Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் தொடர்பில் கட்சியே தீர்மானிக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை செவ்வி

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அந்த அடிப்படையில் சுமந்திரன் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடி ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும். தனியொரு நபராக நான் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாதென்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியினால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து நீங்கள் உள்ளிட்டவர்கள் அதுதொடர்பில் ஊடக அறிக்கைள் ஊடாக பிரதிபலித்திருந்த நிலையில்; அவர் தன்னிலை விளக்கமொன்றை அளித்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:-அவருடைய விளக்கமளிக்கும் காணொளியை நான் முழுமையாக பார்த்தேன். அதில் தன்னுடன் தொடர்புகொண்டு விளக்கங்களை கோராது ஊடக அறிக்கைகளை நானும் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

சர்சைக்குரிய கருத்துக்களை தனியொரு ஊடகம் மட்டுமே வெளிப்படுத்தியிருந்த நிலையில் அதுகுறித்து பல சந்தேகங்கள் எம்மிடத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து நான் அந்த செவ்வியின் மூலக் காணொளியை நன்கு பார்வையிட்டேன். சிங்கள மொழியில் பாண்டித்தியம் கொண்டவர்களை பயன்படுத்தி அதில் கூறப்பட்ட கருத்துக்களை பெற்றிருந்தேன்.

இதற்கிடையில் எமது பங்காளிக்கட்சிகள், சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் அதிருப்தியைக் கொண்டிருந்ததோடு அதுபற்றி என்னிடத்திலும் பேசினார்கள். எமது கட்சியின் உறுப்பினர்களும் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இதனைவிடவும், எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றுகின்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மிகுந்த கவலையடைந்து என்னுடன் கலந்துரையாடினார்கள்.
புலம்பெயர் தரப்பினரும் இந்த விடயத்தில் ஆழ்ந்த கரிசனைகளைக் கொண்டு எனக்கு அழுத்தங்களை பிரயோகத்தார்கள். இந்தப் பின்னணியில் நான் பொறுப்புடன் செயற்பட வேண்டியதொரு தருணம் ஏற்பட்டது. சுமந்திரனை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள விளைந்தபோதும் அது முடிந்திருக்கவில்லை.

இத்தகையதொரு நிலையிலேயே விடயங்கள் எவையும் கைமீறிச் சென்றுவிடக்கூடாது என்றதன் அடிப்படையில் நிதானத்துடன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையை நான் சுமந்திரனுக்கும் அனுப்பி வைத்திருந்தேன்.

அந்த அறிக்கை யாருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே தயாரித்திருந்ததோடு விடுதலைப்புலிகளின் பங்களிப்புக்களையும் மறுக்கமுடியாது என்பதையும் கூறியிருந்தேன். எனது அறிக்கையில் யாரையும் தனிப்பட்ட முறையில் சாடியிருக்கவில்லை. நடைபெற்ற யாதார்த்த விடயங்களையே சுட்டிக்காட்டியிருந்தேன். ஆகவே அந்த அறிக்கையில் எவ்விதமான தவறுகளும் இல்லை.

கேள்வி:- சுமந்திரனினால் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நீங்கள் உரையாடினீர்களா?

பதில்:- ஆம், அவர் அளித்த விளக்கத்தில் என்னைச் சுட்டி எழுப்பிய கேள்விகள் தொடர்பில் நான் கவலை கொண்டிருப்பதை அவரிடத்தில் கூறினேன். சரி, பிழைகளுக்கு அப்பால் அவருடைய கருத்துக்களால் சர்ச்சையொன்று ஏற்பட்டுவிட்டது. இந்த சர்ச்சையினை கொழுந்து விட்டு எரிய இடமளிக்காது செயற்பட வேண்டும் என்று அவரிடத்தில் கூறியதோடு விரைவில் சந்திப்பொன்றை நடத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அதுமட்டமல்ல, பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், அடைக்கலநாதன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், எமது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருடனும் நான் கலந்துரையாடல்களை செய்து வருகின்றேன். தற்போதைய சூழலில் நான் மிகப் பொறுமையாக ஒவ்வொரு விடயங்களையும் கையாண்டு வருகின்றேன்.

எமது மக்களுக்கான விடுதலைப் பயணத்தினை முன்னெடுக்கும் கடப்பாட்டினைக் கொண்டிருக்கும் நாம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கின்றோம்;. எம்மீதான நம்பிக்கையுடன் பலர் இருக்கின்றர்கள். ஆகவே நாம் பிளவுபட்டு நிற்கமுடியாது. விரைவில் கூட்டமைப்பாக இவ்விடயம் தொடர்பிலான தீர்க்கமாக கூடிப்பேசுவோம்.


