Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவனடிபாத மலை யாத்திரை - பொன் குலேந்திரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவனடிபாத மலை யாத்திரை - பொன் குலேந்திரன்.

342b5dd4953a96fee98f8a1798b21070.jpg

உலகில் இமயமலை   போன்று   பல மலைகள்  முக்கோண வடிவத்தில் அமைந்துளன வடிவத்தின் பின்னால் மர்மம் என்ன ? மலைகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன மற்றும் டெக்டோனிக் சக்திகள், ஈர்ப்பு, உராய்வு சக்தி, அரிப்பு போன்ற பல்வேறு சக்திகள் உள்ளன, அவை மலைகள் உருவாக வழிவகுக்கிறது. ஆரம்பத்தில், மலைகள் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கிய சக்திகள் உள்ளன, இவை ஈர்ப்பு விசை மற்றும் உராய்வு ஆகியவை மணல் துகள் மீது செயல்படுகின்றன. ஈர்ப்பு மணலை தரையை நோக்கி இழுக்கிறது மற்றும் உராய்வு இரண்டு துகள்களும் ஒன்றையொன்று சரியச் செய்கிறது.

இந்த இரண்டு சக்திகளும் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது, இங்கு ஈர்ப்பு விசையின் தீவிரமும் விளைவும் மகனைப் பொறுத்தது மணல் துகள் ஓய்வெடுக்கும். எடுத்துக்காட்டாக, குவியல் செங்குத்தானதாக இருந்தால், அது ஈர்ப்பு உராய்வை மறைக்கிறது, ஆனால் நேர்மாறான நிலைமைகளின் கீழ், உராய்வு அதிகம். இதனால், புவியீர்ப்பு உராய்வை விட அதிகமாக மணல் குவியத் தொடங்குகிறது மற்றும் நேர அடித்தளம் பரவி மீண்டும் சாய்வு ஆழமற்றதாக இருக்கும் வரை மணல் கீழ்நோக்கி சரியத் தொடங்குகிறது.

****

எனது தமிழ்நாடு எழுத்தாள நண்பர்  பாஸ்கரன்   யாழ்ப்பபாணத்தில் ஒரு  இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  வரப்போவதாக  எனக்கு அறிவித்தார் . அவர் என் வீட்டில் தங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்  சிவனடி பாதை  மலைக்கு தான் செல்லவேண்டும் என்று விரும்பினார்

“என்ன பாஸ்கரன் பல சுற்றுலாப் பயணிகள் போகும்  சிகிரிய குன்றத்தை விட இந்த மலையை  ஏன் தேர்ந்து எடுத்தீர்”? என்று அவரைக் கேட்டேன்.

“அந்த முக்கோணவடிவில் உள்ள மலையில் எதோ ஒரு சக்தி இருக்கிறது  என்பதால் இந்துக்கள் போகிறார்கள் . பவுத்தர்கள் கத்தோலிக்கர் , முஸ்லீம்கள்    எல்லோரும் அந்த மலையை  தங்கள் மதத்தின் புனித மலை என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதன் இரகசியத்தை  அறிய ஆசை படுகிறேன்  “என்றார் என் நண்பர் .

180816%20Sivanadi%20Patham%20name%20chan

“நீர் சொல்வது முற்றிலும் உண்மை இப்பொது இந்த மலை அரசியல் கலந்த மலை ஆகிவிட்டது  கதிர்காமத்தை போல சிவனடி  பாத மலை என்ற பெயர்  மறைத்து  ஸ்ரீ பாத மலை  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது  இந்த மலை புத்த சமயம் இலங்கைக்கு வர  முன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்பு இருந்தே  சிவன் கோவில் இருந்து வரும் மலை. இந்த மலையின் உச்சியில் இருந்து கிழக்கு திசையில் நோக்கினால்  அதி காலை  சூரிய உதயத்தை  கண்டு ரசித்து  சூரிய நமஸ்காரம்  செய்யலாம்” என்றேன்  நான் .

“இந்த மலை உயரத்தில் இலங்கையில்   உள்ள பல மலைகளில்    எத்தனையாவது  மலை?” பாஸ்கர்  என்னை கேட்டார்.

