Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர்

kuru-Logo-300x201.jpg‘கனடியர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்டகாலமெடுக்கும்’ என்று உண்மை நிலை எதையும் மறைக்காது, சூழ்நிலையின் யதார்த்தத்தை ஊடகவியலாளர்களுக்கு எடுத்துச் சொன்னார் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ‘உலகெங்கும் பரவியிருக்கும் இந்தக் கொரோனா தொற்று நோய்பற்றி நாம் இதுவரை படித்த பாடங்களில் இருந்து எம்மால் இதை புரிந்து கொள்ள முடிகின்றது.’ சென்ற திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெறும் போலி வார்த்தைகளை எதையும் எடுத்து வீசாது, உண்மையான நிலவரத்தை எடுத்து விளங்கப்படுத்தியதைக் கனடியர்கள் பலரும் பாராட்டினார்கள்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல பிரச்சனைகளை உலகம் எதிர் கொள்ள வேண்டி இருக்கின்றது. இதனால் பல மாற்றங்களும் வரும் காலங்களில் ஏற்பட இருக்கின்றன. உலகளவில் அரசியல், பொருளாதார பிரச்சனைகள் இதனால் உருவாகப் போகின்றது. மரணங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால், இழப்புக்களால் உறவுகள் ஒருபக்கம் துயரத்தால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து மாதங்களாகியும் இதற்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. குடும்பங்கள் உயிர் இழப்பால் மட்டுமல்ல, வேலை இழப்பாலும் பொருளாதார நிலையாலும் கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். பலர் வேலையை இழந்து விட்டார்கள், இந்த இழப்பை ஈடுசெய்யப் பல மாதங்கள் எடுக்கலாம். குடும்பத் தலைவனை, தலைவியை இழந்ததால் பல சமூகப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது.

சுயதனிமைப்படுத்தலால், பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் பிள்ளைகளும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். வீட்டுக்குள் அடைந்து கிடப்பதால், சிலர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குத் தினமும் உள்ளாகிக் கொண்டு இருப்பதாக முறைப்பாடுகள் வரத்தொடங்கிவிட்டன. 34 வீதமான பிள்ளைகள் குடும்ப உறவுகளாலேயே பாலியல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இணையத்தளங்கள் மூலமும் இது நடக்கிறது. தகுந்த முறையில் திட்டமிடப்படாவிட்டால், உலகயுத்த காலங்கள் போல, உணவுத் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு பசி, பட்டினியால் வாடவேண்டியும் வரலாம். இவை எல்லாவற்றுடன், தனிமையும் ஒன்றாகச் சேர்ந்து தனிமனிதரை மனநோயாளிகளாக ஆக்கிவிடலாம்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் அமெரிக்காதான் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. நியூஜேர்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நால்வர் பலியாகி இருக்கிறார்கள். நியுஜோர்க் மான்ஹட்டன் மருத்துவமனையில் அவசரகாலப் பிரிவின் பொறுப்பாளராகத் தளத்தில் கடமையில் இருந்த வைத்தியர் லோனா.எம்.பிறீன் என்ற 49 வயதான பெண்மணி தனது கண்ணுக்கு முன்னால் நோயாளிகள் பலர் எந்த ஒரு மருந்தும் இல்லாமல், திடீரென மரணமாவதைத் தாங்க முடியாமல் ஏற்பட்ட அதிர்ச்சியால் சென்ற வாரம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொரோனா வைரஸின் கொடூரத்தை எமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சில நாட்களாக தளத்தில் முன்னின்றதால் எண்ணற்ற மரணங்களைப் பார்த்து மனச்சோர்வு ஏற்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என நம்புகின்றார்கள். இதற்கு ஒரு வாரத்தின் முன்தான்; அவசர உதவி பிரிவில் தளத்தில் முன்னின்று வேலை செய்த (emergency medical technician) 23 வயதான ஜோன் மண்டிலோ என்பவர் கொரோனாவின் தொடர் மரணங்களைப் பார்த்து மனச்சோர்வடைந்ததால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்த சம்பவம் நடந்தது. ஆம்புலன்ஸில் ஏற்றும் போது உயிரோடு இருந்தவர், இறக்கும் போது பிணமாகிப்போகும் பரிதாபத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது.

