Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஐப்பசி , 2006

ராணுவம், கருணா துணைப்படை இணைந்து நடத்திய தாக்குதல் முறியடிப்பு - புலிகள் தெரிவிப்பு

புலிகளின் திருகோணமலை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் எழிலனின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை மீது ராணுவமும் கருணா துணைப்படையும் இணைந்து நடத்திய தாக்குதல் முயற்சியை புலிகள் முறியடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 11 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்த இச்சண்டையில் ராணுவத்திற்கும் துணைப்படைக்கும் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், ராணுவம் வாழைச்சேனைப் முகாமிலிருந்து நடத்திய செல்த் தாக்குதலில் 7 சிவிலியன்களும் காயமடைந்ததாகத் தெரிகிறது. இத்தாக்குதலில் குறைந்தது 30 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் எழிலன் மேலும் கூறினார். கஜுவத்தை ராணுவ முகாமிலிருந்தும், சின்ஹபுற முகாமிலிருந்து  தெற்கு வாகரையில் அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பனிச்சங்கேணி நோக்கியும், கட்டுமுறிவு நோக்கியும் நடத்தப்பட்ட இத்தாக்குதலை தாம் முறியடித்துவிட்டதாகக் கூறும் எழிலன், பனிச்சங்கேணியில் தரையிறக்கத் தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ள முயன்ற கடற்படையின் நடவடிக்கையினையும் கடற்புலிகள் முறையடித்துவிட்டதாகவும் மேலும் கூறினார்.

இச்சண்டைகளின்பொழுது கொல்லப்பட்ட மூன்று ராணுவத்தினரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை 5 புலிகளும்  இம்மோதல்களில் மாவீரர்களாகியுள்ளதோடு மேலும் 7 போராளிகள் காயங்களுக்குள்ளானார்கள். 

"சுமார் இரு டிராக்டர் வண்டிகளில் அவர்கள் தமது கொல்லப்பட்ட சகாக்களை எடுத்துச் செல்வதை நாம் பார்த்தோம். விமானப்படையின் கிபிர் விமானங்கள் எமது பகுதிகள் மீது குறைந்தது 4 தடவைகள் குண்டுவீச்சில் ஈடுபட்டதுடன், வாழைச்சேனைக் காகித ஆலையிலிருந்து எமது பகுதிமீது கடுமையான செல்வீச்சினை ராணுவம் நடத்திவருகிறது" என்றும் அவர் கூறினார்.

இளவயது துணைப்படையினரை ராணுவம் இந்த மோதல்களில் ஈடுபடுத்தியிருந்ததாகக் கூறும் எழிலன், கொல்லப்பட்டவர்களில் துணைப்படையினரும் அடங்கும் என்று கூறினார். 

இதேவேளை பொலொன்னறுவை வைத்தியசாலைச் செய்திகளின்படி காயப்பட்ட ராணுவத்தினரையும் கருணா துணைப்படையினரையும் தாம் பராமரித்துவருவதாகவும் குறைந்தது 5 துணைப்படையினர் காயப்பட்டவர்களில் அடங்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.

  • Like 1
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, ஐப்பசி , 2006

உடனிருந்தவரால் 3 கருணா துணைப்படையினர் கொலை, எண்மர் காயம்

கருணா துணைப்படையில் சில நாட்களுக்கு முன்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு உறுப்பினர் தனது சகாக்கள் தூங்கிக்கொண்டிருந்தவேளை அவர்கள் மீது கைய்யெறிகுண்டுகளைப் பாவித்தும் துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தி மூவரைக் கொன்றதுடன் இன்னும் எண்மரைக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்.

கறுப்புப் பாலம் ராணுவ முகாமிற்கு அருகிலிருக்கும் செங்கலடி பிள்ளையார் கோயிலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கொல்லப்பட்டவர்கள் எம் வாசு, கே அருணன், எம் மனோ என்று அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களது உடல்கள் வெலிக்கந்தை வைத்தியசாலை பிரேதவறையில் வைக்கப்பட்டுள்ளன.

காயப்பட்டவர்களான  கஜன் (39), ஐங்கரன் (37), இமயவன்(21), அருணன் (40), சாந்தன்(35), சுந்தரமூர்த்தி(27), சிறிதவன்(46), கலையரசன்(16) ஆகியோர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். 

தாக்குதலை நடத்தியவர் தப்பிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, ஐப்பசி , 2006

கருணா பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார் - லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரை 

the Times Logo transparent PNG - StickPNG

உள்நாட்டு மற்றும் சர்வதேச மனிதநேயத் தொண்டு நிறுவனங்களை ஆதாரம் காட்டி லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கையான "தி டைம்ஸ்" வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை கருணாவும் அவரது சகாக்களும் குறைந்தது 900 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

karuna-271006.jpg

இந்தது துணை ராணுவக் குழுவின் நடவடிக்கைகள் இலங்கையில் தற்போது நடந்துவரும் வன்முறைகளுக்குப் பிரதானமான காரணமாக அமைவதோடு, குறைந்தது 2000 அப்பாவிகள் இவ்வருடத்தில் கொல்லப்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறதென்றும், 2002 இல் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடிப்படையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெரும் நெருக்கடியில் தள்ளி முற்றான போர் ஒன்றினை நோக்கி நாட்டினை இழுத்துச் செல்லும் ஒற்றைக் காரணியாக கருணா குழுவின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் இச்செய்தி மேலும் கூறுகிறது. 

டைம்ஸ் நிருபர் மட்டக்களப்பில் பொதுமக்களுடனும், தொண்டு நிறுவன ஊழியர்களுடனும் பேசியிருந்தார். அவர்களின் கருத்துக்களை இப்பத்திரிக்கை பின்வருமாறு வெளியிட்டது.

"அரசாங்கத்திற்காகவே கருணா சிறுவர்களை நூற்றுக்கணக்கில் கடத்துவதாகவும், அவர்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கண்காணிப்புக் குழுவினரும், தொண்டு நிறுவன அதிகாரிகளும் உறவினர்களும், சாட்சிகளும் கருதுகிறார்கள்".

"எமது பிள்ளைகளுக்கு நடக்கும் அநியாயத்தில் இந்த அரசாங்கத்திற்கும் பங்கிருக்கின்றதென்பதை மக்கள் நம்புகிறார்கள்" என்று ஒரு தொண்டு நிறுவன அதிகாரி கூறினார்.

"கருணா குழுவிற்கும் அரசுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக இங்கு மக்கள் நினைக்கவில்லை. அவரை இயக்குவது அரசுதான் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை" என்று பெற்றோர் ஒருவர் கூறினார்.

"கறுப்பு உடையிலும், சாதாரண உடையிலும் கனரக ஆயுதம் தரித்த கருணா குழு உறுப்பினர்கள் ராணுவ வாகனங்களிலும், பொலீஸ் வாகனங்களிலும் அவர்களுடன் சேர்ந்து பவனிவருவதை நாம் தினமும் காண்கிறோம்" என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும், மட்டக்களப்பு நகர்வாழ் மக்களும் தெரிவிக்கின்றனர்.

"வெலிக்கந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கருணா குழுவின் முகாம்களுக்கு பல டசின் கணக்கான ராணுவச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி கடத்தப்பட்ட சிறுவர்களை கருணா குழு இழுத்துச் செல்ல ராணுவம் அனுமதிக்கின்றது" என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவிக்கின்றது.

"கருணா துணைப்படையின் அரசியல்த்துறை எனும் பெயரில் பல அலுவலகங்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அக்குழு அமைத்துவருவது அரசின் துணையுடனேயே இது நடப்பதை உறுதிப்படுத்துகிறது" என்று அப்பத்திரிக்கை மேலும் தெரிவிக்கிறது.

தமது பிள்ளைகளை கருணா குழு பலவந்தமாகப் பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சியிலும், கட்டாய வேலையிலும் அமர்த்தியிருப்பதை வெளியில் சொன்னால் கொல்லப்படுவோம் என்கிற அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் தாய்மாரின் சாட்சியங்களையும் நிருபர் பதிவுசெய்தார்.

இப்பத்திரிக்கையின் அரசியல் ஆய்வாளரிடம் இந்த நிருபர் வினவியபோது, "இன்று நடைபெற்றுவரும் சம்தானப் பேச்சுவார்த்தைகளின் பிரதான முட்டுக்கட்டையாக இருப்பது இக்குழுவினரின் செயற்பாடுகள்தான்" என்று தெரிவித்திருப்பதோடு, "நீண்டகாலமாக இலங்கையில் இடம்பெற்றுவரும் கொடிய யுத்தத்திற்கான சமாதானத் தீர்வொன்றிற்கான முயற்சிகளை இக்குழு முற்றாகக் குழப்பப் போகிறது" என்றும் கூறினார். 

