Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

 

பீஜிங்

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

முடிவுக்கு வந்து விட்டது கொரோனா என்று கருதப்பட்டு வந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த பீஜிங்கில் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீன தலைநகரில் உள்நாட்டில் பரவிய மேலும் ஆறு கொரோனா பாதிப்புகளை தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பீஜிங்கில் உள்ள அதிகாரிகள் நகரத்தில் உள்ள பெரிய மொத்த சந்தையை தற்காலிகமாக மூடினர்.

பீஜிங்கில் புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். 2 நாளில் 3 பேருக்கு பீஜிங்கில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

உணவு சந்தையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் ஜிங்ஷென் கடல் உணவு சந்தையையும் மூடி, பீஜிங்கின் மொத்த உணவு சந்தைகள் அனைத்திற்கும் உணவு மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளை சோதிக்க உத்தரவிட்டனர்.

ஆறு புதிய உள்நாட்டு கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகிய பின்னர் பீஜிங்கில் சிலபகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சீனா  கொரோனா உள்ளூர் பரவலுக்கான முதல் பாதிப்பை தற்போது அறிவித்து உள்ளது.- 52 வயதான ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சீன தலைநகரை விட்டு வெளியேறவில்லை என்றும்,நகரத்திற்கு வெளியில் இருந்து யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறி உள்ளார்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/13135814/Authorities-in-Beijing-place-parts-of-the-city-in.vpf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இப்போதைக்கு அடங்காது போல கிடக்கு.
விஞ்ஞான உலகிற்கு ஒரு சவால்.கடவுள் இருக்கிறார் குமாரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கரோனா: போர்க்கால அவசர நிலை நடவடிக்கையில் பெய்ஜிங்

beijing-district-in-wartime-emergency-after-virus-spike-shuts-marke  

சீனாவின் பெய்ஜிங் நகரில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கிய நிலையில், அங்கு போர்க்கால அவசர நிலையை அரசு அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், “பெய்ஜிங்கில் உள்ள முக்கியச் சந்தை ஒன்றில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெய்ஜிங்கின் ஸின்பாடி சந்தையைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அவசர நிலையை அரசு அமல்படுத்தியுள்ளது. இப்பகுதியில் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 517 பேரில் 45 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட எவருக்கும் கரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஸின்பாடி சந்தைக்குச் சென்ற பலருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் விளையாட்டு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை தற்காலிகமாகத் தடை செய்யப்படுவதாக பெய்ஜிங் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் உள்ள சந்தை ஒன்றிலிருந்து பரவியது. இதனைத் தொடர்ந்து சீனாவில் இதுவரை 83,064 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 78,365 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கடந்த மாதம்தான் சீனாவில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

https://www.hindutamil.in/news/world/559236-beijing-district-in-wartime-emergency-after-virus-spike-shuts-marke.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`மீண்டும் இறைச்சி சந்தையில் கொரோனா; மூடப்பட்ட மார்க்கெட்’ - சீனாவில் அதிகரிக்கும் வைரஸ் பரவல்

சீன இறைச்சி சந்தை

சீனாவின் பெய்ஜிங் நகரில் இருக்கும் மொத்த விற்பனை சந்தை ஒன்றில் வேலை செய்த பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் இன்று உலகம் சந்தித்து வரும் மோசமான நிலைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது சீனாதான். கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத் தலைநகரான வுகானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா பரவியதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு மொத்த ஹூபே மாகாணமும் முடக்கப்பட்டு அங்கு மக்கள் நடமாடக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஹூபேவை தவிர சீனாவின் பிற இடங்களில் வைரஸ் பரவல் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சீனா
 
சீனா AP

3 மாத போராட்டத்துக்குப் பிறகு சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கில் முழுத் தளர்வு அறிவிக்கப்பட்டது. சீன மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது அங்கு மீண்டும் கொரோனா வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தமுறை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

 

