Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டிலான 20ஆவது திருத்தம் குறித்த ஆய்வரங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டிலான 20ஆவது திருத்தம் குறித்த ஆய்வரங்கு

SayanOctober 4, 2020
 
Ilankai-Tamil-Arasu-Katchi-Conference-in-Jaffna-20th-Amendment-1.jpg


 இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான ஆய்வரங்கு யாழில் நடைபெற்றது.

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த ஆய்வரங்கில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடக்கவுரையை ஆற்றியதுடன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கோசலை மதன் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றினார்.

இதில், 20ஆவது திருத்தம் சிறுபான்மை இனங்களுக்கு மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராயப்பட்டது.

Ilankai-Tamil-Arasu-Katchi-Conference-in-Jaffna-20th-Amendment-2.jpg

 

http://www.battinews.com/2020/10/20.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கோசலை மதன்.

 

 

பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

 

 

Edited by zuma

முடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே 20 ஆவது திருத்தச் சட்டம்; யாழில் சுமந்திரன் உரை

இருபதாம் திருத்தச் சட்டம் குடியரசு அரசியல் யாப்பு என்ற பெயரில் முடியாட்சியை ஏற்படுத்தும் திருத்தமே இது” எனக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடந்த ‘இருபதாவது திருத்தமும் அரசியல் விளைவுகளும்” என்ற ஆய்வரங்கில் பங்கேற்று ‘இருபதாவது அரசமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பில் சட்ட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-

“இருபதாம் திருத்தச் சட்டம் குடியரசு அரசியல் யாப்பு என்ற பெயரில் முடியாட்சியை ஏற்படுத்தும் திருத்தமே இது. இருபதாம் திருத்தம் வருவதற்கு முன்னரே முடியரசன் போய்ச் சொல்கிறார் நான் வாயால் சொல்வதெல்லாம் சுற்று நிரூபம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

முன்னர் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அரசியல்வாதி. அவர் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டி ருந்தாலும், ஓர் அரசியல்வாதிக்கு சில விளக்கங்கள் உண்டு. சில விடயங்களை எப்படி செய்யலாம், செய்ய முடியாது என்ற நிதானம் அனுபவத்திலாவது வந்திருக்கும். இன்று நிலைமை அப்படியல்ல.

19 அகற்றுவோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வாக்குறுதி அளித்தார். பத்தொன்பதாம் திருத்தத்தை அகற்றுவோம் என்பதற்கும் நிறைவேற்றதிகாரத்தை வலுவாக்குவோம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. நாட்டவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர்.

இந்த எதிர்ப்பை நாம் வலுவாகத் தெரிவிக்க வேண்டும். நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்காக வாக்களிக்க வேண்டும்” என்றார்.

https://thinakkural.lk/article/76810

20 வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் ஆபத்து குறித்து ஐ.நா வில் வெளிப்படுத்திய அருட்தந்தை

mq1.jpgஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்

அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 : உலகளாவிய கால மீளாய்வு( Item 6 : Universal Periodic Review – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ. குழந்தைசாமி அவர்கள் தனது உரையில்;

கெய்ட்டியின் பிரநிதி உலகளாவிய கால மீளாய்வில் சிறீலங்கா அரசுக்கு பின்வரும் வேண்டுகோளை வைத்தார்: புதிய அரசியல் அமைப்பு அதிகார பகிர்வின் அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக, வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். நடுவர்மன்றம், நீதித்துறை ஆகியவற்றின் சுதந்திரத்தை உருவாக்கி, நிலைநிறுத்தி, உறுதிசெய்து, நடுநிலைமையில் வைத்து பாதுகாக்கவேண்டுமென்று கூறினார். அப்போது புதிய அரசமைப்பை உருவாக்கும்போது உருவாக்க உரிமையுள்ளவர்களுக்கு உரிய இடத்தை வழங்கவேண்டும்.