“நான் வகுப்பில் புவியியல் படித்த அறிவை வைத்து சொல்லுகிறேன் இலங்கையில் மிகவும் உயரம் கூடிய மலை  2524      மீட்டர்   உரமுள்ள முதலாவது பிதுருதலகல மலை ஐந்தாவது  2243 மீட்டர் உயரம் உள்ள   மலை சிவனடி பாத  மலை.  இந்த மலையில் இருந்து களனி  நதி ஆரம்பித்து  145 கி மீ ஓடி   கொழும்புக்கு அருகில் உள்ள களனிய  என்ற ஊரில் அரேபிய கடலில் சங்கமிக்கிறது .இது இலங்கையில்  நான்காவது நீண்ட  நதி . ஒரு  காலத்தில்  இந்த பகுதில் களனி இரராசியம் இருந்து வந்தது”

“அந்த மலைக்கு போக எத்தனை  வழிகள் உண்டு”? என்று அவர்  என்னை கேட்டார் .

“ஆறு வழிகள்  உண்டு பாஸ்கர். அதில் அநேகர் பாவிக்கும் வழிகள். நுவரெலியா மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில்   உள்ள  வழியை பாவிப்பார்கள்.

இரத்தினபுரி மாவட்டத்தின் ஊடாகவும் வழிவுண்டு. கொழும்பிலிருந்து ஹட்டன் செல்லும் வீதியில் உள்ள கினிகத் தேனையை அடுத்து வரும் கரோலினா சந்தியிலிருந்து தெற்கு நோக்கி நோட்டன் பிரிட்ஜ், லக்சபான, மவுசாக்கல ஊடாக நல்லதண்ணி எனும் மலையடிவாரம் வரை ஓர் பாதை செல்கிறது. இங்கிருந்து கால்நடையாக  படிகளில் ஏறி மலைக்கு செல்ல வேண்டும். இதுவே சிவனொளிபாத மலைக்கு செல்லக் கூடிய இலகுவான பாதையாகும். இன்னுமோர் வழியும் இம்மலைக்குச் செல்வதற்கு உள்ளது.

கொழும்பிலிருந்து இரத்தினபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள குருவிட்ட என்னுமிடத்திலிருந்து கிழக்கு நோக்கி எக்னெலிகொட, எம்புல்தெனிய, குருளுவான ஊடாக பாலபெத்தலே என்னுமிடத்தை அடைந்து அங்கிருந்து கால்நடையாக மலைக்கு செல்வதாகும்.

நாங்கள்  யாழ்ப்பாணத்தில்  இருந்து கொழும்பு  யாழ்தேவி  கடுகதி  ரயில் எடுத்து ஆறு மணித்தியால பயணத்தின் பின் கொழும்பு சென்றோம். அங்கு ஒரு  கலதாரி ஹோட்டலில்  ஒரு நாள் தங்கி ஒரு வாடகை கார் எடுத்து இருவரும்  கண்டி  – ஹட்டன் – மஸ்கெலிய  ஊர் வழியாக நல்ல தண்ணி எனும் மலையடிவாரதிற்கு போனோம். போகும் வழியில் லக்சபான்னா நீர் தேக்கம்  எழு கன்னிகள் மலை தொடரை பார்த்து செல்லும்  போது

“அதோ எழு   மலை தொடருக்கு ஒரு  கதை  உண்டு  பாஸ்கர்” என்றேன்  நான் .

“என்ன கதை  அதை சொல்லு” என்றான் பாஸ்கர்

“அதோ தெரிகிறதே ஏழு கன்னி மலைகள் பெரும்பாலும் சப்த கன்யா என அழைக்கப்படுகின்றன. இந்த அழகிய மலையின்  பின்னால் ஒரு சோகமான நினைவு இருக்கிறது. 4 டிசம்பர் 1974 இந்தொனேசியாவில் இருந்து  மெக்கா, சௌதி அரேபியாவுககு கொழும்பு ஊடாக புறப்பட்ட மார்ட்டின்-ஏர் விமானம் 138 இந்த மலைத்தொடரில்  விமானியின் தவறால் மலையுடன் மோதி 191. பேர் கொல்லப்பட்டனர். மலைத்தொடரின் மிக உயரமான இடம் 4355 அடி. 7 வது சிகரத்திற்கு அருகில் ஒரு அழகான நீர் ஓடை உள்ளது. இந்த மலைத்தொடர்  மலை ஏறுபவர்களுக்கு நல்ல இடம். இரத்தம் உறிஞ்சும் அட்டைகள்  பாம்புகள், சிறு மிருகங்கள்  உண்டு”  என்றேன் .

