Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதி - தமிழ் விக்கிப்பீடியா01333.jpg

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார்.

நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் வழியில் தன் இன்னுயிரை ஈந்த அன்னை பூபதியை வாஞ்சையோடும் அர்ப்பணிப்போடும் நினைவுகூருவது தமிழ் மக்களின் தார்மீக கடமையாகும்.

காந்தீயமும் அகிம்சையும் பேசும் இந்திய அரசின் உண்மையான கோரமுகம் இவர்களின் தியாகத்தால் கிழித்தெறியப்பட்டது. இந்தியா தமிழ் மக்கள் சார்பாக செயற்படும் என்ற தமிழ் மக்களின் நீடிய எதிர்பார்ப்பின் போலித்தன்மையை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்ள கிட்டிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் போரை நிறுத்துங்கள் விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்ற எளிமையான கோரிக்கைகளோடுதான் அன்னை பூபதியும் அவர் சார்ந்த அன்னையர் முன்னணி அமைப்பும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலையிலேயே அன்னை பூபதி சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்திய அரசு அவரை சாகவிட்டது ஆனால் தமிழ் மக்கள் அவரை தமது இதயங்களில் தாங்கிக் கொண்டனர். தமிழ் மக்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் குறியீடாக என்றும் அன்னை உயர்ந்து நிற்கிறார்.

பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் வழமைபோல எமது நினைவுகூரலை செய்ய முடியாத இக்கட்டான நிலையில் நாம் இருந்தாலும் இவ்வறிக்கை மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்னையின் நினைவுகூரலின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/அன்னை-பூபதியை-நினைவில்-க/

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.

Last updated Apr 19, 2020

தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 32ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழத்திற்கு அமைதிப் படையின் போர்வையில் வந்த இந்தியப் படைகள் நாளும் தன் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து, எத்தனையோ கொடுமைகளை விளைவித்தது.

PERS004.jpgஎம் தேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போரை பாரதம் அன்றும் இன்றும் ஏளனமாகவே பார்த்தது அது எத்தனையோ உயிர்களையும் பறித்தது.

உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு என்று கூறிக்கொண்டு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் அமைதி காக்கும் படைக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்தவர் அன்னைபூபதி.

* இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும்.

* விடுதலைப்புலிகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும்.

எனும் கோரிக்கைகளை முன் வைத்து 1988 ம் ஆண்டு மாசி மாதம் 16 ஆம் திகதி அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 1988 ம் ஆண்டு பங்குனி மாதம் 19 ஆம் திகதி தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.

உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 தமிழீழ காற்றில் கலந்து வரலாறாகிச் சென்றார்.

PERS003-scaled.jpgஅந்த இலட்சியத் தாயின் நினைவாக சித்திரை மாதம் 19ம் திகதியை தமிழீழ தேசியத்தலைவர் தேசிய நாட்டுப்பற்றாளார் தினமாக பிரகடனம் செய்தார்.

தாயக விடியலில் தாகம் கொண்டு பல சர்ந்தப்பங்களில் தங்கள் உயிரை அர்பணித்து அனைத்து நாட்டுப்பற்றாளர்களுக்கும், மாமனிதர்களுக்கும், வெளித் தெரியாது தேசவிடுதலைக்கு உழைத்த மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


 

https://www.thaarakam.com/news/124232

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதியின் நினைவேந்தல் மட்டுவில் அனுஷ்டிப்பு!

%E0%AE%A81.png?189db0&189db0

 

இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று (19) காலை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு – நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த நிகழ்வை முன்னெடுத்தது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

  • %E0%AE%A82.png?189db0&189db0
 

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.