Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே

 

 

 

Edited by அன்புத்தம்பி

  • Replies 2.9k
  • Views 225.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

கந்தா போற்றி
அரோஹரா முருகா போற்றி

முருகன் 108 போற்றிகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

திடமுடனே மதுரை நகர் சென்றேறி கொளுத்தியே  #  ஆரையம்பதி உறை  கண்ணகைத்தாயே ***மட்டக்களப்பு பாரம்பரிய இசையில் கண்ணகி அம்மன் காவியம்  

 

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு++    👍🔔

அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.

வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.

அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.

உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு

சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.

சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.

கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.

விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.

நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.

உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.

கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.

ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.

முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.

யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.

வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் வாராதிங்கு இடர்”

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாளர் குலதெய்வம் ஆனவள்
தாராணியால் மாகாளி ஆதிசக்தி
என்னாளும் உலகாளும் தேவி
ஏந்திழையின் புகழ்பாடி மகிழ்வோமே
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கிலே  மகமாயி திருக்காட்ச்சி
வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி
தெற்கிலே  மகமாயி திருக்காட்ச்சி
வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை பவுர்ணமியை பாத்திருப்போம்
அடுத்து வரும் அமாவாசையை காத்திருப்போம்
தொடர்ந்து வரும் வெள்ளிதானே அம்மா
உந்தன் வெள்ளிமடை பொங்கலல்லவோ தாயே

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பேராசை எனும் பிணியிற் பிணிபட்
   டோரா வினையேன் உழலத் தகுமோ
      வீரா முதுசூர் படவேல் எறியுஞ்
         சூரா சுர லோக துரந்தரனே!

 

  • கருத்துக்கள உறவுகள்

துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே
துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே

 

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளை நாயகியே பத்திரகாளியே தும்பளை நாயகியே பத்திரகாளியே உன் அருள் வெள்ளம் பொங்கட்டுமே தும்பளை நாயகியே பத்திரகாளியே

 

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லண்டை எனும் நேர்மையுள்ளூர் தம்பதியின்
நெல்லிமர நிழலில் நின் கணவருடன் நின்று
அல்லும் பகலும் உன் அடிபரவும்

 

  • கருத்துக்கள உறவுகள்

அகர  முதல எழுத்தெல்லாம் ஏடெடுத்து ஊட்டி
இகபர சுகங்கள் அருளும் நெல்லண்டை தாயே 🙏🏾

 

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டுங்கடா மேளதாளம் கணபதியாட
அந்த கொட்டாவடியான் வந்து நின்று தக திமி ஆட
அந்த கொட்டாவடியான் வந்து நின்று தகதிமியாட
கொட்டுங்கடா மேளதாளம் கணபதியாட
அந்த கொட்டாவடியான் வந்து நின்று தக திமி ஆட

 

  • கருத்துக்கள உறவுகள்

நயினையிலே வாழும் நாகபூசணியே
நாளும் சர்ப்பம் ஏறிவரும் சர்வவாக்கினியே

உன்னை பாடி துதிப்பதற்கு அருள்வாயே தாயே

உனைபாட  நாளெல்லாம் நான் பிறவாத நாளே 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாகலிங்கேஸ்வரர் காவடி பாடல் ,👍 👍

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சபரியிலே ஒரு மணி ஓசை
உன் சரணம் சொல்லி இழுக்குத்தப்பா
சந்நிதி வாசல் திறக்குமுன்னே
 உன் சந்தன வாசம் மணக்குதப்பா
சபரியிலே ஒரு மணி ஓசை
உன் சரணம் சொல்லி இழுக்குத்தப்பா
வருவாய் சபரி மலைவசா வருவாய் வருவாய் ஐயப்பா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாகலிங்கேஸ்வரர் காவடி பாடல் ,பகுதி ; 2

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தாயே கண்ணகி அம்மா
வந்து வரம் தாருமம்மா

தாயே கண்ணகி அம்மா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🙏🏾 தாயே எம் தாயே ஆரயம்பதியில் அமர்ந்திருக்கும் கண்ணகித்தாயே
என் மக்களை வதைத்த தொழுநோயை போக்க வந்த தாயே
நீதியை காக்க பாண்டிய நாடு வந்த தாயே 🙏🏾 🙏🏾 🙏🏾

 

  • கருத்துக்கள உறவுகள்

காயத்திரி மந்திரம் சொல்லிடுவோம்
கரையாத தீவினையும் கரைந்தோட வைப்போம்
மாயம் என்றே வாழ்வை எண்ணி
மாயம் என்றே வாழ்வை எண்ணி
நல்ல மனிதரை என்றென்றும் மகிழ்வோடு வாழ்வோம் காயத்திரி மந்திரம் சொல்லிடுவோம்