“அந்த விமானம் மோதிய இடத்தில் இறந்தவர்களுக்கு  நினைவு சின்னம் உண்டா .?“  என வினவினான் நண்பன்.

“விமானம் மோதிய இடத்தில்  நினைவு  சின்னம் வைத்தால் ஒருவரும் அங்கு சென்று பரர்க்க முடியாதே. அங்கு போகும்  வழி கிடையாது. இருந்தும் சில வருடங்களுக்கு பின் இறந்தவர்களின் பெயர்கள்  பதித்த கல் தூண்  மலையில் உண்டு அதோடு அந்த மலையில் ஒரே காடு. விபத்து நடந்த இடத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள நார்டன் பிரிட்ஜ் நகரில் ஒரு சிறிய நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு றயர் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

றயர், பொதுவில் காட்சிப்படுத்தப்பட்டாலும், நார்டன் பிரிட்ஜ் காவல்துறையின் சொத்தாகவே உள்ளது. இலங்கை கலைஞர் அன்டன் ஜோன்ஸ் தனது “டிசி 8” பைலா பாடலில் இந்த சம்பவம் குறித்து பாடினார். போகும் போது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி போவோம்” என்றேன்.

அதன் படி அஞ்சலி செய்து மேலும் எமது பயணத்தினை  தொடர்ந்து நல்ல தண்ணி  என்ற மலை அடிவாரத்தை  அடிந்தோம். அந்த கிராமத்தில்  நீரை சுவைத்து  பார்த்தோம். பெயருக்கு ஏற்ப  நன்றாக இருந்தது.

****

அந்த கிராமத்தில்  “சாமி” என்ற  தேனீர் கடையில் சின்னசாமி என்ற  வயது  முதியவரை சந்தித்தோம். அவரின் தந்தை பெரியசாமி திருநெல்வேலியில் இருந்து  பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்  மஸ்கெலியாவில்  தேயிலை தோட்டம் ஒன்றில்  வேலை செய்ய  கங்காணி ஒருவரால் கூட்டி வரப்பட்டவர். அவரின்  மகன் தான் சின்னசாமி. அவரின் தந்தை பெரியசாமி சிவனடி பாதை மலை பற்றி தனக்கு சொன்ன வரலாற்றினை சுருக்கமாகச் சொன்னார். என் நண்பர் பாஸ்கர் குறிப்பெடுத்துக் கொண்டார். சின்னசாமி எமக்கு சொன்னது

”அதோ தெரிகிறதே  முக்கோண  வடிவ மலையில் எங்கும் இல்லாத வகையில் சிவ வழிபாடும்,  ஒளி வழிபாடும், பாத வழிபாடும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இதன் காரணமாகவே இவ்விடம் சிவன் ஒளி பாதம் எனப் பெயர் பெற்றுள்ளது.

இம்மலையில் புராதன காலத்தில் சிவனாலயம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. இமய மலைத்தொடரில் உள்ள திருக்கைலாயமலை சிவன் பார்வதியின் வாசல் தலமாகும். லிங்க வழிபாடு நிலவிய காலத்திலிருந்து இம்மலையை இந்துக்கள் தமது புனித மலையாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், இம்மலை லிங்கத்தைப் போன்ற அமைப்பை உடையதாகும்.