 

தொடக்கத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை அலட்சியப் படுத்தியதால் அதிக மரணத்திற்கு அமெரிக்கா முகம் கொடுக்க வேண்டி வந்தது, நெருக்கமான குடிசனத்தொகையைக் கொண்ட நகரமான நியூயோர்க்கில்தான் அதிக மரணங்கள் சம்பவித்தன. இன்று கொரோனா வைரஸால் பலியானவர்களில் அதிக தொகையைக் கொண்ட நாடாகவும் அமெரிக்கா இருக்கின்றது. அதாவது 30-04-2020 எடுத்த கணக்கெடுப்பின்படி 1,094,277 மேற்பட்டோருக்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதனால் இத்திகதி வரை 63,815 அங்கு பலியாகி இருந்தனர். எல்லையில் உள்ள நியூயோர்க்கில் மட்டும் இதுவரை 23,780 பேர் மரணமாகி இருக்கிறார்கள்.

76-4-300x180.jpgகொரோனா வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக கனேடிய மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளுக்கு ஏற்ப மக்களின் நன்மை கருதி இந்தவாரம் கனடியபிரதமரால் புதிதாக சில அறிவித்தல்கள் வெளிவந்தன. கோவிட் – 19 க்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தல், அதற்கான சிகிச்சைகளை வடிவமைத்தல், வைரஸ் பரம்பலைக் கண்காணித்து அதைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய, தேசிய மருத்துவ ஆய்வு மூலோபாயம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தைச் செலவிடவுள்ளதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ சென்ற வாரம் அறிவித்திருக்கிறார்.

Dr. David Naylor, Dr.Catherine u;ankins, Dr. Tim Evans, Dr. Theresa Tam, Dr. Mona Nemer ஆகியோரைக் கொண்ட தலைமைக் குழுவொன்றின் வழிகாட்டுதலில் செயற்படுவதற்கு கோவிட்-19 நோயெதிர்ப்புச்சக்தி செயலணிக் குழுவொன்று உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். Genome Canada அமைப்பின் தலைமையில் இயங்கும் கனேடிய கோவிட்-19 மரபணு வலையமைப்புக்கு கனடா முழுவதும் கோவிட்-19 வைரஸினது மரபணு வரிசையைக் கண்டுபிடிக்கும் முயற்சியை ஒருங்கிணைப்பதற்கு 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் கிடைக்கும் பயனுள்ள தகவல்கள் உலகத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

கனடா தேசிய ஆய்வுச் சபையின் மொன்றியோலில் உள்ள வளாகத்தில் இன்றியமையாத மேம்பாட்டுப் பணிகளின் இரண்டாம் கட்டத்தை மேற்கொள்வதற்கு 29 மில்லியன் டொலர் வழங்கப்படும். இது மனித பரிசோதனைக்குத் தேவையான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கு உதவியளிப்பதுடன், தடுப்பு மருந்து தயாராகியதும், தனி நபர்களுக்குத் தேவையான அளவுகளில் அவற்றை அடைப்பதற்கான குப்பிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான கட்டுமானங்களையும் உருவாக்கவும் பயன்படும். இதற்கு மேலதிகமாக, Stem Cell Network இன் ஊடாக ஆய்வுத் திட்டங்களுக்கும், மனித பரிசோதனைத் திட்டம் ஒன்றுக்கும் 675,000 டொலரைக் கனேடிய அரசு வழங்கும். மனித பரிசோதனையின் மூலம், கோவிட்-19 உடன் தொடர்புடைய கடுமையான சுவாசத்தொகுதிப் பாதிப்பின் விளைவையும், தீவிரத்தன்மையையும் குறைப்பதற்கான கலசிகிச்சை ஒன்றின் பாதுகாப்புக் குறித்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஏனைய இரண்டு திட்டங்களும், சுவாசப்பாதையிலும், மூளையிலும் உள்ள கலங்கள் வைரஸால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பன குறித்த தகவல்களைப் பெற உதவியாக இருக்கும். கோவிட்-19 குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவியளிப்பதன் மூலமும், கனேடிய விஞ்ஞானிகளின் இன்றியமையாத பணிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், தடுப்பு மருந்து தொடர்பான முயற்சிகள் மூலமும், கனேடியர்களினதும், உலகெங்கும் உள்ள நலிவடைந்தோரினதும் உடல்நலமும், பாதுகாப்பும் மேம்படுத்தப்படலாம்.

