Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும

Featured Replies

புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும்

விடுதலைப் புலிகளை அழிக்க எத்தகைய ஆயுதங்கள் அவசியமென்பதை இராணுவ உயர் அதிகாரிகள் அறிந்து வைத்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜே.வி.பி. அதற்கு ஐ.தே.க வின் அறிவுரை அவசியமற்றதெனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் ஜே.வி.பி சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேன விஜயசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் வளர வாய்ப்புகள் வழங்கியமை கடந்தகால அரசாங்கங்கள் செய்த மாபெரும் தவறாகும் . வன்னியில் தோல்வியை தழுவிக் கொண்டிருந்த புலிகள் தம்மை பங்கர் அமைத்துக் கொண்டு பாதுகாப்புப் பெற சீமெந்து வழங்கியது ஐ.தே.க. வாகும். அரசு வரலாற்றுப் பிழைகளிலிருந்து மீளுதல் வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அவசியம். புலிகளின் விமானங்கள் இலங்கைக்கும் நாட்டின் பொருளாதார இலக்குகளுக்கும் பெரும் ஆபத்தாகும். புலிகளின் விமானங்களை அழிக்க எத்தகைய ஆயுதங்கள் அவசியமென்பதை இராணுவ உயர் அதிகாரிகள் அறிந்து வைத்துள்ளனர். இதற்கு ஐ.தே.க. வின் அறிவுரை அவசியமில்லை. பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஜே.வி.பி. ஆதரவளிக்கும். கடந்த கால வரலாறு இதற்கு சான்று பகரும் என்றார்.

புலிகளை அழிக்க அரசுக்கு ஐ.தே.க. முழுமையாக ஆதரவளிக்குமாம்

நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கும் ஐ.தே.க. புலிகளை அழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரெனவும் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் ஐ.தே.க சார்பில் உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்; பாதுகாப்பு தொடர்பில் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மிக் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் களவு செய்தவர்களைத் தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிக் -29 விமானங்கள் அவசியம் இல்லை என்கிறார். ஆனால், ஜனாதிபதியோ இவ்விமானங்கள் ஏற்கனவே கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டவையாகும் என்கிறார். அப்படியானால் இவ்விமானங்கள் யாருக்காக கொள்வனவு செய்யப்படுகின்றன?. இதுவரை இக்பால் அத்தாஸ் ஐ.தே.க.வினரை விமர்சித்தார். அவர் அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்புத் திட்டத்தையும் குறைகண்டபோது அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் தற்போது வாபஸ்பெற்று விட்டது. ஐ.தே.க. புலிகளுடன் செய்த உடன்படிக்கையே கருணா அங்கிருந்து வெளியேறக் காரணமாக அமைந்தது. அரசாங்கத்தின் அமைச்சர்கள் பொம்மைகள் போன்று செயற்படுகிறார்கள். அவர்களை யாரோ இயக்கும் நிலையேற்பட்டுள்ளது. நவீன ராடர்கள் குறித்து பயிற்சியளிக்க இந்தியா 260 பேருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் இங்கிருந்து 2 பேர் மாத்திரமே அனுப்பப்பட்டனர். கோதபாய ராஜபக்ஷ தனக்கு சீனாவுடன் உள்ள கோபம் காரணமாக அங்கிருந்து விமானங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டார். கடந்த காலங்களில் இஸ்ரேல், சீன அரசாங்கங்கள் எமக்கு ஆயுத உதவிகளை வழங்கின. எமக்கு எவ்வித உதவிகளையும் வழங்கியிராத ரஷ்யாவை நாடியமை துரதிர்ஷ்டவசமானது.

புலிகளை அழிக்க வேண்டும். அவர்களின் யுத்த முனைப்புகளை நாசப்படுத்துவதுடன், புலிகளின் விமானங்களையும் அழிக்க அரசு உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும். :lol::):):o:lol::lol::lol: :P :P :P

http://www.nitharsanam.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும்

ஆமாம் புறமுதுகுக்கு வரலாறு படைத்துக் கொடுக்கவும் முடியும் அவர்களாலேயே!!!!

ஓமோம் புலிகளை அழிக்கும் ஆயுதத்தை அவர்களுக்கு தெரிவதை விட கொமிசன் எங்க கூட எடுத்து கொள்ளையட்டிக்கலாம் என்பதுதான் அவர்களுக்கு தெரியும்

ஹீ ஹீ இப்படி சொல்லி சொல்லிய சிங்கள மக்களை உசுப்பேத்திட்டு இருக்கிறாங்க, ஆனால் புலிகளில் நேற்று இணைந்த போராளிக்குக் கூட இராணுவந்ததி அழிப்பது எப்படி என்ற விடையம் தெரியும்

புலிகளை அழிப்பதற்கென விசேடமாக ஆயுதங்கள் உள்ளனவா அல்லது இனிமேல் தான் அதைக் கண்டுபிடித்து கொண்டுவர வேண்டுமோ?. புலிகளை அழிக்கவேண்டுமென்று புலம்பி ஆளுக்காள் வாய்சவடால் விட்டுக்கொண்டிராமல் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று எவனாவது உருப்படியாக சிந்திப்பதுண்டா. இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பது புலிகளை அழிக்க முயற்சிப்பதிலும் பார்க்க ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் சிங்களவனுக்கு அது வேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.