அந்த ஆய்வாளர் மேலும் கூறுகையில், "வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களிடையே பிரதேசவாதத்தினை ஊக்குவிப்பதன் மூலம், புலிகளை கூறுபோட்டு இறுதியில் முற்றாக  அழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலின் இதயமாக கருணா செயற்பட்டு வருகிறாரென்பது தெளிவாகத் தெரிகிறது" என்றும் அவர் கூறினார்.

புலிகளையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் இப்பத்திரிக்கை கருணா துணைப்படையின் அரசியல்ப் பிரிவு முக்கியஸ்த்தர் பிரதீப் உடனும் செவ்வியொன்றினை மேற்கொண்டதுடன், சிறுவர்களை தாம் இணைப்பதில்லை எனும் அவரது பசப்பலினையும் மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்தது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, கார்த்திகை , 2006

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் கருணா துணைப்படையினரால் படுகொலை

Nadarajah_Raviraj_MP.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் (44) வெள்ளியன்று காலை 8:30 மணியளவில் கொழும்பில் கருணா துணைப்படையினரால் பாதுகாப்புச் செயலாளர்ர் கோத்தாபயவின் திட்டத்தின்படி படுகொலை செய்யப்பட்டார். கொலைமுயற்சியின்போது படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த ரவிராஜ், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருமுறை  தெரிவாகியதுடன் யாழ்நகர மேயராகவும் பணியாற்றியிருந்தார். மிகவும் வெளிப்படையாகத் தயக்கமின்றி பேசிவந்த ரவிராஜ், கொழும்பிலும் வடக்குக் கிழக்கிலும் அரசாலும் துணைப்படையினராலும் நடத்தப்பட்டு வந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை பாராளுமன்றத்திலும் வெளியிலும் முன்வைத்து வந்தார். கிழக்கில் வாகரைப் பகுதியில் அகதிகளாகத் தஞ்சம் கோரியிருந்த மக்கள் மேல் ராணுவம் வேண்டுமென்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 47 அப்பாவிகளின் படுகொலைகளைக் கண்டிக்கும் பேரணியில் கலந்துகொண்ட ரவிராஜ், இப்படுகொலைகள் தொடர்பாக தனது விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார். 

Raviraj_01.jpg

நாரஹேன்பிட  மன்னிங் டவுன் பகுதியில் வசித்துவந்த ரவிராஜ், வெள்ளியன்று காலை தனது அலுவலகத்திற்குச் செல்லும் நிமித்தம் தனது காரில் ஏறும்போது மிக அருகாக உந்துருளியில் வந்த கருணா துணைப்படை துப்பாக்கிதாரிகள் அவர்மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர்.  காலை 7 மணிமுதல் 8 மணிவரை ஒலிபரப்பாகும் டெரன நேரடி நிகழ்ச்சியில் பங்குபற்றிவிட்டு 8:20 மணிக்கே அவர் அன்று வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

41 Nadarajah Raviraj Photos and Premium High Res Pictures - Getty Images

காயப்பட்ட திரு ரவிராஜின் மருத்துவ சேவைகளைப் பொறுப்பேற்றிருந்த வைத்தியர் ஹெக்டர் வீரசிங்க ரவிராஜ் அவர்கள் 9:20 மணிக்கு மரணித்ததாக குறிப்பிட்டார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது இறந்துவிட்டதாகத் தெரியவருகிறது.

41 Nadarajah Raviraj Photos and Premium High Res Pictures - Getty Images

" தமிழ் மக்களின் ஜனநாயக் குரல் ஒன்று இன்று இலங்கையின் தலைநகரில் மெள்னிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து இப்படுகொலைகள் நடந்தேறுகின்றன. பாரிய மனித அவலம் ஒன்றினை முகம்கொடுத்துக்கொண்டு, பொருளாதாரத் தடையினுள் வாழ்ந்துவரும் லட்சக்கணக்கான அப்பாவிகளுக்காக ரவிராஜ் குரல் கொடுத்து வந்தார். தோல்வியடைந்த  ஜனநாயகத்தில் நடைபெறும் இந்த அரசின் முன்னால் ஜனநாயக ரீதியில் தனது வாதத்தினை முன்வைக்கலாம் என்று அவர் நம்பினார். அடக்குமுறையாளர்களின் களமான பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அவரது குரலால் அடக்குமுறையாளர்கள் சீற்றம் கொண்டிருந்தனர். தமிழர்களின் ஜனநாயகக் குரல்களை நசுக்கி அழித்துவிடுவதன்மூலம் இலங்கை அரசும், துணைப்படையினரும் தமிழரின் உரிமைப்போராட்டத்தினை அழித்துவிடலாம் என்று நினைக்கின்றனர்  " என்று செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி டிரிபேக் கல்லூரியிலும் பின்னர் பரி யோவான் கல்லூரியிலும் பயின்றார். அவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 1987 இல் இருந்து பணியாற்றினார்.

வடக்குக் கிழக்கு மற்றும் கொழும்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட பல தமிழர்களுக்கு தனியாகவும் தனது சட்ட அலுவலகம் மூலமாகவும் பல உதவிகளை ரவிராஜ் வழங்கிவந்தார்.

TamilNet

மனிதவுரிமை வழக்கறிஞராக பல வருடங்கள் சேவையாற்றிய ரவிராஜ் தனது முதல் அரசியல் பணியாக யாழ்ப்பாண உதவிமேயராகப் பதவி வகித்தார்.

அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் 1987 இல் இணைந்ததுடன், 1990 இல் மத்திய குழு உறுப்பினராகவும், 1998 இல் கட்சியின் சட்ட ஆலோசகராகவும், 2000 இல் கட்சியின் அரசியல்த்துறை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

2001 இல் யாழ்ப்பாண மேயராக நியமிக்கப்பட்ட ரவிராஜ் 2001 இல் கட்சியின் நிர்வாகச் செயலாளராகவும் ரவிராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக இன்னும் சில மனிதவுரிமை செயற்பாட்டாளர்களுடன் இணைந்து கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் பற்றிய ஆவணப்படுத்தல்கள், பதிவிடுதல்கள் என்பவற்றில் ஆர்வமாக அவர் ஈடுபட்டு வந்தார்.

Sri Lanka Acquits Five Accused in Lawmaker's 2006 Death | Voice of America  - English

கொல்லப்பட்ட ரவிராஜிற்கு பதின்ம வயதில் ஒரு மகளும் 11 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். அவரது மனைவியான சசிகலா ஒரு பட்டதாரியென்பதுடன் கொழும்பு பிஷப் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13 கார்த்திகை 2006

கருணா துணைப்படையினருக்காக சிறுவர்களை ராணுவம் கடத்துகிறது - ஐ நா.

allan-rock.jpg

கருணா துணைப்படை எனப்படும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கூலிப்படைக்கு சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாய பயிற்சியளிப்பதற்கு இலங்கை ராணுவம் உதவிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிருவர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களைக் கண்காணிக்கும் அமைப்பின் சிறப்பு ஆலோசகரான அலன் ரொக் எனப்படும் அதிகாரியே இந்த தகவலை அண்மையில் தான் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின்பொழுது ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

"இலங்கை ராணுவம் கருணா துணைப்படைக்கு சிறுவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்பதற்கான நேரடியானதும், மறைமுகமானதுமான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். கிராமம் கிராமமாக சிறுவர்களைச் சுற்றிவளைத்து இழுத்துச் செல்லும் ராணுவம் அவர்களைக் கருணா குழுவிடம் ஒப்படைக்கிறது. கருணா துணைப்படைக்கும் ராணுவத்துக்குமான தொடர்பினை எனது 10 நாள் ஆய்வுகளின்போது என்னால் காணமுடிந்தது. கருணா துணைப்படையில் இணைப்பதற்காக கிழக்கின் பல கிராமங்களில் இருந்து 13 முதல் 14 வயது சிறுவர்களை இலங்கை ராணுவம் சுற்றிவளைத்துப் பிடித்து கருணா குழுவினரிடம் ஒப்படைக்கிறது. இதற்கான நேரடியான, கண்ணால் கண்ட சாட்சியசங்களை நாம் சேகரித்து வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கத்தின்மேல் ஐ நா அதிகாரியொருவர் இவ்வாறான வெளிப்படையான குற்றச்சாட்டினை முன்வைப்பது இதுவே முதன்முறையாகும். 

