Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி கப்டன் மணியரசன்

 

 

Black-Sea-Tiger-Captain-Maniyarasan.jpg

 

கடலன்னையின் புதல்வர்கள் மணியரசன்.

மணியரசன்! “பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தனையீந்த கரும்புலி; என் கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலை நிமிர்ந்து சொல்ல வைத்த அடலேறு அவன்.

அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் புதைத்து விட்டுப் போய்விட்டன.

இந்தச் சின்ன வயதிலும் – பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு எற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஒர் உருண்டை முகம். நிமிர்ந்த – லாவகமான – திடகாத்திரமான உடல்வாகு. எங்கள் கண்ணெல்லாம் அந்த வண்ணக் கோலம்.

மணியரசன் குறுகுறுத்தவன். பஜரோவில் வருகின்றவர் வீட்டிற்குள் போய் அலுவல் முடித்து விட்டு, போன வேகத்திலேயே திரும்பி வந்தால் கூடஇ பஜரோ அடுத்த பக்கமாக திரும்பி நிற்கும். “ஆரடா தம்பி பஜரோவை திருப்பி விட்டது”?; வந்தவர் தேடினால் ஒதுக்குப் புறமாக மணியரசன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பான். அது மோட்டார் சைக்கிளானால்இ ஒரு “8” அடித்துவிட்டுத் திரும்பி நிற்கும். உள்ளே போனவர் வெளியே வந்தால் – ஏதோ முக்கிய வேலையில் மூழ்கியிருப்பவனைப் போல தூரத்திலிருந்து ஓரக்கண்ணால் பார்ப்பான். முகாமிற்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒரு பொருள், துண்டுகளாகப் பிரித்து மேசையில் வைக்கப்பட்டிருக்கும். யாருடைய வேலை இது என்று யாருமே கேட்பதில்லை.

மணியரசன் குறுகுறுத்தவன் தான்; குளப்படிக்காரன் தான்;. ஆனால் எவருடைய கோபத்திற்கும் ஆளாகின்றவனல்ல.

ஒருதடவை அவனோடு பழகியவர்களுக்கு, இன்னொரு தடவை அவனை நினைவுபடுத்தத் தேவையில்லை. எல்லோருடைய நினைவுகளிலும் நிலைத்துவிடும் வசீகரம் அவனிடமிருந்தது. மிகக் குறுகிய காலத் தொடர்பு சாதன வேலையில் – அவன் சேர்த்து வைத்திருந்த முகம் தெரியாத நண்பர்கள் பலர். எந்த நிலையத்தில் தகவல் பரிவர்த்தனை வேலை செய்பவராக இருந்தாலும், அவனோடு கதைக்காமல் அவர்கள் அலைவரிசையை மூடிக்கொண்ட நாட்கள் மிகக் குறைவு. மணியரசா! உனது அன்பின் வீச்சுத் தூரம், தமிழீழத்தின் எல்லைகளைத் தொட்டிருந்ததடா!

மணியரசனுக்கு ஒரு பொழுது போக்கு, மற்றவர்களைக் கிண்டல் செய்துகொண்டிருப்பது. அவனிருக்குமிடத்தில் வாய் திறக்க அநேகமானவர்களுக்குப் பயம். ட்ரக் ஓடும் ஐம்பது வயது ஐயாவிலிருந்து, புதிதாக இயக்கத்திற்கு வரும் சின்னப்பையன்வரை – வயது வேறுபாடின்றி எல்லோருமே அவனுடைய அறுவைக்கு இலக்கு. ஆனாலும் மணியரசா! “இயக்கம் பொமர் வாங்கினா அதை இறக்க எங்களிட்ட ஒரு ‘றண்வே’ இருக்கு” என்று மயிரில்லாத உன் முன்பக்கத் தலை அறுவைக்கு உள்ளாகும் போது கூட மேல் மயிரைத் தட்டிவிட்டு ‘உருமறைப்புச்’ செய்து கொண்டு, புன்னகையோடு அந்தக் கிண்டலை ஏற்றுக்கொள்ளும் உனது நட்பின் பண்புஇ உயர்ந்தது.

Black-Tiger-Pugazharasan-and-Maniyarasan

ஊரிலும், பள்ளிக்கூடத்திலும் கனியூட் என்று செல்லமாக அழைக்கப்பட்ட வேதநாயகம் ராஜரூபன் தான் எங்கள் மணியரசன்;.

குடும்பத்தில் கடைசித் தங்கச்சிக்கு நேரே மூத்த இவன், 7 வது பிள்ளை.

மணற்காடு றோமன் கத்தோலிக்க மகாலித்தியாலயத்தில் படிக்கும் போது, அதன் உதைபந்தாட்டக் குழுவொன்றில் சிறந்த ஒரு விளையாட்டு வீரனாக இருந்ததுடன், அவன் படிப்பிலும் கெட்டிக்காரானாம்.

அப்பா தொழிலுக்கு போகும் போது, இடைக்கிடை அவரோடு கடலுக்குப் போகிறவன், திறமையான நீச்சல்காரனாகவும் ஆகியிருந்தான்.

1991 இன் நடுப்பகுதியில் இவன் இயக்கத்திற்கு வரும் போது 8ஆம் வகுப்போடு படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத்தான் வந்தான்.

