Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலந்தை ஆக்கிரமித்த ஜேர்மனி – மின்னல் யுத்தம் – Blitzkrieg - உலகப்போர் 2 - பகுதி 5

Featured Replies

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegசெப்ரெம்பர் 1, 1939 அதிகாலை நான்கு நாற்பதுக்கு ஜேர்மனி தனது தாக்குதலை ஆரம்பித்தது. திடீரென்று போர்  தொடுக்க  முடியாதே! அதற்காக ஒரு காரணத்தையும் ஜோடனை செய்து வைத்திருந்தார்கள். சமீப காலமாக, போலந்து சரியில்லை. எப்போதும் போர் குரோதத்துடன்  இருக்கிறது. எல்லைப்புறத்தில் இருந்த அப்பாவி ஜேர்மனிய வீரர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலையில் நாங்கள் அவர்களை எதிர்தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம். கவனிக்கவும் இது எதிர்த்தாக்குதல் மட்டுமே இது

எதிர் தாக்குதல் மட்டுமே என்று காட்டுவதற்காக நாசிகளின் பிரச்சாரப்பிரிவு சிறப்பான முன்னேற்பாடுகளை ஓகஸ்ட் 31 திகதி இரவே செய்திருந்தது. ஓகஸ்ட்  31 மதியமே போலந்து மீதான தாக்குதலுக்கு ஹிட்லரால் கட்டளையிடப்பட்டுவிட்டது. அதற்கான காரணமாக  ஜேர்மனியின் வதைமுகாம்களில் (Concentration Camps) இருந்த கைதிகளுக்கு போலந்து ராணுவ சீருடை அணிவித்து ஒரு போலித்தாக்குதலை ஏற்பாடு செய்திருந்தனர். படையெடுப்புக்கு மேலதிக ஆதாரமாக காட்டுவதற்காக போலந்து சீருடையில் இறந்த சில செறிவு முகாம் கைதிகளையும் அவர்கள் விட்டுச்சென்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் ஜேர்மன் துருப்புக்கள் 2800 கி மீ நீளமான போலந்து எல்லையை கடந்து போலந்து மீது  தாக்குதலை நடத்த அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிட்லரை பொறுத்தவரை அவர் நம்பியபடி  உலகில் இனரீதியாக உயர்ந்த குடிமக்களாக வாழும் (racially superior Germans - rassisch Überlegenen Deutschen) ஜேர்மன் குடிமக்கள் வாழ்வதற்கு விசாலமான அகன்ற பாதுகாப்பான பிரதேசத்தை பெற்றுக்கொள்வார்கள்.

 

முதலாவது விமான தாக்குதல்

திட்டமிட்டபடி அதிகாலை நான்கு நாற்பது மணிக்கு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. பீல்ட் மார்ஷல் Walther von Brauchitsch கட்டளைத்தளபதியாக கடமையாற்றினார்.   Wielun என்னும் நகரத்தை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். பாதி உறக்கத்திலும் பாதி விழிப்பிலும் இருந்த போலந்து மக்கள் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார்கள். ஆபத்து என்பதை உணர்வதற்கு முன் சிதறி வெடிக்க ஆரம்பித்தார்கள். போர் பற்றிய எந்த முன்னறிவிப்பும் தரப்படவில்லை. கட்டடங்கள் பொடிபொடியாக உதிர ஆரம்பித்தன. வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து தப்ப முயன்றார்கள். சில நிமிடங்களில் அருகில் இருந்த கட்டங்கள் அவர்கள் மீது சாய்ந்தன. வீடுகள் தீப்பிடித்து எரிய, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உள்ளேயே கருகிக் கரியாக உதிர்ந்தனர்.