பெய்ஜிங் நகரில் இருக்கும் ஜின்ஃபாடி (Xinfadi) என்ற மொத்த விற்பனை சந்தை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. சமீபத்தில் இறைச்சி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இருவர், அந்த சந்தைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மூலம் சந்தை முழுவதும் வைரஸ் பரவியிருக்கலாம் என பெய்ஜிங் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு எப்படி தொற்று உறுதியானது எனத் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் பெய்ஜிங்கில் நேற்று ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 7 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியாகியுள்ளதும் அவர்களில் 6 பேர் பெய்ஜிங்கில் இருக்கும் சந்தைக்குச் சென்று வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சீனா
 
சீனா AP

முதன்முறையாக சீனாவில் கொரோனா பாதிப்பு உருவாகி மீண்டும் சந்தைகள் திறக்கப்பட்டபோது இந்த ஜின்ஃபாடி சந்தையில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பெய்ஜிங் மட்டுமல்லாது சீனாவின் பெரும்பாலான நகரங்களில், ஆடு, மாடு இறைச்சியின் மொத்த விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் தற்போது அந்த சந்தைக்குச் சென்ற பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், ஜின்ஃபாடி சந்தை முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

மேலும் சந்தையைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுக் குடியிருப்புகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. அந்தச் சந்தையைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சந்தையில் இருக்கும் இறைச்சிகளை வெளியேற்றி வருகின்றனர்.

அதேபோல் இந்தச் சந்தையிலிருந்து வாங்கப்பட்ட இறைச்சிகள் எந்த ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளிலும் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜின்ஃபாடி சந்தையில் பணி செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து அவர்களின் குடும்பத்தினரைக் கண்காணிக்கவும் பெய்ஜிங் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

https://www.vikatan.com/news/international/beijing-wholesale-market-shut-amid-new-covid-19-cases

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்;பீஜிங்கில் ஊரடங்கு அதிகரிப்பு

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்;பீஜிங்கில் ஊரடங்கு அதிகரிப்பு

சீனாவில் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
பதிவு: ஜூன் 15,  2020 10:55 AM மாற்றம்: ஜூன் 15,  2020 11:10 AM
பீஜிங்

சீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது.


இதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. 

சீனாவின் துணைப் பிரதமர் சன் சுன்லன்  "தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு" அழைப்பு விடுத்துள்ளார், ஏனெனில் ஒரு

நேற்று பிற்பகுதியில், அனைத்து அரசு குகாதார நிறுவனங்களும் ஜின்ஃபாடி உணவு சந்தைக்கு வருகை தந்த அல்லது அங்கு இருந்த எவருடனும் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்களை  14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டது. சந்தை மூடப்பட்டது. அதைச் சுற்றியுள்ள பல குடியிருப்பு தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

"பீஜிங் ஒரு அசாதாரண காலத்திற்குள் நுழைந்துள்ளது" என்று நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் தெரிவித்து உள்ளார்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/15105537/Coronavirus-Beijing-spike-continues-with-36-new-cases.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் மீண்டும் கொரோனா:சந்தையில் மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு

சீனாவில் மீண்டும் கொரோனா:சந்தையில்  மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு

சீனா சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பதிவு: ஜூன் 15,  2020 15:52 PM
பீஜிங்
 
சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ள மக்களின் வாழ்க்கை தொடர்ச்சியாக அதிகரிக்கும் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது.
 
50 நாட்கள் நோய் பாதிப்பு இல்லாமல் இருந்த சீனாவில் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
 
சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், நாட்டின் பிற பகுதிகளிலும் பரவி வரும் வகையுடன் இந்த வைரஸ் ஒத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார்.இது வேறு இடத்திலிருந்து வந்தது என்று பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், இப்போதைக்கு, வைரஸ் எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா; பீஜிங்கில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடக்கம்

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா; பீஜிங்கில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடக்கம்

னாவில் மீண்டும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில் தலைநகர் பீஜிங்கில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
பதிவு: ஜூன் 16,  2020 04:45 AM
பீஜிங், 

சீனாவின் உகானில் தோன்றி ஒட்டுமொத்த நாட்டையும் 4 மாதங்களுக்கும் மேல் கட்டுக்குள் வைத்திருந்த ஆட்கொல்லி கொரோனா, கடந்த ஏப்ரல் மாதம் ஒருவழியாக சீனர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்தது. அவர்கள் மேற்கொண்ட தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் ஏப்ரல் இறுதிவாக்கில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் விட்டுப்போனது.


