Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

நன்றி சகோதரா....உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் மேலும் வலுவூட்டுவதாக உங்கள் செயல் இருக்கின்றது.

நான் என்றும் உங்கள் நண்பன்.

நான் உண்மையைச் சொல்ல யாருக்காகவும் பயப்பிட மாட்டேன்.

தொடருங்கள் உங்கள் பணியை...வாழ்த்துக்கள்.

உங்க உதிரப்பீயிச்சில புலியண்ணாவை வச்சு ருக்கீங்க..

ரொம்ப நன்றி...

புலியண்ண...

கீழெ இருப்பது நான் வல்வைக்கு எழுதிய கருத்து

நாம் ரெண்டு பேரும் இந்த முறைய பின்பற்று வோம்!!! :P :P :P

---------------------------------------------------------------------------------------------------------

வல்வை....

உங்க நெஞ்சுக்குள்ளே இருக்க வீட்டு குப்பைத்தொட்டில

எனக்கு ஒரு இடம் கொடுத்து வச்சுருக்கறதுக்காக

என்னோட உதிரப்பீய்ச்சிலிர்ந்து(இதயம

  • Replies 102
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போக்கிரி,புலிப்பாசறை, இருவரும் என்னை மன்னிக்கவேண்டும் தள உறுப்பினர்களுக்கு நீங்கள் யாரெண்டு இனம் காட்டுவதெல்ல எனது நோக்கம்.

யாழ்த்தளம் தமிழ்த்தேசியத்திற்கு வலுவூட்டுவதிற்கு கிடைத்த வரப்பிரசாதமாக நினைப்பவன் நான்.

ஆகவே தளத்தை யாராவது தப்பாக உபயோகப் படுத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.

எங்களுக்கு நாம் தப்புச்செய்யவில்லை என்ற நம்பிக்கையிருந்தால் ஏன் மாறுவேடத்தில் வரவேண்டும்?

இறுதிவரை அதாவது உங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை நிர்வாகத்தினருடன் போராடுங்கள்.

இந்தத்தளத்தில் இன்னும் பலபேர் பலதரப்பட்ட பெயர்களில் இங்கு காணக்கூடியதாகவுள்ளது இவர்களைக் கண்டுபிடிப்பது எனது தொழிலில்லை

இருந்தாலும் உங்களைப்போன்ற அறிவாளிகள், அதாவது இந்தத்தளத்தின் வளர்சியில் அக்கறையுள்ளவர்களைக் கண்டால் இனம் காட்டிக் கொடுத்துவிடுவேன்.

ஒருவரின் ஆக்கத்தை ஒருமுறை பார்த்துவிட்டாலே அவர் எத்தனை வேஷத்தில் வந்தாலும் கண்டு பிடிக்கக்கூடிய ஒருவிதமான சக்த்தி எனக்குண்டு.

உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள், தொடருங்கள் வெற்றியுடன் உங்கள் பணியை.

  • தொடங்கியவர்

நட்புக்கு நீதானடா யாழ் போக்கிரி!!. அந்தகாலத்தில நான் கிட்டண்ணா நடுநிசியில என்ட ஏரியாவுக்குள் வந்துவிட்டால் எப்படிப்பட்ட உயிர் போகிறபிரச்சனை இருந்தாலும் நான் ஓடி விடுவேன் அவரைப்பார்க்க.

அப்ப ஆமி நடந்து திரியிற காலம் எப்ப எப்படி எங்கிருந்து பாய்வான் என்று தெரியாதகாலம். அந்த CD200 கொண்டா கருப்பு மோட்டார்சைக்கிளில் அவர் வலம் வரும் காலங்களில் நட்ட்புக்காக எப்படியெல்லாம் பாய்ந்து பாய்ந்து உதவிசெய்தேனோ அதே இருக்கிறது ...யாழ் போக்கிரி என்ற உங்கள் அன்பு வார்த்தைகள்.

வல்வைமைந்தன் வரும் போது நிர்வாணமாக வந்து இன்று அதிஉயர் நட்புகளினை இன்கே பொறுக்கி எடுக்கவைத்த இந்த களம் தமிழ் தேசியம் செழிக்க பாடுபடுவதுபோல தமிழ் சமுதாயத்தினையும் சீர் திருத்த இப்ப இங்கே உதவுகிறது. நானே திருந்தி மாறுவதாக உணர்கிறேன். பாடங்கள் பல் படிக்கப்பட்டு, அதாவது கட்டாய பாடமாக வேறு ஆக்கி சிறப்பாக யாழ் தளம் நடைபோடுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் திருவள்ளுவர் அங்கிள் சொறி தமிழ் வள்ளுவர் அங்கிள் கவ் ஆர் யூ?

கூ ஸ் தற் ஜென்ரில்மென்ற் வல்வை மைந்தன் ?

  • தொடங்கியவர்

வணக்கம் ஈழநிலா என் அன்புத்தங்கை.

தமிழன் வாழ்க்கை பாழாய்ப்போய்விட்டதே என்று நினைத்து வாழ்க்கையின் விரக்தியின் விழிம்புக்கு போகவிடாமல், போய்விட நினைத்த உண்மையாக தமிழ் மொழிக்குவேலை செய்யை ஆசைபட்டு ஏலாம திரும்பிப்போக வெளிக்கிட்ட ஒரு தமிழனை ஊக்கம் தந்து, உங்களாலும் முடியும் என்ற பொஸிட்டீவ் வாக நின்று வாசலில் வரவேட்கும் என் புதிய யாழ் கள இரண்டாவது புரட்ச்சித்தமிழன் பிறந்த பூமியில் பிறந்து அதற்கு மேலும் இங்கே தளத்தில் நின்று மேலும் சுவையூட்டும் என் அன்பு நண்பன் வல்வை மைந்தன்.

உங்கள் கேள்விக்கு பதில் தந்திருக்கிறேன்.

வணக்கம்..வாருங்கள்...உங்கள் வரவு நல்வரவாகட்டும் :o

  • தொடங்கியவர்

என் பொன்மகள் தூயா வந்தாள்

இன்பபொருள் கோடி தந்தாள்

என் இதய பூமேடைவாசல் பொங்கும் தேனாக

கண் மணி கொஞ்சும் தமிழ்கனிவோடு என்னை

வா என்று கூப்பிட்டாள் உண்மை அன்பிலே....

