Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்...........................

கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015

 

அரந்தலாவையில் சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கருணாவே கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறே 1990 இல் புலிகளிடம் சரணடைந்த 600 சிங்கள, முஸ்லீம் பொலீஸாரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றபோதுகூட  கருணாவே கிழக்கு மாகாண விசேட தளபதியாக இருந்தார். இதே காலப்பகுதியில் கருணாவின் கட்டளையின் கீழ் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

இப்படுகொலைகள் எவையுமே கருணாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் , இன்றுவரை எந்த சிங்கள, முஸ்லீம் அரசியவாதியோ தமது மக்கள் படுகொலைசெய்யப்படக் காரணமான கருணாவினை கேள்விகேட்க முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமது அரசியல் லாபங்களுக்காக கருணாவின் பாவங்களை அவர்கள் மன்னித்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கருணாவை அரசுடன் இணைத்து செயற்படுவது குறித்து அவர்கள் விருப்பம் கூடத் தெரிவித்திருக்கிறார்கள்.

சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழித்து, தமிழரை ஆட்கொள்வதுடன் ஒப்பிடும்போது, கருணாவின் படுகொலைகள் பற்றிப் பேசுவது முக்கியமற்ற ஒரு விடயமாக இருக்கலாம்.  ஆனால், முஸ்லீம் தலைவர்களுக்கு என்னவாயிற்று? தமது மக்களைப் படுகொலைசெய்து, தமது வர்த்தகர்களைப் பணத்திற்காகக் கடத்திச்சென்று கொன்று, காணாமலாக்கிய கருணா மீது ஏன் இதுவரை ஒரு முஸ்லீம் தலைவர் தன்னும் கேள்வி எழுப்பவில்லை? 


 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்...........................

கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015

Image result for karuna amman with mahinda

"நான் இந்த நாட்டில், சாதாரண கல்வித்தரத்தினைக் கொண்ட சாதாரண குடிமகன்.என்னைப்பொறுத்தவரை இந்த நாட்டின் சமூகவியல், சமூக விழுமியங்கள் தொடர்பாக தெளிவான பார்வை எப்போதுமே இருந்ததில்லை, குறிப்பாக இந்த நாட்டின் நீதித்துறை பற்றி மிகவும் குழப்பகரமான பார்வையே எனக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு விபச்சார விடுதிகளில் தொழில்புரியும் பெண்களை கண்ணிமைக்கும் நேரத்தில் கைதுசெய்து இழுத்துச் செல்லும் பொலீஸார் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதள்ளி, அப்பாவிகளை வலிந்து கடத்திச் சென்று காணாமலாக்கிய ஆயுததாரியான கருணாவை கைதுசெய்யாது, அவரைப் பாதுகாத்து, கெளரவப்படுத்தி அன்புடன் "சேர்" என்று அழைக்கக் காரணமென்ன? "

"இந்த நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கெதிராக கொடுமைகளை நிகழ்த்திவரும் சட்டத்திற்கும் மேலான அரச ராணுவத்தை ஒருவர் நீதியின் முன்னால் நிறுத்துவதென்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதது. போர் வெற்றி நாயகர்களாக அலங்கரிக்கப்பட்டு, கடவுள்களுக்குச் சமமாக பூசிக்கப்படும் இந்த வெற்றி நாயகர்கள் தமிழினத்திற்கெதிராகச் செய்த அக்கிரமங்கள் எல்லாம் "விடுதலைப் புலிகளை அழித்தல் எனும் முக்கிய நோக்கத்திற்காக" பெரும்பான்மையினச் சிங்களவர்களால் "அவசியமான நடவடிக்கைகள் தான்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது".

"கடந்த காலங்களில் இந்தக் கருணா அம்மாண் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்களுக்கு நிகராக சிங்களவர்களையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றுவரை சிங்களத் தலைமைகள் இவருக்கெதிராக நடவடிக்கை எதனையும் எடுக்க விரும்பவில்லையே, அது ஏன்? கருணாவுக்கெதிராகக் எடுக்கும் நடவடிக்கைகள் சங்கிலித் தொடர்போல மீண்டும் தமது காலடியிலேயே வந்து நிற்கும் என்கிற பயம் இருக்கிறதா அவர்களுக்கு ? இதன்மூலம் தெளிவாவது என்னவெனில், சிங்கள ராணுவ வீரர்கள் கடவுள்களுக்குச் சமமானவர்கள் என்றால் கருணா அம்மாண் கடவுளுக்கும் மேலானவர் என்பதுதானே?"

"மைத்திரி ரணில் நல்லிணக்க அரசாங்கத்தில்க்கூட இந்த நிலைமை மாறும் என்று நான் நம்பவில்லை. மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன, இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. இலங்கையின் மக்களுக்கெதிராக மிகக் கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன்னால் நிறுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது. இத்தனை தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் பின்னரும்கூட தான் கொடுத்த நீதியை நிலைநாட்டும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அது மீண்டும் மீண்டும் கூறி வருகிறது".

"இந்த அக்கிரமங்களைச் செய்தது யாரென்று எங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும், எமக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல நாம் பாசாங்குசெய்துகொண்டு ஏதோவொருநாள் விசாரணைகள் நடைபெறும் என்று எங்களை நாங்களே எமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறோம்? இன்றுவரை காணாமல்ப்போன தமது பிள்ளைகள் வருவார்கள் என்று நம்பித் தவமிருக்கும் அந்த அப்பாவித் தாய்மார்களையா? அல்லது மனிதவுரிமைகளுக்காக வேலைசெய்வதாகக் கூறும் அமைப்புக்களையா? அல்லது எமது குடும்பத்தில் எவருக்கு இந்த அக்கிரமங்கள் நிகழும்வரை எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்துவிடும் மனோநிலைக்கு வந்துவிட்டோமா? 

"இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எமது சக இன மக்களைக் கொன்று, பாலியல் வன்கொடுமை புரிந்து, கடத்திச்சென்று காணாமலாக்கிய ஒரு இரத்தவெறிபிடித்த  கயவனை இன்னும் "சேர், ஐய்யா" என்று அழைத்து மகிழப்போகிறோம்?" 

ஆங்கில மூலம் : வி. கந்தைய்யா

 

 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையில்  வெளிவந்த கருணாவின் பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர்களைப் பலவந்தமாக தனது துணை ராணுவக் குழுவில் சேர்த்தது தொடர்பான விரிவான தகவல்கள் 

பாகம் 1 :

2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள்

image006.jpg

2004 இல் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி ராணுவத்துடன் சேர்ந்துகொண்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பரவலாக பல இடங்களிலும் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கையில் அவரது குழு இறங்கியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நாட்களில் செயற்பட்டுவந்த  உள்ளூர் மற்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் கருத்துப்படி  கருணா குழு மட்டக்களப்புச் சிறுவர்களை பொலொன்னறுவை மாவட்டத்தில் வேலை செய்வதற்கு எங்களுடன் வாருங்கள் என்று பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும், இவ்வாறு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் ஒருபோதுமே தமது வீடுகளுக்குத் திரும்பவில்லையென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2006 ஜூன் மாதமளவில் கருணா குழுவால் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்களினதும் இளைஞர்களினதும் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துக் காணப்பட்டதாக இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 40 இற்கும் அதிகம் என்றும், இவர்களுள் 23 சிறுவர்கள் ஒரு நாளில் கடத்திச்செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.

