Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான் சமர்களை நடத்தமுடியுமா?

Featured Replies

புலிகளின் விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான் சமர்களை நடத்தமுடியுமா?

-கேசவன்-

விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்டுத் தயாரிப்பான ணுடுஐNணு143டு விமானங்களே என்பது திட்டவட்டமாக உறுதியாகியிருக்கிறது. இந்த விமானங்களைப்பயன்படுத்திப் புலிகளால் எத்தகைய தாக்குதல்களை நடத்தி அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்ற கேள்விக்கு விடைகாண்பதே அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

புலிகளால் விமானங்களைப் பயன்படுத்தி தற்கொலைத்தாக்குதல்களை மட்டுமே நடத்த முடியும். என்றும் அப்படியான தாக்குதல்களைக்கூட ஒரிரண்டு தடவைக்குமேல் நடத்த முடியாது என்றுமே இலங்கை அரசு கருதியிருந்தது.

ஆனால் புலிகளோ கட்டுநாயக்க வரை வந்து குண்டுத்தாக்குதல்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இது புலிகளின் வான்படைப்பலம் ஏற்கனவே கணிக்கப்பட்டதையும் விட அதிகமானதென்பதை எடுத்துக் காட்டியிருக்ககிறது. புலிகளால் விமானப்படைப் ஒன்று அமைக்கப்பட்டதே வியப்புடன் பார்க்கப்படும் நிலையில் அவர்கள் தம்மிடமுள்ள விமானங்களைத் தாக்குதலுக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு விமானிகளுடன் அவற்றை இழப்பதற்கு தயாராக இல்லை என்ற செய்தியே முக்கியத்துவமாக நோக்கப்படுகிறது

புலிகள் பெருமளவு பணத்தைக்கொடுத்து பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கொள்வனவு செய்த விமானங்களையும் மிகுந்தசிரமங்களின் மத்தியில் உருவாக்கி பயிற்றுவித்த விமானிகளையும் தற்கொலைத் தாக்குதலுக்காகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்த்தது தவறானதே.

இதனால்தான் புலிகளின் விமானத் தாக்குதல் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. புலிகளிடமுள்ள விமானங்கள் குண்டுவீச்சுக்களுக்கெனத் தயாரிக்கப்பட்டவையல்ல ஆயினும் அவர்கள் சுய முயற்சியால் தான் குண்டு வீச்சுத் தொழில்நூட்பத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

புலிகளிடமுள்ள குண்டுவீச்சு தொழில்நூட்பமானது நவீனமாயமானதாக இல்லாவிடினும் அவர்களால் துல்லியமான தாக்குதலை நடத்த முடிந்திருக்கிறது. இப்போது அரசாங்கத்திற்கும் விமானப்படைக்கும் உள்ள முக்கிய பிரச்சினை அதுவல்ல வான்புலிகள் தனியே குண்டுத்தாக்குதல்களை நடத்துகின்ற அளவுக்கு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா அல்லது அதற்கும் அப்பால் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்குத் திறன் பெற்றிருக்கிறார்களா எனபதே இலங்கை அரசுக்கு விடைகாண வேண்டிய முக்கிய வினாவாக உள்ளது

இலங்கை அரசுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாக இருப்பது கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்றே குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை ஆகும்.