இந்த ஓய்வு நிரந்தரமாகி விடும், கொரோனாவில் இருந்து மீண்டு விட்டோம் என கருதியிருந்த அவர்களது எண்ணத்தில் தற்போது பேரிடி விழுந்து உள்ளது. நாடு முழுவதும் ஆங்காங்கே மீண்டும் கொரோனா நோயாளிகள் உருவாக தொடங்கி இருக்கிறார்கள்.

இதன் மூலம் கொரோனாவிடம் இருந்து சீனர்கள் பெற்றது நிரந்தர ஓய்வு அல்ல, வெறும் ஒரு இடைவெளி மட்டுமே என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.

67 பேருக்கு கொரோனா

உண்மைதான்... கடந்த சில நாட்களில் சீனாவில் 67 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் 42 பேர் பீஜிங்கை சேர்ந்தவர்கள். அந்தவகையில் இந்த முறை தலைநகர் பீஜிங்தான் கொரோனாவுக்கு அதிக இலக்காகி இருக்கிறது.

நேற்று முன்தினம் வரை கண்டறியப்பட்ட இந்த புதிய கொரோனா நோயாளிகளில் 18 பேர் எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து அறிகுறி இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்து உள்ளது.

பீஜிங்கை பொறுத்தவரை கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை மொத்தம் 499 பேர் உள்நாட்டு தொடர்பு மூலம் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 174 பேர் வெளிநாட்டில் இருந்து நோய்த்தொற்றுடன் வந்தவர்கள் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

ஜின்பாடி சந்தை

பீஜிங் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜின்பாடி சந்தை கொரோனா தொற்றின் மையமாக தற்போது விளங்கி வருகிறது. அங்கிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்த போது இந்த உண்மை கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த சந்தை உள்பட நகரில் உள்ள 7 சந்தைகள் மூடப்பட்டு உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஜின்பாடி சந்தைக்கு சென்று வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசோதனை நடத்தும் நடவடிக்கைகள் மிகப்பெரும் அளவில் தொடங்கி உள்ளன. குறிப்பாக மே 30-ந் தேதிக்குப்பிறகு சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

இவ்வாறு 29,386 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12,973 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாக இருப்பதாக பிஜிங் சுகாதாரக்குழுவின் செய்தி தொடர்பாளர் காவோ ஜியாவோஜுன் கூறினார்.

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருப்பதால் அரசும், மருத்துவ நிபுணர்களும் கதிகலங்கிப்போய் உள்ளனர். சீனாவில் அக்டோபர் தொடங்கும் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்கும் என கணித்திருந்த அவர்கள், தற்போதும் கொரோனா தனது கொடிய கரங்களை விரிப்பதை பார்த்து அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்.

எனினும் சுதாரித்துள்ள அவர்கள் பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக தலைநகர் பீஜிங்கில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா பரிசோதனைகளை (நியூக்ளிக் அமில சோதனை) மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

சீனாவில் நேற்றைய நிலவரப்படி 83,181 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 78,370 பேர் குணமடைந்து உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,634 ஆகு

https://www.dailythanthi.com/News/World/2020/06/16025633/Corona-threatens-China-again-Beginning-of-largescale.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் மீண்டும் கரோனா: பெய்ஜிங்கில் நிலைமை மோசம்; 90 ஆயிரம் பேருக்கு பரிசோதனை; லாக்டவுன் அமல்

beijing-covid-19-cases-reach-106-mass-testing-of-nearly-90-000-people-underway கோப்புப்படம்

பெய்ஜி்ங்

சீனாவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தொடங்கிய உணர்வை பெய்ஜிங் சூழல் ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் இதுவரை 106 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பரிசோதனையை சீன அரசு தீவிரப்படுத்தி, 90 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறும் சீன அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் மீண்டும் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதியிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்குச் சென்றுவந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெய்ஜிங்கில் நிலைமை மோசமடைந்துவிடும், வூஹானைப் போன்று மற்றொரு நோய்திரளாக பெய்ஜிங் மாறிவிடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனையை சீன அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதுவரை 90 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1592293479756.jpg

கடந்த 22 மணிநேரத்தில் 27 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் அறிகுறி இல்லாமல் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மருத்துவக் குழுவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வூஹானில் கொண்டுவந்ததுபோல் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளையும்,லாக்டவுனை பெய்ஜிங்கின் பல்வேறு பகுதிகளில் சீன அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனர்.

