Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரிந்த பொருளாதாரமும் புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னால் உள்ள சவால்களும்

Featured Replies

உலக தொற்றான கோவிட் 19னால் உயிர் இழப்புக்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றது. துரதிஸ்ட்டவசமாக புலம்பெயர் மக்களும் இறந்து வருகிறார்கள். குறிப்பாக, முதலாம் தலைமுறை மக்கள் இறந்து வருகின்றனர். மனைவிமார்கள் கணவரை இழப்பதும், பிள்ளைகளை பெற்றோர் இழப்பதும், பிள்ளைகள் பெற்றோரை இழப்பதும் என பல வடிவங்களில் தாக்கம் தொடர்கின்றது. 

ஆனால், மறுபக்கம் பொருளாதாரம் சரிந்து ஒரு இருண்ட வர்த்த உலகத்திற்குள் நாம் அனைவரும் சென்றுள்ளோம் இல்லை சென்றுகொண்டு இருக்கின்றோம். 

இந்த சுனாமியில் இருந்து எவ்வாறு தமிழ் மக்கள் தப்பலாம்? என்ன விதமான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்? 

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

  • தொடங்கியவர்

முதல் தலைமுறை புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக அடிமட்ட வேலைகளை அதிகளவில் செய்தும். தமது கல்வி தகைமைகளை பயன்படுத்தி பல அதிக ஊதியம் தரும் வேலைகளிலும் இணைந்தார்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறினார்கள். 

அடுத்த தலைமுறையை பல நாடுகளிலும் உயர் கல்வியை பெறும் வசதிகளை பெற்றுகொடுத்தனர். இதனால், அடுத்த தலைமுறை பொருளாதார ரீதியாக ஒரு பலமான நிலையில் இருக்க அடித்தளம் போட்டார்கள். 

இவை எல்லாமே ஒரு ஆட்டம் காணும் நிலையில் உள்ளது. குறிப்பாக வரும் மாதங்கள்.. ஆண்டுகளில் படிப்பை முடித்து வெளியேறும் எமது பிள்ளைகள் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் நீண்டகாலம் இருக்கும் நிலைமை வரலாம். அவர்களுக்குள் மன உளைச்சல் ஏற்படலாம், எனவே பெற்றோர் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் உதவவேண்டும்.  இந்த புதிய கோவிட் 19 பொருளாதாரம், புதிய தொழில்வாய்ப்பு கதவுகளையும் திறந்து வருகின்றது. எனவே, அவற்றை இனம் கண்டு தம்மை தயார்படுத்தினால் எமது பிள்ளைகளும் எமது சமூகமும் நிச்சயம் முன்னேறலாம்.  

 

  • தொடங்கியவர்

அரச வேலைவாய்ப்புக்கள்

பொதுவாக தனியார் வேலைவாய்ப்புக்கள் அதிக ஊதியம் தருபவையாக இருந்தாலும், இன்றுள்ள நிலமையில் அவற்றின் நிரந்தரமற்ற தன்மை காணப்படும்.

எனவே, அரச வேலைவாய்ப்புகள் பற்றிய தளங்களில் தேடலை மேற்கொண்டு அவற்றிற்கு தயார்படுத்தல் உதவும். 

 

  • தொடங்கியவர்

வேலை இழந்த ஒருவர் (கனடாவில்) இந்த வாரம் வீட்டில் இருந்து செய்யக்கூடிய வேலை ஒன்றை ஆரம்பித்தார்.
நீங்கள் வாழும் நாடுகளிலும் இது சாத்தியமாகலாம். 

https://www.redcross.ca/about-us/jobs  ( செஞசிலுவை சங்கம்) 

கோவிட் 19 காரணமாக இவர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிறார்கள்.

இவை போன்ற நிறுவனங்களில் நீங்களும் முயலலாம்.    

Edited by ampanai

  • தொடங்கியவர்

வீட்டில் இருந்து வேலை செய்தல் பாரியளவில் இடம்பெற உள்ளது. இவை சம்பந்தமான தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, இவை பற்றி படித்து வேலைகளை எடுக்க முயலலாம்.  (Zoom, Houserparty etc.) 

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தாங்களாக இல்லை யாரையும் இளையவர்களை வேலைக்கு அமர்த்தி ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் புதிய வடிவமைப்புக்களை செய்யலாம். 

அதனுடன், மொழி பெயர்ப்பு சேவைகளை இணைக்கலாம். 

தொழில்நுட்ப பாதுகாப்பு சேவைகளை வடிவமைத்து, பாதுகாக்க உதவலாம் (cyber security) 

  • தொடங்கியவர்

' ஒன்லைன் '  கல்வி

இன்று மாணவர்களை பல நாடுகளிலும் வீடுகளில் இருப்பதால், ' ஒன்லைன் ' ஊடாக கல்வி சேவை வழங்கும் சேவைகள் அதிகரிக்க காணப்படுகின்றன. பல திறமையுள்ள நம்மவர்கள் இந்த துறையில் சாதிக்கலாம். 


இல்லை வீட்டில் இருந்தே பிள்ளைகளுடன் சேர்ந்தும் படிக்கலாம் 

https://www.khanacademy.org/

https://www.youtube.com/user/premanand20081

 

  • தொடங்கியவர்

வீட்டில் இருப்பதும் மின்வலை வர்த்தக வாய்ப்புக்களும் 

நீங்களும் அமசோனில் கடையை திறந்து பொருட்களை விற்கலாம். 

CH 20200417_amazon_stay_at_home_stocks.png

 

அமெரிக்காவின் தரவுப்படி என்ன பொருட்கள் அதிகம் விற்பனையாகின்றன ?

CH 20200416_quarantine_buying_v4_march_april_area-01.png

 

இலகுவாக இன்னொரு தளம், மின்வலையில் கடைகளை அமைக்க  : SHOPIFY

 

 

  • தொடங்கியவர்

Online education company Coursera offers unemployed workers thousands of free courses

The free courses, which usually cost $399 a year, are focused on skills and professional certifications that will help out-of-work individuals find new jobs in high-demand sectors.

https://www.coursera.org/courses?query=free

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.