புலிகள் மீது சிறுவர்களை இணைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டினை இதே அதிகாரிகள் முன்வைத்து வந்தபோதிலும், கடந்த மாதத்திலிருந்து 17 வயதிற்குக் குறைந்தவர்களை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்கிற புலிகளின் நிலைப்பாட்டினை இவ்வதிகாரி வரவேற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13 கார்த்திகை 2006

கருணா துணைப்படையினருக்காக சிறுவர்களை ராணுவம் கடத்துகிறது - ஐ நா.

allan-rock.jpg

கருணா துணைப்படை எனப்படும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கூலிப்படைக்கு சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாய பயிற்சியளிப்பதற்கு இலங்கை ராணுவம் உதவிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிருவர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களைக் கண்காணிக்கும் அமைப்பின் சிறப்பு ஆலோசகரான அலன் ரொக் எனப்படும் அதிகாரியே இந்த தகவலை அண்மையில் தான் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின்பொழுது ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

"இலங்கை ராணுவம் கருணா துணைப்படைக்கு சிறுவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்பதற்கான நேரடியானதும், மறைமுகமானதுமான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். கிராமம் கிராமமாக சிறுவர்களைச் சுற்றிவளைத்து இழுத்துச் செல்லும் ராணுவம் அவர்களைக் கருணா குழுவிடம் ஒப்படைக்கிறது. கருணா துணைப்படைக்கும் ராணுவத்துக்குமான தொடர்பினை எனது 10 நாள் ஆய்வுகளின்போது என்னால் காணமுடிந்தது. கருணா துணைப்படையில் இணைப்பதற்காக கிழக்கின் பல கிராமங்களில் இருந்து 13 முதல் 14 வயது சிறுவர்களை இலங்கை ராணுவம் சுற்றிவளைத்துப் பிடித்து கருணா குழுவினரிடம் ஒப்படைக்கிறது. இதற்கான நேரடியான, கண்ணால் கண்ட சாட்சியசங்களை நாம் சேகரித்து வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கத்தின்மேல் ஐ நா அதிகாரியொருவர் இவ்வாறான வெளிப்படையான குற்றச்சாட்டினை முன்வைப்பது இதுவே முதன்முறையாகும். 

புலிகள் மீது சிறுவர்களை இணைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டினை இதே அதிகாரிகள் முன்வைத்து வந்தபோதிலும், கடந்த மாதத்திலிருந்து 17 வயதிற்குக் குறைந்தவர்களை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்கிற புலிகளின் நிலைப்பாட்டினை இவ்வதிகாரி வரவேற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.


 

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21 கார்த்திகை 2006

திங்கட்கிழமைக்கு முன்னர் உங்கள் பாராளுமன்ற பதவிகளை ராஜினாமாச் செய்யுங்கள், இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் - கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா பகிரங்க கொலை எச்சரிக்கை

Lankan govt orders police probe into ex-LTTE deputy leader's claim of  killing 2,000 to 3,000 troops - World News

கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தர் குணானன் எனபவர் கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள நேரடி கொலை அச்சுருத்தலில், திங்கட்கிழமைக்கு முன்னதாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம் என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு நகரில் ராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படும் இவர் வெளிப்படையாகவே அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள், செயற்பாட்டாளர்களுக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டிவருவதுடன் வெளிப்படையான அச்சுருத்தல்களையும் விடுத்து வருகிறார்.

இவரது அச்சுருத்தலினையடுத்து இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ள கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதுபற்றி மேலதிகத் தகவல்களை வழங்கியிருக்கிறார்கள். திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில் தமக்கு கருணாவினால் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க கொலை அச்சுருத்தல்பற்றி தெரிவிக்கும்போது, கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால், இதுவரை கொல்லப்பட்ட குறைந்தது 7 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போல் நீங்கள் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அச்சுருத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கடிதத்தின் தமிழாக்கம் கீழே,

கெளரவ சபாநாயகர் அவர்களுக்கு,

கிழக்கின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணாவால் விடுக்கப்பட்டிருக்கும் கொலைப்பயமுருத்தல்

கடந்த ஞாயிறு, கார்த்திகை 19 அன்று மட்டக்களப்பு அம்பாறை, திருமலை மாவட்டங்களின் தமிழரசுக் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தரான குனானன் என்பவரிடமிருந்து தொலைபேசிமூலமான கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் நாம் எமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால் நிச்சயம் கொல்லப்படுவீர்கள் என்று அவர் எமக்கு தெரிவித்திருக்கிறார்.

தன்னை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் மட்டக்களப்பு அரசியல்த்துறைப் பணியகத்திலிருந்து பேசும் குணானன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலகவில்லையென்றால், இறந்துபோன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் "மாமனிதர்" விருதிற்கு உரித்துடையவர்கள் ஆவீர்கள் என்று மிரட்டினார். எமது தலைவரான கருணா அம்மாணின் கட்டளையின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் எம்மிடம் கூறினார்.

இதுவரை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளை அடிப்படியாகக் கொண்டு, எம்மீது தற்போது விடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கொலை எச்சரிக்கையினை நீங்கள் மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசேப் பராரசிங்கமும், நடராஜா ரவிராஜும் இதே குழுவினரால் எம்மைப்போன்றே கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நாட்களில் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவருகிறோம்.

எம்மீதான இந்த கொலை எச்சரிக்கைகள் எமது மக்களுக்கான சேவையினை நாம் திறம்படச் செய்வதைத் தடுத்துக்கும் நோக்கிலேயே விடுக்கப்படுகின்றன என்பதனை தாங்கள் அறிவீர்கள். ஆகவே இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் நலனில் அக்கறையும், பொறுப்பும் கொண்ட நீங்கள் எம்மீது விடுக்கப்பட்டிருக்கும் இக்கொலை எச்சரிக்கையினை கடந்து எமது மக்களுக்கு நாம் சேவை செய்வதற்கு ஏதுவாக உங்கள் அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான பாதுகாப்பினை  ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி.

த. கனகசபை (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிரமன் (மட்டக்களப்பு), ச. ஜெயநந்தமூர்த்தி (மட்டக்களப்பு), ப. அரியநேந்திரன் (மட்டக்களப்பு), க. பத்மநாதன் (அம்பாறை), ச. சந்திரநேரு (தேசியப்பட்டியல்).


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21 கார்த்திகை 2006

திங்கட்கிழமைக்கு முன்னர் உங்கள் பாராளுமன்ற பதவிகளை ராஜினாமாச் செய்யுங்கள், இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் - கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா பகிரங்க கொலை எச்சரிக்கை

Lankan govt orders police probe into ex-LTTE deputy leader's claim of  killing 2,000 to 3,000 troops - World News

கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தர் குணானன் எனபவர் கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள நேரடி கொலை அச்சுருத்தலில், திங்கட்கிழமைக்கு முன்னதாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம் என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு நகரில் ராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படும் இவர் வெளிப்படையாகவே அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள், செயற்பாட்டாளர்களுக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டிவருவதுடன் வெளிப்படையான அச்சுருத்தல்களையும் விடுத்து வருகிறார்.

இவரது அச்சுருத்தலினையடுத்து இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ள கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதுபற்றி மேலதிகத் தகவல்களை வழங்கியிருக்கிறார்கள். திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில் தமக்கு கருணாவினால் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க கொலை அச்சுருத்தல்பற்றி தெரிவிக்கும்போது, கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால், இதுவரை கொல்லப்பட்ட குறைந்தது 7 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போல் நீங்கள் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அச்சுருத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கடிதத்தின் தமிழாக்கம் கீழே,

கெளரவ சபாநாயகர் அவர்களுக்கு,

கிழக்கின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணாவால் விடுக்கப்பட்டிருக்கும் கொலைப்பயமுருத்தல்

கடந்த ஞாயிறு, கார்த்திகை 19 அன்று மட்டக்களப்பு அம்பாறை, திருமலை மாவட்டங்களின் தமிழரசுக் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தரான குனானன் என்பவரிடமிருந்து தொலைபேசிமூலமான கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் நாம் எமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால் நிச்சயம் கொல்லப்படுவீர்கள் என்று அவர் எமக்கு தெரிவித்திருக்கிறார்.

தன்னை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் மட்டக்களப்பு அரசியல்த்துறைப் பணியகத்திலிருந்து பேசும் குணானன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலகவில்லையென்றால், இறந்துபோன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் "மாமனிதர்" விருதிற்கு உரித்துடையவர்கள் ஆவீர்கள் என்று மிரட்டினார். எமது தலைவரான கருணா அம்மாணின் கட்டளையின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் எம்மிடம் கூறினார்.