புலிகளால் தாக்குதலுக்குப் புறப்பட்ட விமானங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதன்படி விமானத்தின் அடிப்பகுதியில் பின் சக்கரங்களுக்கிடையில் நான்கு குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை ஒவ்வென்றும் சுமார் 25 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளுரிலேயே இந்தக்குண்டுகள் வடிவமைக்கப்பட்டதும் உறுதியாகியிருக்கிறது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த இரண்டு விமானங்களில் வந்த புலிகள் தலா நான்கு வீதமாக எட்டுக்கொண்டுகளையல்லவா வீசியிருக்கவேண்டும்? ஆனால் நான்கு குண்டுகள் மட்டுமே வான்புலிகளால் வீசப்பட்டன இதில் மூன்று குண்டுகள் வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தின ஒன்று மட்டுமே வெடிக்கவில்லை. இதில் ஒரு விமானம் மட்டுமே தாக்குதல் நடத்தியது உறுதியாகிறது. அப்படியானால் இரண்டாவது விமானம் எதற்காக வந்தது என்ற கேள்வி எழுகிறது புலிகளை பொறுத்தவரையில் மிகவும் பெறுமதி வாய்ந்த சொத்தான விமானம் ஒன்றையும் விமானிகள் இருவரையும் தேவையில்லாத ஒரு களத்துக்குள் அனுப்பியிருக்க மாட்டார்கள்.

எனவே கட்டுநாயக்கா தாக்குதலுக்காக வந்த மற்றைய விமானத்தையும் இராணுவ நோக்கங்களின்றிப் புலிகளால் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்புகளில்லை. கட்டுநாயக்க மீதான தாக்குதலில் அதியுயர் விளைவுகளை எதிர்பார்த்திருக்கக் கூடிய புலிகளின் தலைமை இரு விமானங்களின் மூலமும் ஆகக் கூடியளவுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவே திட்டமிட்டிருக்கும்.

ஆனால் இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை மட்டும் போடும் அளவுக்குத் திட்டமிடல் அமைந்துள்ளதென்றால் அதில் ஏதோ ஒரு உட்காரணம் இருந்திருக்க வேண்டும.; குண்டுத்தாலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக மற்றைய விமானம் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெறுகிறதல்லவா?

பொதுவாக குண்டுவீச்சுக்களை நடத்தச் செல்லும் விமானங்களுக்கும் ஆபத்தான இடங்களில் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் விமானங்களுக்கும் போர் விமானங்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கமே 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்கள் உணவுப்பொட்டலங்களை வீச வந்தபோது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரகப் போர் விமானங்கள் அவற்றுக்குப் பாதுகாப்பளித்தமை நினைவிருக்கலாம் இதுபோன்று புலிகளின் குண்டு வீச்சு விமானத்துக்குப் பாதுகாப்பாக இன்னொரு விமானம் வந்திருக்கலாம் ஆனால் ஒரு விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கான விமானம் சாதாரணமானதாக இருக்கமுடியாது.

வானில் சண்டயிடக் கூடிய திறன் அந்த விமானத்துக்கு இருப்பது அவசியம் விமானத்தில் அப்படிப்பட்ட வசதிகள் இருப்பினும் விமானிகளுக்குப் போதிய பயிற்சியும் அனுபவமும் தேவை இந்த நிலையில் புலிகளிடம் இருக்கின்ற இலகு ரக விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான்புலிகளால் வான் சமர்களை நடத்தமுடியுமா? ஏன்ற கேள்விகள் எழுகின்றன.

புலிகளிடமுள்ள ZLIN Z 143 L ரக விமானங்கள் அடிப்படையில் பயிற்சி மற்றும் சாகசங்களுக்காகவே தயாரிக்கப்பட்டவையாகும் இந்த விமானங்களால் கிபிர் மிக் போன்ற போர் விமானங்களுக்கெதிராகச் சண்டையிட முடியாவிட்டாலும் சராசரி வேகமும் ஆற்றலும் இருக்கின்றன. கடந்த பல வருடங்களாகவே இரகசியமாக வான்புலிகளைப் பயிற்றுவித்து வந்த புலிகள் அவர்களை வான் சண்டைகளுக்காகத் தயார்படுத்தியிருக்க மாட்டார்களா?

புலிகள் தம்மிடமுள்ள இலகு ரக விமானங்களில் 12.7 மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளையோ அல்லது 14.5 மி.மீ சிறு பீரங்கிகளையோ பொருத்தி வான் சண்டைக்களுக்காகத் தயார்படுத்தியிருக்கலாம் சாதாரணமாக குண்டு வீச்சுத் தொழில் நூட்பத்தையே சுயமாக கண்டறிந்த புலிகளுக்கு இது ஒன்றும் கடினமான காரியமாக இருக்கது.