சிவனுக்கு சூரிய வழிபாடு இந்து மதத்தின் தொன்மையான வழி பாடு என்பதில் ஐயமில்லை. இவ்வழிபாடு மேலோங்கி இருக்கும் இடமே சிவனொளிபாத மலையாகும். இம்மலை உச்சியில் விசாலமான, மனித உருவிற்கு அப்பாற்பட்ட ஓர் பாதச்சுவடு காணப்படுகின்றது. இப்பாதத்தை இந்துக்கள் சிவனின் பாதச்சுவடு எனக்கருதி வழிபடுகிறார்கள். இதன் காரணமாக இது ‘சிவனடிபாதம்’ எனவும்  அழைக்கப்படுகிறது. சிலர் சொல்லுகிறார்கள்  அது இராவணனின் அடிச்சுவடு  என்று  ஆனால் போதிய ஆதாரமில்லை.

பௌத்தமதம் இலங்கைக்கு  அறிமுகமாவற்கு முன்பிருந்தே சிவனொளிபாத மலையில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். புத்தபகவான் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன.

இதில் முதல் தடவை இலங்கைக்கு வந்தபோது  சிவனொளி பாதமலை இலங்கையின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியிருந்தது. இம்மலையில் மகாசுமன் எனும் தேவகுமாரன்  இருந்ததாகவும் அவனுக்கு பௌத்த நெறிகளைப் போதிக்க வேண்டியே புத்த பகவானின் முதல் விஜயம் அமைந்திருந்தாகவும் பாளி நூல்கள் கூறுகின்றன. இங்கிருந்த மகாசுமன் சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுடையவனாகவும், இம்மலையிலிருந்த சிவனை போதிப்பவனாகவும் இருந்தான் எனக் கூறலாம். இதனை அறிந்த புத்தபகவான் மகாசுமன் போன்ற சிவசூரிய வழிபாட்டை கடைப்பிடிக்கும்  ஒருவனை பௌத்த நெறிக்குள் கொண்டுவருவதன் மூலம் இத்தீவில் உள்ள பலரை இந்நெறியை கடைப்பிடிக்கச் செய்யலாம் என்ற எண்ணத்துடன் சிவனொளிபாதம் சென்று மகாசுமனுக்கு பௌத்த நெறிகளைப் போதித்து சென்றிருக்க வேண்டும்.

புத்தபகவான் தனது மூன்றாவது விஜயத்தின்போது மீண்டும் ஒரு தடவை சிவனொளிபாத மலைக்கு சென்று மகாசுமனின் பௌத்த நெறி மாற்றத்தை உறுதி செய்து கொண்டதோடு மகாசுமனை பௌத்த மதத்தவர்கள் வணங்க வேண்டுமென்றும் கூறிச் சென்றுள்ளார். அன்று முதல் பௌத்தராக மதம் மாறியவர்கள் சிவனொளிபாதத்திற்குச் சென்று மகாசுமனை வழிபட்டு வந்துள்ளனர். இதனால் இம்மலை பெளத்தர்களால் ‘சுமண கூடபர்வதம்’ என அழைக்கப்பட்டது.

கி.மு 5 ஆம் நூற்றாண்டில் விஜயன் இலங்கைக்கு வரும்போது இந்நாட்டில் இந்திய குடியேற்ற வாசிகள் இருந்துள்ளதாகவும் இவர்கள் எல்லோரும் இந்துக்கள் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே காலப்பகுதியில் இங்கு பெளத்தர்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்தக்குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது சிவனொளிபாதமலையை இந்துக்களும்,  பௌத்தர்களும் பிற சமயத்தவரும் எந்தவித தங்குதடையுமின்றி வழிபட்டு வருகின்றனர். இது பண்டைய காலத்தில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் பௌத்தர்கள் புத்த பெருமானின் கூற்றுக்கிணங்க மகாசுமனை இம்மலையில் வழிபட்டு வருகின்றனர்.

இருப்பினும் தொன்றுதொட்டு இங்கு நிலவிய சிவசூரிய வழிபாடு இன்றும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இங்கு செல்லும் எல்லா மதத்தவர்களும் சூரிய வழிபாடு செய்த பின் மலையை விட்டு இறங்குவதும், பண்டைய காலம் முதல் சிவவழிபாடு நிலவிய இம்மலை உச்சியில் சிவசின்னங்களான விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை இங்கு வரும் சகல மதத்தவர்களுக்கும் இன்றும் வழங்கப்படுவதும் மிகச் சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