இதுவரை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளை அடிப்படியாகக் கொண்டு, எம்மீது தற்போது விடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கொலை எச்சரிக்கையினை நீங்கள் மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசேப் பராரசிங்கமும், நடராஜா ரவிராஜும் இதே குழுவினரால் எம்மைப்போன்றே கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நாட்களில் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவருகிறோம்.

எம்மீதான இந்த கொலை எச்சரிக்கைகள் எமது மக்களுக்கான சேவையினை நாம் திறம்படச் செய்வதைத் தடுத்துக்கும் நோக்கிலேயே விடுக்கப்படுகின்றன என்பதனை தாங்கள் அறிவீர்கள். ஆகவே இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் நலனில் அக்கறையும், பொறுப்பும் கொண்ட நீங்கள் எம்மீது விடுக்கப்பட்டிருக்கும் இக்கொலை எச்சரிக்கையினை கடந்து எமது மக்களுக்கு நாம் சேவை செய்வதற்கு ஏதுவாக உங்கள் அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான பாதுகாப்பினை  ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி.

த. கனகசபை (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிரமன் (மட்டக்களப்பு), ச. ஜெயநந்தமூர்த்தி (மட்டக்களப்பு), ப. அரியநேந்திரன் (மட்டக்களப்பு), க. பத்மநாதன் (அம்பாறை), ச. சந்திரநேரு (தேசியப்பட்டியல்).


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10 மார்கழி 2006

பெண்டுகல்ச்சேனையில் கருணா துணை ராணுவக் கூலிப்படை நடத்திய தாக்குதல் முறியடிப்பு

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பெண்டுகல்ச்சேனையில் கடந்த ஞாயிறு காலை சுமார் 25 கருணா துணைப்படைக் கூலிகளும் இலங்கை ராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதல் முயற்சி தம்மால் முறியடிக்கப்பட்டுள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர். இத்தாக்குதலில் குறைந்த இரு துணைப்படைக் கூலிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர்வரையில் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இத்தாக்குதல் முறியடிப்புப் பற்றி மேலும் தகவல் வழங்கிய மட்டக்களப்பு அரசியல்த்துறைப் பேச்சாளர் சீராளன் இத்தாக்குதலில் புலிகள் தரப்பில் இரு போராளிகள் பலியானதாகவும் தெரிவித்தார்.

கிண்ணையடி ராணுவ முகாமிலிருந்து புறப்பட்ட துணைப்படைக் கூலிகளும் ராணுவமும் கிண்ணையடி
வாவியைக் கடந்து அருகிலிருக்கும் முருக்கந்தீவு, பிரம்படித்தீவு, சரவெள்ளி ஆகிய கிராமங்களுக்குள்ளால் ஊடுருவி பெண்டுகல்ச்சேனை நோக்கி முன்னேறிவர எத்தனித்ததாகவும், இதன்போதே புலிகள் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுமார் 5 கிலோமீட்டர்கள் ஊடுருவிய ராணுவ துணைப்படைக் குழு தாக்குதலை நடத்த எத்தனித்ததாகவும், புலிகளின் எதிர்த்தாக்குதலினையடுத்து கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சகாக்களைத் தூக்கிக்கொண்டு பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

புலிகள் தரப்பில் கலையரசன் மற்றும் சவுந்தா ஆகிய போராளிகள் இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21 மார்கழி 2006

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்து 19 சிறுவர்களைக் கடத்திச்சென்ற கருணா துணைப்படை 

கடந்த புதன்கிழமையன்று, காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தினை காத்தான்குடி - பொலன்னறுவை வீதியில் கோரகல்லிமடு பகுதியில் வழிமறித்த ஆயுதம் தாங்கிய கருணா துணைப்படையினர் அப்பேரூந்திலிருந்து 16 ஆண் சிறார்களையும் 3 பெண்சிறார்களையும் ராணுவம் பாதுகாப்பு வழங்க கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கடத்தல்பற்றி குறைந்தது 6 பெற்றோர்கள் பொலீஸில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்துள்ளனர். 

தமது பிள்ளைகளை கருணா துணைப்படையினர் பேரூந்திலிருந்து இழுத்து வெளியே இறக்கும்போது அவர்களைத் தடுத்த பெற்றோர்மீது துணைப்படையுறுப்பினர்கள சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதாக ஏனைய பயணிகள் தெரிவித்தனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 மார்கழி 2006

குடும்பிமலைப்பகுதியில் கருணா துணைப்படைக் கூலிகள், ராணுவம் இணைந்து நடத்திய தாக்குதல் முறியடிப்பு

Thoppigala Heritage Park - Conservation and Awareness Building

மட்டக்களப்பு நகரிலிருந்து வடமேற்காக அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான குடும்பிமலைக்குள் ஊடுருவி தாக்க முயன்ற கருணா துணைப்படைக் கூலிகள் மற்றும் ராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு துணைப்படை கூலி கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் புலிகளின் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இத்தாக்குதலில் நான்கு புலிகள் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் மேலும் கூறினார்.

குடும்பிமலை எனும் தொப்பிவடிவ மலைக் குன்று வடமுனை - தரவைப் பகுதியில் அமைந்திருக்கிறது. 

இப்பகுதியில் அமைந்திருக்கும் புலிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்த கருணா துணைப்படைக் கூலிகள் எடுத்த முயற்சிக்கு ராணுவம் பின்புலச் சூட்டாதரவை தொடர்ச்சியாக வழங்கியபோதும், துணைப்படையினர் புலிகளின் எதிர்த்தாக்குதலால் நிலைகுலைந்து பின்வாங்கிச் சென்றதாக அறியமுடிகிறது.

பின்வாங்கிச் சென்ற கருணா துணைப்படையினரை அருகிலிருக்கும் காடுகளுக்கூடாக புலிகள் விரட்டிச் சென்றதாகவும் இளந்திரையன் மேலும் தெரிவித்தார்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9 தை 2007

வாழைச்சேனையில் கருணா துணைப்படை முகாம்கள் மீது தாக்குதல் - 12 பேர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் கருணா துணைப்படையினரின் இரு நிலைகள் மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 துணைப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த கருணா துணைப்படை முகாம்கள் மீதே இத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. சுமார் 400 மீட்டர்கள் இடைவெளியில் அமைந்திருந்த இந்த இரு முகாம்கள் மீது முச்சக்கரவண்டிகளில் வந்த ஆயுததாரிகளே அதிரடியாகத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. 

காயப்பட்ட மூன்று துணைப்படையினர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கும், அவர்களை வழிநடத்திய சிங்களப் புலநாய்வுத்துறை அதிகாரி பொலொன்னறுவை வைத்தியசாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

சுமார் 25 துணைப்படைக் கூலிகள் தங்கியிருந்த இவ்விரு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏனையோர் அருகிலிருந்த ராணுவ முகாமிற்குத் தப்பியோடியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, தை 2007

ஆரையம்பதியில் நிலைகொண்டிருந்த கருணா துணைப்படையினரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற ராணுவ அதிகாரி

அண்மையில் ஆரையம்பதி - காத்தான்குடி எல்லையில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து தமது ஊரினூடாக கருணா துணை ராணுவக் கூலிகள் சென்றுவருவதனை காத்தான்குடி முஸ்லீம்கள் எதிர்த்ததனையடுத்து அவர்களை வேறு பகுதியொன்றிற்கு மாற்றியிருக்கிறார் இலங்கை ராணுவத்தின் 23 - 3 படையணியின் தளபதி கேர்ணல் முனசிங்க. இப்பகுதியில் விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூலிகளின் முகாமுக்கு வேறு இடத்திலிருந்து இன்னுமொரு தொகுதி கூலிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.

முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் ஆகியோர் மட்டுநகர் ராணுவத் தளபதியுடனும், மக்கள் தொடர்பாட்டு அதிகாரியுடனும் சுமார் 3 மணித்தியாலங்கள் இத்துணைப்படைக் கூலிகளை அகற்றுவதுபற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
 

முஸ்லீம் மக்களுடனான இந்தச் சந்திப்பிற்கு துணைப்படைக் கூலிகளின் முக்கியஸ்த்தர்களும் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டிருந்தனர்.