 

  • கருத்துக்கள உறவுகள்

சூரன் போர்  சூரன்  போர்

சுதுமலை திருவீதியில் சூரன் போர்
சூரன் போர் ஆட்டுகாடா வாகனத்தில்

ஆறுமுகன் வருகிறான்
ஆணவத்தை அளித்த கதையை 

அனைவருக்கும் பகிர்கிறான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தும்பிக்கையான் பாதம் நம்பிக்கை கொண்டு
செஞ்சடையான் புகழ் பாடவந்தோம்
வந்தவினைகள் கழைந்தோட எங்கள் சித்தன் புகழை
தும்பிக்கையான் பாதம் நம்பிக்கை கொண்டு
செஞ்சடையான் புகழ் பாடவந்தோம்
வந்தவினைகள் கழைந்தோட எங்கள் சித்தன் புகழை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🙏🏾 🙏🏾 🙏🏾
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மகாராஜாதி ராஜா,
 ராஜாகம்பீர ராஜமார்த்தாண்ட ராஜகுலோத்துங்க,
 ராஜகுலதிலக  ஈரேழு பதின்நான்கு லோகத்தின் அதிபதி,
 நாடாளும் நாயகன்,
 அழகன்,புளகன் ,ஆனந்த வித்தன் நல்லூர்ப்பதி காவலன்,
 நல்லூர் அடியார் காதலன்,
 அரண் அண்டசராசர பிரபன்சோர்ப்பபத்தினிமித்த காரணன்  வேதத்தின் நாயகன்,
 வேள்வியின் தாயவன்,
 முறையாகவப்பொருளவன் முத்தமிழ் ஆனவன்
நல்லூர்க்கந்தசாமியார் பரியேறி வாறார்

🙏🏾 🙏🏾 🙏🏾

பெரும்பாலும் ஆவணி மாதத்துடன் நல்லூர் திருவிழா முடிவடைகின்றது. யாழ்ப்பாண இராசதானியே இந்த ஒரு மாதமாக விழாக்கோலம் பூண்டிருந்ததது. முகப்பு புத்தங்களில் கூட நல்லூர்பற்றிய புகழே பரவியிருந்தது [அதன் முகாமைத்துவம், நேரம் தவறாமை போன்ற விடயங்கள் உள்ளடங்கி இருந்தன] . ஆனால் பலரும் கவனிக்கத்தவறிய விடயம் நல்லைக்கந்தனின் அலங்காரம். நல்லூர்க்கந்தனுக்கு மறுபெயர் அலங்கார கந்தன். அவருடைய ஓவ்வொரு திருவிழாவிலும் முருகப்பெருமானே அலங்காரகளுடன் நேரில்வந்தது தரிசனம் தருவது போன்ற அலங்கரிப்பு. அதிலும் தேர்த்திருவிழா அன்று ஆறுமுகம் சுவாமிகளை தரிசிப்பதற்கு 1000 கோடி கண்கள் வேண்டும். முருகு என்றால் இளமை அல்லது அழகு என்பதற்கு நல்லூர் தேர்த்திருவிழா அன்றே அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது.

அன்றைய தினம் கைதூக்கி கும்பிடாதவன் கூட தனை மறந்து கைதூக்கி கும்பிடுவான். மெய் சிலிர்க்க வைக்கும் தங்கநகைகளுடனும் பூக்களுடனும் கூடிய இந்த அலங்காரத்தை இலங்கையில் எந்தவொரு ஆலயத்திலோ அல்லது தேவாலயத்திலோ காணமுடியாத ஒன்றாகும். இந்த உலகப்புகழ் வாய்ந்த அலங்காரமானது நல்லூர் ஆலயத்தின் பிரதமகுருவான வணக்கத்துக்குரிய சிவாச்சாரியார் வைகுந்தன் ஐயா அவர்களின் தலைமையிலேயே இடம்பெறுகின்றது என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும். இறைவனுக்கு உருவம் கொடுக்கும் இவர் பெயர் முகப்பு புத்தகங்களிள் இடம்பெறுவதில்லை . அத்துடன் திருவிழாக்காலங்களில் முருகப்பெருமான் வீதி உலா வரும்போது இவர் முன்னாள் வாள் பிடித்து நடந்துவரும் காட்சியானது எம்பெருமான் பின்னால் வர தலைமை சேனாதிபதி முன்னாள் செல்வது போன்ற உணர்வை தருகிறது. இது நல்லூர் இராசதானிக்கே வீரத்தை தருகின்ற விடயமாகும். இவர் எமது பிரதேசமான திருநெல்வேலி சிவன் ஆலயத்தை சேர்ந்தவர் என்பது எம் அனைவருக்கும் பெருமை தரும் விடயமாகும்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.