Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணெய் தாங்கிகளை மீளக் கொடுக்குமா இந்தியா?

Featured Replies

-ஹரிகரன்

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் சிலவற்றையாவது, இந்தியாவிடம் இருந்து மீளப் பெற்று விடுகின்ற முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
இந்தியாவின் புதிய தூதுவராக பொறுப்பேற்ற கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத் தரப்புடன் அதிகாரபூர்வ சந்திப்புகளை நடத்த ஆரம்பித்துள்ள நிலையில், இந்த விவகாரமும் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய போது, இலங்கையின் பொருளாதாரத்தை துரிதமாக மீளமைப்பதற்கான வழிகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதன்போது, குறைந்து போயுள்ள இலங்கையின் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றக் கையிருப்பை அதிகரிப்பதற்கு, இந்தியாவின் நாணயப் பரிமாற்ற உதவியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கோரியிருந்தார்.

அதற்கு இந்தியப் பிரதமர் தன்னால் முடிந்தளவுக்கு உதவுவதாக கூறியிருந்தார். அடுத்து, கொழும்பு துறைமுக அபிவிருத்தி விவகாரமும் பேசப்பட்டது, அப்போது, கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா துரிதமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் கோரப்பட்டிருக்கிறது.

ஆனால் அதற்கு இந்தியா, இன்னமும் உறுதியான எந்த பதிலையும் கூறியதாகத் தகவல்கள் இல்லை. முன்னதாக, கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில், முதலீடு செய்வதில் இந்தியா ஆர்வம் கொண்டிருந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்த விடயத்தில் தனிப்பட்ட முறையில் கூட அக்கறை செலுத்தியிருந்தார். அதற்காக இந்தியாவின் இரண்டு தனியார் துறை நிறுவனங்களை ஒருங்கிணைத்து, முதலீடு செய்வதற்கான முயற்சிகளிலும் இந்திய அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனை இந்தியாவுக்கு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்க முடியாது என்று அடம் பிடித்தார். 2018 ஒக்ரோபரில், இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு இந்த விவகாரமும் கூட ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.

அப்போது, இலங்கை அரசாங்கமே, கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் என்று, இந்தியாவுக்கு திட்டவட்டமாக கூறியிருந்தார் மைத்திரிபால சிறிசேன. அப்போது, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னால் இருந்து, அந்த திட்டத்தை குழப்பியடித்தது தற்போதைய ஆளும்கட்சி தான்.

இப்போது, அதே கட்சியின் ஆட்சியில் தான், கொழுமபு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் முதலீடு செய்யுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய அரசாங்கம் திடீரென குத்துக்கரணம் அடித்துக் கொண்டு, இந்தியாவிடம் அதனைக் கொடுக்க முனைந்திருப்பதற்கான காரணங்கள் என்ன? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

தற்போதைய நிலையில், இலங்கை பாரிய பொருளாதாரச் சிக்கலில் உள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி குறுகிய காலத்துக்குள் தீரப்போகும் ஒன்று அல்ல. அடுத்து வரும் அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் கூட, பொருளாதார நெருக்கடி குறையாது,

india_oil1.jpg


இப்போதுள்ள நிலையில், பொருளாதார அபிவிருத்தி என்பது கனவில் கூட, நினைத்துப் பார்க்க முடியாது. அந்த நம்பிக்கையும் அரசாங்கத்துக்கு இல்லாமல் போய் விட்டது.

எனவே, இப்போதுள்ள நிலையில் இருந்து, இன்னும் பின்நோக்கி செல்லாமல் தடுப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. கொரோனா முழு அடைப்பினால், பொருளாதாரம் முற்றாக படுத்தேவிட்டது. வெளிநாட்டு நிதிப் பாய்ச்சலும் குறைந்து விட்டது. இந்தநிலையில், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை நாங்களே அபிவிருத்தி செய்வோம் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தால் எதுவும் சாத்தியமாகப் போவதில்லை.
தற்போது கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்ற நடவடிக்கைகளால் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆனால், துறைமுகத்தில் காணப்படும் இட நெருக்கடிகளால், அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் இருக்கிறது.

இவ்வாறான நிலையில், குறுகியகால அடிப்படையில் கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனைச் செய்தால் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

அதற்காகவே அவசரமாக இந்தியாவிடம் இந்த அபிவிருத்தப் பணிகளில் முதலீடு செய்ய அழைத்திருக்கிறது அரசாங்கம். இந்தியா அதற்கு எத்தகைய பதிலைக் கூறப்போகிறது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இந்தியா மறுத்தால் சீனாவின் பக்கம் அரசாங்கம் நகரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அதனை இந்தியா கடுமையாக எதிர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போது அதனை எதிர்க்காத சீனா, கொழும்பு துறைமுகத்தை சீனாவிடம் கொடுப்பதற்கு ஏன் எதிர்க்கப் போகிறது என்ற கேள்வி எழலாம்.