காத்தான்குடியில், இராணுவத்தில் அரவணைப்பில் துணைப்படைக் கூலிகள் தங்கவைக்கப்படுமிடத்து, அவர்களின் முகாம்கள் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும், அதனை துணைப்படைக் கூலிகளும் ராணுவமும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இதனைப் பாவித்து ஈடுபட முயலலாம் என்றும் அச்சம் தெர்வித்தனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் துணைப் படைக் கூலிகளால் கடத்தப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் உடலை துணைப்படையினர் வேண்டுமென்றே காத்தான்குடியில் எறிந்துவிட்டுச் சென்றதைக் குறிப்பிட்ட முஸ்லீம்கள், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான மோதல் ஒன்றினை உருவாக்கவே துணைப்படைக் கூலிகள் முயல்வதாக தெரிவித்தனர். 

 கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து முஸ்லீம் மக்களும் உடனடியாக இந்த துணைப்படை கூலிகளின் முகாம் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையினை ராணுவத் தளபதியிடம் முன்வைத்தனர். இதனையடுத்தே அங்கு முகாமிட்டிருந்த துணைப்படையினரை வேறு முகாம்களுக்கு மாற்றிய தளபதி இன்னொரு தொகுதி துணைக் கூலிகளை அங்கே நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, மாசி 2007

தன்னைப் பலவந்தப்படுத்தியமைக்காக அதிருப்தி தெரிவித்த இந்துக்குருக்கள் கருணா துணைப்படைக் கூலிகளால் படுகொலை

priest_rajapakse_vaharai_01.jpg

மட்டக்களப்பு சந்திவெளியில் வசித்துவந்த இந்து மதகுரு செல்லையா பரமேஸ்வரக் குருக்களை கருணா துணை ராணுவக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இக்குருக்கள் அண்மையில் வாகரைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மகிந்தவுக்கு ஆசி வழங்கவென்று ராணுவத்தாலும் துணைப்படைக் கூலிகளாலும் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். 

கடந்த புதனன்று, ராணுவ முகாமிற்கு அருகில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கு வெளியே அவரை வரவழைத்த துணைப்படைக் கூலிகள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். 

தன்னைப் பலவந்தமாக மகிந்தவின் நிகழ்விற்கு அழைத்துச் சென்றதைப்பற்றி அக்குருக்கள் பெரிதும் விசனமடைந்திருந்தார் என்றும், சிலருடன் இதுபற்றிய தனது அதிருப்தியினைத் தெரிவித்து வந்திருந்தார் என்றும் கூறும் அப்பகுதி மக்கள், இதற்குப் பழிவாங்கவே அவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக்கொன்றதாகக் கூறுகின்றனர்.

rajapakse_vaharai_05.jpg

இக்குருக்களுடன் மேலும் கிறிஸ்த்தவ, முஸ்லீம் மதத் தலைவர்களும் மகிந்தவின் வாகரை விஜய நிகழ்விற்கு ராணுவத்தாலும் கருணா துணைப் படைக் கூலிகளாலும் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, மாசி 2007

பயணிகள் பேரூந்தினை வழிமறித்துக் கொள்ளையில் ஈடுபட்ட கருணா துணைப்படைக் கூலிகள்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை ஏறாவூர் பொலீஸ் பிரிவில் அடங்கும் சித்தாண்டிப் பகுதியில் வழிமறித்த கருணா துணை ராணுவக் கூலிகள் பயணிகளிடமிருந்து சுமார் பதினைந்து லட்சம் ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பயணிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள், நகைகள் , தேசிய அடையாள அட்டைகள் என்பனவும் கூலிகளால் அபகரித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. 

மாவடி மற்றும் முறக்கொட்டாஞ்சேனை பகுதிகளில் அமைந்திருக்கும் ராணுவ முகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த கருணாவின் அலுவலகத்திற்கு அருகிலேயே இக்கொள்ளைச் சம்பவத்தினை துணைப்படைக் கூலிகள் நிகழ்த்தியிருக்கின்றனர். 

ஓட்டமாவடி வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இப் பேரூந்து சுமார் 45 பயணிகளுடன் மாலை 7:30 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும், சித்தாண்டி முருகன் ஆலயச் சந்தியினை அடைந்தபோதே இப்பேரூந்தினை வழிமறித்த கருணா துணைப்படைக் கூலிகள் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. இதேபகுதியில் பல முறை சிறிய வான்கள் கருணாவினால் கொள்ளையடிக்கப்பட்டபோதிலும், இப்பேரூந்துக் கொள்ளையே மிகப் பெரியது என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மட்டக்களப்பு முஸ்லீம் அமைச்சர் அமீர் இக்கொள்ளைபற்றி மூத்த பொலீஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டுள்ளபோதிலும், பொலிஸார் இதுதொடர்பாக அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிப்பதாக தமது பணத்தினைப் பறிகொடுத்த பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, மாசி 2007

அம்பாறையில் 5 இளைஞர்களைக் கடத்திச் சென்ற கருணா துணைப்படைக் கூலிகள்

கல்முனைக்கு வடக்கேயிருக்கும் மத்திய முகாம் பகுதியிலிருந்து 5 இளைஞர்களை இம்மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் கருணா துணைப்படைக் கூலிகள் வெள்ளை வான்களில் வந்து கடத்திச் சென்றிருக்கிறார்கள். 

கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் பெற்றோர்கள் இதுபற்றிப் பொலீஸாரிடம் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். சிறிதாஸ், தம்பிப்பிள்ளை சிறிதரன், தருமராஜா தயாபரன் ஆகியோரின் பெற்றோரே இம்முறைப்பாட்டினைப் பதிவுசெய்திருக்கின்றனர்.

ஏனைய இருவரது பெற்றோரும் அச்சம் காரணாமாக இதுவரையில் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யவில்லையென்று தெரியவருகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, பங்குனி 2007

ராணுவ புலநாய்வுத்துறையின கட்டுப்பாடில் இயங்கும் கருணா துணைப்படையினரால் மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 6 இளைஞர்களின் உடல்கள் கொழும்பு முத்துராஜவல காட்டுப்பகுதியில் கண்டெடுப்பு

kandana-body.jpg

கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் கொழும்பு கந்தானை பிரிவிற்குள் வரும் முத்துராஜவல சதுப்பு நிலக் காட்டுப்பகுதியில் ஆறு மட்டக்களப்புத் தமிழ் இளைஞர்களின் உடல்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றுவிட்டு, இவர்களின் உடல்களை இக்காட்டுப் பகுதியில் துணைப்படையினர் வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டபோது இந்த இளைஞர்களின் உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிகிறது. 

கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் துணிகளால் மூடிக் கட்டப்பட்டு, தலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இவ்விளைஞர்களின் உடல்களைப் பரிசோதித்துள்ள வைத்தியர்கள் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட 6 தமிழ் இளைஞர்களின் உடகளையடுத்து, அப்பகுதியில் கருணா துணைப்படையினராலும், அரச ராணுவப் புலநாய்வுத்துறையாலும் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்ற ஏனைய தமிழ் இளைஞர்களின் உடல்களை இப்பகுதியில் தேடுவதற்காக பொலிஸார் ஒரு பிரிவினை உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது.

ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் இவ்விளைஞரின் உடல்களை காணமல்ப் போன தமது பிள்ளைகளை தேடும் பெற்றோர் வந்து அடையாளம் காட்டியுள்ளனர்.

அதன்படி முதலில் அடையாளம் காணப்பட்ட ஐந்து இளைஞர்களின் விபரமும் வருமாறு,

1. அருள் சுரேஷ், ஆலய வீதி மட்டக்களப்பு
2. சுப்ரமணியம் பிரபாகரன், ஆயித்தியமலை மட்டக்களப்பு
3. சிவப்பிரகாஷ் மதிரூபன், கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு
4. கந்தசாமி வெள்ளையன், மட்டக்களப்பு நகர்ப்பகுதி
5. பொன்னையா கமல்கார்த்திக், உன்னிச்சைமலை மட்டக்களப்பு 

6. ஆறாவது இளைஞரின் உடல் இச்செய்தி வெளிவரும்வரை அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் நடவடிக்கையின் மூலம் இவ்வுடல்களை பொலீஸார் பெற்றோரிடம் கொடுக்க சம்மதித்துள்ளனர். 

இதேவேளை, அநுராதபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இன்னும் 5 தமிழ் இளைஞர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணாத நிலையில், அநுராதபுர வைத்தியசாலைச் சவ அறையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, பங்குனி 2007

இரு குடும்பஸ்த்தர்களை விசாரணைகளுக்கென்று அழைத்துச் சென்று சுட்டுக்கொன்ற கருணா துணைக்குழு

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8:45 மணியளவில் வாழைச்சேனையின் கறுவாக்கேணிப் பகுதியில் அமைந்திருக்குக் கெண்டயன் கேணியில் பொதுமகன் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த கருணா துணைக்குழுவினர் அங்கிருந்த இரு குடும்பஸ்த்தர்களை "உங்களை விசாரிக்க வேண்டும், எங்களுடன் வாருங்கள் " என்று அழைத்துச் சென்று வீட்டிற்கு வெளியே வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.