இவ்வாறு ஒருநாளில் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்கள் இரு கிராமங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக இச்சிறுவர்களின் குடும்பங்களை செவ்விகண்ட மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள். இச்சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தமது பிள்ளைகளை விட்டுவிடுமாறு தாம் கருணா குழு ஆயுததாரிகளைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும், அவர்களை இழுத்துச் சென்றுவிட்டதாகவும், பின்னர் கருணாவின் முகாம்களுக்கு தாம் தமது பிள்ளைகளைத் தேடிச் சென்றவேளை தமது பிள்ளைகள் கருணா குழு ஆயுததாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இன்னும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் காலையில் தமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை ராணுவம் 7 சிறார்களை இழுத்துச் சென்று அவர்களது புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் வேறு  விபரங்களையும் பதிவுசெய்துவிட்டு திருப்பியனுப்பியதாகவும், அதே நாள் இரவுவேளையில் தமது வீடுகளுக்கு வந்த கருணா குழு ஆயுததாரிகள் அப்பிள்ளைகளை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

கருணா குழுவிற்கு சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கும் நடவடிக்கையில் இலங்கைராணுவமும் ஈடுபடுகிறதா என்னும் கடுமையான சந்தேகத்தினை இம்மாதிரியான சம்பவங்கள் உருவாக்கிவருகின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்னொரு கிராமத்தில் கடத்திச் செல்லப்பட்ட 13 சிறுவர்களின் பெற்றோருடன் பேசியதில் இன்னும் சில தகவல்களை சேகரித்துவைத்திருக்கிறது. அப்பெற்றோரின் கருத்துப்படி தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட நாளில் தமது கிராமத்திற்கு  ராணுவத்தினரின் சீருடையில் வந்த 15 கருணா குழு ஆயுததாரிகள் தமது பிள்ளைகளை கிராமத்திலிருக்கும் கடையொன்றின் முன்றலுக்கு இழுத்துச்சென்று சில மணிநேரம் அவர்களை வைத்திருந்து பின்னர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் கருணா குழு ஆயுததாரிகள்தான் என்று உறுதிபடக் கூறும் பெற்றோர்கள், தாம் தமது பிள்ளைகளைத் தேடி கருணா குழுவின் முகாமிற்குச் சென்றதபோது இதே கடத்தற்காரர்கள் அங்கே நின்றிருந்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
கருணா குழுவினரால் பலவந்தமாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அருகில் நின்ற இராணுவத்தினரை இப்பெற்றோர்கள் வேண்டிக்கொண்டபோதிலும், ராணுவம் அவர்களை அசட்டை செய்து கருணா குழுவுடன் அலவலாவிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.
  
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லப்பட்ட கருணா குழுவின் சிறுவர்களைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகளையடுத்து ஐநா வின் சிறுவர்களுக்கான அமைப்பு வெளியிட்டிருந்த பொது வேண்டுகோளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் பற்றி விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த வேண்டுகோளில், "சிறுவர்களைக் கடத்துவதையும், கட்டாய ராணுவப் பயிற்சிக்கும் இழுத்துச்செல்வதையும் கருணா குழு நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் அக்குழு விடுவிக்கவேண்டும் " என்றும் கேட்டிருந்தது.
அத்துடன் இக்கடத்தல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிறுவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டும் என்றும்  அது அரசாங்கத்தைக் கேட்டிருந்தது.

ஐ நா வின் இந்த அறிக்கை சாதகமான நிலையினை சில நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்திருந்தது. இவ்வறிக்கையினையடுத்து கருணா குழுவின் சிறுவர் கடத்தல்கள் சற்றுக் குறைந்திருந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், ஒரு சில வாரங்களிலேயே கருணா குழு மீண்டும் தனது பலவந்த சிறுவர் கடத்தல்களை தீவிரமாக்கியிருந்தது. புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஆரம்பித்த மோதல்களை தனது கடத்தல்களுக்குச் சாதகமாகப் பாவித்த கருணா 2006 ஜூலை மாதத்தில பல சிறுவர்களைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி மாதத்திலிருந்து மார்கழி மாதம்வரையான 5 மாத காலத்தில் கருணாகுழுவினரால் குறைந்தது 200 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கருணா துணைராணுவக் குழுவிடம் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மர்கள் 48 பேர் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இதுதொடர்பான முறைப்பாடொன்றினைக் கொடுத்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. தமது பிள்ளைகள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களை உடனடியாகத் தேடி  மீட்டுத்தருமாறும் கோரப்பட்ட இவ்வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. 
ஐந்து மாதங்களின் பின்னர் கண்துடைப்பிற்காக ராணுவ அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்குழு, இத்தாய்மார்களைத் தொடர்பு கொண்டு, "கருணா குழு என்று குறிப்பிட வேண்டாம், இனந்தெரியாத குழு என்று குறிப்பிடுங்கள்" என்று வற்புறுத்தியதாக இத்தாய்மார்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடரும்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள்

image007.jpg

2006 ஆடி மாதத்திலிருந்து தனது ராணுவ நண்பர்களுடன் மக்கள் மத்தியில் பகிரங்கமாக உலாவரத் தொடங்கியது கருணா குழு.இக்குழு தனது ஆயுததாரிகளின் பிரசன்னத்தை மட்டக்களப்பு எல்லைகளைத் தாண்டி பொலொன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தைவரை விஸ்த்தரித்தது. அத்துடன் தனது அரசியல்ப் பிரிவு என்று சொல்லிக்கொண்ட தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் எனும் அமைப்பை கிழக்கின் பலவிடங்களிலும் திறக்க ஆரம்பித்தது. ஆனால், இந்த அரசியல் அலுவலகங்களிலிருந்துதான் கருணா குழு கடத்தல்களை நடத்தியிருந்தது. 


மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கருணா குழுவின் கடத்தல்கள் தலைவிரித்தாடத் தொடங்கிய நாட்களுக்கு சற்று முன்னரே நகரில் தனது அரசியல் அலுவலகத்தினை அது திறந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. திருகோணமலை மாவட்டத்திலும் இதேவகையான யுத்தியையே கருணா குழு கைக்கொண்டது. திருகோணமலை நகர்ப்பகுதியில் கருணாவால்  அரசியல் அலுவலகம் திறக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே நகர்ப்பகுதியில் இருந்து குறைந்தது 20 சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றிருக்கிறது. 

