Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

வாசிப்பவர்களுக்குத் தெரியும்தானே எனது நிலைப்பாடு. 😀

தெரிந்தது மட்டுமல்ல விளங்கியும் விட்டது. அதாவது உலகம் முழுவதுமே நடைபெறும் பகிடிவதைக்கு ஒரு மாற்றுத்தீர்வு தேடவேண்டும். தென்னாசியாவில் நடைபெறுவதை மட்டும் வேறாக்கித் தவறாக நோக்கக்கூடாது. 

Quellbild anzeigen

உணர்த்தப்பட வேண்டிய பகிடிவதையின் அவசியம்

சமகாலத்தில் பகிடிவதை என்ற தலைப்பு படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கான காரணம் கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வின் வீடியோ பதிவு முகநூலில் பகிரப்பட்டமையாகும். அதன் பின்னர் முகநூல் எழுத்தாளர்களின் பேனாக்கு கிடைத்த சுவையான தலைப்பாக பல்கலைக் கழக பகடிவதை காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழக மாணவர்கள் ஒட்டுமொத்தமாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக எமது தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்தான் இக்காரியத்தை செய்தார்கள் என்று உண்மைத் தகவல் அறியாத ஓரு சில முகநூல் வட்டாரங்கள் விமர்சனம் செய்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பகிடிவதை என்பது சரீஆவின் பார்வையில் தவறு என்ற தெளிவான விளக்கமும் பொதுவாக மனித உரிமையையும் மனித மானத்துடனும் மோதி உள்ளங்களை உடைக்கும் ஈனச் செயல் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இருந்த போதிலும் மனித உள்ளங்களை முன்மாதிரி செயற்பாடுகளால் வென்றெடுப்பதை தவிர்த்து தற்கொலை¸ கல்வியில் இருந்து இடைவிலகல்¸ குற்றவாளிகளாக மாறுதல் போன்ற குற்றங்கள் நிகழ்வதற்கு பகடிவதை எனும் இக்கொடிய செயல் காரணமாக அமைந்துள்ளது.

பகடிவதை என்றால் என்ன?

Collins அகராதியில் ராக்கிங் என்பது “ஒரு குறிப்பிட்ட சூழலில் அல்லது செயல்முறைகளில் பெரிய வன்முறையை உருவாக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் முரட்டுத்தனமான நடத்தைகள்” எனப்படும்.

கேம்பிரிட்ச் அகராதியின் படி “வேடிக்கையான அதே சமயத்தில் இரக்கமற்ற சிறிய கொடூரச் செயல்”; எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வரைவிலக்கணங்களின் பிரகாரம் தனக்கு விருப்பமில்லாத ஒரு நடத்தையை ஆண் அல்லது பெண்ணின் மீது சுமத்தப்படுவதை குறித்து நிற்கின்றது. பகிடிவதையை நியாயப்படுத்துவோர் பகிடிவதையினூடாக மாணவர்கள் மத்தியில் சமத்துவம் ஏற்படுவதாகவும் பணப்புளக்கம்¸ அரசியல் பின்னணியில் வளர்ந்தவர்கள் திமிறு பிடித்தவர்களாகவும் கீரோக்களாக தம்மை அலங்கரித்துக் கொள்கின்றனர். எனவே இதனை அடக்கி வழிகாட்டவே பகிடிவதை அவசியப்படுவதாக தமது வாதத்தினை முன்வைக்கின்றனர். மேற்கூறப்பட்ட காரணங்கள் ஒரு வகையில் நியாயமானதாக சிந்திக்க தூண்டினாலும் சமத்துவநிலை¸ சமூகமயப்படுத்தல் என்பதற்கான தீர்வு பகிடிவதைதான் என்பது பூரணத்துவம் மிக்க தீர்வாக அமையாது.

