Jump to content

பஸ் ஸ்நேகம்


Recommended Posts

பதியப்பட்டது

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், "ஹலோ" சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். "என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ?"

"நானும் உங்களைப் பார்த்தேன். இன்னிக்குக் காலைலதானே ஜாயின் பண்ணினிங்க?"

தலையாட்டினாள். "ஆமா. ஆனா எல்லாரும் என்னை பரம விரோதி மாதிரி பார்க்கறாங்க. ஏன்னு புரியலை."

"நீங்க அமெரிக்காவுக்குப் புதுசு. அதுவும் L1 விசாவில் வந்திருக்கிங்க இல்லையா அதான்."

" அதனால? "

" பொதுவா இங்க ஒரு இந்தியனை இன்னொரு இந்தியன் விரோதி மாதிரிப் பார்ப்பான். அதிலும் L1 விசாவில் வந்திருக்கும் அவுட் ஸோர்சிங் ஆள்ன்னு தெரிஞ்சா பரம விரோதி மாதிரிப் பார்ப்பான். "

" ஏன் அப்படி? "

" ஏன்னா நீங்க இந்தியாவிலிருந்து வந்து ஒரு மூணு மாசமோ ஆறு மாசமோ இருந்துட்டுப் போறதுக்குள்ளே பத்து H1B ஹோல்டர் வயித்திலடிச்சுட்டுப் போயிடுவிங்க. எங்களுக்குக் குடுக்கிற சம்பளத்தில் பாதி - இல்ல - பாதியிலும் பாதி உங்களுக்குக் குடுத்தாப் போதுமே ! அதனால க்ளையண்ட் எங்களைத் தூக்கிட்டு உங்களை வெச்சிப்பான். "

" என்னங்க, அவுட் ஸோர்சிங்கால இந்தியாவோட பொருளாதாரம் ஓஹோன்னு போயிட்டிருக்கு. அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க ? "

" அவனவனோட வீட்டுப் பொருளாதாரம் முக்கியமா, இல்லை நாட்டுப் பொருளாதாரமாங்கறது சிக்கன்-எக் ப்ராப்ளம். அதை விடுங்க உமா. என்கிட்டே என்னவோ கேக்க வந்திங்களே? "

நான் சிநேகமாய்ப் பேசியதில் அவளிடமிருந்து தயக்கம் கழன்றிருந்தது.

" இங்க வந்ததிலிருந்து பர்கரும் சீஸும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கெல்லாம் மரத்துப் போயிடுச்சு. பக்கத்தில் எங்கே இந்தியன் ஸ்டோர் இருக்குன்னு சொல்ல முடியுமா? ரைஸ் வாங்கி தயிர் சாதம் பண்ணி சாப்பிடணும் போல இருக்கு. "

" எங்கே தங்கிருக்கிங்க? "

" ஏர்போர்ட் பக்கத்தில் ஒரு ஹோட்டல்ல தங்கிருக்கேன். கிச்சன் அட்டாச்டு. "

" நீங்க எட்டாம் நம்பர் பஸ்சில் போகணும். நீங்க போற வழியில் இந்தியன் ஸ்டோர் எதுவுமில்லை. ஒண்ணு செய்ங்க. நான் போற பஸ்சில் வந்திங்கன்னா நான் இந்தியன் ஸ்டோர் கிட்டே உங்களை இறக்கி விடறேன். வாங்க வேண்டியதை வாங்கிட்டு திரும்ப எதிர்ப்பக்கம் பஸ்சைப் பிடிச்சு இங்கே வந்து சேர்ந்துடுங்க. சரியா? "

தயிர்சாதம் அவளைத் தலையாட்ட வைத்தது. மெல்லக் கேட்டாள். " ஆமா நீங்க கார் வாங்கலையா? "

நான் சிரித்தேன். " குரங்கு அப்பம் பங்கு போட்ட கதையை ஒண்ணாம் வகுப்பில் சொல்லிக் கொடுப்பாங்களே, அது அமெரிக்காவுல வேலை பார்க்கப் போறவங்களுக்காகத்தான் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்காங்க. மூணு லேயர் தாண்டி கைக்கு வர்றது கொஞ்சமே கொஞ்சம் சம்பளம். அதிலும் பாதிக்குப் பாதி வருமான வரி. எங்கே கார் வாங்கறது. அமெரிக்காவைப் பத்தி நீங்க கற்பனை பண்ணிட்டிருக்கிற காலமெல்லாம் மலையேறிடுச்சுங்க உமா. "

அவள் சற்றே சங்கடமான பார்வையுடன், " ஸாரிங்க. " என்றாள்.