ஒரு தமிழ் வைரமோ என் வசம்

என் யாழ்கள வாழ்விலே பரவசம்

எனி களவீதியில் தமிழ் மொழி ஊர்வலம்

என் நினைவெல்லாம் தமிழ் கவி நவரசம்!!

நன்றி என் மகள் தூயா!! :o

என்கே என் அடுத்த மகள் கருப்பி....??

வளர்ந்தாலும் நான் இன்றும் சிறு பிள்ளைதான்

நான் தமிழ் யாழிற்கு வந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

உனக்காக இந்த யாழ்களத்தினில் எனை மாற்றவா?

எனக்குத்தெரியும் மகள் கறுப்பி கொஞ்சம் பிந்தினாலும் அப்பு வரமுதல் வந்திருவா? :P

  • தொடங்கியவர்

அறத்துப்பால் 1.18

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீதல் அரிது!.

என்கே எப்பவும் நானே எழுதாது இம்முறை என் தம்பி , மைந்தன் மற்றும் நயினை அம்மன் உடபடபலர் தரும் போராட்ட சம்பந்தமான கற்பனைகளுடன் இதை விளக்கப்பார்ப்போம்.

என்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்களேன்!!

Edited by Tamil VALLUVAN

  • தொடங்கியவர்

தம்பி யாழ் போக்கிரி உங்கள் தமிழ் ஆக்கங்கள் உண்மையிலேயே சிறந்த படைப்புக்கள். ஏனோ தானோ என்னை பற்றிக்கதைப்பதால் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள் அறிமுகம் என்ற நன்நடத்தை முகாமில்.

ஆனால் நீங்கள் உண்மையில் மகா எழுத்தாற்றல்மிக்கவர் என்பதினை உங்கள் கவி எழுதும் பாணி, உதாரணமாக மேலே நீங்கள் எழுதிய இந்தக்கவி ஒன்றே போது உங்கள் கற்பனையாற்றலினை எடுத்துக்காட்ட. அப்படி ரொம்ப நல்லா எழுதியிருகிறீங்க.

உங்க பாணியில ஒரு கதை ஒன்று எம் தமிழ்மக்களின் ஊறிப்போன பழக்கவழக்கங்களினை நகைச்சுவையாக இங்கே எடுத்துவிட....

எலியா சிறையில நாலு சுவத்துக்குள்ள!

அடங்கி கெடந்தேன் அறிமுகச்சிறைக்குள்ளே !

கடல்மணல் செதறிய சிமெண்டு தரை

அதன்மேல் பழைய தகர டப்பா!!

டப்பா வச்சு தேச்சாலே

வருமே சவுண்டு கரகரன்னு

அந்த கர கர ஓசை வர

ஊசிப்பல்லால் நற நறன்னு

கரண்டி செஞ்சேன் குகை ஒன்று

என் சிறையின் செவுத்துக்குள்ளே!

அந்த குகைக்குள் சிங்கத்தை

உள்ளே நானே வரவச்சு

வாலினை பிடித்து நானேறி

செய்தேன் முதுகில் சவாரி

இப்போ சிங்கக் குகைகுள்ளே

புகுந்தார் எலியார் எளிதாக

வந்த எலியார் நின்றாரே...

குட்டி நெஞ்சைத் தான் நிமிர்த்தி !!!

  • தொடங்கியவர்

கவிப்பேரரசு எழுதிய ஒரு நாவல் அது என்னை ரொம்ப கவர்ந்தது அதை இங்கே வைக்கிறேன். இப்படியாக நாம் எழுதுவதால் வாசிப்போருக்கு ஒரு நகைச்சுவை கலந்த தமிழ் பாணியில் நாசுக்காக சில தத்துவங்களினை இலகுவாக அவர் மனதில் படியும் படி செய்யலாம். உங்களால் முடியும்.

இங்கே பகுதிபகுதியாக எழுதுகிறேன். வாசித்துப்பாருங்கள். அசல் உங்களைப்போலவே எழுதுகிறார் அவர்.

கருவாச்சி காவியம்.

கருவாச்சிக்குத் தெரியாமப் பிள்ளையத் தூக்கிட்டுபோன சுப்பஞ்செட்டியாரு நேர வந்து நின்னாரு. சடையத்தேவர் வீட்டு வாசல்ல.

"யப்பா...சடையத் தேவா! பெரிய மனுசா! எங்கையில் இருக்கிறது யாருன்னு கண்ணைக்கொண்டு பாரப்பா. ஒன் வம்ச வாரிசு வந்திருக்கப்பா; ஓங் குலக்கொழுந்து. ஒன்னியவே உரிச்சு வச்சிருக்கான் பாரு களவாணிப் பய.

ஒங்கிட்ட சொத்துக்கேட்டு வரலப்பா; முத்தங்கேட்டு வ்ந்திருக்கான். ஏலே பயலே! முழிச்சு பார்றா ஒன் தாத்தன...உரிமை இல்லேனு போயிரும்மா? எங்க...ஒரு எத்து ஏத்தி எச்சியத் துப்பு கெழவன் மேல். வம்பு புடிச்சவன்டா ஒன் தாத்தன்; அவன் வைராக்கியத்தில எட்டி ஒரு மிதி மிதி!

ஆடுறா ராமா ஆடுறா'னு குரங்கக்குட்டிக்கரணம் போட வைப்பானா இல்லையா குரங்காட்டி- அந்த மாதிரி கையில பிள்ளையை வைச்சுக்கிட்டே சகல வித்தைகளையும் பண்ணிப்பார்க்கிறாரு சுப்பஞ் செட்டியாரு; சாயல சடைய தேவரு.

மேனகை பிள்ளையைத் தூக்கிட்டு வந்து காமிக்க, விசுவாமித்திரர் வச்சிருந்தாரு பாருங்க ஒரு மூஞ்சி- அந்த மூஞ்ச்சிய இன்னைக்கு மட்டும் குடுங்கன்னு இரவல் வாங்கி மாட்டிக்கிட்டு, கடைவாய்ப்பல்லுல சிக்குன கறிய வெளக்கமாத்துக்குச்சி ஒடிச்சுப் பல்லுக்குத்திக்கிட்டே பராக்கு பார்த்துக்கிட்டிருக்காரு சடையத்தேவர்...

"பேரு வையப்பா பேரனுக்கு"- கடைசியா ஒரு அம்ப விட்டுப்பார்த்தாரு சுப்பஞ் செட்டியாரு.

