Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.!

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.!

லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன்.

இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற முயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவி வரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

INrarKUxDx8vcVx3iyR8.jpg

போர் ஓய்வு மீறல்…..!

திருமதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒருவாரப் போர் ஓய்விற்கு எதிராக சிறிலங்காப் படையினர் 17.11.1994 நெடுங்கேணியில் பதுங்கித் தாக்கியதில் எமது மூத்த தளபதி லெப்.கேணல் மல்லி வீரச்சாவை அடைந்தான். அவனது தலையை படையினர் கோரமாக வெட்டி எடுத்துச் சென்றனர்.

விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு வார கால போர் ஓய்வையும், இப்போர் ஓய்வு தொடர்பாக ‘விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்கம் அதற்குப் பிரதிகூலமாக நடந்துகொள்ளும். மோதல்கள் தவிர்க்கப்படுமானால் அது சம்பிரதாயபூர்வ போர் நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும்’ என்று சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் கேணல் அனுரத்த ரத்வத்த அறிவித்ததையும் உதாசீனப்படுத்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக நடாத்தப்பட்ட தாக்குதல் ஆறாவது போர் ஓய்வு மீறல் நடவடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் அதே பகுதியில் இரு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு அரசகரும மொழியினால் தூசிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதைவிடவும் மட்டக்களப்பு அரிப்பு கடல் பகுதி, வடமராட்சிக் கடற்பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும் சாவகச்சேரியில் பயணிகள் பேருந்து உலங்குவானூர்தியிலிருந்து தாக்குதலுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. நெடுங்கேணியில் வீரச்சாவெய்திய மூத்த தளபதி லெப்.கேணல் மல்லியின் தலையை வெட்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அதனைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். 1990க்குப் பின்னர் இவ்வாறான செயலில் இப்பகுதி இராணுவத்தினர் ஈடுபடுவது இரண்டாவது தடவையாக இருக்கின்றது. 1987இல் மன்னார் ஆட்காட்டி வெளியில் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்டரின் புதைகுழியைத் தோண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அவரது தலையையும் வெட்டியெடுத்துச் சென்றிருந்தனர். கொலைவெறியும், ஒழுக்கமும்,கட்டுப்பாடும் அற்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் செயல்கள் கட்டுமீறிச் செல்கின்ற வேளையில் எல்லாம் சிம்ம சொப்பனமாய் நின்ற அந்த வீரர்களின் பெயர்களைக் கேட்டாலே நடுங்குகின்றவர்களாய் இராணுவம் இருந்ததின் எதிர் விளைவுகளாய் அவர்களது இச் செயல்கள் அமைகின்றன.

மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் இவ் இழி செயலுக்குரியவரின் கூடாரமாய் சிறிலங்கா இராணுவம் மாறிவருவதை இச்செயல்கள் காட்டுகின்றன.

N8ZJhVEAVYQVlekzuQ6X.jpg

ஆர்த்தெழும் கடலென மக்கள்…..!

இத் தாக்குதலில் வீரமரணமடைந்த மல்லிக்கும் அவருடன் வீரமரணமடைந்த வீரவேங்கை அருளப்பனுக்கும் அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்திற்கு மாவீரரின் பூதவுடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஒலிபெருக்கி வாகனம் முன்செல்ல புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மாணவர்களின் ‘பாண்ட்’ வாத்திய இசையுடன் மாணவர்கள் தொடர அரச ஊழியர்கள், விடுதலைப் புலிகள், காவல்துறையினர் அனைவரும் அணிவகுத்துச் சென்றனர்.

வன்னி மாவட்ட அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் புவிதரன் – முல்லைக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் இசையருவன் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். மல்லியின் வீரச்சாவினால் புதுக்குடியிருப்பு சோகமாயிருந்தது. வீதியெங்கும் கறுப்புக் கொடிகள் பறந்தன. தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதுவரை காணாத அளவிற்கு பெருந்தொகையான மக்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

வெளியீடு :-எரிமலை இதழ் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://www.thaarakam.com/news/5002f4cb-31a2-49e2-b653-ec7c64e51c50

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன்ட் கேணல் மல்லி

Our-Nation-Upright-Lieutenant-Colonel-Ma

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப்டினன்ட் கேணல் மல்லி.

லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன்.

இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.

இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற முயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவி வரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

போர் ஓய்வு மீறல்…

திருமதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒருவாரப் போர் ஓய்விற்கு எதிராக சிறிலங்காப் படையினர் 17.11.1994 நெடுங்கேணியில் பதுங்கித் தாக்கியதில் எமது மூத்த தளபதி லெப்.கேணல் மல்லி வீரச்சாவை அடைந்தான். அவனது தலையை படையினர் கோரமாக வெட்டி எடுத்துச் சென்றனர்.

விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு வார கால போர் ஓய்வையும், இப்போர் ஓய்வு தொடர்பாக ‘விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்கம் அதற்குப் பிரதிகூலமாக நடந்துகொள்ளும். மோதல்கள் தவிர்க்கப்படுமானால் அது சம்பிரதாயபூர்வ போர் நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும்’ என்று சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் கேணல் அனுரத்த ரத்வத்த அறிவித்ததையும் உதாசீனப்படுத்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக நடாத்தப்பட்ட தாக்குதல் ஆறாவது போர் ஓய்வு மீறல் நடவடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் அதே பகுதியில் இரு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு அரசகரும மொழியினால் தூசிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதைவிடவும் மட்டக்களப்பு அரிப்பு கடல் பகுதி, வடமராட்சிக் கடற்பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும் சாவகச்சேரியில் பயணிகள் பேருந்து உலங்குவானூர்தியிலிருந்து தாக்குதலுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. நெடுங்கேணியில் வீரச்சாவெய்திய மூத்த தளபதி லெப்.கேணல் மல்லியின் தலையை வெட்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அதனைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். 1990க்குப் பின்னர் இவ்வாறான செயலில் இப்பகுதி இராணுவத்தினர் ஈடுபடுவது இரண்டாவது தடவையாக இருக்கின்றது. 1987இல் மன்னார் ஆட்காட்டி வெளியில் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்டரின் புதைகுழியைத் தோண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அவரது தலையையும் வெட்டியெடுத்துச் சென்றிருந்தனர். கொலைவெறியும், ஒழுக்கமும்,கட்டுப்பாடும் அற்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் செயல்கள் கட்டுமீறிச் செல்கின்ற வேளையில் எல்லாம் சிம்ம சொப்பனமாய் நின்ற அந்த வீரர்களின் பெயர்களைக் கேட்டாலே நடுங்குகின்றவர்களாய் இராணுவம் இருந்ததின் எதிர் விளைவுகளாய் அவர்களது இச் செயல்கள் அமைகின்றன.

மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் இவ் இழி செயலுக்குரியவரின் கூடாரமாய் சிறிலங்கா இராணுவம் மாறிவருவதை இச்செயல்கள் காட்டுகின்றன.

Commander-Lieutenant-Colonel-Malli.jpg

ஆர்த்தெழும் கடலென மக்கள்…

இத் தாக்குதலில் வீரமரணமடைந்த மல்லிக்கும் அவருடன் வீரமரணமடைந்த வீரவேங்கை அருளப்பனுக்கும் அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்திற்கு மாவீரரின் பூதவுடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஒலிபெருக்கி வாகனம் முன்செல்ல புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மாணவர்களின் ‘பாண்ட்’ வாத்திய இசையுடன் மாணவர்கள் தொடர அரச ஊழியர்கள், விடுதலைப் புலிகள், காவல்துறையினர் அனைவரும் அணிவகுத்துச் சென்றனர்.

வன்னி மாவட்ட அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் புவிதரன் – முல்லைக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் இசையருவன் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். மல்லியின் வீரச்சாவினால் புதுக்குடியிருப்பு சோகமாயிருந்தது. வீதியெங்கும் கறுப்புக் கொடிகள் பறந்தன. தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதுவரை காணாத அளவிற்கு பெருந்தொகையான மக்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

நன்றி: எரிமலை இதழ்கள் (தை 1995 – மாசி 2002).

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-malli/

Link to comment
Share on other sites

  • 11 months later...

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
    • 18 MAY, 2024 | 08:44 AM   முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183837
    • வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் என நீதிமன்றில் தெரிவிப்பு Published By: VISHNU   18 MAY, 2024 | 03:26 AM வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார். இதன் பின் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார். இவ் வழக்கு அடுத்த தவணைக்காக யூன் மாதம் 7 ஆம் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.  இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/183835
    • வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று(17) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301897
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.