2006, புரட்டாதி மாதம் 24 ஆம் திகதி செங்கலடியில் , சித்தாண்டி ராணுவ முகாமிற்கு அருகாமையில் கருணாவினால் அரசியல் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. அவ் அலுவலகம் திறக்கப்பட்டு நாளிலேயே அப்பகுதியில் 12 சிறுவர்களை கருணா குழு கடத்திச் சென்றிருந்தது. அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று பகுதியில் கருணா குழுவின் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்ட நாட்களிலேயே கடத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. 

ஆடி, ஆவணி புரட்டாதி ஆகிய மாதங்களில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் மட்டக்களப்பு நகரில் உலாவருவதனை உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் அவதானித்துள்ளனர். மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்தபோது கருணா குழுவினரின் பலமான பிரசன்னத்தை கண்ணுற்றதாகத் தெரிவித்திரிக்கிறார்கள். கருணா குழுவின் பெயர்ப் பலகைகளும், பதாதைகளும் நகர வீதிகளிலும், தெருக்கோடிகளிலும் பரவலாகக் காணப்பட்டதாக இவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். நகரின் பெரும்பாலான ராணுவ மற்றும் பொலீஸ் சோதனைச் சாவடிகளில் ராணுவத்தினருடன் ஆயுதம் தரித்த கருணா குழு உறுப்பினர்களும் பகிரங்கமாகவே மக்களை சோதனைசெய்வது மற்றும் தடுத்துவைப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் முறையிட்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அரச ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் தறுவாயில், இப்பகுதிகளில் கருணா குழு அருகருகே அமைந்திருக்கும் சோதனைச் சாவடிகளினூடாக சிறுவர்களை ராணுவத்தினரின் அனுமதியின்றிக் கடத்திச் செல்வதென்பது இயலாத காரியம் என்று மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 புரட்டாதி மாதமளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான், மாங்கேணி, சந்திவெளி, செங்கலடி, வாழைச்சேனை, மண்முனை (வடக்கு மற்றும் தென்மேற்கு) போரதீவுபற்று, கோரளைப்பற்று ( வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு), காத்தான்குடி, ஏறாவூர் நகர்ப்பகுதி, மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பல பகுதிகளில் கருணா குழுவினரால் சிறுவர்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்த கிராமங்கள் ராணுவ பொலீஸ் முகாம்களுக்கு மிக அண்மையிலும், ஒவ்வொரு கிராமத்திற்குமிடையிலான வழிநெடுகிலும் ராணுவச் சோதனைச் சாவடிகள் தொடர்ச்சியாக இருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

கருணா குழுவினரால் சிறுவர்களும் பதின்ம வயதினரும் வீடுகள், வேலை செய்யும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது வீதிகள் மற்றும்  திருமண நிகழ்வுகள் ஆகிய பல இடங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டனர். இவற்றுக்கும் மேலாக வாகரைப் பகுதியில் அரச ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து உயிரைக் காப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அகதிகளாகக் குடியேறியிருந்த முகாம்களிலிருந்து பல சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றதாக முறைப்பாடுகள் உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களிடம் பதியப்பட்டிருந்தன.

இவ்வாறு கடத்தப்பட்ட சிறார்களில் பலர் கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் போர் நடவடிக்கைகளில் கருணாவினால் ஈடுபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைத் தேடி கரபோல பகுதியில் கருணா அமைத்திருந்த முகாமிற்கு வந்திருந்த அச்சிறுவனின் தந்தை தனது மகன் மோதலில் காயமுற்றுக் கிடப்பதை கண்ணுற்றிருக்கிறார். "அவனது காதும், கால்களும் நெருப்பில் எரிந்து கறுப்பாக இருந்தன. மோதல் ஒன்றின்போது தனக்கருகில் குண்டொன்று வெடித்ததாகவும் தனது நண்பன் தனக்கருகிலேயே இறந்துவிட்டதாகவும் தான் காயப்பட்டதாகவும் அவன் என்னிடம் கூறினான்" என்று அத் தந்தை தெரிவிக்கிறார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள்

The New Humanitarian | Breakaway Tamil Tiger faction to stop child  recruitment

2006 ஆனி மாதத்தில் கருணா குழுவினரால் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயாரை மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் செயற்பாட்டாளர்கள் செவ்விகண்டனர்.  ஆனி மாதத்தில் தன்னிடமிருந்து கருணா குழுவினரால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட மகன் ஐப்பசியில் இறந்துவிட்டதாக கருணா குழுவினரால் அத்தாய்க்கு அறிவிக்கப்பட்டது. அயலவர்களின் கருத்துப்படி கொல்லப்பட்ட சிறுவனை தீவுச்சேனைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமது முகாமிலேயே கருணா குழு எரித்ததாகவும், தான் எவ்வளவுதான்  கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும்கூட தனது மகனின் உடலைத் தன்னிடம் தரமறுத்துவிட்டதாகவும் அத்தாய் கூறுகிறார். இப்படிக் கொல்லப்பட்ட சிறுவனும், மேலே இன்னொரு சிறுவனால் தன்னருகில் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சிறுவனும் ஒரே ஆளாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்வதிலிருந்து நிறுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். கருணா குழுவினரால் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டு தேவையற்ற போர் ஒன்றிற்குள் பலியிடப்படலாம் என்கிற அச்சமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அரச ராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தில் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு கருணா குழுவினரால் நடத்தப்பட்டு வரும் கடத்தல்கள் கடுமையான அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

"நான் எனது 14 மற்றும் 15 வயதுப் பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்லவேண்டாம் என்று நிறுத்திவிட்டேன்" என்று ஒரு தாய் கூறினார். "எனது கணவரைக் கொன்றுவிட்டார்கள், எனது பிள்ளைகளையும் இழக்க நான் தயாரில்லை" என்று இன்னொரு தாய் கூறினார். இன்னும் சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் தாமும் பாடசாலைக்குச் சென்றுவருவதாகக் கூறுகின்றனர்.

மட்டக்களப்பில் சில பெற்றோருடனும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களுடனும் பேசியபோது, சில சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் சிலர் தாமாகவே கருணா குழுவுடன் இணைந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர். சர்வதேச சட்டங்களின்படி, ஆயுதக் குழுவொன்றிலோ ராணுவத்திலோ தமது விருப்பத்தின்பேரில் ஒருவர் இணைய விரும்பினால்க் கூட தகுந்த வயதினை அடையும்வரை அவரை இணைத்துக்கொள்ள முடியாதென்கிற நியதி இருக்கிறது. 

"எமது அயல்க் கிராமத்தில் 10 அல்லது 12 வயதுள்ள சில சிறுவர்கள் கருணா குழுவில் இணைய விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. தமது வயதினை ஒத்த சிறுவர்கள் ஆயுதங்களுடன் வலம்வருவதைப் பார்க்கும்ப்போது இச்சிறார்களுக்கு ஆயுதக் குழுவில் இணையும் ஆசை உருவாகியிருக்கிறது, அத்துடன் அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்டுவருவதாக அறிகிறேன்" என்று ஒரு தாய் கூறினார்.

