Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பொது தேர்தல் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச் சீட்டு அச்சிடும் பணி 50 சதவீதம் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வககச-சடட-அசசடம-பண-50-சதவதம-நறவ/175-251878

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வியூகம் எப்படி அமைப்பது?- யாழில் கூடி ஆராய்ந்தது முன்னணி

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு, தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1.jpg

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%http://athavannews.com/தேர்தல்-வியூகம்-எப்படி-அ/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவனின் கொள்கையை விட்ட இடத்தில் இருந்து தொடர்வேன் – சசிகலா

னது கணவர் தேசியம் சார்ந்த கொள்கையோடு இருந்தவர். அப்பணியை விடுபட்ட இடத்திலிருந்து நான் கொண்டு செல்லவே விரும்புகிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (15) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சசிகலா ரவிராஜ் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

‘எனது கணவர் மாமனிதர் ரவிராஜின் இறப்புக்கு பின் சாவகச்சேரியில், அதாவது தென்மராட்சி தொகுதியில் கடந்த 14 வருடங்களாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கவில்லை.

இதன்காரணமாகவும் – நானும் ஒரு பாதிக்கப்பட்ட பெண், பெண்களின் வலியையும் வேதனையையும் உனர்ந்தவர் என்ற வகையில் அவர்களுக்காகவும், எனது கணவர் செய்த சேவையை தொடர்வதற்கும் இந்த தேர்தலில் போட்டியிட வந்திருக்கின்றேன்.

நான் அறிந்த வகையில் யாழ் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கானப்படுகின்றன. கடந்த காலத்தில் அவர்களுடைய எந்தவித தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. செய்யப்பட்டவையும் மிக குறைவே என்று சொல்லலாம்.

அவ்வாறான நிலையில் எனது முக்கிய நோக்கம் அவர்களுக்கும் பாதிக்கப்பட்ட எந்தவகையான குடும்பங்களுக்கும் அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் என்னைப் போல் பிரச்சனை இருந்தது. இருந்தாலும் பொருளாதார ரீதியாக நான் ஒரு நிரந்தர தொழிலை செய்தபடியால் எனக்கு பொருளாதாரப் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஆனால் இது எல்லாத்தையும் விட இங்கு உள்ள குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு சமூகசீரழிவுகள் எல்லாவற்றையும் தொடர்ந்து ஒரு கட்டமைப்புக்குள் அவர்கள் சீவித்து வருகிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக நான் எனது இந்த சந்தர்ப்பத்தை பிற்காலத்தில் பயன்படுத்துவேன். இது தவிர சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சார்பாகவும் எனது ஈடுபாடு காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இதைத் தவிர எனது அனைத்து கட்சி அங்கத்தவர்களுடனும் நான் கூட்டாக சேர்ந்து செயற்படுவேன்.

எனது வெற்றிவாய்ப்பு சாதகமாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன். எனது கணவருடைய சேவையை அனைவரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். ரவிராஜ்ஜின் கொள்கைகள் சேவைகள் எவ்வாறு இருந்ததோ அதே பணியை நானும் தொடர விரும்புகின்றேன்.’ – என்றார்.

 

https://newuthayan.com/கணவனின்-கொள்கையை-விட்ட-இ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் குறித்து இன்றும் கலந்துரையாடல்

தேர்தல் குறித்து இன்றும் கலந்துரையாடல்

image_1503513384-9f23a5f33b-1-1.jpg?189db0&189db0

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல்கள் செயலகத்தில் இன்று (16) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தபால் மூல வாக்களிப்புக்கான திகதியை தீர்மானிக்க ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

அத்துடன், தேர்தல் ஒத்திகையின் முன்னேற்றம் குறித்தும் சுகாதார வழிகாட்டல்கள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. 

https://newuthayan.com/தேர்தல்கள்-செயலகத்தில்-இ/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 நாள்களுக்கு தபால் மூல வாக்களிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 03 நாள்களுக்கு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜூலை மாதம் 16 ஆம் திகதியும் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் செயலக அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/3-நளகளகக-தபல-மல-வககளபப/175-251994

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர்கள் இடையில் கலந்துரையாடல்

General-Election-2020.png?189db0&189db0

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கிடையே இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று (17) பிற்பகல் நான்கு மணியளவில் குறித்த இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையில் இடம்பெறவுள்ள முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

 

https://newuthayan.com/ஜனாதிபதி-மற்றும்-தேர்தல்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

 

E13EFE6B-8CBC-42E4-B830-98848DEF3069-960x731.gif?189db0&189db0

 

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், மற்றும் கம்பரேலியா பாதைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை வரைவது தேர்தல் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடு எனவும் இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

 

https://newuthayan.com/தேர்தல்-சட்ட-விதிமுறைகளை/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணர்வற்று வாக்களிக்கும் நிலை மாற வேண்டும்! – ரவிகரன்

 

received_594708277827075.jpeg?189db0&189db0

ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள, முஸ்லிம் கட்சிகள் தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப் பெறுகின்றன. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

எப்படியிருந்தாலும் முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் தத்தமது இனம் சார்ந்தே வாக்களிப்பார்கள். தமிழ் கட்சிகளுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் தமிழர்கள்தான் ஏதோ ஒரு வகையில், குறைந்த அளவிலாவது முஸ்லிம் மற்றும் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர்.