கேள்வி:- தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழினம் தனது தயாகத்தில் அபிலாஷைகளைப் பெற்று தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக தங்களின் உயிரைக்கூட துச்சமாக கருதி ஆயுதங்களை ஏந்திப்போராடியவர்கள். இனத்திற்காக தம்மையே அர்ப்பணித்தவர்கள். அவர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புக்களுக்கும் எவற்றுக்குமே ஈடாகாது. வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ஆயுத ரீதியாக பெற்றுக்கொள்வதற்கு கடும் பிரயத்தனம் செய்திருந்தார்கள். ஈற்றில் மூன்று தசாப்தங்களில் அவர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் விடுதலைக்கான பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

தற்போது கூட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள். எமது கட்சியில் பங்கேற்று செயற்படுகின்றார்கள். அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்து பயணிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.இதனைவிடவும் அவர்களின் வாழ்வாதர நிலைமைகள் மேம்படுவதற்காக அதிகளவான பிரயத்தனங்களைச் செய்து வருகின்றோம். எமக்காக போரடியவர்களுக்காக நாம் நம்பிக்கையளிக்கும் வகையிலான செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னுக்குப் பின்னர் முரணான கருத்துக்கள் சொல்லப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பின் தாய்க்கட்சித்தலைவர் என்றவகையில் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு யார் காரணம்?
பதில்:- தமிழின விடுதலைக்கான பயணத்தில் செயற்பட்டிருந்த அனைத்து தரப்பினரும் தமிகழத்திலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் கலந்துரையாடல்களை செய்வதுண்டு. இதில் தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் என்று அனைவரும் பங்கேற்பார்கள். அவ்வாறான கூட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அவ்வாறான நிலையில் தான் 2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள்.

தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்தகாலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செல்லக்கூடிய கட்சிகள் ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது தமிழரசுக்கட்சியை தாய்க்கட்சியாக செயற்படுவதற்கும் வீட்டுச்சின்னத்தை பொதுச்சின்னமாக பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளின் தலைமை உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாக கூறப்படுகின்றதே?

பதில்:- நாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருக்கின்றபோது விடுதலை இயக்கங்களுடன் பரஸ்பர பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். பிரபாகரன், சிறிசபாரட்ணம், உமாமகேஸ்வரன், பத்மநாபா போன்றவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடியிருக்கின்றோம். 1983களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததிலிருந்து ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் விரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது எமக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அச்சமயத்தில் கூட்டமைப்பின் சின்னம் தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. அனைத்து தலைவர்களின் முன்னிலையில் தான் மறைந்த அப்பாத்துரை விநாயாகமூர்த்தி தமது கட்சியின் சின்னத்தினை வழங்க மறுக்கவும் தமிழரசுக்கட்சியும் சின்னமும் முன்மொழியப்பட்டது. அப்போது அனைத்து தரப்பினரும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் ஏற்றுக்கொண்டனர். இந்தவிடயத்தில் பிரபாகரனுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதனையும் நான் முன்னெடுத்திருக்கவில்லை.

கேள்வி:- சுமந்திரனின் கருத்துக்களால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் பிரதமரைச் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகளாகியிருந்தபோதும் கட்சிக்குள்ளேயிருந்தே தடைகள் உருவாக்கப்பட்டு குழப்பங்கள் நீடித்ததன் பின்னரே சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அவ்வாறு எவ்விதமான குழப்பங்களும் இடம்பெற்றவில்லை. நாங்கள் பிரதமருடனான பிரத்தியேக சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பிரஸ்தாபித்திருந்தோம். குறிப்பாக, நானும், எமது உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் அவர்களின் விடுதலை தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தோம். அவ்வாறான நிலையில் சிறைகளில் உள்ளவர்களின் பட்டியலை வழங்குமாறு பிரதமர் கோரியிருந்த சமயத்தில் சம்பந்தன் அப்பட்டியலை பிரதமரிடத்தில் விபரங்களுடன் ஒப்படைக்கும் பொறுப்பினை சுமந்திரனிடத்தில் வழங்கியிருந்தார்.