பார்வை பிள்ள பக்கம் விழுந்திருமோன்னு வலிய முயற்சி பண்ணி மூஞ்சிய முதுகுப்பக்கம் வெச்சுக்கிட்டு, இன்னிக்கு மழை கிழ வருமான்னு அண்ணாந்து ஆகாயம் பார்த்துக்கிட்டே சாவகாசமாகச் சொல்றாரு சடையத்தேவரு; " நாயி பேயி பன்னிக்கெல்லாம் நான் பேரு வைக்கிறதில்லப்பா!"

சுண்டிக் சூம்பிக் கறுத்துப்போச்சு சுப்பஞ்செட்டியாரு மூஞ்சி. சீ! இந்தாள மனுசக் கணக்கில சேக்க முடியாதுன்னு நெனச்சுக்கிட்டாரு மனசுக்குள்ள.

"பிள்ளையக் காட்டிக் கருவாச்சிக்கு நல்லது பண்ணிப்புடலாம்ன்னு நெனச்ச நெனப்புல மண்ணடிச்சுட்டானே மனுசன். சாகப்போற கெழட்டு மாட்டுக்கே இம்புட்டு வீம்பு இருந்தா, சல்லிக்கட்டு காள ஒனக்கு எம்புட்டு வீம்பு இருக்கும்? ஒரு நாளைக்கு ஒன்னியத் தேடி வருவான்டா கெழவன். அன்னிக்கு ஒண்ணுக்கடி ஒந் தாத்தன் மடியில்"

பிள்ளையத் தூக்கிட்டு விறு விறுனு வெளியேறிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

இப்படி போக்கிரி உங்களால பல அக்கங்கள் படைக்கமுடியும். சமூகக்கதைகள் அதற்குறிய கருவினை நானோ அல்லது மற்றவர்களோ இங்கே தர உங்கள் தமிழ் கொக்கரிக்கனும் அதை இங்க யாழ் களத்தில இருக்கிற நாம் பார்த்து வாசித்து உங்ககிட்ட தமிழ் படிக்கனும். அப்படி அழகான் தமிழ் ....நான் உங்க ரசிகன். நீங்க முதலில வரும்போதே நான் சொன்னது உங்க அழகு தமிழ்வசனநடைகளில் மயங்கி தான் நீங்க என் தலைவன் என்று சொன்னன். அப்படி ஒரு தமிழ் கவர்ச்சி!! :o

  • தொடங்கியவர்

பாவ மன்னிப்பு

சிறு கதை 1.

சிலுவையில் தொங்கும் இயேசுநாதரின்பாதங்களில் முகம் புதைத்தபடி மண்டியிட்டு உட்கார்ந்திருந்தான் புலிப்பாசறை. அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஆண்டவனின் பாதங்களினை கழுவி வடிந்து ஆறாகப் பாய்ந்தது. நேரமே போனது தெரியாமல் மணிக்கணக்காக அப்படியே சிலை போல இருந்தான் விம்மலுடன் புலிப்பசறை என்ற முன்னால் கொடியவன் என்று கூறப்பட்ட இவ்யாழ்களத்தின் முன்னாள் உறுப்பினன்.

இடைக்கிடை பெருமூச்சும் விம்மலும் கண்ணீரும் காட்டாறாய் ஓட "இவையெல்லாம் எதற்காக? அவன் தன்பாடுகளை, தான் செய்திருக்கக்கூடிய தவறுகளை, மன்னிக்க முடியாத கொடிய தமிழ்ச்சொற்களினை எழுதியதற்காக கர்த்தரின் காலடியில் போட்டுவிட்டு கதறியளுவது அவன் பாவமன்னிப்பு கோரியே!"

கர்த்தர் மக்களின் குறைபாடுகளை கழுவுவதற்காகத்தானே இவ்வுலகில் வாழ்ந்தார், இரத்தம் சிந்தினார். மனிதன் தான் செய்த தவறுகளினை எப்போது உணர்ந்து கொள்ள்கிறானோ, கர்த்தரிடம் ( மோகனிடம்) கூறிக்கலங்குகிறானோ அப்போது அவற்றை அவர் மானசீகமாக ஏற்றுக்கொள்வது தான் உலக வழக்கு.

புலிப்பாசறை ஆரம்பக்காலத்தில் யாழில் யாருக்கும் அடங்காத காளையாகத்தான் இருந்தான். உடற்பலமும், தமிழில் அவன் கொண்ட ஆர்வமும் அவனினை தலைகீழாக ஆட வைத்தது. யாழ் என்ற பள்ளிக்கூடத்தில அதிபருக்கே அடங்காது பாவச்சுமையை மூட்டை, மூட்டையாக சேர்த்து வைத்திருந்தான். அது மட்டுமா தான் தோன்றித்தனமாக வருவதும், போவதுமாக வேறு எல்லோரையும் எரிச்சல், சலிப்படைய வைத்திருந்தான். சந்தர்ப்பம் கிடைத்தபோதிலும் தன் வாயால் தானே கெட்டு யாழ்களத்தில் பல பிறப்புகளினை எடுத்து அறிமுகப்பகுதியையே கேள்விக்குறியாதாக்கி எல்லோரையும் குளப்பினான்.

அதனால் யாழ் களம் என்ற ஊரில் அவனை கண்டால் பேய், பிசாசினைக் கண்டது போல ஓடி யாழ் கள உறுப்பினர்கள் ஒளிந்தார்கள்.( அப்புவினைத்தவிர)

பல நாள் ஆட்டம் ஒரு நாள் அடங்கவேண்டும் தானே, அதிபர் மேற்கொண்ட அறிமுக, குழுமப்பிரிப்பு என்ற நடவடிக்கையால் அவனால் ஒரு கட்டத்திற்கு மேலே அவனால் செயப்படமுடியாது இருந்தது. அதனால் பல வருடங்கள்( மாதம்= ஆண்டு) கடும் சிறைவாசம் வேறு அனுபவிக்கவேண்டியவனாக இருந்தான். சிறையில் வைத்து அவனின் அகந்தையினை பொல்லால் அடித்தர்கள். அவனின் உடல் பதம்பார்க்கப்பட்டது. அதே நேரம் யாழில் உள்ள சில நல்ல உள்ளங்களால் அவன் மனமும் நாளடைவில் மாறிவிட்டது. திருந்திய மனிதனாக மீண்டும் தமிழ் வள்ளுவனாக வந்தான்.