கொல்லப்பட்ட இரு குடும்பஸ்த்தவர்களின் விபரம் வருமாறு,

1. தம்பியைய்யா மோகன், 44, இரு பிள்ளைகளுக்குத் தகப்பன், முச்சக்கர வண்டி ஓட்டுபவர்
2. குருகுலசிங்கம் சிறிகுமரன், 30, மேசன் தொழிலாளி, 6 மாதக் குழந்தையின் தகப்பன்.


கொல்லப்பட்ட இருவரும் மைத்துனர்கள் என்பதோடு, கருணா குழுவினரால் அழைத்துச்செல்லப்பட்டு மிக அருகிலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சிறிகுமரன் கல்லாற்றினைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதோடு, தனது காதல் திருமணத்தின்பின்னர் திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்றையில் வாழ்ந்துவந்தவர். அப்பகுதியில் இலங்கை ராணுவம் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையினை அடுத்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த அவர், இறுதியாக கெண்டயன்கேணிக்கே மீள வந்திருந்தார். அவரது குடும்பமும் அவருடனேயே உறவினர்களுடன் கெண்டயன்கேணியில் தங்கியிருந்தது.

மறுநாள், திங்கட்கிழமை காலை இவர்கள் இருவரது உடல்களை கண்டெடுத்த பொலிஸார் வாழைச்சேனை வைத்தியசாலையில் அவற்றை ஒப்படைத்துள்ளனர். 


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, பங்குனி 2007

கருணா துணைக்கூலிகளின் கப்பம் கோரலினை எதிர்த்து கொழும்பு தமிழ் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

16_03_07_colo_protest_02.jpg

"ராணுவ புலநாய்வுத்துறையினருடனும், இலங்கை பொலிஸாரின் ஆதரவுடனும் கருணா துணைப்படைக் கூலிகளால் தம்மீது விடுக்கப்பட்டுவரும் கொலைமிரட்டல்களுடன் கூடிய கப்பம் கோருதலை எதிர்த்து கொழும்பு பெட்டா, கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதி தமிழ் வியாபாரிகள் தமது வியாபார நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்" என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

"எங்களுக்கு பகிரங்கமாகவே அவர்கள் தாம் கருணா குழு என்று அறிமுகப்படுத்தி பெருந்தொகையான பணத்தினைக் கப்பமாகக் கோருகிறார்கள். பொலிஸாரும் இவர்களுக்கு உடந்தையென்பதால், எமது முறைப்பாட்டினை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. அதனாலேயே நாம் இந்தக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். 

கருணா துணைப்படைக் கூலிகள் தமக்கு விடுக்கப்பட்டுவரும் கொலைமிரட்டல்களையடுத்து ஒரு தொகுதி தமிழ் வர்த்தகர்கள் கொட்டாஞ்சேனை பொலீஸ்நிலையத்தின் முன்னால் செய்த ஆர்ப்பாட்டத்தினை அப்பொலீஸ் நிலைய அதிகாரிகள் தடுக்க முனைந்தனர்.

"எம்மில் பலர் உயிரச்சம் காரணமாக கருணா கேட்ட கப்பத்தொகையினைக் கட்டிவிட்டோம். சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றிற்கு தாம் கேட்கும் கப்பத்தினை உடனடியாக செலுத்துமாறும் இல்லையேல் எம்மைக் கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டினார்கள், வேறு வழியின்றி அவர் கேட்ட தொகையினை அவ்வங்கிக் கணக்கிற்கே கட்டினோம்" என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

கொழும்பு கோட்டை, பெட்டா ஆகிய பகுதிகளில் தமிழ் வர்த்தகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்துக் கடைகளும் அன்று மூடப்பட்டிருந்தன. 

WikiLeaks: 'Gota Uses My Name To Threatening people' - Upset Karuna On  Gota's 'Prostitute' Editor Remarks - Colombo Telegraph

கருணா துணைப்படைக் கூலிகளோடு ராணுவம், பொலிஸார் மற்று ஆட்சியில் உள்ள சில முக்கியஸ்த்தர்களுக்கும் நிச்சயம் தொடர்பிருப்பதாக வர்த்தகர்கள் மேலும் தெரிவித்தனர். 


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, பங்குனி 2007

கருணா துனைப்படைக் கூலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்களுக்கு இறுதி வணக்கம் தெரிவிப்பு

Trofunc_04.jpg

கடந்தவருடம் ஜனவரி மாதம் கருணா துணைப்படைக் கூலிகளால் கடத்தப்பட்டு மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்களுக்கு இறுதி வணக்க நிகழ்வு மூன்றுநாள் துக்க அனுஷ்டிப்பின் பின்னர் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

கடத்திக் கொல்லப்பட்ட 7 ஊழியர்களினதும் உருவப்படங்களை உறவினர்கள் அஞ்சலி நிக்ழவிற்குக் கொண்டுசென்று மக்கள் வணக்கத்திற்காக வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திருவுருவப்படங்கள் கிளிநொச்சி கலசார நிலையத்திற்கு மக்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

Trofunc_03.jpg

Trofunc_02.jpgபொதுச்சுடரினை ஏற்றியபின்னர் உறவினர்கள் கருணா துணைப்படைக் கூலிகளால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். 

இந்த அஞ்சலி நிகழ்வில் பேசிய கழகத்தின் தலைவர் சிவனடியார், "சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு, பலதரப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சில் ஆகிய அனைத்து அமைப்புக்களிடமும் நாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டபோதும் கூட எமது அன்பானவர்களை எம்மால் காப்பற்ற முடியவில்லையே" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "யுத்தத்தாலும், வறுமையினாலும் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு யுத்த கெடுபிடிகளின் மத்தியிலும் தம்மாலான சேவையினைச் செய்திட துணிந்து சென்ற எமது அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களையே அவர்கள் வேட்டையாடியிருக்கிறார்கள்" என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், புலிகளின் முக்கியஸ்த்தர் பாலகுமாரன், நிஷோர் அமைப்பின் தலைவர் கனகரத்தினம் அடிகள் மற்றும் புனர்வாழ்வுக்கழக அதிகாரிகளும் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

பிரதேசவாத வெறிபிடித்த மிருகங்களே ! இவர்களை எதற்காகக் கொன்றீர்கள்?

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, பங்குனி 2007

உள்ளக இடப்பெயர்வினால் அல்லற்பட்ட மக்களிடையே ஐவரைக் கடத்திச்சென்ற கருணா துணைப்படைக் கூலிகள்

மட்டக்களப்பு மனிதவுரிமைக் கவுன்சிலில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின்படி கடந்த 10 நாட்களுக்குள் குறைந்தது ஐந்து பேரை கருணா துணைப்படைக் கூலிகள் உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்களிடமிருந்து கடத்திச் சென்றிருக்கிறது. ஒரு சைவக் குருக்கள், இரு பதின்மவயதுச் சகோதரிகள் மற்றும் இன்னும் இரு இளைஞர்கள் அடங்கலாக ஐவர் இவ்வாறு துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டிருப்பதாக இந்த அமைப்புத் தன்னிடம் முறைப்பாடு கிடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

1. அழகுத்துரை யோகராஜா, 23, கரடியனாறு
2. ரவீந்திரன் கோபினாத், 21, அம்பிலாந்துரை
3. மயிலப்போடி மேகநாதன், 45, சைவைக் குருக்கள்
4. நவரத்தினம் அஞ்சலிதேவி, 18
5. நவரத்தினம் ஜயலலிதா 16

ஆகியோரே இவ்வாறு பலவந்தமாக தற்காலிக தங்குமுகாம்களிலிருந்து கருணாவினால் கடத்திச் செல்லப்பட்டவர்கள் ஆவர். இவர்களின் கடத்தல்கள் பற்றிய முறைப்பாட்டினை உறவினர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலீஸ் நிலையங்களில் செய்துள்ளனர்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, பங்குனி 2007

கடத்தப்பட்ட எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள் - கொழும்பில் மனிதவுரிமைகள் அமைப்பு கவனயீர்ப்புப் போராட்டம்

28_03_07_colo_protest_03.jpg

"கடந்த வருடத்திலிருந்து குறைந்தது 76 தமிழர்களைக் கொழும்பில் கருணா துணைப்படைக் கூலிகளும் அரச புலநாய்வுத்துறையும் சேர்ந்து கடத்திச்சென்றுள்ளனர். நாம் இவர்களை உடனடியாக விடுவிக்கும்படி இவர்களிடம் கோருவதோடு, அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு எமது உறவுகளை மீட்டுத்தருமாறும் வேண்டுகிறோம்" என்று கொழும்பு ஹயிட் பார்க்கில் சத்தியாக்கிரக நிகழ்வில் ஈடுபட்ட கடத்தப்பட்டவர்களை மீட்கும் அமைப்பினர் கோரிக்கை முன்வைத்தனர்.