சில மணி நேரங்களில் ஜேர்மன் வீரர்கள் விமானத்தில் இருந்தபடி ஒரு சுற்று சுற்றி வந்து நோட்டமிட்டனர். கரும்புகை ஒரு சுற்று சுற்றி வந்து நோட்டமிட்டனர். கரும்புகை மேலே கிழம்பி அவர்களை நோக்கி நகர ஆரம்பித்தது. புன்னகை செய்துகொண்டார்கள். இது முதல் வெற்றி. ஹிட்லருக்கு சொல்லவேண்டும். நகரத்தின் எழுபத்தைந்து சதவிகிதம் சேதம். இறப்பு எண்ணிக்கை தோராயமாக ஆயிரத்து இருநூறு. பெரும்பாலானவர்கள் சிவிலியன்கள். இரண்டாம் உலகப்போரின் தொடக்கச் சம்பவம் இது என்று இதனைச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

large.1996415199_JU87Stukadive-Bomber.jpg.bab9a52820317c6c7b3edf2026de2dea.jpg

டான்ஷிக் மீதான தாக்குதல்

வீலூன் நகர் தாக்கபட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் டான்சிக் தாக்கப்பட்டது. இது ஒரு துறைமுக நகரம் இங்கு ஜேர்மனியர்களே பெரும்பான்மையினர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியில் ஒரு பகுதியாக இருந்தது டான்ஸிக். வெர்ஸைல்ஸ் ஒப்பந்தம் ஜேர்மனியிடம் இருந்து டான்ஸிக்கை பிரித்திருந்தது. டான்ஸிக்கை விடுவித்தே தீருவேன் என்று 1938 ல் இருந்தே பிரசாரம் செய்ய ஆரம்பித்திருந்தார் ஹிட்லர்.

டான்ஸிக்கில் உள்ள வெஸ்ரர்பிலாற் (Westerplatte) என்னும் பகுதியை தாக்க ஆரம்பித்தது ஜேர்மனி. கடல் வழித் தாக்குதல். காலை எட்டு மணிக்கு மோக்ரா என்னும் பகுதியில் ஒரு நகரம் தாக்கப்ட்டது... படைபலம் என்று பார்த்தால், 37 டிவிஷன் , 12 பிரிகேட், 900 போர்விமானங்கள். ஜேர்மனியின் பிரமாண்டமான அணிவகுப்புக்கு முன்னால் இது குட்டி சுண்டைக்காய்.

படைபலத்தோடுகூட தெளிவான போர்த்தந்திரத்தையும் உபயோகித்தது ஜேர்மனி. மேற்கு, தெற்கு என்று சகல திசைகளிலும் சுற்றிவளைக்க ஆரம்பித்தார்கள். தெளிவாக்த திட்டமிட்டு தொடுக்கபட்ட தாக்குதல், மின்னல் வேகத்தில் புகுந்து, வேண்டியதை அழித்துவிட்டு, கைப்பற்றிக் கொண்டார்கள்.

வான் வழி, கடல் வழி, தரை வழி மூன்றும் அடுத்தடுத்து நடந்தன. ஒன்று முடிந்தால், மற்றொன்று. அது தீர்ந்தால் இன்னொன்று. சுதாகரிப்பதற்கு அவகாசம் சுத்தமாக இல்லை. விமானநிலையங்கள், ராணுவத்தளங்கள், தகவல் தொடர்பு மையங்கள், ரயில் பாதைகள், வணிக கட்டடங்கள், அரசாங்க அலுவலகங்கள், வீடுகள், கடைகள் எதையும் விட்டுவைக்கவில்லை. இறுதி இலக்கு, தலைநகரம் வார்சோ.

ஜேர்மனியை எதிர்கொண்டு தாக்கி முடியறித்துவிட முடியும் என்னும் நம்பிக்கை போலந்துக்கு நிச்சயமாக இல்லை. அசுரவேகத்தில் வரும் ஜேர்மனிப்படைகளை எதிர்நோக்க தோதான ராணுவத்தலைமை அங்கே இல்லை. முனைப்பும் ஊக்குவிப்பும் இல்லை என்னும் நிலையில் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? நிஜத்தில், தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள் முழி பிதுங்கிவிட்டது அவர்களுக்கு.

செப்ரெம்பர் மாதம் 3 ம் திகதி ஜேர்மனிக்கு எதிரான போர் அறிவிப்பை வெளியிட்டன பிரிட்டனும் பிரான்ஸும். போலந்துக்கு இதில் பெரிய ஏமாற்றம். ஜேர்மனி தாக்க ஆரம்பித்தவுடன் வந்திருக்க வேண்டாமா? நேசம் என்றால் இதுவா பொருள்? அடிபட்டு கீழே விழுந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறோம் இப்போது வந்து சாகவாசமாக கேட்கிறார்கள், என்ன ஆச்சு நண்பா என்று. என்னவென்று சொல்ல.