முன்பு அவனை பாவச்செயல்களினை புரிய தூண்டிய சகலரையும் அவன் மன்னித்தான். ஆனால் அவர்களோ இன்றுவரை அவனிடம் சாறி கூட சொல்லாமல் மேலே கந்தோரில் ஏசியில் உக்கார்ந்து யாழ் களத்தில் அறிக்கை எழுதிவிட்டுக்கொண்டு காய்யா இருக்கிறார்கள் என்பதனையும் பார்த்து தனக்குள் சிரித்துக்கொள்ளுகிறான்.

இப்போது அவன் உண்மையில் திருந்தியே வந்திருக்கிறான். ஆனாலும் அவனுடைய இதயத்தில் இடம்பிடித்த நல்ல நண்பர்களும் அவனுக்கு ஆதரவு தந்து மீண்டும் வரவேற்க தயங்குகிறார்கள். சிலர் பதவியில் இருப்பதால் அவர்களின் நாற்காலிகளின் பாதுக்காப்பு கருதி கம் என்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதும், இவன் தமிழ் வள்ளுவனுக்கு விளங்காமலில்லை. அவனை இந்த யாழ் கள சமுதாயமே ஏனோ தானே முறையாக வரவேற்கவில்லை. திருந்தியவனாக வந்த புலிப்பாசறையின் உள்ளம் வேதனையால் துடித்தது. நான் ஏன் மீண்டும் பிறந்தேன் இங்கே? என்னை ஏற்றுக்கொள்வார் யாரும் இல்லையா என்று? இதை விட்டால் நான் எங்கு போவேன்? இன்னும் எதற்காக இங்கே யாழில் உயிருடன் இருக்கனும்? என்ற கணைகள் அவனைத்துளைத்தன. அலைபோல திரண்டு வந்த துன்பம் பாறாங்கல்லாய் நெஞ்சை அழுத்தியது.

அவனி அறியாமலே கால்கள் சிலுவை இயேசுவின் திருவுருவச் சிலைமுன் போய் நின்றன." கர்த்தரே! எல்லாம் வல்ல என் பிதாவே! இயேசுவே! ஆண்டவரே! என்னைப்பாதுக்காத்தருளும். எனது பாவங்களினை மன்னித்தருளும்". என்று அவரின் இரு பாதங்களினையும் பற்றிக்கொண்டான். தான் செய்த பாவச்சுமைகளை அவிழ்த்து ஒவ்வொன்றாக இறைவன் முன் கொட்டினான். கண்ணீர் வடித்தபடி கண்ணயர்ந்துவிட்டான். கொர். கொர். கொர்...கடும் நித்திரை அவனை ஆட்கொண்டது. அப்போது அவன் கனவுலகில் காற்றினில் மிதக்கின்றான். கர்த்தர் அவனை தொட்டு , யாழ் களத்தில் வந்து மோகன் என்ற பெயரில் வரவேற்பதாக பார்க்கின்றான்.

அவன் உடலில் தமிழுக்கு சேவை செய்யவேண்டிய ஒரு தார்மீக கடைமையுணர்வு பிறந்து, அவனை தட்டி விட்ட மாதிரி ஒரு ஸ்பரிசம் அவன் உடலெங்கும் பரவியது போல உணர்கிறான். புல்லரிக்க எழுந்து நின்று பார்த்தால்

மீண்டும் அவனால் அறிமுகப்பகுதியில் யாழ் போக்கிரியுடன் திருக்குறள் கதைப்பதிலும், கவிதை, நாடகம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவை எழுதுவது பற்றி கதைப்பது அவனுக்கு கேட்கிறது.

அப்ப நான் கண்டது கனவா? அவன் நெஞ்சு இப்போ மீண்டும் கனக்கிறது. யேசுவே என்ன மனிதர்களப்பா இந்த உலகில்.....இரக்கமே இல்லையா? இப்படியே முனுமுனுத்தபடி மீண்டும் கனவிலாவது யாழில் மோகனினை சந்திகலாம் என்ற ஒரு நப்பாசையில் மீண்டும் தூங்கிவிடுகிறான். :o

வணக்கம் வாருங்கள்

  • தொடங்கியவர்

வந்தனங்கள் மதன் சார். ஆமா கர்த்தர் உங்க உருவத்தில வதிட்டாரோ என்று கூட இப்ப புலிப்பாசறை வேற யோசிக்கிறார். சீ சீ அப்ப்டி எல்லாம் இருக்காது, நிச்சயமாக கருத்துக்கள் நிர்வாகத்தில இருந்தாலும் சும்மா தான் வரவேற்றிருக்கிறீங்க. அந்த இரும்பு மனிதர் வந்து வாங்க என்று சொல்லப்போறது நடக்கப்போற விடையமா என்ன?

ஆனாலும் நான் யாழ் கள ஊருக்கு நல்லது தான் சொல்ல்வேன்.

மேலே என்னால் எழுதப்பட்ட கதை ஒரு 10 நிமிடத்தில் வேற எங்கையும் எழுதிபார்க்காது கள மடலின் பதில் எழுதும் பகுதியில் குதிரை ஓடியது போல எழுதியது.

இப்ப இங்க எழுதப்போறது அப்படித்தான் இப்ப ஆக எனக்கு தற்போதய தமிழன் அது இலங்கையில் இருக்கட்டும், இந்தியாவில் இருகட்டும், அப்புறம் புலம் பெயர்ந்து பென்ஸ் , பிஎம்W இல போற தமிழனாக இருக்கட்டும். அவனின் வாழ்க்கை எப்பவும் ஒரு கைரேகை சாத்திரம் சொல்லும் ஒரு கூண்டுக்கிளி போன்றது தான் அவர்களின் கதியும் வாழ்க்கையும் என்பது தான் நான் எழுதப்போகும் சிறு கதை 2 இன் கரு. எனக்கே தெரியாது எப்படி தொடங்கப்போகிறேன் என்று.

அனாலும் மதன் சார் வந்திடார் எல்லா ...நான் மகிழ்ச்சியில் எப்படியும் இன்றிரவு எழுதிடுவன். பாருங்கள் எப்படி தமிழில் சிறு கதை எழுதுவது. உங்கள் எல்லாராலும் இது முடியும் ஏனெண்டா என்னால முடியுது!

