Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

🎧 குரும்பசிட்டியில் ஐயனுக்கு ஆலயம்!
சாமி சரணம், ஓம் சரணம்!
குரும்பசிட்டியில் கொடி மரங்கள் ஆடுதே!
ஐயனின் மகிமை பாடுதே,

 

  • Replies 2.9k
  • Views 225k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

🎶 சிலைவடித்து உயிர்கொடுத்த சிர்ப்பி வாழணும்
மலையழகாம் மாத்தளையில் தேரு ஓடணும்
சிலைவடித்து உயிர்கொடுத்த சிர்ப்பி வாழணும்
மலையழகாம் மாத்தளையில் தேரு ஓடணும்  🎶

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா
பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 ஐயப்பா,ஐயப்பா,ஐயப்பா,ஐயப்பா,
தந்தானானே தானேனானேனா…….ஓஓ
தந்தானானே தானேனானேனா…..

சந்தனம் மணக்கும் ஐயப்ப சுவாமி,
குரும்பசிட்டியில் வீற்றிருக்கும் சபரிசா!
தண்ணீரில் விளையாடும் தபோவனமதில்,
தவசிகள் துதிக்கின்ற தெய்வமடியே!

 

  • கருத்துக்கள உறவுகள்

🎶  வைரவனை பார்க்க விரதம் இருந்தோம்
பாடி வணங்கவும் நாம் வந்து கோபுரம் செல்வோம்
ஆதியான  சூலத்தை  நாம் வணங்கி செல்வோம்

 

 

👉

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 ஐயப்பா,சபரிசா! ஐயப்பா,சபரிசா!
சந்தனம் மணக்கும் ஐயப்ப
அணையாத தீபமாய் அருளும் சபரிசா!

பந்தளம் மன்னனின் புகழும் நீயே,
பார்வதி பரமனின் பொன்னவன் நீயே!
தங்க கோலமே தரிசனம் நல்கி,
தவமுடன் வாழ்த்திடும் தெய்வமே ஐயா!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 சபரிசா, சபரிசா, சபரிசா!
சரணம் நல்கும் சத்தியசாமி சபரிசா!
குரும்பசிட்டியில் வீற்றிருக்கும் சபரிசா,
குருவினை காட்டும் கருணை சாமி சபரிசா!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
 சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
கன்னிமூல‌ கணபதி பகவானே... சரணம் ஐய்யப்போ
ஹரிஹர‌ சுதனே... சரணம் ஐய்யப்போ
அச்சன்கோவில் ஆண்டவனே... சரணம் ஐய்யப்போ
அனாத‌ இரட்சகரே.. சரணம் ஐய்யப்போ

சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்
வில்லாளி வீரனே வீரமணிகண்டனே.. .
சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்

எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ

சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா

முத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ

முத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ

எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ

சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா

கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ
கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ

நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ
நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ

பந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ
பந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ

எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ.. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ


👍🔔

 

  • கருத்துக்கள உறவுகள்

 ஆற்றங்கரை பக்கம் வந்தேனே தாயே
 அழைக்கின்றாயே
வீரமாகாளி மயிலம்பாவெளி
ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய பக்தி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 ஸ்ரீ சித்தி விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன்
இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;
அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வேல் முருகா வடிவேல் அழகா சந்நிதி
வாழ் செவ்வேள் அழகா
எழுந்தோடிவாராய் கந்தா
வெள்ளி மயிலேறி விளையாடி வாராயய்யா
எழுந்தோடிவாராய் கந்தா
வெள்ளி வேலாகி விரைந்தோடி வாராயய்யா
சந்நிதி தனில் வாழும் சண்முகனே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 சபரிமலையில் சாந்தம் தேடி,
சமரச பூமியில் நின்று கொண்டாய்,
குருவாயூரில் தாண்டவமாடி,
குரும்பசிட்டியில் அருள்புரிவாய்!
(சரணம் சரணம் அய்யப்பா )


மாலைதாரி உந்தன் பாதம் சேர,
மனக்குறை தீரும் மகிமை உந்தன்,
கட்டுமலையில் கருணை வழங்கி,
கணபதி பணி புனிதமாய் நீர்!
குரும்பசிட்டியில் அருள்புரிவாயே !
(சரணம் சரணம் அய்யப்பா )

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🙏❤️🙏 மந்திகையில் வீற்றிருக்கும்
மருத்துவக்காரி உன் திருக்கரத்தால்
மருந்தளிக்க வாடியம்மா நீ தங்கமணித்தாயே நீ

 