28_03_07_colo_protest_05.jpg

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையில் இப்போராட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், துரைரத்தினசிங்கம், அரியநேந்திரன், பத்மானாதன், சந்திரநேரு, சந்திரகாந்தன், கனகசபை மற்றும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் சிறிதுங்க ஜயசூரிய, மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

28_03_07_colo_protest_01.jpg


"கடத்தப்பட்ட எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள், இல்லையேல் அவர்களை எங்கே சிறைப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள்" என்பதே அவர்களின் முதன்மையான வேண்டுகோளாக இருந்தது.

கடத்தப்பட்ட உறவுகளின் பிள்ளைகள் கூடக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், "அவர்களைக் கொன்றுவிடுங்கள், நாங்கள் இனிமேல் அவர்களைத் தேடும் தேவையும், மன உழைச்சலும் இல்லாமல்ப் போகட்டும்" என்கிற கவலைமிகுந்த பதாதைகளின்பின்னால் இப்பிள்ளைகள் நின்றிருந்தது பார்ப்போர் மனதினை வாட்டியது.

கடத்தப்படுக் காணாமல்ப்போனவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில்,

"எனது அப்பா எங்கே?"
"தனது அப்பாவைக் கேட்டு அழும் என் மகளுக்கு நான் என்ன சொல்லுவேன்?"
"தமிழர்களையும் மனிதர்களாகப் பாருங்கள்"
"மக்கள் சுதரத்தின்மூலமான சமாதானத்தினை அனுபவிக்க வழிவிடுங்கள்"
"கடத்தப்பட்ட எமது உறவுகளை விடுவியுங்கள்"

ஆகிய கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, பங்குனி 2007

கருணா துணைராணுவக் குழுவுக்கான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தினைச் சாடும் மனிதவுரிமைக் காண்காணிப்பகம்

Tejshree Thapa on Twitter: "Roundtable discussing @hrw new report on  #srilanka police torture with Philip Dissanayeke, Lakshan Dias, Brad Adams.  https://t.co/SOIF0sk7Fd"

கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்படும் பிள்ளைகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து அவர்களை மீட்டுத்தருவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தாலும்கூட, அவை எவற்றையும் அது செய்யவில்லையென்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது. 

"சிறார்களை தனது குழுவினுள் கட்டாயப்படுத்தி இணைத்து யுத்தத்தில் கருணா பாவித்துவருவது இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தான் என்பது தற்போது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது " என்று மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான தலைவர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். "கருணா குழு இலங்கை அரசாங்கத்துக்காக இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறது. கொழும்பு அரசாங்கம் புலிகளுக்கெதிரான தனது போரில் சிறார்களை பலவந்தமாக இணைப்பதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டிய   தருணம் வந்திருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

இவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி ,"மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழு எனும் துணை ராணுவக்குழுவின் அலுவலகங்கள் முகாம்களுக்கு வெளியே சிறுவர்கள் தானியங்கித் துப்பாக்கிகளோடு காவல்கடமையில் ஈடுபட்டிருப்பதை நாம் பார்த்தோம். இலங்கை ராணுவத்தினரும், பொலிஸாரும் இதுபற்றி எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது இச்சிறார்களைக் கடந்து செல்கின்றனர்" என்று கூறப்பட்டிருக்கிறது.

Photo Evidence Of Government 'Whitevanning', Child Soldier Recruitments and  Deshamanya Iniyapaarathi - Salem-News.Com

"ஒரு சிறுவன், கையில் தானியங்கித் துப்பாக்கியோடு துணைராணுவக்குழுவின் தலைவரான கருணாவின் ஊரான கிரானில், அவரது அலுவலகத்திற்கு முன்னால் நிற்கக் கண்டோம். மேலும் வாழைச்சேனை, முறக்கோட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் ராணுவ முகாம்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் கருணா குழுவின் முகாம்களுக்கு முன்னால் மேலும் சிறுவர்கள் ஆயுதங்களோடு காவற்கடமையில் ஈடுபட்டிருப்பதையும் நாம் கண்டோம். தமது முகாம் வாயிலில் சிறுவர்கள ஆயுதங்களோடு காவல்கடமையில் இருப்பதைக் கண்டும் இலங்கை ராணுவமோ பொலிஸாரோ எதுவித நடவடிக்கையினையும் எடுக்காது பேசாமலிருப்பது கூறும் ஒரே விடயம் இந்த உரிமை மீறல் அவர்களின் ஆசீருடனுன், ஆதவுடனும்தான் நடைபெறுகிறதென்பதைத்தான். ஆகவே இலங்கை அரசாங்கம் இதுகுறித்து தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறுவதை எம்மால் நம்பமுடியாமல் இருக்கிறது" என்று மேலும் அடம்ஸ் அவர்கள் கூறினார்.

"இலங்கை அரசாங்கத்திற்காக கருணா சிறுவர்களைக் கடத்துவது இப்போது வெளிப்படையாகிவிட்டது. கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு பெற்றோர் கருணா குழுவினரிடம் கேட்டபோது இக்கடத்தல்கள் பற்றி முறையிட்டால் கொல்லப்படுவீர்கள் என்றும், அவர்களைப் புலிகள் கடத்தினார்கள் என்று வெளியே போய்ச் சொல்லுங்கள் என்றும் அவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள்" என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

TMVP leader Vinyagamurthi Muralitharan (right) with Sri Lankan President Mahinda Rajapakse. The TMVP Leader, who is known as Karuna, has signed an agreement with the government and UNICEF to end over a three-month period the recruitment of child soldiers

"எமது பிள்ளைகளை புலிகளே கடத்தினார்கள் என்று கூறும்படி இலங்கை ராணுவமும் பொலிஸாரும் எம்மைக் கட்டாயப்படுத்தினார்கள் என்று கருணாவினால் கடத்தப்பட்ட பிள்ளைகளின் பேற்றோர்கள் கூறியிருக்கின்றனர்.  இது, இலங்கை அரசாங்கம் கருணாவுக்கு ஆதரவாக செயற்படுகிறதென்பதை வெளிப்படையாக்குகிறது. ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினர் இலங்கை ராணுவத்தினருடன் சேர்ந்து உலாவருவது கிழக்கில் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த மாதம் கருணா குழுவின் முக்கியஸ்த்தர் ஜெயம் ராணுவ கவச வாகனத்தின் மீதிருந்து வாழைச்சேனைப் பகுதியில் வலம் வந்ததும், கருணா துணைப்படையினர் பொலீஸாரின் வாகனங்களில் ரோந்துவருவதும் இப்போது பரவலாக நடக்கிறது". 

Karuna: The Tragedy of a Rebel (Part II)

Jayam T.M.V.P

"மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர்கள் வடமேற்கே அமைந்திருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் குறைந்தது 5 முகாம்களை கருணா குழு இயக்கிவருகிறது. இதே பகுதியில் இலங்கை ராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவு தனது தலைமை முகாமினைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இப்பகுதி 100% ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, கிழக்கின் பிரதான நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையும் இப்பகுதியூடாகவே பயணிக்கிறது. முதுகல பகுதியில் அமைந்திருக்கும் கருணா முகாம் ராணுவ முகாமின் ஒரு எல்லையில் அமைக்கப்பட்டிருக்கிறது". 

"கருணா குழுவினரின் கடத்தல்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ராணுவத்தினர் மீதான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவோம் என்று ஜனாதிபதி மகிந்த எம்மிடம் பலமுறை வாக்குறுதியளித்தபோதும் கூட, இதுவரை அவர் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது கருணா குழு இன்றுவரை நடத்திவரும் சட்டவிரோத கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் சுட்டிக் காட்டுகின்றன". 

http://srilankamuslims.lk/wp-content/uploads/2015/06/ltte1.png2_1.png

"தம்மிடம் ஆதாரங்கள் இல்லாமல் விசாரணைகளை ஆரம்பிக்க முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்குத்தேவையான ஆதாரங்கள் அவர்களின் கண்முன்னே, அவர்களின் ராணுவத்தினராலேயே நடத்தப்படுகின்றன. நாம் சேகரித்துவைத்திருக்கும் ஆதாரங்களுக்கு மேலதிகமாக, அவர்களின் பொலிஸாரிடம் வழங்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கூட இருக்கின்றன". 