  • தொடங்கியவர்

என்னை தன்னுடைய நண்பர்கள் என்று பகிங்கரமாக, எதுவும் நடக்கலாம் என்று தெரிந்தும், உண்மையான அன்பினை எனக்கு தந்த அந்த உத்தம நண்பர்களின் உறவினை கோடிட்டுக்காட்ட இதோ

உலகத்தில் நல்ல நண்பன் எப்படி இருக்கனும் என்பதினை மற்றவர்களும் தெரிந்து கொள்ள

யாழ் போக்கிரி, வல்வை மைந்தன், லிசா, வானவில், யமுனா போன்ற துணிந்த யாழ் கள உறவுகளுக்காக சம்ர்ப்பிக்கிறேன்.

நல்ல நண்பன்.

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனையும் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எச்ச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக நீ அடையாளம் கண்டு கொண்டு விட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பன் யார் என்பது அனுபவத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியுமே அல்லாது சாதாரணமாக முடியாது.

முகத்துக்கு முன்னே சிரிப்பவன், முகஸ்துதி வேறு செய்பவன், கூனி உன் பணத்தின் முன் குழைபவன், காலில் வேறு கூணி குறுகி விழுபவன் இபாடியாக பல தரப்பட்ட மனிதர்கள் நல்ல நண்பர்கள் மாதிரியே தோற்றமளிப்பார்கள்.

எந்த நேரத்தில் யாரு உன்னைக்கவிழ்ப்பான் என்பது உனக்கு ஆரம்பத்தில் தெரியாது. அது ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும். அதாவது உன் உள் உணர்வுக்கு மட்டும் தான் தெரியும்.

ஆக்வே ஒருவனை நண்பனாக்கிக்கொள்ள முதல் அவனை நீ நன்றாக தெரிந்து பழகி அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரியாக தெரிந்து கொண்ட பின்பு தான் நீ அவர்களிடம் உன் ரகசியங்களினை, ஆலோசனைகளினை எதிர்பார்க்கவேண்டும்.

அப்படி தெரிந்து நண்பனாக்கி வீடு அதன் பின்பு அவன் மேல் சந்தேகப்படக்கூடாது. அது தீராத துயரத்தினை வாழ்க்கையில் தரும்.

இதைத்தான்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயறவும்

தீரா இடும்பை தரும்.

ன்று வள்ளுவன் சிறந்த நண்பன் என்றான்.

சரி எப்படித்தேர்ந்தெடுப்பது?

என்கே நீங்கள் முதலில் சொல்லுங்கள். இது அறிமுகப்பகுதிதானே இங்கே இதைப்பற்றி கதைக்க அனுமதி உண்டு.

  • தொடங்கியவர்

சிறுகதை- 2

கூண்டுக்கிளி. தமிழரின் வெட்ட வெளிச்சமான அடிமை வாழ்க்கை முறை.

வீதியோரத்தில், நிழல் தரும் நெடியமரத்தடியில், விதியை நம்பி வீணாய்ப்போகும் மனிதர்களின் வருகைக்காக விழி நோக வழி மேல் விழிவைத்து அமர்ந்திருந்தான் கிளி ஜோதிடக்காரன். பக்கத்தில் ஜோதிடனின் சோற்றுக்கு வழி தேடும் சுயநலத்திற்காக சிறகு வெட்டப்பட்ட பச்சைக்கிளி, இரும்புக்கூட்டில் வேறு பெருமையாக, சிறையிருந்தது.

ஆனால் அதற்கோ அது ஒரு சுதந்திரவீடு. மேல் தட்டு, கீழ் தட்டு வேறு இருப்பதால் அடிக்கடி கீழேயும் மேலேயும் எறி இறங்கியபடியே இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம் கதவு இங்கே மனிதர்களால் வெளிப்பக்கத்தில் பூட்டுப்போட்டு பூட்டியிருந்தது. அது இந்தப்பச்சைக்கிளிக்கு இது பிரச்சனைமாதிரியே இல்லை. இவ்வளவு வாழ்க்கையும் காணும் என்று இருந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றும் அப்படி ஒரு பொறுமை.

உழைப்பில் அரும்பும் வியர்வையை நம்பாமல் விதியை நம்பும் ஒருவன், "எப்போது எனக்கு நல்ல காலம் பிறக்கும்?" என்ற கேள்வியோடு ஜோதிடம் பார்க்க அமர்ந்தான். ஜோதிடன் தன் கைக்கு காசு வந்ததும் கிளிக்கூண்டின் கதவு திறந்து கொண்டது. காற்றைபோல வானில் சுதந்திரமாய்ப் பறப்பதற்குப்பெயர் தான் பறவை. ஆனால் இங்கே, கூண்டின் கதவு திறந்த பின்னும் கிளி விண்ணில் பறக்கவிரும்பவில்லை!!

திறந்த கூட்டிலிருந்து கிளி நளினமாய் மெள்ள நடை பயின்று வெளியே நின்றது. அடுக்கப்பட்ட சீட்டை அங்குமிங்கும் பிரட்டியது. ஒரு சீட்டை அலகினால் கவ்விப்பிடித்து ஜோதிடன் கையில் கொடுத்தது. தகரப்பெட்டியில் இருக்கும் தானியத்தினை அவன் கிளியின் வாயில் வைத்ததும், தானாகவே அது மீண்டும் கூண்டுக்குள் போய் அமர்ந்துகொண்டது.

விடுதலை வேட்க்கை ஏன் இந்த கூண்டுக்கிளிக்கு வரவில்லை? எங்கே சொல்லுங்கள் பார்ப்பம் யாழ் போக்கிரி?

  • தொடங்கியவர்

நல்ல நண்பனைத்தேர்ந்து எடுப்பது எப்படி? பெரிய வினா அதற்கும் சில விதிமுறைகள் உண்டு இவ்வுலகத்திலே;

யாரோடு நீ பழக ஆரம்பிக்கிறாயோ, அவனோடு நீ இனிமையாக, உண்மையாக பழக வேண்டும்.