கிபி 1345 இல் அரேபிய யாத்திரிகரான இபின் பதூதா இலங்கைக்கு வந்தபோது சிவனொளிபாதம் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் இந்து மதத்தின் செல்வாக்கு பெற்ற இடமாக இருந்துள்ளது. இபின் பதூதா மலையைத் தரிசிக்க ஆரியச் சக்கரவர்த்தியிடம் விருப்பம் தெரிவித்தபோது 15 பிராமணர்களையும், 4 யோகிகளையும், உதவிக்கு மேலும் 50 பேரையும் மன்னன் அவருடன் அனுப்பி வைத்ததாகவும், மலையில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் தான் கண்டதாகவும் இபின் பதூதா தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆரியச் சக்கரவர்த்தியின் காலத்தில் இந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் சிவனொளி பாதமலை இருந்தபோதும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இங்கு வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்க வில்லை என்பதும் இபின் பதூதாவின் குறிப்பின் மூலம் தெரிகிறது.

“ஒரு கேள்வி பெரியவர். உண்மையில்  புத்தர் இலங்கைக்கு வந்தரா அல்லது வாய் மொழி கதையா?” பாஸ்கர் கேட்டார்

சிவனொளிபாத மலையிலுள்ள பாதம் புத்த பகவானுடையது அல்ல என்பது ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்ட முடிவாகும். ஏனெனில் புத்த பகவான் இலங்கைக்கே வரவில்லை என்பதே பல ஆய்வாளர்களின் ஏகோபித்த கருத்தாகவுள்ளது. புத்த பகவான் இந்திய கரையை ஒருபோதும் கடந்ததில்லை எனவும் இந்தியாவின் விந்திய மலைகளுக்கு தெற்கே ஒருபோதும் வரவில்லை எனவும் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். சமகால இந்திய நூல்களிலும் இலக்கியங்களிலும் புத்த பகவான் இந்தியாவிற்கு வெளியே சென்றமை பற்றிய எந்த குறிப்புக்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவனொளிபாத மலையில் உள்ள தெய்வம் பற்றி பேராசிரியர் பரணவித்தான இருவேறு கருத்துக்களைக் கூறியுள்ளார். இங்கிருந்த மலைக் கடவுளை மகாயான பௌத்தர்களால் வணங்கப்பட்ட ‘சமந்த பத்திர’ எனும் தெய்வம் எனக் குறிப்பிடுகிறார். அதேவேளை இக்கடவுள் ஓர் யக்‌ஷ தெய்வமாகிய சுமண எனவும், சுமண என்பதே  “சமன்” எனும் தெய்வமாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமண எனும் பாளி சொல்லின் சமஸ்கிருத வடிவம் ‘யமன்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவனொளி பாதமலையில் இருக்கும் பௌத்த மலைத்தெய்வம் பற்றியோ, புத்தரின் பாதச்சுவடு பற்றியோ பொ.ஆ. 11 ஆம் நூற்றாண்டு வரை மகாவம்சத்தை தவிர வேறு எந்தப் பாளி நூல்களிலும் எந்தவித குறிப்புகளும் காணப்படவில்லை என பரணவித்தான தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவிலிருந்து இங்குவந்து குடியேறிய பண்டைய சிங்கள மக்கள் வழிபட்ட தெய்வங்களில் சுமணவும், உற்பலவனும் இடம் பெற்றிருக்கின்றனர்.

எல்லாளன் காலத்தில் அவனது படைத்தளபதியான தீகஜந்து என்பவன் மலை உச்சியில்  செங்கம்பளம் விரித்து அழகு படுத்தினான்  எனவும், இங்கிருந்த ஆலயத்திற்கு சிவப்பு நிறக்கூரை அமைத்து தனது நேர்த்தியை நிறைவு செய்தான் எனவும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட இரு குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ் மன்னன் எல்லாளனின் காலத்தில் சுமணகூட மலையில் நிச்சயமாக சிவவழிபாடு நிலவியிருக்க வேண்டும் எனலாம்.