 

எமது பீட மாணவர்களின் பல்துறை பிரகாசம் என்பது குறைந்த நிலையில் இருப்பதை கடந்தகால பெறுபேறுகளின் மூலம் அவதானிக்க முடிகின்றது. இதற்கான மீளெழுச்சி செயற்பாடு வடிவமைக்கப்பட வேண்டிய அவசிய நிலையை உணர்கிறோம். புதிய மாணவர்களாக பல்கலைச் சூழலைச் சந்திக்கும் சகோதர உறவுகள் பகிடிவதைக்குப் பயந்து சிரேஷ்ட சகோதரர்களுடன் தமது உறவினை முறையாக ஏற்படுத்திக் கொள்ளாமலும் அறிவுபூர்வமான வழிகாட்டலைப் பெறாமலும் பயந்த நிலையில் தமது முதலாவது பருவகாலத்தை கழிக்கின்றனர்.

பகிடிவதையை ஒழித்து சகோதரத்துவ உறவை மேம்படுத்த மாற்று வழிகளை பிரயோகிக்க வேண்டும். அதற்காக ஆலோசிக்கப்பட்டு ஆரோக்கிய நிலையில் முன்மொழியப்படும் வழிமுறைகள்.

நூலகம் :

இலங்கையின் பல்கலைக்கழக நூலகங்களில் அதிக புத்தகங்களுடன் மாணவர்களை வரவேற்கும் பிரதான நூலகத்தை எமது பல்கலைக் கழகம் கொண்டுள்ளது. அவற்றிலும் குறிப்பாக 10,000 க்கும் மேற்பட்ட அரபுப்புத்தகங்களைக் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும். ஆனால் இந்நூலகம் எமது மாணவர்களினால் பயன்படுத்தப்படுவது குறைந்த மட்டத்தில் உள்ளது. முதலாம் வருட மாணவர்களை அவர்களின் ஆரம்ப நிலையில் நூலகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி புத்தகங்களுடன் தோழமை கொள்ளும் அறிவார்ந்த செயலுக்கு உதவுகின்ற போது அதன் மூலம் சிறந்த கற்பனை வளமும் சிந்தனையும் அறிவும் வளர்க்கப்பட அடிப்படை உதவியாக அமையும்.

மைதானம் :

எமது பீட மாணவ சகோதரர்களின் விளையாட்டு ரீதியிலான பங்குபற்றுதல்¸ பிரகாசித்தல் என்பது குறைந்த அடைவில் இருப்பது கடந்த கால பெறுபேறுகள் மூலம் அவதானிக்க முடிந்துள்ளது. மைதானத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி விளையாட்டிலும் எமது பீடத்தின் பெயர் மேலோங்க முயற்சிப்பது எமது பொறுப்பாகும். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கான உதவிகளை மாணவர் பேரவை தேர்தல் காலங்களில் மாத்திரம் செய்துகொடுக்காமல் ஆரம்பத்தில் இருந்து நல்லுறவுடன் முயற்சிப்பது வெற்றியளிக்கும் என்பதை ஏனைய பீட மாணவ சகோதரர்களின் வழிகாட்டல் நிகழ்வுகளின் மூலம் கட்டியெளுப்பப்பட்ட சாதனைகள் எமக்கு சான்றாக அமைந்துள்ளது.

பல்கலைக் கழக கல்வியுடன் தொழில் சந்தையில் ஏற்படும் போட்டிச் சூழலுக்கு எற்ப எமது தயார்படுத்தல் அவசியமாகின்றது. HNDE> HNDA> HNDIT> Dip in Counselling> Dip in English போன்ற துறைகளுக்கு வழிகாட்டப்படுவது தேவையாகும். பல்கலையில் நடைபெறும் போட்டி நிகழ்ச்சிகளில் பற்கேற்று தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான உதவிகளையும் வழங்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளுடன் எமது தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்ளும் போது நீங்கள் தான் உண்மையான கீரோக்களே தவிர அடாவடித்தனம் மூலம் கிடைக்கும் பெருமை நிரந்தரம் இல்லை என்பதை விளங்கிக் கொள்வோம்.

A.N.M.Nawas (sharafi)
3rd year

  • Replies 50
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.