Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சாரத் தடையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையையடுத்து பல பிரதேசங்களில் நீர் விநியோகத் தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

powercut.jpg

வத்தளை, கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டில் பல மணி நேர மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல பிரதேசங்களில் நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் மின்சார துண்டிப்பு இன்னும் சில மணி நேரங்களில் சீர் செய்யப்படும் எனவும் மின்சார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்ப இரவு 8 ஆகும் எனவும் மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று பகல் வேளையில் இருந்து நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சார துண்டிப்பால் நகரங்களில் வீதி சமிக்ஞைகள் செயலிழந்துள்ளதால் நகரங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது.

மின்சார துண்டிப்பை சீர் செய்யும் நடவடிக்கையில் இலங்கை  மின்சார சபை பொறியியலாளர்கள் தற்போதும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,  தென் மாகாணம் மற்றும் கொத்மலையின் சில பிரதேசங்களில் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/88209

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் 7 மணி நேரத்தை கடந்த மின் தடை - காரணம் என்ன?

இலங்கை முழுவதும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது.

இன்று பிற்பகல் 12:30 அளவில் இலங்கை முழுவதும் மின்சாரம் தடைபட்டது.

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கியொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் தடைபட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் நாட்டின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைபட்டது.

வர்த்தக நிலையங்கள் வழமைக்கு மாறாக மூடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

அத்துடன், மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ளன.

வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ளமையினால், நாடு முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரம் தடைபட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணைகளை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு − முகத்துவார பகுதியில் மின் தடை காரணமாக வாயிலில் நிற்கும் ஊழியர்கள்
 
படக்குறிப்பு,

கொழும்பு − முகத்துவார பகுதியில் மின் தடை காரணமாக வாயிலில் நிற்கும் ஊழியர்கள்

இலங்கை முழுவதும் 7 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபட்டமையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.7 மணித்தியாலங்களின் பின்னர் நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.இலங்கையில் இதற்கு முன்னர் 2009, 2015 ஆகிய ஆண்டுகளில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரம் தடைபட்டதுடன், 2016ம் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

தற்போது மின் பழுது ஏற்பட்டுள்ள கெரவவபிட்டி மின் நிலைய கட்டுமானப்பணிகள் 2007, நவம்பர் மாதம் தொடங்கி இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டன. முதலாவது கட்ட திட்டம், 10 மாதங்களிலும், இரண்டாவது கட்ட திட்டம், 2010-ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்டது.

எண்ணெய் மூலம் எரியூட்டப்படும் அனல் மின் நிலையம் மூலம் தினமும் 424 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் கிட்டத்தட்ட 12 சதவீத மின் தேவையை இந்த மின் நிலைய உற்பத்து பூர்த்தி செய்து வருவதாக அறியப்படுகிறது.https://www.bbc.com/tamil/sri-lanka-53810746

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடிக்கடி நடக்கும் சொறி பிடித்த சிங்கள அரசியல்வாதிகளினால் சீரழிக்கப்படும் தேசம் .

நீர் மூலம் மின்சக்தி எடுப்பதுக்கு  இலகுவான வழிகள் இருக்க கொமிசன் பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டை சுற்றுப்புற சூழல் பழுதாகி போவதை கவலைப்படாமல் படிப்பறிவற்ற சிங்கள  அரசியல்வாதிகள் மேலும் மேலும் நாட்டை சீரழிக்குதுகள் அவர்கள் செய்யும் திருகுதாளம்கள் பிடிபடாமலிருக்க தமிழர்கள் மீது இனதுவேசத்தை பரப்புகிறார்கள் .உண்மையில் நீர் மின்னை எடுப்பது மாசு குறைவானது . கீழே இரு இணைப்பு தருகிறேன் விளங்குபவர்களுக்கு விளங்கும் .

https://tamil.news.lk/news/political-current-affairs/item/36758-2020-06-26-16-31-32

நாட்டின்  LNG எரிவாயு மின்னுற்பத்தி உள்ளிட்ட மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில்  LNG  எரிவாயு மின்சார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
நுரைச்சோலை புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் முதலாவது டுNபு எரிவாயு மின்னுற்பத்தி வேலைத்திட்டங்கள் என்பன சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

உமா ஓயா, மன்னார் காற்றாலை மின் திட்டம், பிராட்லேண்ட் மற்றும் யாழ். சூரியகல மின் திட்டங்கள் என்பன இந்த வருட இறுதிக்குள் திறக்கப்படுமென அமைச்சர் அறிவித்துள்ளார்.

உத்தேச நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நாட்டின் முதலாவது  LNG ஆலை உள்ளிட்ட மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களினால், 2023 ஆம் ஆண்டளவில் பொதுமக்களிடம் குறைந்தளவிலான மின்கட்டணங்களை அறிடுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்..

https://tamil.news.lk/news/political-current-affairs/item/36758-2020-06-26-16-31-32

Natural gas production
Rank Country Annual NG production (million m3)
1 USA 766,200
2 Russia 598,600
3 Iran 184,800
4 Qatar 188,000

https://www.google.com/search?rlz=1C1CHBF_en-GBGB878GB878&sxsrf=ALeKk01QFV5vQ1R_HUlDqJmCHUtE74yJtA%3A1597678396454&ei=PKM6X-2oG7SV1fAPl9SnqAQ&q=lng+gas+production+country&oq=lng+gas+production+countery+&gs_lcp=CgZwc3ktYWIQARgAMggIIRAWEB0QHjIICCEQFhAdEB4yCAghEBYQHRAeMggIIRAWEB0QHjoHCAAQRxCwAzoGCAAQFhAeUO0eWNbfAWDI8wFoAXAAeACAAVCIAZUBkgEBMpgBAKABAaoBB2d3cy13aXrAAQE&sclient=psy-ab

அமெரிக்கர்கள்  எப்படி சுழிக்கிறார்கள்  என்று மேல் உள்ள விபரத்தை ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம் 

மஹிந்த அமரவீர கணக்கில் எவ்வளவு கோடி சேர்ந்ததோ எல்லாம் புத்தனுக்கு தெரியும் 😁

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு மின்சார தடையை ஏற்படுத்தும் மஹிந்த அரசு! சஜித் தரப்பு குற்றச்சாட்டு

Report us Vethu 43 minutes ago

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சமகால அரசாங்கம் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று முன்தினம் அரசாங்கம் திட்டமிட்டு 6 மணித்தியாலங்கள் மின்சார தடை ஏற்படுத்தியதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த திட்டமிட்ட செயலானது தனியார் துறையிடம் அதிக விலையில் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாராகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பொறுப்பேற்றவுடனேயே நாட்டை இருளில் வைத்தமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட செயலாகும்.

எங்கள் நாட்டின் சம்பிரதாயத்திற்கமைய எதிர்வரும் சில மாதங்களுக்கு மின்சார தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

தனியார் பிரிவில் மின்சாரம் கொள்வனவு செய்யவுள்ளதற்கான தகவல் ஒன்றை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கே மின்சாரம் தடை செய்யப்பட்டது.

எதிர்வரும் நாட்களிலும் மின்சாரம் தடை செய்யப்படும். அதற்கிடையில் பல்வேறு முறையில் தனியார் பிரிவில் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதற்கும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/community/01/253907?ref=home-latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.