பெய்ஜிங் நகர செய்தித்தொடர்பாளர் ஜூ ஹிஜியான் கூறுகையில், “கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை 106 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கில் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து, மோசமாகி வருவதால், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

1592293508756.jpg

சீனாவின் தொற்றுநோய் தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை தொற்றுநோய் தடுப்பு மருத்துவர் வூ ஜூன்யூ , சீனாவின் நாளேடான பீப்பிள்ஸ் டெய்லிக்கு அளித்த பேட்டியில், “பெய்ஜிங் நகரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது. நாளுக்கு நாள் புதிதாக கரோனா நோயாளிகள் வருகிறார்கள். ஜின்ஃபாடி சந்தைக்குச் சென்றவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பரவலைத் தடுக்க தீவிரமாக முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஹெய்தான் மாவட்டத்தில் உள்ள பெங்டாய் பகுதியில் உள்ள 21 குடியிருப்புப் பகுதிகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளளனர். இந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜின்ஃபாடி சந்தையைச் சுற்றி இருக்கும் பல்வேறு குடியிருப்புகளையும் பெய்ஜிங் நிர்வாகம் மூடி தனிமைப்படுத்தியுள்ளது.

கடந்த 56 நாட்களாக பெய்ஜிங்கில் எந்தவிதமான கரோனா நோயாளியும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 100க்கும்மேல் அதிகரித்து இருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சூழல் குறித்தும், கரோனாவின் புதிய நோய்திரளாக பெய்ஜிங் மாறிவிட்டதா என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்கக் கோரி உலக சுகாதார அமைப்பு அறிக்கை கேட்டுள்ளது.

 

https://www.hindutamil.in/news/world/559657-beijing-covid-19-cases-reach-106-mass-testing-of-nearly-90-000-people-underway-2.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் கரோனா தீவிரம்: பெய்ஜிங்கில் பள்ளிகள் மீண்டும் மூடல்

beijing-shuts-city-schools-again  

சீனாவில் இரண்டாம் கட்ட அலையாக கரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பெய்ஜிங்கில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் பெய்ஜிங் நகரில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் பள்ளிகள் அனைத்தும் பெய்ஜிங்கில் மூடப்படுவதாக கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடருமாறு பள்ளிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டது.

கடந்த மாதம் 30-ம் தேதியிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்குச் சென்று வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தொடங்கிய உணர்வை பெய்ஜிங் சூழல் ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் இதுவரை 106 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறும் சீன அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

https://www.hindutamil.in/news/world/559762-beijing-shuts-city-schools-again-1.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா

ஜிங்கில் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய நிலையில் அங்கு 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.

சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா
கொரோனா வைரஸ் பரிசோதனை
 
சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா எட்டிப் பார்க்கவில்லை.  அது பாதுகாக்கப்பட்ட நகரமாகவே, அரணாக அனைவருக்கும் தோன்றியது.

சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை அந்த நாட்டையே உலுக்கிய கொரோனா 5 மாத கால பேராட்டத்துக்கு பிறகு ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அது சீன மக்களுக்கு நிம்மதியைத்தந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பத்தொடங்கினர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட தொடங்கியது. பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவின.

ஆனால் பீஜிங் மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சீன மக்களுக்கும் ஏற்பட்டது நிரந்தர நிம்மதி அல்ல, இடைக்கால நிம்மதிதான் என்று சொல்லத்தக்க விதத்தில் அங்கு மறுபடியும் கொரோனா பரவத்தொடங்கி உள்ளது.