சரி வந்தது தான் வந்தார்கள். உறுதியான முறையில் எதிர்க்கவாவது செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஜேர்மன், பிரான்ஸ் எல்லையில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஒப்பந்தத்தை மீறி எப்படி போலந்தைத் தாக்கலாம் என்று பிரான்ஸ் திமிறிக்கொண்டு வரவில்லை. என் அணியில் கைவைத்த உன் கையை உடைக்காமல் விடமாட்டேன் என்று சூளுரைக்கவில்லை. ஒப்புக்கு சிலரை அனுப்பினார்கள். மோதல் அல்ல. கிட்டத்தட்ட தெருச்சண்டை போல் எதோவொன்று நடந்தது. அதுவும் பெயரளவுக்கு தான். நாளை யாராவது கேள்வி கேட்டால் கிடையாதே நானும் ஜேர்மனியை எதிர்த்து சண்டை போட்டேனே என்று சொல்லிக் காட்டுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு அது. ஒரு வேளை பிரான்ஸ் முனைப்புடன் ஜேர்மனி மீது போர் தொடுத்திருந்தால் ஜேர்மனி நிச்சயம் தள்ளாடியிருக்கும். காரணம் எண்பத்துஐந்து சதவீத படைகளை ஜேர்மனி போலந்துக்குத் திருப்பிவிட்டிருந்தது. ஜேர்மனியை பாதுகாக்க பதினைந்து சதவீத படையே எஞ்சியிருந்தது.

போலந்தில், ஜேர்மன் படைகளின் முன்னேறின.  "மின்னல் போர்" என்று அழைக்கப்படும் ஒரு ராணுவ மூலோபாயத்தைப் பயன்படுத்தி, கவசப் பிரிவுகள் எதிரிகளின் கோடுகள் மற்றும் எதிரிகளின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வழியாக அடித்து நொறுக்கப்பட்டன, அவை மோட்டார் பொருத்தப்பட்ட ஜேர்மன் காலாட்படையால் சூழப்பட்டு கைப்பற்றப்பட்டன, அதே நேரத்தில் டாங்கிகள் மீண்டும் மீண்டும் முன்னேற விரைந்தன. இதற்கிடையில், அதி நவீன ஜேர்மன் விமானப்படை – Luftwaffe  - போலந்து விமானத் திறனை அழித்தது,  விமான ஆதரவை வழங்கியது, மேலும் எதிரிகளை மேலும் அச்சுறுத்தும் முயற்சியில் போலந்து நகரங்களில் கண்மூடித்தனமாக குண்டுவீச்சு நடத்தியது.

 ஒரு வலுவான தற்காப்பு நிலைப்பாட்டை எடுப்பதற்கு பதிலாக, ஜேர்மனியர்களை எதிர்கொள்ள துருப்புக்கள் முன்னால் விரைந்து செல்லப்பட்டன, அவை முறையாக கைப்பற்றப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. செப்டம்பர் 8 க்குள், ஜேர்மன் படைகள் வார்சோவின் புறநகர்ப் பகுதியை அடைந்தன, படையெடுப்பின் முதல் வாரத்தில் 225 கிலோமீற்றர் முன்னேறியது

இதற்கிடையில் செப்ரெம்பர் 6 ம் திகதியே போலந்தின் பிரதமர் Ignacy Moscicki, உயர் ராணுவ மார்ஷல் மற்றும் அவரது அமைச்சர்கள் வார்சோவில் இருந்து அவசரமாக வெளியேறிவிட்டனர். போலந்து பின்வாங்க ஆரம்பித்திருந்தது. வார்சோவுக்கு மேற்கே இருந்த Bzura கடல் பகுதியில் நடைபெற்ற மோதல் செப்ரெம்பர் 9 முதல் 19 வரை நீடித்தது. இருந்த கொஞ்சநஞ்ச எதிர்ப்பும் நசுக்கப்ட்டது. முதலில் பாலங்களை குண்டுகள் வீசி தாக்கினார்கள். எதிர்தாக்குதல் தொடுப்பதற்காக ராணுவத்தினர் ஒரிடத்தில் கூடியபோது அடுத்தடுத்து அலையலையாக, வான்வெளித்தாக்குதல்கள் தொடுக்கபட்டன. ஐம்பது கிலோ எடையுள்ள லைட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலான சேதத்தை ஏற்படுத்தின இந்த குண்டுகள்.