இப்படியாக வன் சண்டைககளுக்காகத் தயார்படுத்தப்பட்ட விமானத்தில் குண்டுகளை ஏற்றிச் சென்றிருக்க முடியாது ஆகக் கூடியது 240 கிலே எடையையே சுமக்கக் கூடிய இந்த விமானத்தில் கனரக துப்பாக்கிகளைப் பொருத்தினால் குண்டுகளை எடுத்துச்செல்ல முடியாது. இதனால் கட்டுநாயக்க தாக்குதலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கில் மற்றைய விமானம்வந்திருக்கக்கூடும்.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வவுனியாவுக்கு வடக்கே விஞ்ஞானகுளத்தில் இலங்கை விமானப்படையின் ஆளில்லா வேவுவிமானம வீழ்ந்து நொருங்கிய போது அது மற்றொரு விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இப்போது இந்தச் சந்தேகம் மேலும் வலுப்பெற்றிருக்கிறது. புலிகள் வான் தாக்குதலை நடத்தியதற்கே ஆடிப்போன அரசு அவர்கள் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்ற செய்தி உறுதியானால் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப்பபோகிறதோ தெரியவில்லை.

புதினம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...

விரைவில் கடற்சண்டைகளில் ஈட்டிய வெற்றிகள் போல் வான் சண்டைகளிலும் தமிழர் புதியவரலாறுகள் படைப்பார்கள் என எதிர்பார்ப்போம்...

விரைவில் கூட்டு கடல்ரோந்து போல கூட்டு விமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட சிறீ லங்கா அரசு, இந்திய அரசிடம் கேட்கும் காலமும் வரும்...

குறைந்த வழங்களைக் கொண்டு கடலிலும் தரையிலும் சாதனை படைக்கும் நமது தமிழ்வீரர்கள் வானிலும் இறையாண்மையை நிலைநிறுத்துவார்கள் என்பது நிச்சயம்.

ஆனால் அரசு கொள்வனவு செய்யப்போகும் மிக் 29 ஐ சிங்களம் தாங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்கா அரசு மிக்29னை" கழுவிப்பூட்டுவதற்கிடையில் "புலிகள் அடுத்த பரிமாணத்தை எடுத்து விடுவார்கள்.

விமானத்திலிருந்து குண்டுத் தாக்குதலை நிகழ்த்தி அண்மையில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது கடற்பலத்தையும் புதிய பரிமாணங்களில் விஸ்த்தரிப்பு செய்வர் என்று எண்ணுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. படகிலிருந்து ஏவப்படும் "தோர்பிடோ"(torpedo) எனப்படும் நீருக்கடியில் செல்லும் ஏவுகணைகள் மிகவும் பயனுள்ள ஆயுதமாக எதிரியின் படகுகளைத் தகர்த்து அழிப்பதற்கு தற்போது பயன்பாட்டிலுள்ள முறைகளை(?) மாற்றியமைக்க உதவும்.

மேலதிக விளக்கங்களுக்கு விக்கிபீடியாவில் விபரமான பக்கங்கள் உண்டு:

http://en.wikipedia.org/wiki/Torpedo

தலைப்பிலுள்ள "வன்"ஐ, "வான்" என்று யாராவது மாற்றி விடுங்களேன்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான் சமர்களை நடத்தமுடியுமா?

-கேசவன்-

''வன்' என்பதை '' வான்'' என மாற்றுவது வானவில் லால் முடியும்

Edited by abi_natan

விரைவில் கூட்டு கடல்ரோந்து போல கூட்டு விமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட சிறீ லங்கா அரசு, இந்திய அரசிடம் கேட்கும் காலமும் வரும்...

அப்ப விமான கூட்டு ரோந்து நடத்த இந்தியா மறுத்தால் இலங்கை வான்படை யாரைக் கடத்தும் :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.