ஏற்கனவே என்னிடத்தில் சிறைகளில் வாடும் எமது இளைஞர்களின் பட்டியல் இருந்தது. இவ்வாறான நிலையில் அந்தப்பட்டியலை நான் சுமந்திரனுக்கும் அனுப்பியிருந்தேன். பின்னர் அனைத்து விபரங்களும் தொகுக்கப்பட்டே பிரதமரிடத்தில் இறுதிப்பட்டியல் கையளிக்கப்பட்டிருந்தது. இடையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்றியடித்துக்கொண்டு ஒருபட்டியலை பிரதமரிடத்தில் வழங்கியிருந்தார். ஆகவே இந்த விடயத்தில் டக்ளஸால் ஏற்பட்ட குழப்பங்களை விடவும் வேறு எவ்விதமான விடயங்களும் இல்லை.

 

கேள்வி:- கடந்த ஆட்சியில் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுக்களை முன்னெடுத்த ராஜபக்ஷ அரசு ஈற்றில் ஏமாற்றிவிட்டது என்று நீங்களே கூறியிருக்கின்ற நிலையில் மீண்டும் ராஜபக்ஷ தரப்பினருடனான சந்திப்புக்களை ஆரம்பித்திருக்கின்றீர்களே?
பதில்:- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டியிருந்த கூட்டத்தினை எதிர்க்கட்சிகள் அனைத்தும் பகிஷ்கரித்திருந்த நிலையில் நாம் மட்டுமே பங்கேற்கின்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம். இதன்போது நாம் எமது நிலைப்பாட்டினை தெளிவாக கூறியிருந்தோம். பாராளுமன்றம் கூட்டப்படாதிருக்கின்ற நிலையில் அலரிமாளிகையில் நடைபெறுகின்ற கூட்டம் அதற்கு நிகராகாது என்பது உட்பட தேர்தலை பிற்போட வேண்டிய அவசியம், கொரோனா கொள்கை நோயினால் எமது மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் அவர்களுக்கு தேவையான விடயங்கள், நீண்டகாலமாக நீடித்துக்கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதற்காக ஒரு புதிய அரசியல் சாசனத்தின் அவசியம் என்று அனைத்து விடயங்களையும் நாம் எடுத்துரைத்திருந்தோம்.அதனைவிடவும் எமது ஏனைய உறுப்பினர்கள் தங்கள்தங்களுடைய மாவட்டங்களில் காணப்படும் உண்மையான பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆகவே எமது பிரச்சினைகளை பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு கிடைத்தவொரு சந்தர்ப்பமாகவே அலரிமாளிகை கூட்டத்தினை நாம் பார்கின்றோம்.


கேள்வி:- ஆனாலும் அன்று மாலையிலேயே பிரதமருடைய இல்லத்தின் கூட்டமைப்பு பிரத்தியேக சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருக்கின்றதல்லவா?
பதில்:-ஆம், அலரிமாளிகை சந்திப்பின் நிறைவில் எமது விடயங்கள் தொடர்பில் பேசவேண்டும் என்ற கோரிக்கை எம்மால் முன்வைக்கப்பட்டபோது பிரதமர் அதற்கான சந்தர்ப்பத்தினை அன்றையதினமே வழங்கியிருந்தார். அதற்கமைவாக வெளிமாவட்டங்களிலிருந்து சென்றிருந்த நாம் அன்றே அச்சந்திப்பினை நிறைவு செய்வதென்றும் கருதியிருந்தோம். அதற்கமைவாக, சம்பந்தன் தலைமையில் நாம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தோம்.
உண்மையிலேயே கோத்தாபய ராஜபக்ஷ ஜனதிபதி தேர்தலில் போட்டியிட்போது வெளியிட்ட கொள்கை அறிக்கையிலும் சரி, பாராளுமன்ற சிம்மான உரையிலும் சரி அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும் என்று கூறினாரே தவிரவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினை தீர்க்கபடாதிருப்பது பற்றியோ அல்லது அதுபற்றி கலந்துரையாடப்படவேண்டும் என்றோ கூறியிருக்கவில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படாமையால் எத்தனை ஆயிரம் உயிர்களை பறிகொடுத்து அந்த விடயம் ஐ.நா மன்றுவரையில் சென்றிருக்கின்றபோதும் அதனை அவர் கருத்திற்கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எமக்கிருந்தது. இந்த சூழலில் எமது இலக்கினை அடைவதற்காக புதிய அணுகுமுறையொன்றை கையிலெடுக்க வேண்டியநிலைக்குள் நாம் தள்ளப்பட்டோம்.
அது தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி ராஜபக்ஷ தரப்பினர் தீர்வினை அளிக்கின்றார்களோ, கரிசனை கொள்கின்றார்களோ என்பதற்கு அப்பால் எமது விடயங்களை அவர்கள் முன் மீண்டும் வலியுறுத்துவது என்ற முடிவுக்கு வந்திருந்தோம்.அதனடிப்படையில் பிரதமருடான சந்திப்பின்போது, சம்பந்தன் இனப்பிரச்சினை விடயம் மற்றும் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வலியுறுத்தியபோது பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ் அதுசம்பந்தமான கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாம் எமது மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்களிடத்தில் சமர்ப்பிப்பதில் திருப்தி கொண்டாலும் எமது மக்களின் விடயங்களுக்கான தீர்வுகளை வழங்கும் பாரிய பொறுப்பு ராஜபக்ஷவிற்கு உள்ளது. அதன் மூலமே அவர்கள் திருப்தி அடையமுடியும். எமக்குள்ள கடந்தகால கசப்பான அனுபவங்களை களையும் வகையிலான நம்பிக்கைச் செயற்பாடுகளை ராஜபக்ஷவினரே முன்னெடுக்க வேண்டும்.
கேள்வி:- இறுதியாக, சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் கூட்டமைப்புக்குள் எதிர்ப்புக்கள் வலுத்துவரும் நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கைள் எடுக்கப்படுமா?