large.670925293_DeutscherEinmarschinPolen.jpg.15653ccc691a1fc4c62de38a9db78202.jpg

சோவியத்தின் எதிர்வினை

இந்த பின்னணியில் செப்ரெம்பர் 17, 1939 அன்று சோவியத் அயலுறவுத்துறை அமைச்சர் லோலோடோவ் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி இது.

ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடையில் நடைபெறும் இந்த யுத்தம் ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறது. போலந்து  அரசு செயலிழந்துவிட்டது. ஆளும் வர்க்கத்தினர் திவாலாகிவிட்டனர். போலந்தின் தலைநகரம் என்று அழைக்கமுடியாத நிலையில் வார்சோ இருக்கிறது. அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மக்களின் எதிர்காலத்தை இனி விதி தான் தீர்மானிக்கவேண்டும் என்று விட்டுவிட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சோவியத்யூனியனுக்கும் போலந்துக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. போலந்தை காக்கும் அதி முக்கிய பணி சோவியத்திடம் வந்து சேர்ந்துள்ளது. எந்த விதமான விபத்தும் எப்போதும் நேரலாம் என்னும் நிலையில் இருக்கிறது போலந்து. இப்படி போலந்து இருப்பதால் சோவியத்துக்கும் தொந்தரவு தான். தவிரவும், போலந்தில் உள்ள உக்கிரேனியர்களையும் பைலோரஷ்யர்களையும் சோவியத்தால் கைவிட முடியாது. அவர்கள் சோவியத்துடன் ரத்த உறவு கொண்டவர்கள். அவர்களுக்கு கை கொடுப்பது சோவியத்தின் கடமை.

போலந்துக்குள் சோவியத் காலடி எடுத்து வைக்கப்போவதன் முன்ன்றிவிப்பாக இந்த உரை அமைந்திருந்தது.

அக்டோபர் முதலாம் திகதி போர் முடிவுக்கு வந்தபோது போலந்து சின்னாபின்னமாகி இருந்தது. சாகாமல் எஞ்சியிருந்த ராணுவத்தினர் (காலாட்படை மற்றும் விமானப்படை பக்கத்து தேசங்களான ரூமேனியாவுக்கும் ஹங்கேரிக்கும் பிரித்தளிக்ப்பட்டனர். வார்சோ, கேலட்ஸ், சிலேஸியா, போரானியா, லோட்ஸ் ஆகிய மாகணங்கள் உடனடியாக ஜேர்மனின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

சோவியத் ஜேர்மன் ஒப்பந்தத்தையும், சோவியத் போலந்தின் பகுதிகளை மீட்டெடுத்ததையும் அமெரிக்கா இன்றுவரை குறை சொல்லிக்கொண்டிருக்கிறது. போலந்தை பங்கிட்டுக் கொள்ளுவதற்காக ஹிட்லரும் ஸ்டாலினும் ரகசியமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும் அதன்படி இரு நாடுகளும் போலந்து மீது போரிட்டு உனக்கு அது, எனக்கு இது என்று பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா.

அக்ரோபர் 1 ம் திகதி வின்ஸ்டல் சேர்ச்சில் ரேடியோவில் உரையாடினார். கிழக்கு போலந்தில் நாசிகளை தடுத்து நிறுத்திவிட்டது சோவியத். நாம் முன்னரே சோவியத்துடன் கூட்டு சேர்ந்திருக்கவேண்டும். லண்டன் ரைம்ஸில் ஜார்ஜ் பேர்னாட் ஷா இப்படி எழுதினார்.ஸ்டாலினுக்கு மூன்று சியர்ஸ்! ஹிட்லரை முதல் முறையாக வெற்றிகரமாக முடக்கிக்காட்டினர் ஸ்டாலின்.சாம்பர்லைனும் தயங்கி தயங்கி அக்டோபர் 26 ம் திகதி ஒப்புக்கொண்டார். ஜேர்மனியிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக செம்படை போலந்தின் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டியிருந்தது.

