Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச மகளிர் தினம் இன்று

Featured Replies

இன்று சர்வதேச மகளிர் தினமாகும்.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர்.

பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய இரண்டு காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து பிரான்ஸ் பெண்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஐரோப்பா முழுவதும் ஆதரவு பெருகியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பிரான்ஸில் ஆட்சி அமைத்த லூயிஸ் பிளாங், பெண்களை அமைச்சரவை ஆலோசனை குழுவில் இணைத்ததுடன், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும் இணங்கினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 1848ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி இடம்பெற்றது. அதன் பின்னர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இடம்பெற்ற பெண்களின் புரட்சிகளை கருத்தில் கொண்டு, மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வதேச மகளிர்தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

இந்தநிலையில் உலகளாவிய ரீதியாக குறைந்தது 90 சத வீதமானவர்கள், பெண்களுக்கு எதிரான பக்கச்சார்பு தன்மையை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 75 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பாலின சமூக விதி முறைகள் தொடர்பான ஆய்வொன்றில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 50 சத வீதமான ஆண்கள், பெண்களைவிட தமக்கே அதிக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். உலகில் உள்ள எந்த நாட்டவரும் பால் சமன்பாட்டிற்கு ஆதரவினை வழங்குவதில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பதவியில் உள்ள பெண்கள் ஆண்களைவிட குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 40 சதவீதமான மக்கள், வர்த்தக நிறைவேற்று அதிகாரிகளாக பெண்களைவிட ஆண்களே சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, பெண்களுக்கு எதிரான தன்மை மற்றும் தவறான கருத்துக்கள் குறித்த தடைகளை துரித கதியில் அகற்றுவதன் மூலமே பெண்களின் சமன்பாட்டினை ஸ்தாபிக்க முடியும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் பாலியல் குழுவின் இயக்குனர் ரக்குவேயில் லகூனாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒட்டுமொத்தமாக இலங்கை பெண்கள் பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும் பாகுபாடுகளும் முற்றிலுமாக அகற்றப்பட்டு வருமானம் ஈட்டுவதற்கு சமமாக பங்களிக்கும் சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில்; குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் 'சகலருக்கும் சரிசமமாக' என்ற தொனிப்பொருளில் இந்த முறை இலங்கையில் மகளீர் தினம் கொண்டாடப்படுகின்றது.

 

http://www.hirunews.lk/tamil/236048/சர்வதேச-மகளிர்-தினம்-இன்று

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நடனமாடுகிறார் மற்றும் நிற்கிறார்

இன்று அனைத்துலகப் பெண்கள் நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தநாளில் ஈழப்பெண்களாகிய நாங்கள் உலகப்பெண்களோடு இணைந்து, எங்கள் உரிமைகளுக்கான குரலை உரத்து ஒலிக்கின்றோம். தாயகத்திலும் தாயகத்திற்கு வெளியே எங்கெங்கே வாழ்ந்தாலும்;, எமது பெண்களின் துயரங்களையும் வலிகளையும் உங்கள்முன் எடுத்துக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றோம். காலங்காலமாக ஈழத்தமிழ்ப் பெண்களாகிய நாங்கள் சமுக அடக்குமுறைகளுக்கும், இன ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எமது இனப்பெண்கள்மீது, பேரினவாதிகள் பல்வேறு வடிவங்களில் இனஒடுக்குமுறைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

மீள் பதிவு

 

Even in 90s, Feminism was practiced by the LTTE and many women held commander position for their entire regiment. Tamil Eelam was the ONLY country in the world where any age of women could walk at mid night alone without any fear.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி மற்றும் கண்களுக்கான கண்ணாடிகள், , ’ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.’ எனச்சொல்லும் உரை

  • தொடங்கியவர்

 

மகளிர் தின சிறப்பு குறும்படம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.