Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்தரணி கே.வி.தவராசாவின் சட்ட வாதத்தால் கடற்புலிகளின் தலைவி மீலா விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சட்டத்தரணி கே.வி.தவராசாவின் சட்ட வாதத்தால் கடற்புலிகளின் தலைவி மீலா விடுதலை!

சட்டத்தரணி கே.வி.தவராசாவின் சட்ட வாதத்தால் கடற்புலிகளின் தலைவி மீலா விடுதலை!

 

பிரான்ஸ் தூதரக தமிழ் அதிகாரியான நயனாகணேசன் விசாரணைக்கு பெரிதும் உதவினாரர்

• பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ். கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிக்கு 10 நாட்களில் பிணை வழங்கப்பட்ட ஒரே வழக்கு இந்த வழக்காகும்.

• தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கடற்புலிகளின்தலைவி. பகிரதியும் 9 வயது மகள் பார்கவியும் விடுதலை.

• பயங்கரவாத தடை சட்டத்தின். கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசுவின் ஒரே மகளான. ஒன்பது வயதான பார்கவி பிறப்பால் ஒரு பிரெஞ் நாட்டவராகையினால் தாயினதும் மகளினதும் விரைவான விடுதலை சாத்தியமானது.

• பகிரதி கைது 1998ம் ஆண்டில் பிரான்ஸ். நாட்டிற்கு சென்றிருந்த மீலா என்ற பகிரதி முருகேசு சுகவீனம் அடைந்திருந்த தனது தாயாரையும் உறவினர்களையும் பார்ப்பதற்காக இலங்கை. வந்து சில வாரங்கள் தங்கி மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக 2015ம் ஆண்டு பங்குனி மாதம் 2ம் திகதி கட்டுநாயகா விமான நிலையத்திற்கு தனது ஒன்பது வயது மகளுடன் வந்திருந்த பகிரதி முருகேசு பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்..

பகீரதி போலீசாரால் கைது செய்ய பட்ட பொழுது தாயைப் பிரிய மறுத்த பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளான பார்கவியும் பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால்அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடாத்தப்பட்ட பத்து நாட்களும் சிறுமி பார்கவி தனது தாயுடன் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.

• பகீரதிக்கு எதிரான விசாரணைகள். சந்தேக நபரான பகிரதி முருகேசுவிற்கு எதிராக விசாரணையை நடாத்திய பயங்கரவாதத் தடைப் பிரிவு பொலிசார் சந்தேக நபரான பகிரதி முருகேசுவையும் அவரது மகளான பார்கவியையும் பத்துநாட்கள் தடுப்புக் காவலின் பின்னர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு விசாரணையின். முதல். அறிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

• விசாரணை அறிக்கை.  அந்த அறிக்கையில் 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ஆயுதப் பயிற்சிகள் பெற்ற பின்னர் 1996ஆம் ஆண்டு கடற் புலிகள் பிரிவிற்கு உயரத்தப்படுவதற்கு முன்னர் நான்கு ஆண்டுகள் அவர் ஒருதொடர்பாடல் உத்தியோகத்தராகப் பணியாற்றி உள்ளார்

• பகிரதி சாம்ராஜ் திருமணம் சந்தேக நபரான. பகிரதி முருகேசு. சாம்ராஜ் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஜெயகணேஸை விடுதலைப் புலிகள் அமைப்பின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். பகிரதியை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருமணத்தின் பின்னர் பகிரதி முருகேசுவும் அவரது கணவரும் விடுதலைப் புலிகளின் மேலதிகாரிகளின் ஆசீர்வாதத்தோடு அவ்வியக்கத்தின்சர்வதேசசெயற்பாடுகளின் பிரிவு இயக்குனர்களாக செயற்படுவதற்காக 2005ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சந்தேக நபரான பகிரதி பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்வதற்கு முன்னர் கடற் புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு. தலைவியாக பணியாற்றினார் என பயங்கரவாதப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

• பகிரதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பகிரதி முருகேசுவும் அவரது மகளான பார்கவியையும். பயங்கரவாதத். தடைப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பத்து நாட்களில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

• பிணை மனு பகிரதி முருகேசு சார்பாக பிணை வழங்கும்படி நீதிமன்றிற்கு முன்வைக்கப்பட்ட எனது சமர்பனத்தில். இந்த வழக்கின். சந்தேக நபரான பகிரதி முருகேசு 2005 ஆம் ஆண்டிலிருந்து பிரான்சில். வாழ்ந்து வருகிறார்.

தனது ஒன்பது வயது மகளுடன் 2015ம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி கிளிநொச்சியில் வசிக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியான தனது தாயை பார்வையிட்டு ஆறுதல் கூறுவதற்காவே இந்த நாட்டிற்கு வருகை தந்தார் .