கொஞ்சகாலத்திற்கு அதை, நீ ஒரு கடமையாக அதே நேரம் அதை நீ, நட்பாக கருத்தக்கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும். உனக்கு கஸ்டம் துன்பம் வரும்போது அவன் கைகொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இங்கே இல்லாதபோதும் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால், பிறர் உன்னை தவறாக எடைபோடும் போது அவன் தடுத்து உனக்கு சார்பாக, ஆதரவாக அதே நேரம் உண்மையாக பேசியதாக் நீ அறிந்தால், அவனை நீ தொடர்ந்து நம்பத்தொடங்கலாம்.

தொடர்ந்து இது போன்ற பல செய்திகளினை கேள்விப்பட்டபிறகுதான், அவனை நீ உன் வாழ்க்கையில் நிரந்தரமான் நண்பனாக நீ வரிந்து கட்டிக்கொள்ளவேண்டும்.

பல இடங்களில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவரால் ஒரே மாதிரி நடிக்க இவ்வுளகில் முடியாத ஒரு விடயம். அதை நீ நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஆகவே அவன் உன்மீது வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும்!!.

நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல!, ஆபத்துவரும் போது உதவுவது ஒன்றே நட்பு!.

நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வரவேண்டும். அதுதான் உண்மையான் நட்பு!!

"முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு"

" உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே; இடுக்கண் களைவதாம் நட்பு" என்கிறான் அந்தக்கால வள்ளுவன்.

நண்பர்களினை மூன்று வகையாக பிரிக்கிறது ஒரு பழம் பெரும் பாடல்.

அதில் ஒரு வகை: பனைமரம் போன்ற நண்பர்கள்

இரண்டாவது வகை: தென்னைமரம் போன்றவர்கள்

மூன்றாவது வகை: வாழை மரம் போன்றவர்களாம்

அதாவது பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தினை தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்கு கிடைத்த தண்ணீரைக்குடித்து அது தானாகவே வளர்கிறது.

தனது உடம்பையும் ஓலையையும் நுங்கினையும், கிழங்கு வேரையும், கள்ளினையும் அது உலகத்திற்கு தருகிறது. நம்மிடம் எந்த உதவியும் இல்லாமல், எப்படிப்பட்ட உதவியினையும் எதிபாராமல் நமக்கு உதவுகிறது. ஆகவே அப்படிப்பட்ட பனைமரம் போன்றவன் ஒரு சிறந்த ஒரு நண்பன்.

இரண்டாவது தென்னைமரம், அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்கு பலன் தருகிறது. அதுபோல, நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருப்பவன் தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.

மூணராவது வகை வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக்கவனித்தால்தான் நமக்கு பலன் தரும். அதுபோல தினமும் ஏதோ ஒன்றை எம்மிடம் எதிபார்த்து பழகுபவன் வாழைமரம் போன்ற நண்பன்.

ராமனுக்கு கிடைத்த நண்பர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால் துன்பங்களே இல்லாமல் போய்விடும்.

ராமனின் துன்பங்களினை யார் யார்தான் பங்கு போட்டுக்கொண்டார்கள்.

" குகனோடும் ஐவ ரானோம்

முன்பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவ ரானோம்

எம்முறை அன்பின் வந்த

அகமலர் காதல் ஐய

நின்னொடும் எழுவ ரானோம்!"

வீடணன் நண்பனானபோது, வீடணைப்பார்த்து சிறீ ராமன் சொன்ன வார்த்தைகள் இவை!

"வீடணா நானும் இலக்குமணனும், பரதனும், சத்துருக்கனும் நான்கு சகோதரர்களாக பிறந்தோம்.

கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்தபோது, நாங்கள் ஐவரானோம்.

சுக்கிரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவர் ஆனோம். உன்னையும் சேர்த்து இப்போ எழுவராகிவிட்டோம்.

ஆம் ராமனுக்கு அவர்கள் செழுத்திய அன்புக்காணிக்கை அவர்களினை உடன்பிறந்த சகோதரர்கள் ஆக்கிற்று.

நல்ல நட்பிற்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடி வாய்க்கபெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமன்றிச் சகோதரனாக வேறு மாறிவிடமுடியும்.

ஆகவே எனக்கு இங்கே இரண்டு சகோதரர்களினை யாழ் களம் உருவாக்கித்தந்திருக்கிறது. அவர்களின் நட்பு இந்த யாழிற்று வெளியிலும் தொடரப்போகுது. அது கடைசிவரைக்கும் நிலைச்சிருக்கும்.!! <_<

சிறுகதை- 2

கூண்டுக்கிளி. தமிழரின் வெட்ட வெளிச்சமான அடிமை வாழ்க்கை முறை.

வீதியோரத்தில், நிழல் தரும் நெடியமரத்தடியில், விதியை நம்பி வீணாய்ப்போகும் மனிதர்களின் வருகைக்காக விழி நோக வழி மேல் விழிவைத்து அமர்ந்திருந்தான் கிளி ஜோதிடக்காரன். பக்கத்தில் ஜோதிடனின் சோற்றுக்கு வழி தேடும் சுயநலத்திற்காக சிறகு வெட்டப்பட்ட பச்சைக்கிளி, இரும்புக்கூட்டில் வேறு பெருமையாக, சிறையிருந்தது.

ஆனால் அதற்கோ அது ஒரு சுதந்திரவீடு. மேல் தட்டு, கீழ் தட்டு வேறு இருப்பதால் அடிக்கடி கீழேயும் மேலேயும் எறி இறங்கியபடியே இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம் கதவு இங்கே மனிதர்களால் வெளிப்பக்கத்தில் பூட்டுப்போட்டு பூட்டியிருந்தது. அது இந்தப்பச்சைக்கிளிக்கு இது பிரச்சனைமாதிரியே இல்லை. இவ்வளவு வாழ்க்கையும் காணும் என்று இருந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றும் அப்படி ஒரு பொறுமை.

உழைப்பில் அரும்பும் வியர்வையை நம்பாமல் விதியை நம்பும் ஒருவன், "எப்போது எனக்கு நல்ல காலம் பிறக்கும்?" என்ற கேள்வியோடு ஜோதிடம் பார்க்க அமர்ந்தான். ஜோதிடன் தன் கைக்கு காசு வந்ததும் கிளிக்கூண்டின் கதவு திறந்து கொண்டது. காற்றைபோல வானில் சுதந்திரமாய்ப் பறப்பதற்குப்பெயர் தான் பறவை. ஆனால் இங்கே, கூண்டின் கதவு திறந்த பின்னும் கிளி விண்ணில் பறக்கவிரும்பவில்லை!!