 

தை மாதம் 2007 ஆம் ஆண்டில் ஐ நா செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துதல் தொடர்பான கண்டனத்தில் கருணா குழுவினரின் பலவந்த ஆட்ச்சேர்ப்புப் பற்றியும், சிறுவர் கடத்தல்களில் ராணுவத்தினரின் பங்குபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் .

 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு அறிக்கையின்படி கிழக்கில் கருணா குழுவினரின் கடத்தல்கள் பற்றிய செய்தித் தொகுப்பு : பாகம் 2

கருணா சிறுவர்களைக் கடத்துவதற்காக பாவித்த உத்திகள் !

கருணா குழுவினரின் கடத்தல்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் அனைவருமே, இக்குழு தமது கடத்தல்களின்போது ஒரேவகையான உத்தியையே பாவித்ததாகக் கூறுகின்றனர். குறைந்தது 6 ஆயுதம் தரித்த கருணா துணைராணுவக்குழு உறுப்பினர்கள் கிராமத்திற்கு வருவர். பெரும்பாலான நேரங்களில் இலங்கை ராணுவத்தினரின் சீருடையில் கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்கள் கடத்தல்களில் ஈடுபட்டாலும்கூட, சிலவேளைகளில் கறுப்புநிற நீளக் காட்சட்டையும், சேர்ட்டும் அணிந்திருந்தனர். சிலவேளைகளில் தமது முகத்தைத் துணியினால் மூடிக் கட்டியிருந்தாலும்கூட, பெரும்பாலான வேளைகளில் பகிரங்கமாகவே கடத்தல்களில் இவர்கள் ஈடுபட்டனர். பல சந்தர்ப்பங்களில் கடத்தல்களில் ஈடுபட்ட கருணா குழு உறுப்பினர்களை கிராமத்தவர்கள் அடையாளம் கண்டிருந்தனர். மிகச் சரளமாகவும், கிழக்கு மாகாணத் தமிழிலும் பேசிய இக்கடத்தல்காரர்கள், தாம் தேடிவந்தவர் பற்றிய துல்லியமான தகவல்களைக் கொண்டிருந்தனர்.

தம்மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களால் சினமடைந்த கருணா, இக்கடத்தல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லையென்று கூறியிருந்ததுடன், இக்கடத்தல்களை புலிகளே செய்வதாக கூறத்தொடங்கியிருந்தார். ஆனால், கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள், உள்ளூர் மனிதவுரிமை அமைக்குக்கள் மற்றும் அரச சார்பற்ற சர்வதேச நிறுவனக்களின் ஊழியர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இக்கடத்தல்களை கருணா குழுவே செய்ததாக உறுதிபடக் கூறுகின்றனர். சில நூறு மீட்டர்கள் இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவச் சாவடிகளினூடாக பூரண ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளால் சிறுவர்களைக் கடத்துவது எப்படிச் சாத்தியம் என்று இவர்கள் மேலும் கேட்கின்றனர். 

பொதுவாகவே சிறுவர்களைக் கடத்தவரும் கருணா குழு உறுப்பினர்களுடன் ராணுவமும் பாதுகாப்பிற்கு வருவதுடன், தாம் கருணா குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறியே சிறுவர்களையும் இளைஞர்களையும் இக்குழு சுற்றிவளைக்கிறது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூரில் இருந்து கருணா குழுவிற்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் பின்னர் தாமே கடத்தல்களை முன்னின்று நடத்துவதாகவும், பல சந்தர்ப்பங்களில் இந்த இளைஞர்களை ஊர்மக்கள் தெளிவாகவே அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி அருகிலுள்ள கருணா குழுவின் முகாமிற்கு பெற்றோர்கள் சென்றவேளை தமது பிள்ளைகள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதையும், கடத்திச் சென்றவர்கள் அங்கே நிற்பதையும் கண்டிருக்கின்றனர்.

image008.jpg

சிறுவர்களைக் கடத்திச் சென்று அடைத்துவைக்கப் பாவிக்கப்பட்ட கருணா துணைராணுவக் குழுவின் அலுவலகம் ஒன்று

 

 

2006 ஆம் ஆண்டு முழுவதும் கருணா துணைராணுவக் குழு 15 வயதில் இருந்து 30 வரையான ஆண்களை மட்டுமே கடத்தி வந்தது. இக்காலப்பகுதியில் 11 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் உட்பட பல பதின்மவயதுச் சிறுவர்களைக் கருணா குழு கடத்தியிருந்தது. திருமணமான இளைஞர்களையும் பள்ளிச் சிறுவர்களையும் கடத்திச் செல்வதைக் குறைத்திருந்தபோதும், அவ்வபோது பள்ளிச் சிறார்களும் இக்குழுவினரால் லடத்தப்பட்டிருக்கின்றனர் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், இதே காலப்பகுதியில் இரு சிறுமிகளையும் கருணா குழு கடத்திச் சென்றிருப்பதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாக மனிதவுரிமைக் காப்பகம் அறிவித்திருக்கிறது.

கடத்தப்பட்ட பெரும்பாலான சிறுவர்கள் கிராமப்புரங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். கல்விகற்பதற்கான வசதிகள் குறைவாகவும், தம்மைக் கடத்தல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் திராணியுமற்ற இவ்வறிய குடும்பங்களே கருணா குழுவினரால் இலக்குவைக்கப்பட்டனர். மேலும் புலிகள் இயக்கத்தில் சகோதரனையோ அல்லது சகோதரியையோ கொண்ட பல போராளிகளின் குடும்பங்களைக் கருணா குழு இலக்குவைத்துக் கடத்தியது. சிலசந்தர்ப்பங்களில் ஒரே வீட்டில் புலிகள் இயக்கத்தில் ஒரு பிள்ளையும், கருணா துணைராணுவக் குழுவில் இன்னொரு பிள்ளையும் இருந்த சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகனைக் கடத்திச்சென்ற கருணா குழு அத்தாயிடம், "உனது ஒருபிள்ளை புலிகள் இயக்கத்தில்த்தானே இருக்கிறான், இவனை கருணாவுக்குத் தா" என்று கூறி இழுத்துச் சென்றதாகவும், "மூத்தவனைப் புலிகள் பலவந்தமாகத்தான் இணைத்தார்கள்" என்று தான் கூறியதை கருணா குழு ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் கூறினார்.

