Jump to content

தியானம் :: எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தியானம் :: எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி.?

law-of-attraction.jpg 

தியானம் செய்ய உட்கார்ந்தாலே, எண்ணங்கள் தாறுமாறாக ஓடுகிறதா உங்களுக்கு ? இந்த எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? சத்குரு இதில் தரும் விளக்கத்தைக் கேட்டு தெரிந்துகொள்வோம்... 

1) முதலில் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஒரு எண்ணம்தான். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்று தொடங்கிவிட்டால் அதற்கு முடிவே கிடையாது. அது ஒரு முடிவில்லாத போராட்டம். அதற்கு ஒரு வழியே யோகா. எண்ணங்களை தொடர்ந்து இருக்க அனுமதியுங்கள். அவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது தானாகவே அதன் வழி தொடரட்டும்.

எண்ணங்கள் இருக்கின்றன அதை பின் தொடர வேண்டாம் என்ற விழிப்பு நிலை உணர்வு மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும். மெல்ல, மெல்ல எண்ணங்கள் வலுவிழந்துவிடும். இது ஒரு வழி. 

2) இன்னொரு வழி, நீங்கள் செய்யும் பயிற்சிகள். அது பிராணசக்தியைக் கட்டுப்படுத்துவது.

உங்கள் எண்ணமாக இருந்தாலும், இதயமாக இருந்தாலும் உங்கள் அணுக்களாக இருந்தாலும், உடலுக்குள் இருக்கிற அத்தனை இயக்கங்களும் உங்கள் பிராணசக்தியின் அடிப்படையான துணையோடுதான் நடைபெறுகின்றன.

பிராண சக்தியை நீங்கள் கட்டுப்படுத்தினால் எண்ணம் கிடையாது. உங்கள் பிராணசக்தி மீது உங்களுக்கு போதிய ஆளுமையிருந்தால், உங்கள் மனம் மீது, உங்கள் உடல் மீது, உங்கள் உடல் இயக்கங்கள் மீதெல்லாம் உங்களுக்கு ஒரு ஆளுமையிருக்கும். 

இந்தக் கட்டுப்பாடு வருவது என்பது உங்கள் தாகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ, பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்ல. பிராணசக்தியைக் கட்டுப்படுத்தினாலே போதும். எண்ணங்களுக்கும் இதுவே பொருந்தும். பிராணசக்தியைக் கட்டுப்படுத்தினால், எண்ணங்கள் எளிதாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

1_VnpdFZ7VU15XXpDzKNCM1A.jpeg

பிரணாயாமத்தில் கும்பகா, சூன்யகா, நிலைகளின் போது, பெரும்பாலும் அங்கு எண்ணங்கள் இருப்பதில்லை. நீங்களாக முயற்சி செய்து நினைக்க முற்பட்டால் ஒழிய , எண்ணம் அப்போது தோன்றாது. ஒரு முறை கும்பகா நிலையை இருத்தி வைத்துப்பாருங்கள் அப்போது எண்ணம் இருக்காது.

நான் இப்படியே கொஞ்சநேரம் அமர்ந்திருந்தால், ஒரு எண்ணம் கூட வராமல் அமர்ந்திருக்க முடியும். அப்போது நான் தியானம் செய்வதில்லை. நான் எதுவுமே செய்வதில்லை. வெறுமனே அமர்ந்திருக்கிறேன். ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்கலாம் என்று பார்க்கிறேன்.

ஆனால் இப்போதெல்லாம் ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால், சில வரிகளை அல்லது ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்தாலே போதும். அதற்குப் பிறகு அமைதியாக உட்கார்ந்து விடுகிறேன். அந்த ஒரு வரியே அந்த எழுத்தாளரின் மனம் எத்தகையது என்பதை எனக்குச் சொல்லிவிடுகிறது. எண்ண ஓட்டங்களே இல்லாமல் அதை இயல்பாகப் பார்க்க முடியும்.