திறந்த கூட்டிலிருந்து கிளி நளினமாய் மெள்ள நடை பயின்று வெளியே நின்றது. அடுக்கப்பட்ட சீட்டை அங்குமிங்கும் பிரட்டியது. ஒரு சீட்டை அலகினால் கவ்விப்பிடித்து ஜோதிடன் கையில் கொடுத்தது. தகரப்பெட்டியில் இருக்கும் தானியத்தினை அவன் கிளியின் வாயில் வைத்ததும், தானாகவே அது மீண்டும் கூண்டுக்குள் போய் அமர்ந்துகொண்டது.

விடுதலை வேட்க்கை ஏன் இந்த கூண்டுக்கிளிக்கு வரவில்லை? எங்கே சொல்லுங்கள் பார்ப்பம் யாழ் போக்கிரி?

காரணம் 1 : அது பல் விழுந்த கிழட்டுக்கிளியா இருக்கணும்

கிழட்டுக்கிளியால சாப்பாட்டுக்கு தேடி திரிஞ்சு அலையறது ரொம்ப கஸ்டம்...

அதனால.சும்மா வாயில கெடைக்கற சீட்டை சப்பி யெடுத்து டாவு(ரீல்) கிழியா வலம் வருது...

காரணம் 2 : தைரியங்கெட்ட சோம்பேறிக்கிளியா இருக்கணும்

பறந்து போனாலும் சாப்பாட்டுக்கு கையிலே காசு வாயிலெ தோசைங்கற மாதிரி அந்தக்கிளி

வாய் கிழிய, கைகால் கிழிய உக்கார்ற எடத்துல டவுசர் கிழிய உழைச்சாதான் ஒரு வாய் கஞ்சிய ஊறுகாய் தொட்டு குடிக்க முடியும்...சோம்பேறிக்கிளியால துப்பாக்கி ஏந்தி போராட முடியாது....

சும்மா நேரம்/களம்/தளம் கெடைக்கறப்ப கீ...கீ ன்னு கத்தி அப்பப்ப வாயிலெ சீட்டை எடுத்து

ஜோசியம் பாக்க வரும் தன் மேல நம்பிக்கை இல்லாத வெறுங்கைய மட்டுமே வச்சுருக்கற

ஆளுங்கள ஏமாத்தி அரிசி தின்னு பிழைக்குது..

இந்த மாதிரி கிளிகளுக்கு வாய்க்க்கரிசி போட்டு கொன்னுறனும் !!! :P :P

ஹாய் திருவள்ளுவர் அங்கிள் சொறி தமிழ் வள்ளுவர் அங்கிள் கவ் ஆர் யூ?

கூ ஸ் தற் ஜென்ரில்மென்ற் வல்வை மைந்தன் ?

ஹாய் ஏலநிலா!!

ஏலநிலா எண்டால் என்ன..

சந்தைல ஏலம் போடுற நிலாவா ? <_<:huh:

பாத்துஅடிமாட்டு விலைக்கு ஏலம் போட்டுற போறாங்க!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் ஏலநிலா!!

ஏலநிலா எண்டால் என்ன..

சந்தைல ஏலம் போடுற நிலாவா ? <_<:huh:

பாத்துஅடிமாட்டு விலைக்கு ஏலம் போட்டுற போறாங்க!!!

*****************

போக்கிரி அண்ணா!

இப்போது நான் என்ன தப்பாக கூறினேன்? இது உங்களுக்கு கேவலமாக தெரியல்லை?

நீங்கள் எப்போதும் இப்படித்தானா?

----------------

ஹாய் ஏலநிலா!!

ஏலநிலா எண்டால் என்ன..

சந்தைல ஏலம் போடுற நிலாவா ? :டழட: :டழட:

பாத்துஅடிமாட்டு விலைக்கு ஏலம் போட்டுற போறாங்க!!!

---------

ஏல நிலா இல்லை, ஈழநிலா

  • தொடங்கியவர்

ஈழநிலா, கொஞ்சம் நான் சொல்லுவதை தயவு செய்து கேட்பீர்களா? யாழ் போக்கிரி அவர் சொல்லவந்ததில் உள் ஆழம் உண்டு. அவர் என்ன சொன்னார் என்றால். இப்ப என்னுடைய மடலில் கடந்த இரண்டு நாட்களில் வந்து வரவேற்ப்பு தந்தது ஒரு சிலரே. அனால் பல தூற்றுக்கணக்கான மனிதர்கள் ஏறி மிதிச்சு போயிருக்கிறார்கள். ஆகவே உங்கள் பதில் கூட களத்தில் குறைத்து மதித்துவிடுவார்கள். காரணம் அவர்களினை பொருத்து நான் ஒரு கொடியவன் அப்படிப்பட்ட கொடியவனை ஒதுக்கி விட்டு, வேடிக்கைபார்க்கிறர்கள். ஆனால் நீங்களோ உண்மையான் அன்பில் வரவேற்கும் அன்பில் ஒரு தமிழ் பெண்ணாக வரவேற்றது மற்றவர்களின் கண்கள் கோபத்தில் சிவக்கலாம். ஆகவே யாழ் போக்கிரி உங்களுக்கு ஒரு உவமையாக சொன்னார். டிரக்ட் ஆ அவர் சொல்லி உங்களினை குளப்பத்தில் ஆற்ற விடாமல்.

*****************

போக்கிரி அண்ணா!

இப்போது நான் என்ன தப்பாக கூறினேன்? இது உங்களுக்கு கேவலமாக தெரியல்லை?

நீங்கள் எப்போதும் இப்படித்தானா?

----------------

ஹாய் ஏலநிலா!!

ஏலநிலா எண்டால் என்ன..

சந்தைல ஏலம் போடுற நிலாவா ? :டழட: :டழட:

பாத்துஅடிமாட்டு விலைக்கு ஏலம் போட்டுற போறாங்க!!!

---------

ஏல நிலா இல்லை, ஈழநிலா

என்ன ஈழ நிலா...

நீங்க நகைச்சுவைக்காக ஹூ இச் தட் ஜெண்டில் மேன் ? என்று எனக்கு புரியாத பாசையில் கதைத்ததால் ஒரு

விர் விர் ரென்ரு நகைச்சுவக்காக நான் அப்படி சொன்னேன்...