சிறுவர்களுக்கான ரொறன்ரோ மருத்துவ மனையிலும் இருவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். மொன்றியலில் உள்ள முதியோர் நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பை கனடாவின் இராணுவ வீரர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். இதற்காக 125 வீரர்கள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இதேபோல ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்டினால் கேட்டுக் கொண்ட வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ள இராணுவம் முன்வந்திருக்கின்றது. நீண்டகால பராமரிப்பு இல்லங்களைப் பராமரிப்பதற்கு இராணுவத்தினர் உதவியாக இருப்பார்கள். கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஒன்ராறியோ அரசால் பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவுகளை மே மாதம் 6 ஆம் திகதிவரை நீடிப்பதாக மாகாண அரசு அறிவித்திருக்கின்றது. ‘மக்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் கருதி நீடிக்க வேண்டி இருக்கின்றது’ என்று மாகாணமுதல்வர் டக் போர்ட் தனது உரையில் குறிப்பிட்டார்.

77-2.jpgகல்காரியில் ஒரேவீட்டில் ஒன்றாக வாழ்ந்த காதலர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் 24 வயதுடைய பிரிட்னி ஆன் மெசறோஸ் என்ற காதலி காதலனால் கொல்லப்பட்டிருக்கின்றார். சந்தேகத்தின் பெயரில் 23 வயதான காதலர் அலெக்ஸான்டர் என்பவர் கைதாகி இருக்கின்றார். நோவாஸ்கோஷியாவில் ஊரடங்கிய நேரத்தில் வீடுவீடாகத் தேடித் தனது எதிரிகளை, 51 வயதான கப்ரியல் வோட்மான் என்ற ஒருவர்; வேட்டையாடி இருக்கின்றார். நான்கு வீடுகள், இரண்டு மோட்டர்வண்டிகள் இவரால் எரியூட்டப்பட்டன. 22 பேர் 12 மணித்தியாலங்களில் கொல்லப்பட்டனர். இதில் 13 பேர் சுடப்பட்டும், 9 பேர் எரியுண்டும் அவரால் மரணமானார்கள்.

உலகின் நிலப்பரப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 53,236 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். 3,180 மரணம் அடைந்திருக்கிறார்கள், இதில் ஒரேநாளில் 147 பேர் மணரமாகி இருக்கிறார்கள். 21,200 பேர் குணமடைந்திருக்கிறார்கள். கியூபெக்கில் 27,538 பேரும், ஒன்ராறியோவில் 16,187 பேரும், அல்பேர்டாவில் 5,355 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,112 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

30-04-2020 வரை உலகத்தில் மொத்தமாக 3,302,681 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 1,094,277 ஸ்பெயின் 239,639 இத்தலி 205,463 இங்கிலாந்து 171,253 பிரான்ஸ் 167,178 ஜெர்மனி 163,009 துருக்கி 120,204 ரஸ்யா 106,498 ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 233,760 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களிளில் இதுவரை 1,038,160 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இந்தத் தகவல் மக்களுக்கு ஓரளவு எதிர்காலம் குறித்த நம்பிக்கை தருவதாக இருக்கின்றது.

 

http://thinakkural.lk/article/40542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.