Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஐஸ் எனும் ஆபத்தான போதை - எச்சரிக்கை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஐஸ் எனும் ஆபத்தான போதை - எச்சரிக்கை.!

ICEmannar.jpg
காசு அனுப்பும் அப்பா அம்மா ..
வடக்கு முழுக்க காசு மழை ..

அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்..

ஒரு இனத்தை அழிப்பது என்பது கல்வி கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை அழிப்பது ஆகும். வடக்கில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைக்கு அடிமைகள் ஆக்கல் நிகழ்ச்சி திட்டம் தற்போது வெற்றிகரமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.

********************************
வடகிழக்கு மாகாணத்தை தற்போது சூழ்ந்துள்ள ஐஸ் எனும் ஆபத்து.!💊

#அறிமுகம்: இளைஞர்களின் தற்போதைய Trend இல் இருப்பது, ஐஸ் எனும் போதைப்பொருள்(Methamphetamine) எனப்படும் இப்போதைப்பொருள் எமது பிரதேசத்தில் மாணவர்கள் முதல் உத்தியோகத்தர்கள் வரை தனது கால்களை அகல ஊன்றியிருக்கிறது.

இரண்டாம் உலக போரில் யுத்த வீரர்களை களைப்பின்றி போராட, இது ஒரு ஆயுதமாக ஜப்பானால் பயன்படுத்தப்பட்டது. ஹெரோயின், கஞ்சா போன்றல்லாது, 100% இரசாயனமான இது, மற்றைய வகை போதைப்பொருள்களை விட அதிக நச்சுத்தன்மை உடையதோடு நீண்ட நாட்களுக்கு உடலில் தங்கக்கூடியது.

யாரைக்கேட்டாலும், “#என்ர_மகன்_அப்படியெல்லாம்_செய்யமாட்டான்” என்ற குருட்டு நம்பிக்கையே இதன் பரவலுக்கு முக்கிய காரணமாகும். அதற்காக சந்தேகப்படுங்கள் என்பதல்ல அர்த்தம். அவரை அறியாமலேயே இது நண்பர்கள் மூலம் அவரை ஆட்கொண்டுவிடும். எனவே தனது பிள்ளைகளின், கணவரின், உறவினர்களின் உடலில், நடவடிக்கைகலில் ஏற்படும் மாற்றங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 3000Kg ஐஸ் விற்பனையாகிறது, ஆனால் ஹெரோயின் 750Kg மட்டுமே. எமது பிரதேசங்களில் முன்பு ஹெரோயின், கொக்கெயின் போன்றன விலை உயர்வு ஆதலால், கோரெக்ஸ், கஞ்சா, அபின் போன்றவை மட்டும் சிறியளவில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று ஐஸ் இன் சாதாரண விலை காரணமாக இது ஒரு #Street_Drug ஆக மாறியுள்ளது. விரும்பிய தொகைக்கு, விரும்பிய அளவில் இலங்கையின் எப்பாகத்திலும் பெறலாம்.

மேட்டுக்குடியினர் மத்தியில் இது ஒரு ஸ்ரைல் ஆக தற்போது மாறியுள்ளது. இது ஒரு குறுகிய நேர மாய இன்பத்தை, புத்துணர்ச்சியை அளிக்கிறது.

dan2cfg-68671065-7a0c-44e1-a0eb-f6203e71

#ஐஸ் வடிவங்கள்: வெள்ளை அல்லது ப்ரவுன் நிறத்தில் தூளாகவோ, குளிசை,#Injection வடிவிலோ காணப்படலாம் (நொறுங்கிய கண்ணாடித்தூள் போன்று காணப்படும்). நமது பிரதேசத்தில் " தூளே " பிரபலம்.

InjectionNEW.jpg

#பாவனைமுறை: மூக்கால் உறிஞ்சுதல், விழுங்குதல்(குளிசை), ஊசி மூலம் ஏற்றல், புகைத்தல் மூலம்.

#சுவை: கொஞ்சம் கசப்புச்சுவை

#எவ்வாறு கண்டுபிடிப்பது???

1️⃣ பாவனையாளரின் மன, உடல்நிலை:

🔡 A) பாவித்த உடனே: தாகம், சோர்வு, பசி, தூக்கம் எதுவும் வராது. #Superman_Power கிடைத்ததுபோல் உணர்வார். அதிகமாக பேசுவார், ஓர் நம்பிக்கை உணர்வு காணப்படும், எதையும் கச்சிதமாக, விரைவாக செய்வார்.

🔡 பாவித்து சில மணி நேரத்தின் பின்: இதற்கு எதிர்மாறாக தூக்கம், பசி, சோர்வு அதிகமாக ஏற்படும். அசாதாரண பதற்றம், கோபம், அதிக வியர்வை, தூங்க முடியாமை, தலைவலி என்பன காணப்படுவதோடு, நீண்ட கால விளைவுகளாக தனிமையை விரும்பல், எல்லாவற்றையும் சந்தேகப்படல், இரவில் சரியாக சுவாசிக்க முடியாமை, பற்கள் அழுகிக்கொண்டு செல்லல் (#Meth_mouth), சடுதியான உடல் நிறைக்குறைவு, confusion, இருட்டில் இருக்க விரும்புதல், யாருடனும் பேச விருப்பமின்மை, வாழ்க்கை மீது பிடிப்பின்மை போன்றவை ஏற்படும். இவ்வாறானவற்றை நீங்கள் உங்கள் அன்பானவரிடம் அவதானித்தால், சற்று விழிப்பாயிருங்கள்.

ayurveda_hospital_headache.jpg

இதன் இறுதி ஆபத்தான நிலைதான்
#ME and #MY_ICE எனும் நிலை. இந்நிலையில் அவருக்கு உறவுகள், குடும்பம் எதுவுமே தேவைப்படாது, எதை விற்று / இழந்தாவது ஐஸ் மட்டும் அவரோடிருந்தால் போதும் எனும் தனிமை நிலை. இந்த நிலையை #Meth_Psychosis என அழைப்பர். இந்நிலையில் அதிக சந்தேகம், விரக்தி ஏற்படும், நிறையப்பேர் தற்கொலை கூட செய்வதுண்டு. அங்கோட மனநல மருத்துவமனையில் இதற்கென விசேடமாக Ice Ward என்று ஒரு பகுதி உண்டு.

#பாவனையாளரின் ரூமில் காணப்படும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் :

Tungsten மின்குமிழின் குமிழ்(படம் 1), தலை கழற்றப்பட்ட lighter, சுருட்டிய பண நோட்டு, சுருட்டிய பேப்பர், கச்சான்தகடு அல்லது அலுமினிய பேப்பர், பேனையின் குழல் போன்றவை உங்கள் உறவினரின் அறைக்குள், சட்டைப்பையினுள் இருந்தால், சற்று உஷாராகுங்கள்.

#எவ்வாறு உறுதிப்படுத்துவது: ஒரு வைத்திய பரிசோதனை மூலம் ஐஸ் பாவித்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தலாம்.

எனவே, உங்கள் இளைஞர்கள் மீது வீட்டில் விழிப்பாயிருங்கள். இக்கொடூர சமூக விசத்திலிருந்து இளைஞர் சமுதாயத்தை வருமுன் பாதுகாப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்தி மீட்டெடுப்போம், விநியோகஸ்தர்களை உரிய அதிகாரிகளிடம் காட்டிக்கொடுப்போம்,  எச்சரிப்போம்.

"போதை என்றும் கொடியது.."
நன்றி- இணையம்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/80560/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் அதிகரித்துவிடுமோ என்ற பயத்தை இந்த தேர்தல்முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது... 

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.