அது மட்டுமல்லாம, என்னோட குரு புலியண்ணாவையும் வல்வையையும் ஒரு மாதிரியா கேட்டதால்

எனக்கு சின்ன கோபம் சடக்குன்னு வந்துருச்சு!

தப்பா சொன்ன என் பொடனில ஒரு போடு போட்டுறுங்க,,,

அதற்காக நீங்கள் எப்போதுமே இப்படி தானா என்று கேட்டு நான் எப்போதும் கேவலமாக

நடந்து கொள்பவனைபோல இருக்கு உங்க பதில் இருக்கு...

இப்படி நான் என் வாயால சேரி பாசையில எது சொன்னாலும் தப்பாவெ சொல்றீங்க..

எது ஒருந்தாலும் ஒரு மன்னிப்பு கேக்கறேன்.சாரி... :huh::mellow:

ஈழநிலா, கொஞ்சம் நான் சொல்லுவதை தயவு செய்து கேட்பீர்களா? யாழ் போக்கிரி அவர் சொல்லவந்ததில் உள் ஆழம் உண்டு. அவர் என்ன சொன்னார் என்றால். இப்ப என்னுடைய மடலில் கடந்த இரண்டு நாட்களில் வந்து வரவேற்ப்பு தந்தது ஒரு சிலரே. அனால் பல தூற்றுக்கணக்கான மனிதர்கள் ஏறி மிதிச்சு போயிருக்கிறார்கள். ஆகவே உங்கள் பதில் கூட களத்தில் குறைத்து மதித்துவிடுவார்கள். காரணம் அவர்களினை பொருத்து நான் ஒரு கொடியவன் அப்படிப்பட்ட கொடியவனை ஒதுக்கி விட்டு, வேடிக்கைபார்க்கிறர்கள். ஆனால் நீங்களோ உண்மையான் அன்பில் வரவேற்கும் அன்பில் ஒரு தமிழ் பெண்ணாக வரவேற்றது மற்றவர்களின் கண்கள் கோபத்தில் சிவக்கலாம். ஆகவே யாழ் போக்கிரி உங்களுக்கு ஒரு உவமையாக சொன்னார். டிரக்ட் ஆ அவர் சொல்லி உங்களினை குளப்பத்தில் ஆற்ற விடாமல்.

அண்ணா...

உங்க கடைகோடி சிஷ்யனாகிய நாந்தான்...

யாரு கால்ல விழுந்து உங்களுக்காக மன்னிப்பை நெஞ்ச கிழிச்சு கேக்கனுமே தவிர

நீங்க எனக்காக மன்னிப்பு கேக்க தெவையில்ல...

இலங்கைக்கு போன அனுமான் தன் கிலோ மீட்டர் கணக்கா நீண்டு இருக்க வாலால

ஒயரமான இருக்கை செஞ்சு எது மேல தடாலடியா ஜம்முன்னு உக்காந்தாரு...

அந்த மாதிரி உயரத்துல நீங்க இருக்கீங்க...

நீங்க எனக்காக கீழெ இறங்கி வரவேணாம் :o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயோ நீங்க பெரியவங்க மன்னிப்பு அப்படியொன்றும் வேண்டாமென்க.

ஒரு சின்ன கவலை அது தான் அப்படி கேட்டேன், நீங்க என்னை மன்னித்து விடுங்க..நானும் உங்க ரசிகை.

  • தொடங்கியவர்

யாழ் போகிரி, எதிரி தன் கனரக ஆயுதங்களினை எனது எல்லையில் சாமர்த்தியமாக நகர்த்துகிறான். ஆகவே நான் ஜாக்கிரதையாக என் பாதுகாப்பிற்காக என் துப்பாக்கியை களற்றி துடைத்து டெடியாக இருக்கவேண்டும். ஒரு இரண்டு நாளைக்கு ஊரடங்கு சட்டம் போடுகிறேன். தயவு செய்து இங்கால வருவதை தவிர்க்கவும். ஏனென்றால் சண்டை இம்முறை மிகபலமாக இருக்கும். அதற்குறிய தயார் நிலையில் தான் நான் இம்முறை இங்கு வந்திருக்கிறேன். நான் சொல்லேக்க தான் எல்லாரும் ரிமோட்டினை அமத்தனும். அதுக்கு முதல் அப்பு எழுதின சில ஆபாச நோட்டீசுகள் இக் களத்தில் இருந்து முற்றாக அகற்றப்படவேண்டும்!!! :angry:

வந்தனங்கள் மதன் சார்.

தயவு செய்து சார் என்று அழைக்காதீங்க அது அசெளகரியமா இருக்குது.

  • தொடங்கியவர்

நான் என் மகனையும் சார் என்று தான் அதாவது கௌத்தம் சார் என்று தான் அழைப்பேன். அது தான் என் பாணி. இதில அசௌகரியம் வருகுது என்றா நீங்க அதை எப்படி எடுக்கிறீங்க என்று இருக்கு.

இப்ப நான் ஏன் உங்களை சார் என்று கூறனும். அப்ப சேர் என்று ஆங்கிலத்தில கூப்பிடவா...பின்ன என்ன ஒரு வயசில மூத்த முதலையை கட்டி வைத்து வம்பு பண்ணுறாங்க நீண்ட காலமா? அது வாயத்துறந்தா ...அம்மாடியோம் எத்தனை கூறிய பற்கள் எப்படி இருக்கும் என்று என்னாலயே கற்பனை பண்ண முடியல....முதலில என்னை எப்படி உள்ள கொண்டு போகலாம் என்று எப்பவாவது யோசிச்சீங்களா?

இல்லை...இல்லை...இல்லை...ஆகவே நான் போராடி சென்றிகளினை உடைத்து என்னும் ரெண்டு நாளில போறத தவிர தங்கத்தமிழனை விரும்பின எனக்கு வேறு வழியில்லை....எனக்கு வந்த தகவல்களின் படி...பனம்காட்டுநரி என்ற ஆட்டிலறி என்னை நோக்கி நகர்த்தும் நோக்கில் அண்மையில் கொண்டுவந்தீர்களாமே. உங்கள் கள நிர்வாகத்துக்கு அது தெரியுமோ? எனக்கு என் கம்பியூட்டர் எஸ்பேர்ட் அதை நோட் பண்ணி எனக்குச் சொன்னார். அவர் பிழைவிட சான்சே இல்லை!! :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.