கிளிநொச்சியல் அவரது தாயார் வீட்டிலிருந்து. புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இரகசிய பொலிசார் அவரை விசாரித்தனர் எனினும் அவரைகைது செய்வதற்குஅப்போதுஎவ்வி தமுயற்சியும்மேற்கொள்ளப்படவில்லை

• பார்கவி ஒரு பிரெஞ்சு பிரஜை இந்த வழக்கில் சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் ஒன்பது வயதுடைய ஒரே மகளான பார்கவி பிறப்பால் ஒரு பிரெஞ் பிரஜை .பிரெஞ் மொழியில் மட்டுமே தேர்ச்சியுடையவராகையால் இவ்விசாரணை காலத்தில் அவரது கல்வியை. தொடர்தல் இருப்பிடம் தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

• சட்டமாஅதிபர் பிணை வழங்க சம்மதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு மட்டுமே உள்ளபடியால் சட்டமா அதிபர் திணைக்களம் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் சந்தேக நபரை விடுதலை செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்துகொழும்பு மேலதிக நீதவான் அருனிஆட்டிகல சந்தேக நபரான பகீரதி முருகேசுவை மூன்று நிபந்தனைகளுக்கமைய பிணை வழங்கினார்
(1) இரண்டுவாரங்களுக்கொருமுறை முப. 9 மணிக்கும் நற்பகல் 12 மணிக்குமிடையில் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

(2) கடவுச் சீட்டு நீதிமன்றிற்கு கையளிக்க வேண்டும்
(3) ரூபா 200 000 பிணை விதிக்கப்பட்டது.

தாயும் மகளும் நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் பொழுது நீதிபதி நீதிமன்ற பதிவாளர் வழக்குத் தொடர்வர்களான பொலிசார் வழக்கு விசாரணைக்கு வந்திருந்த வழக்காளிகள் சாட்சியமளிக்க நீதிமன்றம் வருகை தந்தவர்கள் பார்வையாளர்கள் அனைவரது உணர்வு பூர்வமான பார்வைகள் சிறுமி பார்கவிமீதே விழுந்தன –இந்த வழக்கில் சந்தேக நபரான பகிரதி முருகேசுவிற்கு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டதையடுத்து தொடர்ந்து மேலதிக விசாரணை மேற்கொண்ட. பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் ஒவ்வொரு தவணையிலும் மேலதிக விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தனர்

• சாம்ராஜ் – சிவசுப்பிரமணியம் ஜெய்கணேஷ் விசாரணை அறிக்கைகள்.
சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் கணவரான சாம்ராஜ் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஜெயகணேஷ் தற்போது தமிழ் ஈழவிடுதலைப் புலிகளிகளுக்குச். சொந்தமாகவிருந்த. உலகெங்குமுள்ள ஏறத்தாழ.

.(1) 200 எரிபொருள் சேவை நிலையங்களையும்
(2) தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள பல சிறப்பங்காடிகளையும்
(3) ஐவரிகோஸ்ட்டில் அமைந்துள்ள துருப்பிடிக்காதஉருக்குஉற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையையும் முகாமைத்துவம் செய்வதாகவும்

சாம்ராஜ் பிரான்சிற்குச் சென்றதன் நோக்கம் தமிழ். ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு வலையமைப்பொன்றை கட்டியெழுப்புவதாகும் என்று புலனாய்வு விசாரணையில் தெரியவந்ததாகவும் அறிக்கை சமர்ப்பித்ததுடன் மேலும் அந்த அறிக்கையில்
• சாம்ராஜ் காஸ்ட்ரோவின் நெருக்கமான உதவியாளர்

சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் கணவரான சாம்ராஜ்காஸ்ட்ரோவின் ஒருநெருக்கமான. உதவியாளராவார். நிதியை தனியாகக் கையாள்வதில் காஸ்ட்ரோ கேபியை நம்பாததால்; காஸ்ட்ரோவிற்கு அறிக்கையிடுவதற்காக சாம்ராஜ் அனுப்பிவைக்கப்பட்டதுடன் புலம் பெயர்ந்த தமிழர்களுடன் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கிளைகளை நிருவகித்த நெடியவனோடு சாம்ராஜ் செயற்பட்டதாகக் அறிக்கையில் பதியப்பட்டதுடன் மேலும் அந்த மேலதிக அறிக்கையில் கூறப்பட்டதாவது ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கிய நெடியவன் உலகெங்கும் நிதிதிரட்டியபோது சாம்ராஜ் ஆயுதங்களை கொள்வனவு செய்து அப்பணத்தைச் செலவிட்டதுடன் சாம்ராஜ் சர்வதேச ஆயுத வியாரிகளோடு தொடர்புகொண்டுசெயற்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் சாம்ராஜின் பணிகளுள் மேலும் நிதிகளைத் உருவாக்குமுகமாக வெளிநாடுகளில் பாதுகாப்பான இடங்களில் பணத்தை முதலீடு செய்வதும் செயல்படுத்தப்பட்ட தெனவும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் மேலும் அந்த அறிக்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சாம்ராஜினால் கையாளப்பட்ட நிதிகள் அவரிடமே இருந்தன அதனைப் பெறுவதற்கு கேபிஎனும்பத்மநாதன் அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

• புத்துயிரூட்டல்
2010ஆம் ஆண்டின் பின்னர் சாம்ராஜின வகிபாகம் மாறியது தமிழ் ஈழவிடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிப்பதற்காக அவர் நெடியவனோடு பணியாற்றத் தொடங்கினார். அவரது அண்மைக்கால. செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில்இளைஞர்நிகழ்வுகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் நிதியளிப்பதாக கண்டறியப்பட்டுளளது.

பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்ட 2013 ஆம் ஆண்டு அறிக்கையின்படி சாம்ராஜ் தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் அணியினதும் பணத்தை சுத்தப்படுத்தல் ஆயுதமற்றும் வர்த்தகம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றவியல் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் மூலம் தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதிசேகரிப்பதற்குப் பொறுப்பான அவ்வியக்கத்தின் குற்றவியல் சர்வதேச பிரிவினதும் ஓர் அங்கமாவார்
இக்குழுவின் செயற்பாடுகள் 2010ம் ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பித்தன. சாம்ராஜின் குழு உறுப்பினர்கள் இலங்கையில் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கிய இராணுவ. நடவடிக்கைகளின் இறுதிக் கட்டங்களில் தப்பியோடிய ஒரு சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினரான வினாயகம் அச்சுதன் மற்றும் சங்கர் ஆகியோராவார் எனக் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது பகீரதிக்கு எதிராக வழக்குத் தொடுக்க சான்றுகள் இல்லை எனவே சந்தேக நபரான பகிரதி முருகேசு விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எனது வாதத்தில்!

• பகிரதி சாம்ராஜ் விவாகரத்து
இந்த வழக்கின் சந்தேக. நபரான பகிரதி தனது முன்னாள் கணவரான சாம்ராஜியிடம் விவாக ரத்து பெற்றமைக்கான சட்டரீதியான ஆவணத்தை பொலீசாரிடம் கையளித்துள்ளார்
2015ம்ஆண்டு பங்குனி. மாதம் 2ம் திகதி கட்டுநாயகா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட. பிரான்ஸ். நாட்டை வதிவிடமாகக் கொண்ட பகிரதி. முருகேசு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டு 15 மாதங்கள் கடந்தநிலையில் சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகளை நடாத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிசார் சந்தேக. நபரான. பகிரதி முருகேசுவின் முன்னாள் கணவரான சாம்ராஜ்க்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கைகளை மட்டும் தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் கணவரான சாம்ராஜ்க்கு எதிராவே பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசார் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
சந்தேக நபரான பகிரதி முருகேசு கடற் புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு தலைவியாக பணியாற்றினார் என பயங்கரவாதப் புலனாய்வுப். திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்த போதிலும் அதனை உறுதிப்படுத்த .. எந்த விதசான்றுகளையும். பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீசார் முன்வைக்கவில்லை .

அறிக்கைகளை மட்டும் சான்றாகக் கொண்டு வழக்கத் தாக்கல் செய்ய முடியாது என எனது வாதத்தை முன்வைத்ததுடன் மேலும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தது யாதெனில்
மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் காணப்படின் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபரான பகிரதி முருகேசு விடுதலை செய்யப்படவேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதி முருகேசுவின் மகள் அவரது தாயார் கைது செய்யப்பட்டதிலிருந்து கடந்த 15 மாதங்களாக தனது பிறந்த நாட்டிற்கு செல்ல முடியாததினால் கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது . எனவே இந்த விடயங்களை. கவனத்தில் கொண்டு சந்தேக. நருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் உள்ளனவா என பயங்கரவாதத் தடைப் பொலிசார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை இந்த நீதிமன்றிற்கு அறிவிக்கவேண்டும் என எனது வாதம் முன்வைக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு தெரிவிப்பதாக பொலிசார் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்த நிலையில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் சட்டமா அதிபரை தொடர்பு கொண்டதையடுத்து சட்டமா அதிபர் இந்த வழக்கின் சந்தேக நபரான பகிரதியை விடுதலை செய்யநீதிமன்றில்அறிக்கைசமர்ப்பித்ததையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி அருணு ஆட்டிகல பகிரதி முருகேசுவை விடுதலை செய்தார்.
.
• தூதரக உதவி பகிரதி முருகேசுவின் ஒரே மகளான பார்கவி பிறப்பால் ஒருபிரெஞ் நாட்டவராகையினால் பிரெஞ் தூதரகம் அவருக்கு தூதரக உதவிகளை வழங்கியது.
அப்பிள்ளை பிரெஞ்மொழியில்மட்டுமேதேர்ச்சியுடையவராகையால் இவ்விசாரணை காலத்தில் அவரது கல்வி தொடர்பாக. பிரெஞ் தூதரகம் கரிசனை வெளியிட்டமை தாயும் மகளும்விடுதலையாவதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட சகல விசாரணை. தினங்களிலும் தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்
தமிழ் அதிகாரியான நயனாகணேசன் பகீரதியினது விடுதலையில் பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://uthayannews.ca/2020/07/09/சட்டத்தரணி-கே-வி-தவராசாவ/?fbclid=IwAR2Q5jAXtj5_XrArsZie9EVyKDAr3beS_FCB66jyx1sgNetl2eEnT8YNl88

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.