்றி  பின்னர் அதனை ஏனையவர்கள் மீது திணிக்கும் ஒரு செயன்முறையாகவவே உள்ளது. தமிழுழம் என்பதும் அப்படியானதொன்றின் ஒரு படிமுறையே. 

இதற்கான பலிக்கடாக்கள் பலர்

2 minutes ago, manimaran said:

இந்திய நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆனாலும், அது ஒரு சுதந்தர நாடக இருக்கும் காரணத்தால் தான் ஒரு அப்துல் கலாம் இல்லை ஒரு சுந்தர் பிச்சை உருவாக்க முடிந்தது.

ஏன், கனடாவிற்கு ஏதிலியாக புகலிடம் புகுந்த நானும் பல இடங்களில் அவமானப்பட நேர்ந்தது. ஆனாலும், எனது அடுத்த தலைமுறை நிமிர்ந்து வாழும் என்பது  நிச்சயம். அதுவே, சிலங்காவில் வாழும் எந்த தமிழினக்கும் இல்லை.

சுதந்திர இந்தியாவில் நம்மால் ஒரு சுந்தர் பிச்சையையும் அப்துல் கலாமையும்தான் அடையாளம் காண முடிகின்றது. பிரித்தானிய-இந்தியாவாக இப்போதும் இருந்திருந்தால் ஆயிரமாயிரம் சுந்தர் பிச்சையும் அப்துல் கலாமும் வந்திருக்கும் வாய்ப்பும் நிறையவே உண்டு.

பிரித்தாணிய ஆதிக்கத்தின் கீழிருந்து வளர்ந்த கொங்கொங் ஒரு சின்ன உதாரணமே. 

பிரித்தானியாவின் கீழ் அடிமையாயிருப்பது நல்லது என்பதல்ல என் வாதம். 

ஒரு இனத்தின் வளர்ச்சி என்பது உள்ளிருந்து வருவதே. 

பக்குவமடைந்த இனம் எப்படியான புறக் காரணிகளிலும் தளிர்விட்டு வளரும் (கொங்கொங்) 

ஏனையவை தமக்குள்ளே மோதி மாளும் (இந்தியா)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.