  • கருத்துக்கள உறவுகள்

விரித்த பல்கதிர்கொள் சூலம்,,ஆ ,,,ஆ ,,,
வெடிபடு தமருகம்கை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🎧 ஓம் ஓம் ஐயப்பா
,ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)
அரனார் பாலா ஐயப்பா,
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்)
ஆபத் பாந்தவா ஐயப்பா,
ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்)
குரும்பசிட்டியின் மைந்தனே சபரி கிரீசா ஐயப்பா,

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன்
இவன் வஞ்சனை செய்வோரை
வதைத்திடும் வீரன்!
பஞ்ச பூதங்களும் பணிந்திடும் சீலன்!
நெஞ்சில் ராமனை நிறுத்திய தூதன்!
தஞ்சம் அடைந்தோரை
தரணியில் காத்திட ,

 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனம் தொட்டு மறையாத மாவிடடபுரமெ மந்திர தமிழ் விரும்பும் சுந்தரன் கண்டா தலமே

மனம் தொட்டு மறையாத மாவிடடபுரமெ மந்திர தமிழ் விரும்பும் சுந்தரன் கண்டா தலமே

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

🎧 நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும்.

இதில் 'ந' - என்பது திரோதான சக்தியையும்,

'ம' - என்பது ஆணவமலத்தையும்,

'சி' - என்பது சிவத்தையும்,

'வா' - என்பது திருவருள் சக்தியையும்,

'ய' - என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.

இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரம் நமசிவாய.

👍🔔

🌹மகிமை மிக்க மஹா சிவராத்திரி மகா சிவராத்திரியைப் பற்றிய புராணக் கதை கள் பல உள்ளன. அதில் முக்கியமாகக் கூறப் படும் கதை ஒன்று உள்ளது. அதாவது பிரளயகாலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசி களும் அழிந்து விட்டன. உயிர்கள் எல்லாம் சிவனிட த்தே ஒடுங்கின. உலகங்களே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் எல்லையில்லா கருணையுடை ய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடை விடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவ ர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்திய டையவேண்டும் என்று பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையை செய்து, முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று, அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம். அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலு ம் நான்கு காலங்களிலும் நடக்கு ம் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலை யில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற் றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் தொடக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்றுகூறி பூஜிக்க வேண் டும். சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத் திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளை ச் சொல்லியும், சிவன் கோயிலு க்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக் கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜை யில் கலந்து கொள்ளலாம். அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களி லும் தூங்காமல் பூஜை செய்து, மறு நாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையை யும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரி க்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல் லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவ ங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கி ப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலா ம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெ ல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்ப ட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வ து, பல முறை கங்கா ஸ்தானம் செய்வது ஆகிய அனைத்தை யும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதற் கு ஈடாகாது. 👍🔔

  • கருத்துக்கள உறவுகள்

உலகை ஆளும் ஏகாலிங்கனே

சிவராத்திரி நமக்கு வந்தது!

சிரத்தில் சிவபதம் வந்ததுமில்லை!

சத்தியம் சொல்வோம், சஞ்சலமின்றி,

சந்தோஷமாக சிவனை வாழ்த்துவோம்!

(உலகை ஆளும் ஏகாலிங்கனே )

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

துணையே, யெனதுயி ருள்ளே யிருந்து சுடர் விடுக்கும்

மணியே, யெனதுயிர் மன்னவனே, யென்றன் வாழ்வினுக்கோர்

அணியே, யெனுள்ளத்தி லாரமுதே, யெனதற்புதமே,

இணையே துனக்குரைப்பேன்,

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன் ( இராவணா )

தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன் ( இராவணா )

சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா ( இராவணா )

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

🎧 முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்

முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


👍🔔

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மாலை நேரம் மனம் தேடும், மயிலோடு வரும் நீயே, வானில் மேகம் மலர்கின்றதே, வாராய் முருகா, என் ஜீவனே!

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி வேளையிலே கந்தன் வந்தான் புவிக்கு!

வெற்றிவேல் கையிலேந்தி வேலன் வந்தான் எமக்கு!

சூரனை வென்ற சுந்தரன், துயரறுக்கும் தலைவன்,

ஆறுபடை வீடமர்ந்த ஆண்டவன் அவன்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில் வாழும் வேலவன் பெருமான், கோலமயில் ஏறும் எங்கள் ஈகையன்! புல்லாங்குழல் ஓசையிலே, முழவின் நல் ஓசையிலே, செவிகளில் தேனாய் பாயும் முருகன் எனும் பெயரே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.