Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் தனித்துவமான வித்துவான்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் தனித்துவமான தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வரலாறு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகப்புகழ்பெற்ற ஈழத்தின் நாதஸ்வர ஆளுமை V.K.பஞ்சமூர்த்தி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கிய தங்க தாத்தா !!!

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது மண்ணின்கலையை பல வருடங்களாக பேணி பாதுகாத்துவரும்  கணபதிப்பிள்ளை இரத்னகோபால் (அண்ணாவியார்) வட்டுவாகல். இந்த யுகத்தில் எமக்குகிடைத்த கலை பொக்கிசம் இன்னும் பல்லாண்டுகாலம்  வாழ்க வாழ்க....


திலகேஸ்வரன் வல்லிபுரம் அவரது குழுவினருக்கும் எமது நன்றி....
தயாரிப்பு -தமிழன் கலைக்கூடம் வட்டுவாகல் 2020

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்,நோய் தீர்க்கும் மருந்து - நாடகம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறையினரின் கலை ஆர்வம் எப்படி உள்ளது? | இன்றைய விருந்தினர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் ஞாபகம் -42 ; மலையகத்தின் முன்னோடிக் கவிஞர் சக்தீ அ. பால ஐயா- தி.ஞானசேகரன்

தி.ஞானசேகரன்

“சிங்கள இனத்தவரின் ஆதிப்பாரம்பரியமும் தோற்றமும்” என்ற கட்டுரையை எழுதியதன் மூலம் ஞானம் சஞ்சிகையுடன் இணைந்து கொண்டவர் சக்தீ பால ஐயா. அவர் சஞ்சிகையின் தொடர்வாசகனாக இருந்தது மட்டுமன்றி காலத்துக்குக்காலம் தனது கருத்துக்களையும் ஞானம் சஞ்சிகையில் பதிவுசெய்து வந்துள்ளார். நான் புறக்கோட்டைக்குச் செல்லும் வேளைகளிலெல்லாம் அவர் வசித்துவந்த டேம்வீதி அலுவலகத்திற்குச் சென்று அவருடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்; ஞானம் சஞ்சிகைக் கான ஆக்கங்களை நேரில் பெற்றிருக்கிறேன்.

%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%தலவாக்கலை லிந்துலை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளை மாபோலையினை வசிப்பிடமாகவும் கொண்ட மலையகத்தின் மூத்த கவிஞர் கலாபூஷணம் சக்தீ பால ஐயா 26.07.1925ஆம் ஆண்டு அப்பாவு விஸ்வநாதன் லக்‌ஷமி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை தலவாக்கலை அரச இருமொழி பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியிலும், உயர்கல்வியை இலங்கை தொழிநுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.

இவர், தனது பத்தாவது வயதிலேயே ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தனது முதல் கவிதையை எழுதியுள்ளார். நான்காம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே ஷமாணவர்மலர்| என்ற இதழினையும், பின்னரான காலத்தில் ஷயுத்தமுனை| என்ற அந்நியராட்சிக்கு எதிராக பத்திரிகையினையும் 1956இல் ‘வளர்ச்சி’ என்ற கலை இலக்கிய சமூக இதழினையும், 1960ஆம் ஆண்டு ‘தமிழ்ஒளி’ என்ற இதழினையும் வெளியிட்டவர்.

படிப்பை முடித்துக்கொண்ட சக்தீ ஒரு ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார்; ஒரு Commercial Artist ஆகத் தொழிலை மேற்கொண்ட இவர் ஒருசில நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் அட்டைப்பட ஓவியங்கள் வரைந்துள்ளார். ‘Ceylon Teachers College’ மற்றும் ‘Wood’s College of Fine Arts’ ஆகிய கலைக்கூடங்களில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தீயின் ஓவியக் கண்காட்சிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் 1948 – 49ஆம் ஆண்டுகளில் பிரசித்தம் பெற்றன.

1956களில் வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் 1970களில் தொழிற்சங்கவாதி வி.கே.வெள்ளையன் ஸ்தாபித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் இதழான ஷமாவலி| பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

1963இல் தினகரனின் கலை மண்டலம் பகுதியில் ‘மேல்நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். அதேகாலகட்டத்தில் சுதந்திரனில் மலைநாட்டு அறிஞர்கள் என்னும் தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார்.

இவர், 1961ஆம் ஆண்டு ‘இலங்கை இந்திய வம்சாவளி பேரவை’ எனும் அமைப்பினை உருவாக்கி அதனை வழிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1956ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஈழத்து மலையகக் கவிஞரான சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon’s Tea Garden எனும் கவிதை நூலினை தமிழாக்கம் செய்து சி.வி.யின் உணர்வுகளை தமிழர்; மத்தியில் கொண்டுசேர்த்த பெருமைக்குரியவர்.

1948இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தகையுடன் மலையக மக்களின் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மலையகத் தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரகத்தில் சக்தீயும் கலந்து கொண்டார்.

1956இன் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை எதிர்த்து 1957இல் தமிழ்த் தலைவர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டார்.
‘தனிவழிக் கவிராயர்’, ‘மலையரசன்’, ‘ஷேமி’ ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன.

1952ஆம் ஆண்டு ‘மனோதத்துவமும் கலையும் போதனா முறையும்’ என்ற நூலையும், 1956இல் ‘சொந்த நாட்டிலே’ எனும் பாடல் நூலையும், 1997ஆம் ஆண்டு ‘சக்தீ பால ஐயா கவிதைகள்’ என்ற கவிதை தொகுப்பினையும், 2011ஆம் ஆண்டு Analysis of Ages of Lives on Earth and Dravidian cultureஎன்கின்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.

1981இல் பஸ்ஸுக்கடியில் விழுந்து விபத்துக்குள்ளான சக்தீ பிற்பட்ட காலத்தில் கால் ஊனமுற்ற நிலையில் சிலகாலம் இருந்தார்.

இவர், தேசிய அருங்கலைச்சபை மற்றும் அரசின் மலையகக் கலாசார மேம்பாட்டுக்குழு ஆகியவற்றின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

இவரது கலை இலக்கியப் பணிகளுக்காக அரசாங்கம் ‘கவிச்சுடர்’ பட்டமளித்துக் கௌரவித்தது (1987). ‘தமிழ் ஒளி’ பட்டமும் விருதும் 1993இல் வழங்கப்பட்டது. இலங்கை கம்பன் கழகம் 1998ஆம் ஆண்டு ‘மூதறிஞர்’ விருதளித்தது. இவர், ‘வாழ்நாள் சாதனையாளர்’, ‘தனிவழி கவிராயர்’, ‘கலாபூஷணம்’ எனப் பல விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். ஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட் 2005 இதழில் இவர் அட்டைப்பட அதிதியாகக் கௌரவிக்கப்பட்டார்.

சக்தீ பால ஐயா 02-08-2013இல் அமரரானார்.

https://thinakkural.lk/article/88075

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரை அரசனாக்கிய குமார் அண்ணை

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரலில் பணியாற்றினேன் | எழுத்தாளர் வெற்றிச்செல்வி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.