maxresdefault.jpg 

இதைப்பற்றி நான் பலமுறை கதைத்திருக்கிறேன் "வெறுமனே" பார்ப்பதற்கும், "எண்ணத்தோடு" பார்ப்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. வெறுமனே பார்ப்பதற்கு எண்ண ஓட்டம் தேவையில்லை. பார்ப்பதென்றால் வெறும் கண்களோடு மட்டுமல்ல. கண்கள் மூடிய நிலையிலும் பார்க்க முடியும். எனவே போதிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்கிறபோது, நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஆனால் எண்ணங்கள் அப்போது ஏற்படுவதில்லை. நீங்கள் முழு விழிப்புணர்வோடு இருக்கிறபோது நன்றாகப் பாருங்கள். எண்ண ஓட்டங்களே இருக்காது. பொதுவாக எண்ணங்கள் வருகிறபோது உங்கள் விழிப்புணர்வு போயிருக்கும். ஒருவேளை தியானத்தின்போது, எண்ண ஓட்டங்களை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இல்லையென்றால் அது பொதுவாக அப்படித்தான்.

எண்ண ஓட்டங்கள் இருக்கிற போதே, முழு விழிப்புணர்வோடு இருக்கிற சம்யமா முறையை பின்பற்றினால் முடியும்.  

அதற்கு, செயல்முறைப் பயிற்சி தேவை. தற்காலத்தில் செயல்முறைப் பயிற்சி குறைகிறது என்று கருதுகிறேன். ஏனென்றால், தற்போது ஆன்மீகம் என்பது ஒரு தொழிலாகிவிட்டது. போராட்ட வாழ்க்கை ஒரு புறமும், ஆன்மீகம் ஒரு புறத்திலும் இருக்கிறது. பரவாயில்லை. இப்போது உங்கள் வாழ்க்கையை  நீங்கள் இந்த விதமாக அமைத்திருக்கிறீர்கள்.

ஆனால் இப்பிறவியின் எல்லையை நீங்கள் பார்க்க விரும்பினால், இந்த உள்நிலை உலகம் எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணர விரும்பினால், அதற்கென்று மேலும் சில தேவைகள் உண்டு.

சில சின்ன சின்ன பரவசங்கள், இந்த சின்ன சந்தோஷங்கள் உங்களுக்குப் போதுமென்றால் எந்தவித செலவும் இல்லாத, பின் விளைவு இல்லாத போதைதான் இந்த யோகா என்று நினைக்கிறீர்கள். யோகா வகுப்பிற்கு வந்து சிறிது நல்ல முன்னேற்ற நிலையை உணர்கிறீர்கள். அவ்வளவுதான். சிறிது மதுவையோ அல்லது போதைப் பொருளையோ பயன்படுத்தி ஒரு வித பரவச நிலைக்குப் போவதுபோல, இதிலேயே குறுகிய வட்டதில் நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள் என்றால் உங்களுடைய இப்போதைய பிறவியின் கர்மா இப்படித்தான்.

இதைத்தாண்டி இன்னும் போக வேண்டுமென்றால் இன்னும் ஆழமான ஆன்மீகப் பயிற்சி நிலைகள் வேண்டும். அதற்கு நீங்கள் மனதில் முதலிடத்தைத் தர வேண்டும். அப்போது உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

Simple-Meditation-Technique-to-Harvest-t

ஒரு பூவின் இதழ்கள் உதிர்கிற மாதிரி உங்களை நீங்கள் உதிர்த்துக்கொள்ள முடியும். நாளுக்கு நாள் அது நிகழும். பிறகு எல்லாமே மறைந்துவிடும். எது உண்மையோ அது மட்டும் நிலைக்கும். உதிர்ந்து போகிற அனைத்தும் உதிர்ந்து போகட்டும். உதிர்ந்து போகப் போகிற விடயங்களை இருத்தி வைத்துக் கொள்வதற்காக, வாழ்வின் பெரும் பகுதியை நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எப்போதும் உங்களை விட்டு உடலோடு விலகிக் கொள்கிற விடயங்களைத்தான் நிலை நிறுத்திக் கொள்ள அதிகம் முயற்சி செய்கிறீர்கள். எது விழப்போகிறதோ அது விழட்டும். எல்லாமே விழட்டும். விழ முடியாத என்ற ஒன்று உண்டு. விழ வேண்டியவற்றை விழ அனுமதித்தால், அதை நீங்கள் எளிதில் அணுகிட முடியும்

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ennangalai-kattupaduthuvathu-eppadi

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.