large.Warschau.jpg.f53f44fa4a13806c391e1c1d9a9ed2ac.jpg

ரூமேனியா மீதான வழியாக தப்பிச்சென்ற போலந்து அரசாங்க குழு பின்னர் லண்டன் வந்தபோது, போலந்து பற்றி கருத்து தெரிவித்திருந்தது. அப்போதும் சோவியத்தை ஆக்கிரமிப்பு அரசாக அவர்கள் குறிப்பிடவில்லை. ஹிட்லர், ஸடாலினை விட தேவலை என்பது தான் அவர்களது முந்தைய எண்ணம் என்பதை இங்கே கவனிக்கவேண்டும். செம்படை வீரர்கள் உள்ளே நுழைந்தபோது, பைலோ ரஷ்யர்களும் உக்கிரேனியர்களும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். உக்கிரேனிய பெண்கள் சோவியத் டாங்கிகளுக்கு மாலை அணிவிப்பதை அமெரிக்க நிருபர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

லித்துவேனியாவின் முந்தைய தலைநகரமான வில்னாவை (Vilna) அதனிடமே திருப்பித்தந்தது சோவியத். போலந்து இதனை முன்னர் கைப்பற்றியிருந்தது. லித்துவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் மொஸ்கோவுக்கு வரவழைத்த சோவியத், ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. சோவியத் போலந்துக்குள் காலடி எடுத்து வைத்து ஒரு மாதம் ஆவதற்கு முன்னால், அக்டோபர் 10 திகதி இந்த மூன்று நாடுகளுடனும் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தப் பிரதேசங்களில் (பால்டிக் நகரங்கள்) இருந்த ஐந்து லட்சம் ஜேர்மனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஹிட்லருக்கு இதில் பெரும் அதிருப்தி. பால்டிக் ஜேர்மனியர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த பகுதிகள் இவை. நூற்றண்டுகணக்கில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள்.

தனது எல்லைகளையும் பக்கத்து நாடுகளின் எல்லைகளையும் பாதுகாப்பதற்காக சோவியத் யூனியனால் நடத்தப்பட்ட போராகவே சோவியத் அந்தப் போரை அறிவித்தது. அந்த வகையில், சோவியத்யூனியன் இப்போரில் பெற்ற வெற்றி முக்கியமானது.

சரணடைந்தது போலந்து.

 ஜேர்மனிக்கு எதிராக எதிர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அளவிற்கு போலந்து ஆயுதப்படைகள் அங்கு தரித்து வைத்திருக்க முடியும் என்று நம்பின, ஆனால் செப்டம்பர் 17 அன்று சோவியத் படைகள் கிழக்கிலிருந்து படையெடுத்ததன் பின்னர், போலந்து  எல்லா நம்பிக்கையும் இழந்தது. அடுத்த நாள், போலந்தின் அரசாங்கமும் இராணுவத் தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். செப்டம்பர் 28 அன்று, வார்சோ பாதுகாப்பு அரண் இடைவிடாத ஜெர்மன் முற்றுகைக்கு சரணடைந்தது. அந்த நாளில், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்கள் ஆக்கிரமிப்பு மண்டலங்களை கோடிட்டுக் காட்டும் ஒரு ஒப்பந்தத்தை முடித்தன. அதன் வரலாற்றில் நான்காவது முறையாக, போலந்து அதன் சக்திவாய்ந்த அண்டை நாடுகளால் பிரிக்கப்பட்டது.

போலந்து தரப்பில் 60000 க்கு மேற்பட்ட ராணுவத்தினர் இப்போரில் கொல்லபட்ட. 600000 க்கும் அதிகமானோர் யுத்த கைதிகளாக ஜேர்மன் படைகளால் பிடிக்கப்பட்டனர்.

large.977414622_Polndmap.jpg.884b99ec88a3391f2b3c8b546026e97b.jpg

 (தொடரும்)

நூல்  இரண்டாம் உலகப்போர்

எழுதியவர்  மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.