அம்பாந்தோட்டை துறைமுகமானது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய அமைவிடமாக இருந்தாலும், அது இந்தியப் பெருங்கடலைப் பார்த்தபடியே இருக்கிறது.

அது இந்தியாவின் பொருளாதார கடல் எல்லையுடன் பங்கு போட்டுக் கொள்வதாகவும் இருக்கவில்லை. ஆனால், கொழும்பு துறைமுகம் அப்படியில்லை. அது அரபிக்கடலை நோக்கியதாக இருந்தாலும், இந்தியாவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இந்தியாவின் உட்புறத்தை நோக்கி, மிகஅருகில் உள்ளது.

அவ்வாறான ஒரு இடத்தில் சீனாவுக்கு இடமளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்து விடும். ஏற்கனவே கொழும்பு தெற்கு கொள்கலன் முனையத்தை சீனா அபிவிருத்தி செய்து தன்வசம் வைத்திருக்கிறது.

இவ்வாறான நிலையில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையமும் சீனாவின் வசம் சென்றால், அது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக அமையும். எனவே இந்தியா அதனை அனுமதிக்காது. திருகோணமலை துறைமுகத்திலும் அவ்வாறு தான் நிலைமை உள்ளது, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமக்கு திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்தார் என்று அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

அதுபோலவே திருகோணமலை , சீனக்குடாவில், விமான பராமரிப்பு மையத்தை அமைக்க சீன நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்ட போது, இந்தியாவே அதனை தடுத்து நிறுத்தியது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் கடுமையான அழுத்தங்களையிட்டு விசனத்துடன் கருத்துக்களை வெளியிட்டவர் தான் இப்போதைய ஜனாதிபதி.

india_oil.jpg


ஆனால், இப்போது இந்தியாவின் உதவியுடன் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பின்னணியில் தான் சீனக்குடாவில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னதாக, இந்திய தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்த அமைச்சர் மகிந்த அமரவீர, திருகோணமலையில் உள்ள சில எண்ணெய் தாங்கிகளை திரும்பத் தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட- இந்த எண்ணெய்த் தாங்கிகள் ஒவ்வொன்றும் 12,100 மெட்றிக் தொன் எண்ணெயை களஞ்சியப்படுத்தக் கூடியவை.

இத்தகைய 99 எண்ணெய் தாங்கிகள் தற்போது இந்தியாவிடம் உள்ளன. 2003 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, இந்தியன் ஓயில் நிறுவனமே இந்த எண்ணெய் தாங்கிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதற்காக ஆண்டுக்கு 1 இலட்சம் டொலரை இந்தியா வழங்குகிறது.

35 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய இந்த உடன்பாடு காலாவதியாக இன்னும், 18 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன்னதாகவே, இந்த எண்ணெய் தாங்கிகள் சிலவற்றையாவது பொறுப்பேற்று விட வேண்டும் என்பது தான், தற்போதைய அரசாங்கத்தின் இலக்காக தெரிகிறது.

அதன்மூலம் இந்த உடன்பாட்டில் திருத்தங்களை செய்து, காலப்போக்கில் அதனை இந்தியாவின் பிடியில் இருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் திட்டம். ஆனால் இந்தியா இதற்கு இதுவரை பிடிகொடுக்காமலேயே பதிலளித்து வருகிறது,

இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் அமைச்சர் மகிந்த அமரவீர நடத்திய பேச்சுக்களின் போது இதுகுறித்து கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ஐஓசி ஒரு தனியார் நிறுவனம் என்பதால், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று பதிலளித்திருக்கிறார்.

ஆனால், ஐஓசி ஒரு தனியார் துறை நிறுவனம் அல்ல, அது இந்திய அரசுத்துறை நிறுவனம். அதன் 52 வீத பங்குகளை இந்திய அரசாங்கமே வைத்திருக்கிறது. எனவே இந்திய அரசாங்கம் நினைத்தால், சீனக்குடாவில் உள்ள எண்ணெய் தாங்கிகளில் சிலவற்றை இலங்கைக்குத் திரும்பக் கொடுக்க முடியும்.

ஆனால், இந்தியா அவ்வாறான விசப் பரீட்சைகளில் ஈடுபடும் போலத் தெரியவில்லை. அவ்வாறு செய்தால், அது ஏனைய எண்ணெய் தாங்கிகளை இலங்கை அரசாங்கம் பிடுங்கிக் கொள்வதற்கு காரணமாகி விடும் என்று இந்தியா அஞ்சுவதாக தெரிகிறது.

இந்திய அரசாங்கத்திடம் இருந்து எண்ணெய் தாங்கிகளை மீளப் பெறுவதற்காகத் தான் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசு முடிவு செய்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. அது உறுதியானால், இந்தியா அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவே.

https://www.virakesari.lk/article/83574

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.