எல்லாளன் இலங்கையை ஆட்சி செய்த கி. மு145-101 காலப் பகுதியில் சிவனொளிபாத மலையில் சிவவழிபாடு நிலவியதோடு இப்பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துள்ளமையும் தமிழர்கள் சிவனொளிபாத மலைக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளமையும் குறிப்புக்கள் மூலம் தெரிய வருகிறது. எல்லாளனை வெற்றி கொண்ட பின்பு துட்டகைமுனுவின் படையில் இருந்த பத்து இராட்சச தளபதிகளில் ஒருவனான தேரபுத்தபயன் என்பவன் சுமண கூட மலைக்குச் சென்று அங்கு ஸ்ரீ பாதத்தை வணங்கி விட்டு கீழே இறங்கி வந்து அங்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த ‘மருகந்த’ எனும் தமிழ் ஊரை அழித்து அங்கு தமிழர்களின் ஆதிக்கத்தை இல்லாதொழித்தான் எனவும் நூற் குறிப்புகள் கூறுகின்றன.

சிவ னொளிபாத மலைப்பகுதியில் தமிழர்கள் புராதன காலம் முதல் வாழ்ந்து வந்துள்ளமை இதன் மூலம் தெரிய வருகின்றது இம் மலையின் உச்சிக்குச் செல்வதற்கு மொத்தமாக ஏழு வழிகள் உள்ளன. இவ்வழிகளில் உள்ள இடப்பெயர்களில் பல பண்டைய காலம் முதல் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை இங்கு தமிழர்கள் வாழ்ந்தமையை உறுதி செய்கிறது.  இரத்தினபுரி-குருவிட்ட வழியில் கிளிமலை, ஆண்டியமலை, ராமகல்லு, குங்குமம், ஊசிமலை, மோகினி அருவி, இராஜமலை ஆகிய இடங்களும் , ஹட்டன் வழியில் நல்ல தண்ணி, சாமி மடம், காசி ஆறு, செம்மடம், உமைச்சாமி மடம், ஊசி மலை  போன்ற இடங்களும் மலையைச் சுற்றிக் காணப்படுவதால் புராதன காலம் முதல் இப்பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்திருந்தமை இந்த இடப் பெயர்கள் மூலம் உறுதியாகிறது”  சின்னசாமி மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

*****

சிவனடிபாத மலை அடிவாரத்தில் பல வருடங்களாக மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அமைக்கப்பட்டமை கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்தது.

சிவனடிபாத மலை புனித பிரதேசமானது மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இரண்டுக்கும் உரித்தான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எனினும் இலங்கை மக்கள் உட்பட உல்லாசப்பயணிகள் அனைவரும் கூடுதலாக அட்டன் மற்றும் நோட்டன் மார்க்கத்தின் வழியாக நல்லதண்ணீர் பிரதேசம் சென்று அங்கிருந்தே தமது பயணத்தை இம்மலைக்கு மேற்கொள்கின்றனர்.

சிங்களத்தில் சிறிபாதய, ஆங்கிலத்தில் சிறிபாத, தமிழில் சிவனடிபாதம் என்ற விளக்கத்துடன் ஆரம்பத்தில் இருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு தற்போது மும்மொழிகளிலும் கௌதம புத்த பகவானின் ஸ்ரீ பாதஸ்தானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சோழர் இலங்கையை ஆட்சி செய்த பொ.ஆ. 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டில் சிவனொளிபாத மலையை சிவ வழிபாடு மேலோங்கிக் காணப்பட்டுள்ளது. சோழரை வெற்றி கொண்ட விஜயபாகுவின் கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது.

சோழர் இலங்கையைக் கைப்பற்றிய கிமு. 993 ஆம் ஆண்டு முதல் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஆட்சிப் பீடமேறிய கி பி1747 வரையான 754 வருடங்களில், சுமார் 7 ½ நூற்றாண்டுகளில்) இடையிடையே சில ஆண்டுகளைத் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் சிவனொளிபாதமலை இந்துக்களின் செல்வாக்குடன் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

சிவனடி மலை ஏறுவது உடல் ரீதியாக களிப்பூட்டும் அனுபவமாகும். நாங்கள் வடக்குப் பக்கத்திலிருந்து, டால்ஹவுஸ் நகரத்திலிருந்து ஏறத் தொடங்குகிறோம். ஏற்றம் ஏறக்குறைய 3.5 மணிநேரம் எடுக்கும் மற்றும் செங்குத்தான மற்றும் சில நேரங்களில் சீரற்ற படிகளைக் கொண்டிருக்கும். இந்த ஏறுதலானது சூடான பானங்கள் மற்றும் தின்பண்டங்களை விற்கும் ஸ்டால்களிலும், இரவில் எண்ணெய் விளக்குகளால் எரியும் பாதையிலும் உள்ளது.