அடுத்ததாக, கருணா குழுவினரால் இலக்குவைக்கப்பட்ட இளைஞர் அணியானது புலிகளியக்கத்தின் முன்னாள்ப் போராளிகளாக இணைந்து கருணா ராணுவத்துடன் சேர்ந்தபோது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள். கிழக்கு மாகாணத்தில் கருணா புலிகள் இயக்கத்திற்கென்று இணைத்துக்கொண்ட சுமார் 1800 ஆண் மற்றும் பெண்போராளிகளை தான் பிரிந்துசென்றபோது கருணா வீடுகளுக்கு அனுப்பியிருந்ததாதகத் தெரியவருகிறது. கருணாவுக்கெதிரான புலிகளின் ராணுவ நடவடிக்கையின் பின்னர் இந்த முன்னாள்ப் போராளிகளில் ஒருபகுதியினர் புலிகளுடன் மீண்டும் சேர்ந்துகொண்டனர். மீதமிருந்த பலபோராளிகளை கருணா குழு பலவந்தமாக கடத்தத் தொடங்கியது. ஐ நா சிறுவர் பாதுகாப்பு அமைப்பின்படி 2006 ஆம் ஆண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியொன்றில் குறைந்தது 208 முன்னாள்ப் போராளிகளைக் கருணா குழு கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவர்களுள் 15 போராளிகள் கருணா தனித்து இயங்க முடிவுசெய்தபோது தனது அணியைப் பலப்படுத்த பலவந்தமாக இணைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் 2006 இல் கருணாவினால் பலவந்தமாக இணைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா சிறுவர்களைக் கடத்துவதற்காக பாவித்த உத்திகள் !.................

 

சிறுவர்களையும், பதின்ம வயது இளைஞர்களையும் கடத்திச் சென்ற கருணா குழு, அவர்களை கடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் தமது அரசியல் அலுவலகத்திலேயே தற்காலிகமாக அடைத்து வைத்தது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிச் சென்ற பெற்றோர்கள் தமது கிராமங்களுக்கு அருகிலிருந்த கருணா குழுவின் அரசியல் அலுவலகங்களில் தமது பிள்ளைகள் கருணா குழுவால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், குறைந்தது தமது பிள்ளைகள் அந்த அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கருணாவின் அரசியல்க்த்துறை தம்மிடம் உறுதிப்படுத்தியிருந்ததாகவும் கூறுகின்றனர்.

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மனிதவுரிமை அமைப்பு ஒன்றின் அதிகாரி தெரிவிக்கையில் கருணா குழுவின் அரசியல் அலுவலகத்தில் சிறுவர்கள் ஆயுதங்களுடன் நிற்பதைத் தான் கண்டதாகக் கூறுகிறார். "அவர்களில் ஒரு சிறுவனின் இடது கையில் காயமேற்பட்டிருந்தது, வலது  கையில் வாக்கி டோக்கியொன்றை அவன்  வைத்திருந்தான். அவனுடன் இன்னும் குறைந்தது 10 அல்லது 12 சிறுவர்களைக் கண்டேன். எல்லோரும் 14 அல்லது 15 வயதுடையவர்களாகத்தான் இருப்பார்கள். சிலரைப் பார்க்க அவர்களின் பெற்றோர்கள் அங்கே காத்துநின்றது தெரிந்தது" என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த கருணாவின் முகாமிற்குச் சென்ற பெற்றோரும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் அம்முகாம்களில் கருணா மிகக் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஆயுதங்களுடன் காவலுக்கு அமர்த்தியிருந்ததாகத் தெரிவிக்கின்றனர். 

2006, புரட்டாதி மாதம் செங்கலடிப்பகுதியில் கருணாவால் கடத்தப்பட்ட தனது மகனைத் தேடி அங்கிருந்த கருணா குழுவின் முகாமிற்குச் சென்ற தாயிற்கு அவரது மகன் மட்டக்களப்பு முகாமில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தன்னுடன், இன்னும் கடத்தப்பட்ட பிள்ளைகளின் தாய்மாரையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்பில் அமைந்திருந்த கருணாவின் முகாமுக்குச் சென்றிருந்த அத்தாய் மனிதவுரிமைக் காப்பகத்திடம் பின்வருமாறு கூறுகிறார், " எமது பிள்ளைகளை அவர்கள் மேல்மாடியில் அடைத்து வைத்திருந்தனர். எம்மைக் கண்டவுடன், இங்கே நிற்கவேண்டாம், உங்களைக் கண்டால் எங்களை அடித்துத் துன்புறுத்துவார்கள், நீங்கள் போய்விடுங்கள் என்று சைகை காட்டினார்கள்" என்று கூறுகிறார். 

சில நாட்களின் பின்னர் கடத்தப்பட்ட சிறுவர்களையும் இளைஞர்களையும்  மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர்கள் வடமேற்கே பொலொன்னறுவை மாவட்டத்தில் இருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தமது முகாம்களுக்கு கருணா குழு இழுத்துச் சென்றது. இம்முகாம்களுக்குச் சென்ற பெற்றோர்கள் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி ஏ 11 நெடுஞ்சாலைக்கு வடக்கே குறைந்தது 5 முகாம்களை கருணா ராணுவத்தின் துணையுடன் அமைத்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் பரிபூரண கட்டுப்பாட்டில் இருக்கும் ராணுவமயப்படுத்தப்பட்ட இப்பிரதேசத்தில் குறைந்தது 5 முகாம்களை ராணுவத்தின் துணையில்லாமலும், அவர்களுக்குத் தெரியாமலும் கருணா நடத்திவருவதென்பது இயலாத காரியம் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

image008.jpg

மட்டக்களப்பு நகரில் அமைந்திருக்கும் கருணா குழுவின் அலுவலகத்தின் முன்னால் நபர் ஒருவர் -  இம்முகாமைச் சூழவுள்ள மூன்று வீடுகளிலும் ராணுவமும் பொலீஸாரும் கருணா குழுவுக்குப் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் நகர் வாசிகள் தெரிவிக்கின்றனர். 

மனிதநேய அமைப்பொன்றில் ஊழியராகப் பணியாற்றும் தமிழர் ஒருவர் வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவரும் கருணா குழுவின் ஐந்து முகாம்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்தார். இந்த ஐந்து முகாம்களில் மூன்று முத்துகல பகுதியிலும், ஒன்று கிராமத்திற்குள்ளும், மற்றையது, கிராமத்திற்குச் சற்று வெளியேயும் அமைந்திருந்ததாக அவர் கூறுகிறார். அனைத்து முகாம்களும் பூரணமாக மறைக்கப்பட்ட உயர்ந்த வேலிகளைக் கொண்டிருந்ததாக அவர் மேலும் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி முதுகல ராணுவ முகாமின் வேலியோடு ஒரு கருணா முகாமும், ஏனையவை இரண்டும் மிக அருகிலும், நான்காவது முகாமும் அதனுடன் இணைந்த போர் வைத்தியசாலையும் மதுரங்கலப் பகுதியிலும், ஐந்தாவது முகாம் கரபொல பொலீஸ் நிலையத்துடனும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Karuna Amman Resource | Learn About, Share and Discuss Karuna Amman At  Popflock.com

கடத்தப்பட்டவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்குமிடையிலான தொடர்பாடல்

தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட இரு வாரங்களிலிருந்து ஒரு மாத காலப்பகுதிக்குள் அவர்களைப் பார்க்க தமக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சில பெற்றோர் தெரிவித்தனர். இவ்வாறு தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்றவேளையில் அவர்கள் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டு, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க முடிந்ததாக இவர்கள் கூறுகின்றனர். 