அவன், எல்லாத் திறமைகளும் ஒருங்கிணைந்திருந்த ஒரு போராளி. இந்தத் தேசம் அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறையவே இருந்தது; அவற்றை வழங்கும் ஆற்றலையும் அவன் கொண்டிருந்தான். ஆனால், ஒரு கரும்புலித்தாக்குதல் தான் அவனுடைய பிரதான குறியாக இருந்தது. கடைசியிலும் அதைத்தான் அவன் செய்தான்.

கடற்புலிகளின் 1ஆவது பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுக்கும் போதே பயிற்சிகளில் ஆர்வம் நிறைந்தவனாகவும், பரீட்சைகளில் அதிக புள்ளிகள் பெறுபவனாகவும் திகழ்ந்தான்; சிறந்த ஒரு விடுதலை வீரனாக முளைவிட்டான்.

அவனுடைய தெளிவான பேச்சு வன்மையும், விடயங்களைக் கிரகித்துக் கொள்ளும் வேகமும் தான் அவனை தகவல் பரிவர்த்தனை வேலைக்கு ஏற்றவனாக இனம்காட்டின. தகவல் தொடர்புச்சாதனம் கற்பிக்கும் பாடத்திட்டமானது, பொதுவாக, ‘இவ்வளவு காலப்பயிற்சி’ என வரையறுக்கப்பட்டது. ஆனால், மணியரசன் அதனைக் கற்றுக்கொண்டுவிட்ட நாட்களை விரல் மடிப்பிற்குள் அடக்கிவிடலாம்.

இரண்டே வருடகால அவனுடைய போராட்ட வாழ்வின் மிகப் பெரும்பாலான நாட்கள், தொடர்பு சாதனம் இயக்கும் வேலையிலேயே அவனை ஈடுபடுத்தின. அந்தப் பணியின் முக்கியத்துவத்தையும் – இன்றியமையாமையையும் அவன் புரிந்து உணர்ந்திருந்த போதிலும் சண்டைக்குப் போகவேண்டும் என்ற ஆதங்கமே அவனிடம் மேலோங்கியிருந்தது. கங்கை அமரன் வன்னிக்குப் புறப்பட்டால் தானும் வரப்போவதாக நச்சரிப்பான்; பிருந்தன் மாஸ்ரர் கிளாலிக்கு வெளிக்கிட்டால் தன்னையும் கூட்டிச் செல்லுமாறு அடம் பிடிப்பான். தன்னோடு நிற்கும் போதே, சண்டைக்கு அனுப்பும் படி மணியரசன் தனக்கு எழுதும் கடிதங்களை வாசிக்க வேண்டிய வில்லங்கம் தளபதி சூசைக்கு இருந்தது.

அவனது ஆசை ஓரளவு பூர்த்தியாகி வர – வடமராட்சியிலுள்ள தலைமைத் தளத்தில் பகல் முழுவதும் ‘செற்’ கதைத்துக் கொண்டிருப்பவன், இரவுகளில் – கிளாலியின் சண்டைமுனைகயில் ஒரு எல்.எம்.ஜியுடன் வலம் வரத் துவங்கினான்.

இறுதிக் காலத்தில் முழுமையாக, கிளாலியின் மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுதுகளிலும் – ஒரு கரும்புலித்தாக்குதலே மணியரசனுடைய பிரதான குறியாக இருந்தது. எங்களுக்குள் சுழன்று திரிந்த அந்த இனிய நண்பன்இ அதைத்தான் செய்து முடித்தான்.

அவனுடைய கடைசி நாட்களில் அவன் மிகுந்த உற்சாகமாக இருந்தான்.

தனது முகம் தெரியாத நண்பர்களிடம் வானலைகளினூடாக விடைபெற்றான்; அந்த தொடர்பு சாதனத்திடமிருந்தும் விடைபெற்றான்.

Weapons-Captured-in-Black-Tigers-Attack.

கிளாலிக் கடலில் சிதைந்து போன நிலையிலும் மதன் அதிசயமாய் மிதந்து வந்த போது, நாங்கள் பக்குவமாய் எடுத்து வந்து துயிலுமில்லத்தில் விதைக்கையில், கண்ணீரோடு மதனுக்கு மண் போட்டான். அந்த நேரத்தில் எனக்கு மண்போடும் பாக்கியம் ஒருவருக்கும் கிடைக்காது என்று நினைத்திருப்பானோ…….?

தோரணம் கட்டி பந்தல் போட்டு மதனுக்கும், வரதனக்கும் அஞ்சலி செய்த போது, வீதி வீதியாகத் திரிந்து பார்த்தான். இன்னும் நாலு நாளில் தனக்கும் இப்டித்தான் செய்வினம் என்று நினைத்திருப்பானோ…….?

இப்போது அவன் போய் விட்டான்; எங்களால் எட்ட முடியாத தொலைவுக்கு எங்களைக் கிண்டல் செய்துகொண்டிருந்த அந்த அறுவைக்காரன் இப்போது இல்லை. இயக்கம் ‘பொமர்’ வாங்கினால் இறக்கி ஓட அந்த ‘றண்வே’யும் இப்போது இல்லை!

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி – ஐப்பசி 1993).

 

https://thesakkatru.com/black-sea-tiger-captain-maniyarasan/

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி வீரர்களுக்கு வீர வணக்கம்.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.