நாங்கள்  இருவரும் மலை அடிவாரத்தில் உள்ள தழுவும் மேகங்கள்  என்ற நான்கு ஸ்டார்  ஹோட்டலில் எங்கள் இரவு உணவை ஒரு பொக்கெற் சாண்விச் , தண்ணீர் போத்தல்கள் இரண்டை எடுத்துக்  கொண்டோம், மலை உச்சிக்கு புறப்படுவதற்கு முன்பு, அரை  கால் சட்டை, றி - சர்ற்டுடன் ஸ்போற்ஸ்  காலணியும்  அணிந்து  கொண்டோம்.

9.jpg

மலை உச்சியில் இருந்து சூரிய உதயத்தை பார்ப்பதற்கு அதிகாலை  3 மணியளவில்  மலையின் நுழை வாயிலை நோக்கி நடந்தோம். அங்கிருந்து   மலையின் உச்சிக்கு    படிகளில ஏறிப்போக   சுமார் மூன்று மணித்தியாலம் எடுக்கும்; கையில்  இருந்த ராச்லைற் மிகவும் உதவியது அது இல்லாமல் எங்களால் பாதையை சில இடங்களில் பார்க்க முடியவில்லை. விரைவில், ஓரிரு கோயில்களைக் கடந்த பிறகு, நாம் இரு பாதைகளை கண்டோம். ஒன்று பாறைப் பாதை, மற்றொன்று கற்-படிகளின் மலை உச்சிக்கு போகும் பாதை, இது பிரகாசமாக உச்சியில் எரியும் புத்த -கோவிலுக்கு வழிவகுத்தது. நாங்கள் அடிக்கடி மக்கள் சென்ற சாலையை எடுத்தோம் , அதாவது கற் படிகள். படிகள்.  அந்த வழியில் இரு பாகத்திலும்  பற்றைகள். வழி நெடுக -பிரகாசமாக-எரியும்  விளக்குகள் கோவிலுக்கு வழிவகுத்தன,  சிறுவர்களையும், முதியவர்களையும்  நாம்  காணவில்லை  அப்படிகள் எறினவர்கள்  சாது சாது  என்று  ஜெபித்த படியே ஏறினார் . கதிர்காமத்துக்கு  போகும்  போது ஹரோ ஹரா  சொன்ன மாதிரி.

முதல் 200 படிகள் ஏறிய பிறகு, நான் பெரிதும் திணறிக் கொண்டிருந்தேன். எனவே, நான் 5 நிமிட இடைவெளி எடுத்தோம், வரிசையின் படிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன்  தந்திரோபயம் மூலம் மலையின் உச்சத்தை அடைவதற்கு 5200 படிக்கட்டுகளின்  நடக்க வேண்டி இருந்தது. உச்சியை அடைந்தவுடன்  வெற்றிகரமாக இமயமலையின் உச்சியை அடைந்தது போன்ற உணர்வை அடைந்தோம்.