இன்னும் சில குடும்பங்களுக்கு கடத்தப்பட்ட சிறுவர்களுக்கான மாதக் கொடுப்பனவாக 6000 இலங்கை ரூபாய்களை கருணா குழு வழங்கிவந்ததாகத் தெரியவருகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களில் சிலர் பயிற்சியின்பின்னர் வேறு கருணா குழு உறுப்பினர்களின் பாதுகாப்புடன் குடும்பங்களை இரவுநேரங்களில்  சென்று பார்த்துவரவும் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்படியான சந்தர்ப்பம் ஒன்றில், தன்னைக் கடத்திச்சென்றவர்களின் பாதுகாப்பிலேயே ஒரு சிறுவன் தனது பெற்றொரைப் பார்க்க அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கருணா குழுவினரால் விடுவிக்கப்பட்ட மற்றும் தப்பியோடிய சிறுவர்கள்

2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவர்களில், மிகவும் அரிதான ஓரிரு சந்தர்ப்பங்களில் சில சிறுவர்கள் கருணா குழுவினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இப்படி விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தமது பிள்ளை விடுவிக்கப்பட்டதுபற்றி வெளியே சொல்லத் தயங்கியதாகவும், அவர் மீண்டும் கடத்தப்படலாம் என்கிற அச்சமே இதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தினைக் கப்பமாகச் செலுத்தியபின்னர் விடுவிக்கப்பட்ட தமது பிள்ளை தொடர்பான தகவல்களை பெற்றோர்கள் வெளியே சொல்லத் தயங்கினர் என்றும் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்பின் அறிக்கையின்படி கடத்தப்பட்ட பலநூற்றுக்கணக்கான சிறுவர்களில் 23 சிறார்கள் கப்பம் செலுத்தியபின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், 18 சிறுவர்கள் பயிற்சியின்போது தப்பியோடியதாகவும் இன்னும் இருவர் பயிற்சியின்போது கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருணா குழுவின் பிடியிலிருந்து தப்பிவந்த பல சிறுவர்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பிவந்ததற்கான தண்டனையாக மீண்டும் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்கிற அச்சமும், கருணா குழுவில் செயற்பட்டதற்காக புலிகளால் தண்டிக்கப்படலாம் என்கிற அச்சமும் இவர்களுக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கில் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் அவர்களை பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்புவதை வழமையாகக் கொண்டிருந்த பெற்றோர்கள், கொழும்பிலும் இடம்பெற்ற கருணா குழுவினர் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளையடுத்து பிள்ளைகளைத் தம்மோடு ஊரில் வைத்திருப்பதே பாதுகாப்பானது என்று கருதியதாகப் பலர் தெரிவிக்கின்றனர்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka renegades to disarm once safe from Tigers | Reuters

"எனது மகன் கருணாவால் விடுவிக்கப்பட்டாலோ அல்லது அவர்களின் பிடியிலிருந்து தப்பிவந்தாலோ, என்னால் அவனை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது" என்று கடத்தப்பட்ட 18 வயது இளைஞன் ஒருவனின் தாயார் தெரிவித்தார். "எப்படி அவர் தப்பிவந்தார் என்பதைப் பொறுத்து கருணா குழுவோ, இராணுவமோ அல்லது புலிகளோ அவனைத் தேடலாம். அவனுக்கு எப்படி பாதுகாப்பை வழங்குவதென்றே எனக்குத் தெரியவில்லை. கருணாவின் பிடியிலிருந்து தப்பிவரும் சிறுவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நிலைமைகளை யாராவது ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் அதிகமான சிறுவர்கள் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவரச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். 

கடத்தப்பட்ட 21 வயதுடைய இளைஞனின் தாயார் கூறுகையில், "எமது பிள்ளைகள் கருணாவின் பிடியிலிருந்து தப்பிவந்தாலும், அவர்களுக்கு எமது வீடுகள் பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை. அவர்களைத் தேடி நிச்சயம் கருணா குழு வரும், அவர்களை மீண்டும் இழுத்துச் செல்லும் அல்லது வீட்டிலுள்ள ஏனையவர்களையாவது பலவந்தமாக இழுத்துச் செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறினார்.


கருணா குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் என்று முறைப்பாடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை

கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட மொத்த சிறுவர்களினதும் இளைஞர்களினதும் சரியான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் நோர்வேயின் தலைமையிலான யுத்தக் கண்காணிப்புக் குழுவும் யுனிசெப் அமைப்பும் சில புள்ளிவிபரங்களை வைத்திருக்கின்றன. பெற்றோரால் உறுதிசெய்யப்பட்ட கடத்தல் விபரங்களை மட்டுமே கணக்கெடுத்திருக்கும் இவ்விரு அமைப்புக்களினதும் புள்ளிவிபரங்கள் உண்மையான கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையினைக் காட்டிலும் மிகவும் குறைவானவை. பெரும்பாலான குடும்பங்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதுபற்றி வெளியே சொல்லத் தயங்குவதாகத் தெரிவிக்கிறார்கள். இக்கடத்தல்கள்பற்றி வெளியே சொல்லுமிடத்து தாம் பழிவாங்கப்படலாம், அல்லது தமது பிள்ளைகள் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் பல பெற்றோரும், பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகக் கொடுத்து தமது பிள்ளைகளை விடுவிக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளை முறைப்பாடுகள் பாதித்துவிடும் என்பதற்காக இன்னொரு பகுதியினரும் இக்கடத்தல்கள்பற்றி வெளியே பேசத் தயங்குவதாகத் தெரியவருகிறது. 

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புள்ளிவிபரப்படி 2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 18 வயதிற்கு உட்பட்ட 117 சிறார்களும், 167 இளைஞர்களும் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேகாலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் 3 சிறார்களும் 7 இளைஞர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இதே காலப்பகுதியில் யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் மட்டக்களப்பு, அம்பாறை  மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் குறைந்தது 208 சிறுவர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றுள் 181 கடத்தல்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், 23 கடத்தல்கள் அம்பாறை மாவட்டத்திலும் 4 கடத்தல்கள் திருகோணமலை மாவட்டத்திலும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. ஆனால், இதே அறிக்கையில் யுனிசெப் அமைப்பு பின்வருமாறு கூறுகிறது, "கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைப்போல மூன்று மடங்காக இருக்கும் என்றும், பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட விபரத்தைச் சொல்லத் தயங்குவதாகக் கூறுவதோடு, உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடத்தல்களின் எண்ணிக்கையான 600 - 700 எனும் எண்ணிக்கை சரியானதாக இருக்கலாம்" என்றும் கூறுகிறது. இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், 18 வயதிற்கு மேற்பட்ட கடத்தல்களின் புள்ளிவிபரம்பற்றி யுனிசெப் அமைப்பு தகவல்களைச் சேகரிக்கவில்லையென்பது. 

யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவைப் போல் அல்லாது யுனிசெப் அமைப்பு கடத்தப்பட்ட சிறுவர்களின் விபரங்களை அவர்களின் வயது அடிப்படையில் பட்டியலிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் 2006 கார்த்திகை மாதம் யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் கருணா குழுவால்  கடத்தப்பட்ட சிறுவர்களின் விபரம் வருமாறு:

வயது 10 இலிருந்து 12 வரையான சிறுவர்கள் : 02
வயத்யு 12 இலிருந்து 14 வரையான சிறுவர்கள் : 08
வயது 14 இலிருந்து 16 வரையான சிறுவர்கள் : 59
வயது 16 இலிருந்து 18 வரையான சிறுவர்கள் : 109

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் கடத்தல்களும் பொலீஸாரின் அசமந்தமும்

https://ibb.co/3sJNnvK

கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கொலைப்படையின் முக்கியஸ்த்தர்கள் (பிள்ளையான் பிரியுமுன்)
 

மேலே விபரிக்கப்பட்டதுபோல, கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பல ஆட்கடத்தல்களும், கட்டாய ராணுவப் பயிற்சிக்குமான ஆட்சேர்ப்பும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களால் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படாமலேயே மறைக்கப்பட்டு விட்டன. பல கடத்தல் சம்பவங்கள் பொலீஸாருக்குக் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதை பொலீஸாருக்கு தாம் அறியத் தராமைக்கான காரணங்களாக பின்வருவனவற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள்.
முதலாவது, அச்சம். கருணா குழு இவர்களது பிள்ளைகளைக் கடத்திச் செல்லும்போது சர்வதேச அமைப்புக்களான யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கோ, பொலீஸாருக்கோ தெரிவிக்கக் கூடாதென்று அச்சுருத்தியிருந்தமை.  " நான் உங்களுடன் இதுபற்றிப் பேசுவதைக் கேள்விப்பட்டாலே கருணா குழுவினர் என்னை இன்றிரவே சுட்டுக் கொன்றுவிடுவார்கள்" என்று கருணா குழுவினரால் கடத்தப்பட்ட 18 வயது நிரம்பிய இளைஞனனின் சிறியதாயார் தெரிவித்தார்.

இரண்டாவது காரணம், பொலீஸாரிடம் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்கிற மக்களின் நம்பிக்கை. பொலீஸாரிடம் தமது பிள்ளைகள் கருணாகுழுவினரால் கடத்தப்பட்டதை முறையிட்ட பெற்றோர்கூட தமது பிள்ளைகளைப் பொலீஸார் கண்டுபிடித்துத் தருவார்கள் என்பதை நம்பவில்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. "அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் எங்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றார்கள்?" என்று கடத்தப்பட்ட சிறுவன் ஒருவரின் பேத்தியார் தெரிவித்தார்.

மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தினால் செவ்வி காணப்பட்ட 20 குடும்பங்களில் 15 குடும்பங்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதுபற்றி பொலீஸில் முறையிட்டதாகச் சொன்னார்கள். இந்த முறைப்பாடுகளைப் பொலீஸார் பதிவுசெய்து வைத்துக்கொண்டதுடன் அவர்களின் கடமை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்று இந்தப் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால், பல சந்தர்ப்பங்களில் கருணா குழுவுக்கெதிரான முறைப்பாடுகளை தம்மால் ஏற்கமுடியாதென்று பொலீஸார் பெற்றோர்களை திருப்பியனுப்பிய சம்பவங்கள் நிறையவே நடந்திருப்பதாக மனிதவுரிமை கண்காணிப்பகம் கூறுகிறது.

"எமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றது கருணாதான் என்று நாம் வாக்குமூலம் கொடுத்தபோதும், பொலீஸார் இதுபற்றி விசாரணைகளை மேற்கொள்ளவோ அல்லது இதுவரையில் கடத்தப்பட்ட எமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை" என்று கடந்த புரட்டாதி மாதம் கடத்திச்செல்லப்பட்ட சிறுவன் ஒருவரின் தாயார் வருத்தத்துடன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது பிள்ளைகளைக் கருணா குழுவினரிடம் பறிகொடுத்த பல பெற்றோர்கள் தாம் பொலீஸாரிடம் இதுபற்றி முறையிடச் சென்றவேளையில் தமக்கு அளிக்கப்பட்ட பதில்களைப்பற்றி விவரிக்கிறார்கள். ஒரு சில முறைப்பாடுகளை பொலீஸார் கவனமெடுத்துப் பதிவுசெய்துகொண்டதாக தெரிகிறது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட பொலீஸார் பெற்றோருடன் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமான முறையிலும் நடந்துகொண்டதாக மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் பெற்றோர் தெரிவிக்கின்றனர். "நான் ஏறாவூர் பொலீஸாரிடம் எனது மகன் கடத்தப்பட்டதுபற்றி முறையிட்டபோது, உங்களின் முறைப்பாட்டைப் பதிவுசெய்துகொள்கிறோம், ஆனால் கருணாவினால் கடத்தப்பட்ட உங்களது பிள்ளையை நாங்கள் மீட்டுத் தரப்போவதில்லை" என்று ஏளனமாகக் கூறியதாகவும் தன்னை ஒரு நாயைப்போல அடித்துவிரட்டியதாகவும் தனது மகனைப் பறிகொடுத்த தாயொருவர் கண்ணீருடன் கூறுகிறார்.

இவ்வாறே, கருணாவினால் கடத்தப்பட்ட தமது மகனை மீட்டுத்தருமாறு ஒரு குடும்பம் பொலீஸாரிடம் வேண்டியபோது, "உங்களின் பிள்ளையைக் கடத்திச் சென்றது கருணாதானே, அப்படியானால் அவரிடம் தானே நீங்கள் போய் உங்கள் பிள்ளையை விடுவிக்குமாறு கேட்கவேண்டும்? இங்கே எதற்காக வருகிறீர்கள்?" என்று கடிந்துகொண்டதாக அக்குடும்பம் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தது.

"பொலீஸாரின் அசமந்தமும், போலியான அக்கறையும் பாதிக்கப்பட்ட பெற்றோரை நோகடித்தாலும் கூட, பொலீஸாரினாலோ அல்லது விசேட அதிரடிப்படையினராலோ செய்யப்படும் அநீதிகளை முறையிட ஒரு வழியிருக்கிறது. ஆனால் கருணாவினால் கடத்தப்பட்டுவரும் எமது பிள்ளைகளைப் பற்றி எங்கே முறையிடுவது, யாரை நோவது? கருணாவைக் கேள்விகேட்கும் அதிகாரம் இங்கே யாருக்கு இருக்கிறது" என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ மனிதவுரிமை அமைப்பொன்றில் செயற்பட்டுவரும் நண்பர் ஒருவர் கண்காணிப்பகத்திடம் கேட்டார். 

