Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(சேக்கிழார்) பற்றி உலகம் அறிந்திராத சில தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(சேக்கிழார்) பற்றி உலகம் அறிந்திராத சில தகவல்கள்

Vasanth Kannan2020-04-23 20:14:04

287d5ae197fb3d3e73c290cf5657fecf-480.jpgcredit: third party image reference

தொண்டை நாட்டில் "குன்றத்தூர்" என கூறப்படும் சிறிய ஊரில் வெள்ளியங்கிரியார், அழகாம்பிகை அம்மையார் ஆகியோர் இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு அருண்மொழித்தேவர், பாலறாவாயர் என இரண்டு மைந்தர்கள் இருந்தனர். மூத்த மகனான அருண்மொழித்தேவரே சேக்கிழார் ஆவார். இவர் இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். இலக்கண, இலக்கியங்களை முறையாக பயின்றார். தெய்வ பக்தியில் சிறந்து விளங்கினார். இவரது தந்தை வெள்ளியங்கிரியார் அநபாயசோழ மன்னரின் அரசவை புலவர்களில் ஒருவராக சிறந்து விளங்கினார். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் புலவர் பெருமக்களை காண வேண்டும் என்று மன்னன் விரும்பினான். மேலும் அவர்களை பார்த்து மூன்று வினாக்களை எழுப்பினார்.

  1. மலையினும் பெரியது எது?
  2. நிலத்தினும் பெரியது எது?
  3. கடலினும் பெரியது எது?

இந்த வினாக்களுக்கு அவைப் புலவர்கள் பதில் கூற இயலாமல் தடுமாறினார்கள். ஆலோசித்து வருவதாக அரசனிடம் கூறிவிட்டு வீடுகளுக்கு சென்றார்கள். இதனால் உணவு உட் கொள்ளவும் மனமில்லாது சிந்தனையில் ஆழ்ந்தார் வெள்ளியங்கிரியார். குழம்பி இருந்த தந்தையிடம் அருண்மொழித்தேவர் விபரம் வினவினார். வெள்ளியங்கிரியார் அரசவையில் நடந்த நிகழ்ச்சியையும், அரசர் கேட்ட மூன்று வினாக்களையும் தன் மகனிடம் கூறினார். புன்னகை பூத்த அருண்மொழித்தேவர் எழுத்தாணியும் சுவடியையும் எடுத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.

  1. மலையினும் பெரியது எது? "நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது"
  2. நிலத்தினும் பெரியது எது? "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"
  3. கடலினும் பெரியது எது? "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது"

என்று வினாவும், விடையும் எழுதி தந்தையாரிடம் கொடுத்தார். மகனின் அறிவு கூர்மையை பாராட்டினார் வெள்ளியங்கிரியார்.

3b7b8cbf7c3b504972f5393903160c5e-480.jpgcredit: third party image reference

இந்த நிகழ்ச்சியை வெள்ளியங்கிரியார் மூலம் அறிந்த சோழ மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். தொண்டைநாட்டு சான்றோர் அனைவரும் அருண்மொழித்தேவரை காண வேண்டும் என்பதற்காக பல்லக்கு பரிவாரங்களை அனுப்பி அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார். அருண்மொழித்தேவர் அரண்மனைக்கு வருகை தந்தார். மன்னர் தனது அரியணையில் இருந்து எழுந்து சென்று அவரை வரவேற்றார். அவருடைய அறிவாற்றலை அறிந்த மன்னர் தலைமை அமைச்சர் பதவியை அளித்தார். "உத்தமசோழப்பல்லவராயன்" என்ற பட்டத்தையும் வழங்கினார். சோழநாட்டின் தலைநகரான திருவாரூரில் வாழ்ந்து தன் அமைச்சர் வேலைகளை நடத்தி வந்தார். அங்கே திருநாகேச்சுரம் என்னும் திருக்கோயில் இறைவனை தினமும் வணங்கி வந்தார். தான் பிறந்த குன்றத்தூரில் இதுபோன்ற ஒரு திருக்கோவில் நிறுவி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார். தொன்மையின் சிறப்புகளையும், வரலாற்றுப் பெருமைகளையும் கூறும் கல்வெட்டுகளை ஆராய்ந்து "மனுநீதி சோழனின்" வரலாற்றை இயற்றினார். சமண மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மன்னர் பெருமானின் அறிவுரைப்படி சைவ மதத்தவர் ஆனார். அநபாய சோழ மன்னனின் வேண்டுதலின் படி காப்பியம் ஒன்றை இயற்ற தில்லைக்கு சென்றார். தில்லையில் சிவகங்கையில் நீராடி சிவ கோலம் பூண்டு, இறைவன் முன் நின்று, உங்கள் சிறப்பினை நான் பாட அடி எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டினார். வானிலிருந்து "உலகெலாம்" என்ற அசரீரி வாக்கு கிளம்பியது. கூடியிருந்த அனைவரும் இறைவனை வணங்கி நின்றனர். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" என்று பாடி இறைவனை வணங்கினார். அனைத்து அடியார்களையும் வணங்கி அதன்பிறகு காப்பியம் வரைந்தார். அந்த காப்பியத்திற்கு "திருத்தொண்டத்தொகை" என்று பெயர் சூட்டினார். காப்பியம் நிறைவுற்றதை அறிந்த மன்னர் தில்லைக்கு வந்தார். ஒரு சித்திரைத் திங்கள் திருவாதிரை திருநாளில் அரங்கேற்றம் துவங்குவதாக நாள் குறிப்பிட்டார். பெருமான் காப்பியத்தை விளக்கிக்கூற ஆரம்பித்தார். அதை கேட்டறிந்த மக்கள் "அமுத மொழி" என்றும் "அற்புதமான காப்பியம்" என்றும் உளமார பாராட்டி புகழ்ந்தனர். இதில் (உலகம், உயிர், கடவுள்) என்ற மூன்றும், (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற நான்கும் (மலை, கடல், நாடு, மக்கள், வளம்) போன்றவற்றின் சிறப்புகள் நிறைய பெற்றமையால் பெரியபுராணம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அநபாய சோழன் பெரியபுராணத்தை பச்சை பட்டில் சுற்றி, ஒரு தாங்க கலசத்தில் வைத்து, பெருமானையும், பெரிய புராணத்தையும் யானை மீது ஏற்றி தானும் யானை மீது ஏறி அமர்ந்து சேக்கிழார் பெருமானுக்கு வெண் சாமரம் வீசிய வண்ணம் அலங்கரிக்கப்பட்ட நகர வீதிகளில் வலம் வந்தார். மக்கள் அனைவரும் வரவேற்றனர். அநபாய மன்னன் "தொண்டர் சீர் பரவுவார்" என்ற பட்டத்தையும் சேக்கிழார் பெருமானுக்கு கொடுத்தார். இப் பெருமகனார் ஒரு வைகாசி பூசத் திருநாளில் இறைவனடி சேர்ந்தார். சேக்கிழார் பெருமானுக்கு அவர் வாழ்ந்த குன்றத்தூரில் ஆலயம் நிறுவி அன்பர்கள் வழிபடுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.