சிகரத்தை அடைந்ததும், ஏறுபவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு வசதியான அறையில் கூடி நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். ஒரு கப் சூடான வெற்று தேத்தண்ணீர் குடித்துவிட்டு, ஒவ்வொருவருக்கும்  கோப்பையிலும் சுமார் 100 ரூபாய் போட்டோம், நாம் அனைவரும் சூரியனை எதிர்பார்த்து கிழக்கு நோக்கி எதிர்கொள்ளும் கோயில் பால்கனியின் படிகளில் அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்க்கச் சென்றோம். கீழே  பார்க்கும் போது  ஆச்சரியமாக இருந்தது! சிகரத்திலிருந்து, பல நூற்றுக்கணக்கான மீட்டர் கீழே மிதக்கும் மேகங்களின் போர்வைகளை எங்களால் காண முடிந்தது. பல ஊர்கள், லக்சபான நீர்  தேக்கத்தின்  விளக்குகள் தெரிந்தன. ஆகா  என்ன அருமையான காட்சி . பாஸ்கர் படம் எடுத்தார் . காலநிலை படு குளிராக இருந்தது. நாங்கள் அனைவரும் உச்சத்தில் ஒரு பூட்டிய அறையைச் சுற்றி கூடினோம் . அங்குள்ள ஊழியர்களால் ஸ்ரீ பாதம்  உள்அறையில் பூட்டப்பட்டிருப்பதாகவும், டிசம்பரில் பண்டிகை காலங்களில் மட்டுமே இது பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாம் மிகவும் ஏமாற்றமடைந்தோம்.!  அங்கு வந்தவர்களும் அப்படியே இருந்தார்கள் என்று நான் அவர்கள்  முகத்தில் இருந்து கண்டேன் சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த சிகரத்தை சுற்றி நடந்த பிறகு,கிழக்கு திசையை நோக்கி சூரியனின  வரவை எதிர்பார்துக் கொண்டு நின்றோம் . முகில்கள்  இல்லாத அடிவானம்  அது சூரிய உதயத்தை தெளிவாக காட்டும். கொஞ்சம்  கொஞ்சமாக  அடிவானத்தின்  நிறம்  மாறத் தொடங்கியது . பறவைகள் முகோண வடிவில் பறந்து சென்றன. அடிவானத்திஇருந்து சூரியன உதிக்கும் காட்சியை கண்டு ரசித்தோம். அதை பாஸ்கர் வீடியோ படம் எடுத்தார்    எடுக்கும் போது அவர் சொன்னார் “மோகன் நான் கன்னியாகுமரியில் நான் பார்த்த  சூரிய உதயத்தை விட இது அருமையான காட்சி”

சூரியன் உச்சத்துக்கு வரும் முன்பு மலை உச்சியை விட்டு வெளியேற முடிவு செய்தோம் காலை காற்று எமக்கு தாங்க முடியாததாக இருந்தது. அது உறைபனி குளிராக இருந்தது. சூடாக இருக்க என் உள்ளங்கைகளை ஒன்றாக தேய்க்க முயற்சித்தோம், அது எங்களை நடுங்க விடவில்லை.

1574710927132.jpeg

என் கால்களில் தாங்க முடியாத தசைபிடிப்பு. வலி காரணமாக மெதுவாகவும் கவனமாகவும் படிகளைப் பயன்படுத்தி இறங்கத் தொடங்கினோம்.  கீழே இறங்குவதினால்   நடையின் வேகத்தை அதிகரித்தோம், இரு மணி நேரத்தில்  அடிவாரத்தை  அடைந்ததும் ஒரு கடையில் சுவையான சூடான தேத்தண்ணீர் அருந்தி விட்டு, எங்கள் அறைக்கு சென்றோம். காலை உணவை முடித்துக்கொண்டு  சில மணி நேரம் ஓய்வு எடுத்த பின்  நாம்  கொழும்பில் இருந்து  வந்த வாடகை  காரில் கொழும்பை நோக்கி பயணித்தோம்.

கொழும்பில்  இரு நாட்கள் தங்கி சில இடங்களை என்னுடன்  பார்த்தபின் நண்பர் பாஸ்கர் சென்னை  திரும்பினார். நான் ரயிலில் யாழ்ப்பாணம் திரும்பினேன் .

இரு வாரங்களுக்கு பின் பாஸ்கரிடம் இருந்து ஒரு மின் அஞ்சல்  வந்திருந்தது. அந்த மின்  அஞ்சலில் அவர் எழுதிய சிவனடி பாத  யாத்திரை  கட்டுரையை  படங்களோடும்  வீடியோ  யூ ருயூப் லிங் கொடுத்து இருந்தார் பார்த்தேன்.. வாசித்தேன்.. பரவசமானேன்.

https://www.vanakkamlondon.com/pon-kulendiren-sivanolipatha-malai-07-15-20/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.