கடந்த ஜனவரி மாதத்தில் கருணா குழுவினரால நடத்தப்பட்ட கடத்தல்கள் தொடர்பான 100 பக்க அறிக்கையொன்றினை இச்சபை அரசிடம் கையளித்திருந்தது. தனிப்பட்ட சம்பவங்கள், வாக்குமூலங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றின் உதவியோடு கருணா குழு எவ்வாறு அரச ஆதரவுடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறார்களைக் கடத்துவது, கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவது, முகாம்களை அமைப்பது, சிறார்களை பலவந்தப்படுத்தி போரிற்கு இழுத்துச் செல்வது  போன்ற  சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதென்பதை ஆதாரத்துடன் வழங்கியிருந்தது.

யுனிசெப் அமைப்பின் அறிக்கைப்படி மார்கழி 2006 இலிருந்து மாசி 2007 வரை குறைந்தது 45 சிறுவர்களை கருணா குழு பலவந்தமாகக் கடத்திச் சென்று ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவருகிறது. இவர்களில் மூவர் உள்ளக இடப்பெயர்வு முகாம்களிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார்கள். 

“ ஆனால், கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இதைக் காட்டிலும் பலமடங்கு அதிகமானது. ஏனென்றால், தமது பிள்ளைகளைக் கடத்தியதுபற்றி முறைப்பாடு செய்யுமிடத்து கொல்லப்படுவீர்கள் என்று பல பெற்றோர்கள் கருணாவினால் பயமுருத்தப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், 17 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களைக் கருணா கடத்திச் சென்றது குறித்து யுனிசெப் கணக்கில் எடுக்கவில்லை" என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, சித்திரை 2007

அகதியாக இடம்பெயர்ந்து வந்த இளைஞரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படைக் கூலிகள்

கடந்த செவ்வாயன்று, ஏறாவூர் பொலீஸ் பிரிவிற்குற்பட்ட களுவங்கேணி கோரளங்கேணி அகதிமுகாமில் தங்கியிருந்த அகதி மீது உந்துருளியில்வந்த இரு கருணா துணைப்படைக் கூலிகள் நடத்திய தாக்குதலில் அவர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். அகதிகள் முகாமிற்கருகில் இருந்த கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போதே இப்படுகொலையினை துணைப்படைக் கூலிகள் நிகழ்த்தியிருக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரைப்பகுதியின் பங்குடாவெளியைச் சேர்ந்த 28 வயதுடைய சித்திரவேல் சிவனாதன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது உடல் பொலிஸாரினால் ஏறாவூர் வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையில் இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களையடுத்து பெருமளவு மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஏறாவூர் பகுதியில் தஞ்சம் கோரியிருந்தனர். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2007

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்குச் சென்று மக்களுடன் பேசுவதைத் தடுத்த கருணா

கருணாவிடமிருந்து விடுக்கப்பட்ட கொலை அச்சுருத்தலினையடுத்து கடந்த 6 மாத காலமாக தமது தொகுதிகளுக்குச் சென்று மக்களுடன் பேசமுடியாத நிலையில் தாம் இருப்பதாக இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் எடுக்கப்படவேண்டிய உடனடி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்பதும் இதனால் தடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

"அரசாங்கத்திடமிருந்து கருணாவுக்குக் கொடுக்கப்பட்டுவரும் ஆதரவினாலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு அவரால் பகிரங்கமாக அச்சுருத்தல் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது" என்று ஜெயனந்தமூர்த்தி தெரிவித்தார்.

கருணா துணைப்படை மட்டக்களப்பில் அரச ராணுவத்தின் உதவியோடு பல முகாம்களை இயக்கிவருகிறது. ராணுவ முகாம்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இம்முகாம்களிலிருந்தே கடத்தல்கள், காணாமற்போதல்கள், பணப்பறிப்புக்கள், படுகொலைகள், சித்திரவதைகள் என்பவற்றினை கருணா குழு நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். கருணாவினால் துன்புறுத்தப்படும் அப்பாவிகள் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கண்டு தமது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதை கருணா தடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

"ராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து முகாம்களில் அல்லற்படும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உதவும் நிலையில் நாம் இல்லை. அம்மக்களைச் சென்று பார்ப்பதையே கருணா தடுத்துவருகிறார்" என்றும் அவர் கூறினார்.


புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணத்தினை அல்லற்படும் மக்களுக்குச் செலவழிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சிகளைக் குழப்பிவரும் கருணா துணைப்படைக் கூலிகள், தனியார் நிறுவனங்கள் இப்பகுதியில் இயங்குவதையும், சேவைகளில் ஈடுபடுவதையும் கப்பம் கோரல்கள், கடத்தல்கள், கொலைப் பயமுருத்தல்கள் மூலம் இல்லாமல்ச் செய்துவருவதாக அப்பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார். 

தினசரி நாளேடுகளான வீரகேசரி , தினக்குரல் ஆகிய பத்திரிக்கைகளை யாழ்ப்பாணத்து மக்களின் பத்திரிக்கைகள் என்று மட்டக்கள்ப்பில் தடைசெய்திருக்கும் கருணா குழு, உண்மைச்செய்திகளை இருட்டடிப்புச் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, சித்திரை 2007

கருணாவைப் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் - மிரர் பத்திரிக்கைக்கு கோத்தாபய எச்சரிக்கை

Is Karuna making a comeback? | Sunday Observer

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலமூல பத்திரிக்கையான மிரருக்கு விடுத்த எச்சரிக்கையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கருணாவின் நடவடிக்கைகள்பற்றி அப்பத்திரிக்கை தொடர்ந்து எழுதிவருவதால் கருணா குழுவினர் மிகுந்த கோபத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளதுடன், கருணாவுக்கெதிரான செய்திகளைத் தொடர்ந்து பிரசுரித்தால் கருணா உங்கள்மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்தலாம், அப்போது அரசின் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்காது என்று பத்திரிக்கையின் ஆசிரியர் சம்பிக்கா லியனாராச்சியிடம் தொலைபேசியில் பேசும்போது மிரட்டியுள்ளதாகத் தெரியவருகிறது.

"கருணா துணைப்படை பொத்துவில் பகுதியில் அராஜகம் புரிந்துவருகின்றனர்" என்று அப்பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பகுதியில் கருணா துணைப்படையினர் முஸ்லீம்கள்மீது தாக்குதல் நடத்துவதாகவும், அவர்களுக்கு இடைஞ்சலாக அப்பகுதியில் ஆயுதங்களுடன் ரோந்துபுரிவதாகவும், ராணுவமும் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Gota Paid Karuna Faction 50 Million To Kill Raviraj – #KILLERISBACK

இக்கட்டுரை பற்றி அப்பத்திரிக்கை ஆசிரியருடன் பேசியபோதே கோத்தாபய, கருணா இப்பத்திரிக்கைமேல் ஆத்திரத்துடன் இருப்பதாகத் தெரிவித்ததோடு, அரசாங்கம்பற்றிய விமர்சனங்களை அப்பத்திரிக்கை தவிர்க்கவேண்டும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் கோத்தாபய பேசுகையில், கருணா குழுவினரால லியனராச்சி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அரசாங்கத்தால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதே பத்திரிக்கையில் வந்த "மூதூரில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் : ஒரு தனி மனிதால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை யுத்தச் சுனாமி" எனும் கட்டுரையினை எழுதிய உடித்த ஜயசிங்க பற்றிப் பேசிய கோத்தாபய, அந்த நிருபரைக் கடுமையாகச் சாடியதோடு, இக்கட்டுரை மூலம் அகதிகளாக்கப்பட்ட மக்களை ராணுவம் கொடுமைப்படுத்துகிறதெனும் விம்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்" என்று கடிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்புச் செயலாளரின் இந்த பகிரங்க எச்சரிக்கை மூலம் நாட்டின் பத்திரிகைச் சுதந்திரத்திற்குக் கடுமையான அச்சுருத்தல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சுயாதீன பத்திரிக்கையாளர் அமைப்புத் தெரிவித்திருக்கிறது.

யுத்தம் தொடர்பான செய்திகளுக்காக மிரர் பத்திரிக்கை தொடர்ச்சியாக அரச உயர் பீடத்தாலும், ராணுவத்தாலும் கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Edited by ரஞ்சித்
  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.