20வது அரசமைப்பு திருத்தச் சட்டம் ஜனாதிபதிக்கு தனது ஆட்சிகாலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கிறது. சனாதிபதி தனக்கு எத்தனை அமைச்சுகளையும் வைத்துகொள்ளலாம். பாராளுமன்ற பேரவை பாராளுமன்ற உறுப்பினர்களால் மட்டும் உருவாக்கப்படுகிறது. இதனால் பிற பாராளுமன்ற கட்சிகளிருந்து உறுப்பினர்களையும் திறமைவாய்ந்த, ஒழுக்கமுள்ள நபர்களையும் சேர்க்காமல், இலங்கையின் பன்மைத்தன்மையை அழிக்கிறது.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஓராண்டுக்குபிறகு எப்பொழுது வேண்டுமானாலும் தலைமை அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் கலைக்க அதிகாரம் உண்டு. அதுபோல தலைமை அமைச்சர், அவரால் பரிந்துரைசெய்யப்பட்ட இருவர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், இரசாங்க அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோரை எப்பொழுது வேண்டுமானாலும் சனாதிபதி நீக்கலாம், எவரைவேண்டுமானாலும் நியமிக்கலாம். இதனால் நடாளுமன்ற பேரவை அரசியலமைப்பு பேரவையைவிட பலவீனமாகக்கப்பட்டுள்ளது.

தேசிய உருவாக்க அமைப்பையும், சேவையை தணிக்கை செய்யும் அமைப்பையும் கலைத்துவிட்டார். எத்தனை அமைச்சர்கள், இணைஅமைச்சர்கள். இராசாங்க அமைச்சர்கள் வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

ஜனாதிபதியின் சர்வாதிகாரம் இலங்கையில் மக்களாட்சியை அகற்றியது. மக்களாட்சி அழிப்பு சர்வாதிகாரத்தை பெற்றெடுக்கும். அது தமிழ் மக்களை அழித்தொழிக்கும். எனவே இந்த பேரவை தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று கூறி தனது உரையைப் பதிவுசெய்தார்.

https://thinakkural.lk/article/76798

20வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து விமல்வீரவன்சவின் கட்சி அதிருப்தி- மகிந்தவிற்கு கடிதம்

20வது திருத்தத்தின் நகல்வடிவில் காணப்படும் விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைச்சர் விமல்வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

wimal2-300x170.jpg
இது குறித்து கட்சியின் தலைவர் விமல்வீரவன்ச பிரதமர் நியமித்த குழுவிடம் தெரிவித்துள்ளார் என கட்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனினும்; சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் தங்களின் கட்சி தலைவர் சமர்ப்பித்த திருத்தங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என விமல்வீரவன்சவின் கட்சி தெரிவித்துள்ளது.

mahinda4-300x200.jpg
20வது திருத்தத்தின் நகல்வடிவில் இடம்பெற்றுள்ள சில விடயங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சி மக்களின் உணர்வுகளை புறக்கணிப்பது அரசாங்கத்துக்கு கிடைத்த மக்களின் ஆணைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
20வது20வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து விமல்வீரவன்சவின் கட்சி அதிருப்தி- மகிந்தவிற்கு கடிதம்
திருத்தத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ள விமல்வீரவன்சவின் கட்சி தங்களின் அரசியல் நிலைப்பாடு புறக்கணிக்கப்பட்டால் 20வது திருத்தத்திற்கு பொறுப்பு ஏற்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/76795

கூட்டமைப்பின் அரசியல் ஆய்வரங்கு!

IMG_20201004_184412.jpg?189db0&189db0

 

20வது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு ஒன்று இன்று (04) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வு, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த ஆய்வரங்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தொடக்க, உரையை ஆற்றியிருந்தார்.

யாழ்ப்பான பல்கலைக்கழக சட்டத் துறையின் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி திருமதி கோசலை மதன் “20ஆவது திருத்தம்” என்ற தலைப்பில் சிறப்புரையை வழங்கினார்.

 

 

 

23 hours ago, zuma said:

சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கோசலை மதன்.

 

 

பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

 

 

யேசுவே இனி என்ன செய்ய.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.