குறிப்பாக வடக்கைப் பொறுத்த வரையில் சிங்கள மற்றும் தமிழ் கட்சிகளுக்கு மிகக் குறைந்த அளவிலான வாக்குகளே காணப்படுகின்றன. எனினும் தமிழ் மக்களில் ஒரு சிலர் இவ்வாறு சிங்கள, முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பதனால், தங்களுடைய வாக்குவங்கிக்கு மீறிய ஒரு பலத்தினை அவர்கள் பெறுகின்றனர். ஒவ்வொருமுறையும் இவ்விடயம் இடம்பெறுகின்றது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

எது எவ்வாறாயினும் தமிழர்கள் என்ற இன உணர்வுடன், மிக அதிகளவான எமது தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றமையினையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். – என்றார். (248)

 

https://newuthayan.com/உணர்வற்று-வாக்களிக்கும்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலந்துரையாடலில் கலந்துகொண்டோர் கைது

எஸ்.நிதர்ஷன், என்.குகன்

 

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்துகொண்ட10 இளைஞர்கள், இன்று (17) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவத்தை அடுத்த, அவ்விடத்தை விட்டு, வேட்பாளர் நாசுக்காக  விலகிச் சென்றுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கலநதரயடலல-கலநதகணடர-கத/71-252070

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜித், ரணில் அணிக்கு வாக்களிப்பது வீண் – முத்தையா பிரபாகரன்

Muttiah-Prabhakaran.jpg?189db0&189db0

 

சஜித் தரப்பு மற்றும் ரணில் தரப்புக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணானவையாகவே அமையும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.

நேற்று (19) ஹட்டனில் இதனை தெரிவித்தார். மேலும்,

‘மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தளவான வீடுகளே கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு நடக்குமானால் வீட்டுத் திட்டத்தை முடிப்பதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம். எனவேதான் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இவை இடம்பெறவேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவ்வாறு நடைபெற்றால் நிச்சயம் மாற்றம் வரும்.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு மட்டுமல்லாது, மலையக மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் அவசியமாக உள்ளது. சுயதொழில் வாய்ப்பு உட்பட மேலும் பல விடயங்கள் ஊடாக வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டும்.’ – என்றார்.

https://newuthayan.com/சஜித்-ரணில்-அணிக்கு-வாக்/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்கள் செயலகத்தில் இன்று கலந்துரையாடல்

தேர்தல் சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து தேர்தல்கள்  செயலகத்தில் இன்றும் (20) நாளையும் (21) கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. 

இன்று (20) பிற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன்,  இன்றைய தினம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ள்தாக, தேர்தல்கள்  செயலகம் தெரிவித்துள்ள

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தரதலகள-சயலகததல-இனற-கலநதரயடல/175-252148

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடியாணை இன்றி கைது செய்க: மகிந்த தேசப்பிரிய கடும் சீற்றம்!

பொதுத் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட சுவரொட்டிகள், தட்டிகள் மற்றும் இலக்கங்களை காட்சிப்படுத்துவது பிடியாணை இன்றி கைது செய்யக் கூடிய குற்றமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் அலுவலகங்களின் கட்சி மற்றும் சின்னத்தை காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் இலக்கங்களை காட்சிப்படுத்த அனுமதியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் வாக்கெடுப்பு சட்டத்தை அமுல்படுத்துவது சம்பந்தமான பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

தேர்தல் அலுவலகங்களில் தட்டிகளை காட்சிப்படுத்த இடமளிக்காத நடவடிக்கையானது தேர்தல் ஆணைக்குழுவில் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினை.

எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் பொலிஸார் அதற்கு எதிராக வழக்கு தொடர்வார்கள்.

தற்போது ஒத்திகை தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதுடன் நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி விக்ரமசிங்கபுர சமூக நிலையம் மற்றும் தெமட்டகொடை சாம விகாரை ஆகியவற்றில் ஒத்திகை தேர்தல் நடத்தப்பட்டது.

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு அமைய வாக்களிக்கும் நேரத்தை மாலை 5 மணி வரை நீடிப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/145566?ref=home-imp-parsely

கோவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளாவி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி வரும் மாதங்களில் தன் கோரதாண்டவத்தை இலங்கைத்தீவிலும் வெளிப்படுத்தும். 

அதற்கு முன் ஒரு தேர்தலை நடாத்தி தற்போதைய கொடுங்கோல் ஆட்சி தன்னை மேலும் நிலைப்படுத்தி வலுப்படுத்திவிடும்.

அதன் பின்னரே பொருளாதாரப்பழு மக்கள் கைகளில் வந்து சேரும்.

ஏற்கனவே திட்டமிட்ட முறையில் கடந்த 11 ஆண்டுகளாக வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுவிட்ட தேசிய இனமான ஈழத்தமிழினமே அதன் தாக்கத்தை அதிகம் சுமக்க மாற்றானாக தள்ளப்படும்..

அதற்கான அவர்களின் தீர்வு என்ன? என வாக்குகளிற்காக உங்கள் கதவுகளைத் தட்டுபவர்களை ஒருதரம் கேட்டுவிடுங்களேன்!

( முகநூல் ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் பக்கம் தாவினார் த.தே.ம.முன்னணி வேட்பாளர்

image_dc82e5b579.jpg?189db0&189db0

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட 4ம் இலக்க நாடாளுமன்ற வேட்பாளர் பேரின்பவரதன் லக்மன் இன்று (25) தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் அவரது இல்லத்தில், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இந்தக் கட்சி மாற்றம் இடம்பெற்றது.

https://newuthayan.com/n/

 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சமபந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும்,

‘தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும்.

தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டிய சந்தர்ப்பத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, இம்முறை எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார்.’ – என்றார்.

https://newuthayan.com/இம்முறை-கூட்டமைப்புக்கு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.