Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம்.!

mars344-1601973739.jpg

சென்னை: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் நெருங்கி வரப்போகிறது. இந்த அதிசய நிகழ்வு இன்று நிகழப்போகிறது. இந்த அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வினை பல நாடுகளும் செய்து வருகின்றன.

mars-viking-image_1024.jpg

செவ்வாய் கிரகம் இன்று இரவு பூமிக்கு வெகு அருகில் நெருங்கி வருகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 கிலோமீட்டர் ஆகும். செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது.

இந்த வானியல் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணியளவில் நிகழவுள்ளது. இந்த ஆண்டு ஆண்டு இறுதிவரை தினசரியும் சூரிய அஸ்தமனத்திற்கு பின், செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பின், இந்த நிகழ்வானது 2035ல் தான் நிகழும்.

பூமி சூரியனை முழுதாகச் சுற்றி வர 365 நாள்கள் ஆகும். அதேபோல செவ்வாய் சூரியனை முழுதாகச் சுற்றி வர 687 நாள்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட பூமியை விட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகமும், சூரியனும், பூமிக்கு நேரெதிரே வந்துவிடும்.

இன்று இரவு பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகம் தெற்கு வானில் இரவு முழுவதும் தெரியும் மற்றும் நள்ளிரவில் பிரகாசமாக தெரியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/chennai/mars-close-approach-earth-is-today-october-6-2020-399675.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இண்டைகெண்டு பாத்து.... இங்கை, வானம் மப்பும், மந்தாரமுமாக... 🌧 மழை ⛈ பெய்து கொண்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

இண்டைகெண்டு பாத்து.... இங்கை, வானம் மப்பும், மந்தாரமுமாக... 🌧 மழை ⛈ பெய்து கொண்டு இருக்கிறது.

கவலை வேண்டாம் தமிழ்சிறி, இந்த வானியல் நிகழ்வை "இந்த ஆண்டு இறுதிவரை தினசரி சூரிய மறைவுக்குப் பின் வெறும் கண்களால் பார்க்கலாம்" என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஆனால் வெறும் கண்கள் என்று சொல்லியதுதான் இடிக்கிறது. கண்ணாடி போடாவிட்டால் என் முகம் அழகில்லை என்று சொல்கிறார்கள். ராசவன்னியரும் அன்றொருநாள் சொன்னார்.😩

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.