பதில்:- உங்களுக்கு ஒருவிடயத்தினை கூறுகின்றேன். தமிழர்களின் அரசியல் இருப்புக்கான அடித்தளமாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்மைப்பேயாகும். ஆகவே கூட்டமைப்பின் ஒற்றுமையையும், எமது மக்களுக்காக அர்ப்பணிப்புள்ள நாளைய சந்ததியினரை தயார்படுத்துவதும்தான் என்னுடைய இலக்காக இருக்கின்றது. அதனை அடியொற்றியே எனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றேன்.
மிக அண்மையில் சுன்னாகத்தில் நடைபெற்ற மக்கள் மன்றமொன்றில் சுமந்திரன் பங்கேற்றிருந்தார். அந்தமேடையில் என்மீது தனிநபர்அரசியல் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. கட்சியின் மூத்த, இளைய உறுப்பினர்கள் அதுபற்றிய விளக்கங்கள் கோரப்பட வேண்டும் என்றும் அதற்கு பதிலளிக்கும் வகையிலான பிறிதொரு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்றெல்லாம் ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அத்தனையையும் நான் மறுத்துரைத்து விட்டேன்.

ஆகவே, என்னுடைய அரசியல் பாதையும், பயணமும் அவ்வாறுதான் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் சுமந்திரனின் விடயத்தில் தனிநபராக நான் தீர்மானங்களை எடுக்க முடியாது. அதுபற்றி தமிழரசுக்கட்சியினுள் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம். கூட்டமைப்பின் பங்காளிகளுடன் கலந்து பேசவுள்ளோம். ஆகவே அவர் தொடர்பில் கட்சியே தீர்மானிக்கும். எவ்வாறாயினும் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என்பதிலும் நான் அவதானமாக இருப்பேன்.

நேர்காணல்:- ஆர்.ராம்

https://www.virakesari.lk/article/82202

  • தொடங்கியவர்
10 hours ago, ampanai said:

கேள்வி:- கடந்த ஆட்சியில் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுக்களை முன்னெடுத்த ராஜபக்ஷ அரசு ஈற்றில் ஏமாற்றிவிட்டது என்று நீங்களே கூறியிருக்கின்ற நிலையில் மீண்டும் ராஜபக்ஷ தரப்பினருடனான சந்திப்புக்களை ஆரம்பித்திருக்கின்றீர்களே?


பதில்:- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டியிருந்த கூட்டத்தினை எதிர்க்கட்சிகள் அனைத்தும் பகிஷ்கரித்திருந்த நிலையில் நாம் மட்டுமே பங்கேற்கின்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம். இதன்போது நாம் எமது நிலைப்பாட்டினை தெளிவாக கூறியிருந்தோம். பாராளுமன்றம் கூட்டப்படாதிருக்கின்ற நிலையில் அலரிமாளிகையில் நடைபெறுகின்ற கூட்டம் அதற்கு நிகராகாது என்பது உட்பட தேர்தலை பிற்போட வேண்டிய அவசியம், கொரோனா கொள்கை நோயினால் எமது மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் அவர்களுக்கு தேவையான விடயங்கள், நீண்டகாலமாக நீடித்துக்கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதற்காக ஒரு புதிய அரசியல் சாசனத்தின் அவசியம் என்று அனைத்து விடயங்களையும் நாம் எடுத்துரைத்திருந்தோம்.அதனைவிடவும் எமது ஏனைய உறுப்பினர்கள் தங்கள்தங்களுடைய மாவட்டங்களில் காணப்படும் உண்மையான பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆகவே எமது பிரச்சினைகளை பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு கிடைத்தவொரு சந்தர்ப்பமாகவே அலரிமாளிகை கூட்டத்தினை நாம் பார்கின்றோம்.