பஸ் வந்தது. பதினைந்து நிமிஷத்தில் இந்தியன் ஸ்டோர் இருந்த காம்ப்ளக்ஸ் வந்து விட, " இங்கதான் நீங்க இறங்கணும். இந்தியா பேலஸ்ன்னு போட்டிருக்கு பாருங்க. அதான் இந்தியன் ஸ்டோர்ஸ். வெங்காயம் பச்சை மிளகாயிலிருந்து, ஊறுகாய் உளுத்தம்பருப்பு வரைக்கும் எல்லாமே கிடைக்கும். "

" நீங்க இங்கே இறங்க மாட்டிங்களா? " பரிதாபமாய்க் கேட்டாள். புது ஊர், புது இடம், புது மனிதர்களைப் பார்க்கிற மிரட்சி அவள் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

" ஓக்கே, பர்ச்சேஸ் பண்ணிக் குடுத்துட்டு உங்களை மறுபடி பஸ் ஏத்தி விட்டுட்டே போறேன். "

" தாங்க்ஸ் எ லாட். உங்களுக்கு ரொம்ப சிரமம் குடுக்கறேன். "

" நோ ப்ராப்ளம். "

புளியோதரை பேஸ்ட், ரசப் பவுடர், தக்காளி ஊறுகாய் என்று உறைப்பான சமாசாரங்களாய் வாங்கிக் குவித்தாள். பிதுங்கும் பிளாஸ்டிக் கேரி பேகுகளோடு இந்தியன் ஸ்டோரிலிருந்து மீண்டும் பஸ் ஸ்டாப்புக்கு வந்தோம். காலையிலிருந்து விரோதப் பார்வைகளையே பார்த்திருந்த உமா என்னுடைய சிநேகப் பேச்சிலும், உதவியிலும் ரொம்பவும் நெக்குருகிப் போயிருந்தாள். " நீங்க தப்பா நினைச்சிக்கலைன்னா உங்க செல்போன் நம்பரை நான் குறிச்சு வெச்சுக்கலாமா? இதே மாதிரி மறுபடி ஏதாவது உதவி தேவைப்பட்டா கூப்பிடலாமா? "

நான் அவளை உற்றுப் பார்த்ததும் - சட்டென பதைபதைத்தாள். " ஸாரி, உங்களுக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். "

மெல்லப் புன்னகைத்தேன். " உங்களுக்கு போன் நம்பர் தரதைப் பத்தி ஒண்ணுமில்லை. ஆனா அதனால பிரயோஜனமில்லை. ஆபிஸ்ல எனக்கு ரீப்ளேஸ்மென்ட்டாதான் நீங்க வந்திருக்கிங்க. இன்னிக்கு சாயந்திரம் என்னோட க்யூபுக்கு வந்து சொல்லிட்டாங்க. இதுதான் உங்க கடைசி தினம், இன்னும் அரை மணி நேரத்தில் உங்க உடமைகளையெல்லாம் எடுத்துக்கிட்டு, ஐடி பேட்சை செக்யூரிட்டிகிட்டே ஒப்படைச்சிட்டுக் கிளம்புன்னு சொல்லிட்டாங்க. இனி நான் அடுத்த வேலை தேடணும். எந்த ஊர்ல கிடைக்குதோ அங்கே ஓடணும். அது வரைக்கும் பசிக்காது. தூக்கம் வராது. உங்க பஸ் வந்துருச்சு உமா. "

  • 1 month later...
Posted

பிரியன் இது நீங்கள் எழுதிய உங்கள் சொந்தகதையா?

அவுட்சோர்சிங்க பற்றி எல்லாம் எழுதி இருக்கிறீங்கள்.. :unsure: நீங்கள் வியாபாரம் + கணணி துறையிலா வேலை செய்கின்றீர்கள்?

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை பற்றி கதை கதையாய் எழுதலாம். படம் படமாய் எடுக்கலாம்....

இந்த நகைச்சுவைப் பாடலிலும் சிலவற்றை பார்க்கலாம்... :P (இதில் உள்ள இரண்டாவது ரப் பாடல்)

Posted

ப்ரியன் அருமையான கதை

நேர்த்தியான உங்கள் வசன நடை ரொம்ப நல்லாருக்கு ... கதையை கடைசியில் நீங்க முடித்தவிதம் சூப்பர்..

ஹி..ஹி... நீங்க ரொம்பவும் நல்லவர் உங்க இடத்தில் நானிருந்தால் கடை காட்டுறேன்னு கூட்டிட்டு போய் கடலுக்கை தள்ளி இருப்பேன் ... நம்ம வேலையை புடுங்கீட்டு தயிர் சாதமா கேக்குதென்று....ஹி...ஹி..

தொடர்ந்தும் தாருங்கள் B)

Posted

கதை நண்று....!! இரசிக்க முடிந்தது...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.