தலைநகர் பீஜிங்கில் 56 நாட்களுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மீண்டும் கொரோனா ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. தினமும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது கொரோனாவின் 2-வது அலை தாக்குதல் என்று நம்பப்படுகிறது.
 
கொரோனா வைரஸ்  பரிசோதனை
 

இந்த நிலையில் நேற்று காலையுடன் முடிந்த 22 மணி நேரத்தில் பீஜிங்கில் மட்டும் 27 பேருக்கு கொரோனா கொத்து கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது உகான் நகர கடல்வாழ் உயிரின மாமிச சந்தை என்றால், இப்போது பீஜிங்குக்கு இரண்டாவது அலை வீச வழி வகுத்திருப்பது அங்குள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தை.

கொரோனாவின் 2-வது அலையில் பீஜிங்கில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இந்த தகவலை பீஜிங் நகர செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் உறுதி செய்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “பீஜிங்கில் கொரோனா தொற்று நோய் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது. இது எங்கள் அதிகபட்ச முன்னுரிமையாக அமைந்து விட்டது. நாங்கள் அங்கு அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். ஒவ்வொரு நிமிடமும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்று கவலையுடன் குறிப்பிட்டார்.

பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று கொத்து கொத்தாக பரவத்தொடங்கி இருப்பதையொட்டி, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அது மடடுமல்ல அந்த நகரை சேர்ந்த 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், சர்ச்சைக்குரிய ஜின்பாடி மொத்த சந்தைக்கு மே 30-ந் தேதியில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனைபேருக்கு இப்போது தொற்று பரவி இருக்கிறதோ என்ற கவலை, பீஜிங் நகர நிர்வாகத்தை வாட்டி வதைக்கிறது.

அதனால்தான் அந்த சந்தையை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அத்தனையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. பீஜிங் நகரம் போர்க்கால நிலையில் வைக்கப்பப்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

சீனாவில் நேற்று மொத்தம் 40 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 32 பேருக்கு உள்ளூர் பரவல் என்றும் 8 பேருக்கு வெளியூர் மூலமான பரவல் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஹெபெய் மாகாணத்தில் 4 பேருக்கும், சிச்சுவான் மாகாணத்தில் ஒருவருக்கும் தொற்று பாதித்துள்ளது. 6 பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இன்றி கொரோனா தாக்கி இருப்பது அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ஒரே நாளில் 7 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சைக்கு பின் மீண்டு வீடு திரும்பி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சீனாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 221 ஆகும். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக பதிவாகி இருக்கிறது. சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 377 ஆக உள்ளது.

பீஜிங் நிலவரம் பற்றி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோய் நிபுணர் வு ஜூன்யு பேட்டி ஒன்றில் கூறும்போது “ தற்போது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. பீஜிங்கில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கி உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் ஜின்பாடி மொத்த விற்பனை சந்தைதான். இது மிகப்பெரிய சவாலாக இப்போது உருவெடுத்துள்ளது. இது தொடர்பான விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளோம்” என கூறினார்.

சீனாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கத்தொடங்கி இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் உலக நாடுகளுக்கு அது அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனாவே, உனக்கு ஒரு முடிவு வராதா?

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/17120907/1618174/Beijings-coronavirus-testing-capacity-has-been-expanded.vpf

 

எல்லாவற்றையும் ஒழித்துவிடுவார்கள். மக்கள் இறப்பையும் இ கொரோனாவையும்.🤬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் கொரோனா 2வது அலை பள்ளிகள் மூடல் - விமானங்கள் ரத்து

 

சீனாவில் கொரோனா 2வது அலை பள்ளிகள் மூடல் - விமானங்கள் ரத்து

பீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பள்ளிகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், 1255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 15:08 PM
பீஜிங்

சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் கொரோனா பரவிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது இரண்டாவது அலையாகத் தலைநகர் பிஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது.


இதனால் சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எட்டாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதன் காலை நிலவரப்படி பீஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பள்ளிகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், 1255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17150841/Beijing-cancels-1255-flights-shuts-schools-over-new.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.