புலிகள் ஏன் ஆயுதப்போர் செய்தனர் தமிழீழத்தை உருவாக்கினர் என்பது சிங்களவர்களுக்கு நன்கு தெரியும். 

மகாவம்சம் என்ற கோட்பாட்டையும், அதை காக்க புத்த சமய மடங்களையும் அதை நடைமுறை படுத்த சிறிலங்கா என்ற தமிழ் இன அழிப்பு செய்யும் நாட்டையும், எத்தகைய கோர போர்க்குற்றங்களை செய்யும் முப்படைகளையும் கொண்டவர்கள் தான் சிங்கள இனம். உலகில் சிறிலங்கா போர்க்குற்றம் செய்தது என்று நீருபித்தல் கூட அதை சம்பந்தன், சுமந்திரன்,மாவை  போன்ற அடிமைகளை வைத்து தவிர்க்கும் சாணக்கியம் அவர்களுக்கு உண்டு.

தமிழர்கள் சிறிதளவாவது சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் சிறிலங்கா செய்தது தமிழின அழிப்பு. தமிழின எதிர்ப்பு அருவருக்க தக்க செயல் என்று எதிர்கால சிங்கள இனம் உணர்ந்தால் மட்டும் தான் சாத்தியம்.

புலிகள் செய்தது அறம், தமிழீழம் ஈழ தமிழ் மக்களின் ஆணை. அதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த உண்மையை சொல்வதால் எதோ ஆயுத போரை ஊக்குவிக்கின்றன என்ற பொருளும் இல்லை.

  • தொடங்கியவர்
10 hours ago, ampanai said:

கேள்வி:- தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழினம் தனது தயாகத்தில் அபிலாஷைகளைப் பெற்று தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக தங்களின் உயிரைக்கூட துச்சமாக கருதி ஆயுதங்களை ஏந்திப்போராடியவர்கள். இனத்திற்காக தம்மையே அர்ப்பணித்தவர்கள். அவர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புக்களுக்கும் எவற்றுக்குமே ஈடாகாது. வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ஆயுத ரீதியாக பெற்றுக்கொள்வதற்கு கடும் பிரயத்தனம் செய்திருந்தார்கள். ஈற்றில் மூன்று தசாப்தங்களில் அவர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் விடுதலைக்கான பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

தற்போது கூட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள். எமது கட்சியில் பங்கேற்று செயற்படுகின்றார்கள். அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்து பயணிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.இதனைவிடவும் அவர்களின் வாழ்வாதர நிலைமைகள் மேம்படுவதற்காக அதிகளவான பிரயத்தனங்களைச் செய்து வருகின்றோம். எமக்காக போரடியவர்களுக்காக நாம் நம்பிக்கையளிக்கும் வகையிலான செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுத்து வருகின்றோம்.

தனக்கு சிங்கம் பிடிக்கும் புலி தனக்கு பிடிக்காது என்று சொல்ல அதை நம்ப 2009 இற்கு பிந்திய தமிழர்கள் வேண்டுமானால் மூடர்கள் ஆக இருக்கலாம் என தமிழரசு கட்சி எதிர்பார்க்கலாம். 

ஆனால் சிங்களவர்கள் மூடர்கள் அல்ல. 

தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற எண்ணும் ஈனர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அந்த அடிப்படையில் சுமந்திரன் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடி ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும். தனியொரு நபராக நான் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாதென்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.

இப்படியான வசனங்களை... கலைஞர் கருணாநிதி அடிக்கடி பாவித்து, தப்பிக் கொள்வார். 😎

  • கருத்துக்கள உறவுகள்

"சுமந்திரன் தொடர்பில் கட்சியே தீர்மானிக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை செவ்வி"

_Z-Xpn.gif

மாப்ள அவர்தான் ..ஆனா சட்டை என்னிதில்லை..☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.