பொலீஸாரிடம் முறைப்பாடுகளைச் செய்தபோது, அவர்கள் கடத்தலின் முழு விபரங்களையும் பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டவில்லையென்பது தெரிகிறது. மேலும், பல முறைப்பாடுகளுக்கான பதிவு இலக்கத்தினை பெற்றோருக்கு வழங்குவதைப் பொலீஸார் மறுத்துவிட்டதாகவும் தெரியவருகிறது. ஏறாவூரில் கடத்தப்பட்ட தனது மகன் தொடர்பாக பொலீஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்ற தகப்பன் ஒருவரிடம் சில விபரங்களைக் கேட்டுக்கொண்ட பொலீஸார், அந்தப் முறைப்பாட்டிற்கான பதிவு இலக்கத்தினை இடாது அம்முறைப்பாட்டினைப் பதிவு செய்ததாகவும், தகப்பனிடம் முறைப்பாடு தொடர்பான இலக்கம் ஒன்றை வழங்கவில்லையென்றும் தெரியவ்ருகிறது. தனது மகனின் புகைப்படத்தினைத் தகப்பன் பொலீஸாரிடம் கொடுக்க முனைந்தபோது, அது தமக்குத் தேவையில்லை, உங்கள் மகனைக் கண்டுபிடித்தால் சொல்கிறோம் என்று அலட்சியமாகக் கூறி அனுப்பியதாக அத்தகப்பன் தெரிவிக்கிறார்.

 

இடர் நிவாரண மற்றும் மனிதவுரிமையமைச்சர் மகிந்த சமரசிங்க தமது அரசாங்கம் கடத்தப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக பொலீஸார் முறைப்பாடுகளை உரியமுறையில் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுருத்தியிருப்பதாக சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களிடம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றபோதும்கூட, இவ்வறிக்கை வெளிவரும்வரை பொலீஸார் ஒரு கடத்தல் முறைப்பாடுபற்றியும் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லையென்றும், இதுவரையில் கடத்திச் செல்லப்பட்ட ஒருசிறுவனையாவது விடுதலை செய்து மீட்டுவர முயலவில்லையென்றும் தெரிகிறது.


 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையிலிருந்து.....

கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும்

WikiLeaks: Pararajasingham And Raviraj Killings; Karuna And Douglas Killing  MPs - EPDP Vigneswaran To US - Colombo Telegraph

கிழக்கில் வாழும் அனைத்து மக்களும் கருணா குழுவினை பின்னால் இருந்து இயக்குவதே அரசுதான் என்பதை உறுதியாக நம்புகின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிங்கள அரச ராணுவம் மற்றும் பொலீஸாருடன் இணைந்து சோதனைச் சாவடிகளில் கருணா குழு உறுப்பினர்கள் காவலில் ஈடுபட்டுவருவதும், ராணுவ வாகனங்களில் ரோந்துபுரிந்துவருவதும் பொதுமக்களால் பரவலாக வெளிக்கொணரப்பட்டபோதும், அரசும் ராணுவமும் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அருகருகே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழிருக்கும் பல தமிழ்க் கிராமங்களிலிருந்து சிறுவர்கள் கருணா குழுவால் கடத்தப்பட்டு சிங்கள மக்களால் குடியேற்றப்பட்டிருக்கும் மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களில், அரச ராணுவத்தின் பாரிய முகாம்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கருணா குழுவின் முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுவது அரசுக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு ஆகிய அமைப்புக்கள் கருணா குழுவுக்கும் அரச ராணுவத்திற்குமிடையிலான உறவுபற்றி மிகத் தெளிவான பார்வையையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. "கருணா குழுவினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்புப் பற்றி நாம் நீண்ட நாட்களாகவே கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பான பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம். முடிவில் இதுதொடர்பான விரிவான அறிக்கையொன்றினை அரசாங்கத்திடம் முன்வைக்க இருக்கிறோம்"
என்று நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவின் அதிகாரியொருவர் கார்த்திகை மாதம் 2006 இல் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தார்.

கருணா குழுவினரால் சிறுவர்கள் ராணுவப் பயிற்சிக்காக இழுத்துச் செல்லப்படுவதுபற்றி  உள்ளூர் மனிதவுரிமை அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அவர்கள் எங்கள் சிறுவர்களை வெளிப்படையாகக் கடத்திச் செல்கிறார்கள். அவர்களைக் கேள்விகேட்கவோ தடுக்கவோ எவருக்கும் இங்கு அதிகாரமில்லை. சட்டத்திலிருந்து அவர்களுக்கு முற்றாக விலக்களிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இக்கடத்தல்கள் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கம் கையை விரிப்பதை எம்மால் நம்பமுடியாமல் இருக்கிறது" என்று அவர் விரக்தியுடன் கூறுகிறார்.

2006 கார்த்திகையின் நடுப்பகுதிவரை கருணா குழுவினரால் கடத்தல்கள் நடத்தப்படுவதை ஏற்கமறுத்துவந்த அரச அதிகாரிகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களையடுத்து இக்கடத்தல்கள் பற்றி தமக்குத் தெரியும் என்பதை இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கடத்தல்கள் ஆரம்பிக்கும்போதே அரச அதிகாரிகளுக்குத் தெரிந்தே ஆரம்பிக்கப்பட்டன என்று நம்புவதற்கு எம்மிடம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

ஆனி 2006 இல் கருணா மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலிருந்து 13 சிறுவர்களையும் ஒரு இளைஞனையும் கடத்திச் சென்றார். கடத்தப்பட்ட சிறுவர்களில் நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கருணா கடத்தி இழுத்துச் செல்லும்போது ராணுவம் அருகே நின்றிருந்தது என்றும், ராணுவ முகாமின் அருகிலேயே கடத்தல் நிகழ்த்தப்பட்டதென்றும் சாட்சி வழங்கியிருக்கிறார்கள். தமது பிள்ளைகளை விடச் சொல்லுங்கள் என்று ராணுவத்திடம் பெற்றோர்கள் கெஞ்சியபோதும் அவர்கள் சிரித்துக்கொண்டே நின்றதாக அவர்கள் மேலும் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனி 22 ஆம் திகதி யுனிசெப் அமைப்பு விடுத்த அறிக்கையில், கருணா குழுவினரின் சிறுவர் கடத்தல்களை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டிருந்தது.  மேலும், கருணா , சிறுவர்களைக் கடத்திச் செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சாடியிருந்ததோடு, கடந்த மாதத்தில் மட்டும் 18 வயதிற்கும் குறைந்த 30 சிறுவர்களைக் கருணா கடத்திச் சென்றுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.

ஆடி மாதம், கருணாவினால் கடத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கக் கோரி அவர்களின் தாய்மார்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தனர். 48 தாய்மார்கள் தமது பிள்ளைகளின் விபரங்கள், கடத்தப்பட்ட நாள், இடம் ஆகிய விபரங்களோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷெ, இடர் நிவாரண - மனிதவுரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்ஹெ, ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் ஐ நா மனிதவுரிமை ஆணையகத்திற்கும் இவற்றின் பிரதிகளை அனுப்பியிருந்தனர்.

ஆனால், மார்கழி மாதத்தில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு மகிந்த சமரசிங்ஹெ அளித்த விளக்கத்தில் இந்த முறைப்பாடு குறித்து தாம் ஐப்பசி மாதத்திலேயே அறிந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த 48 சிறுவர்களினது கடத்தல்கள் பற்றி ஆராயப்போவதாக ராணுவம் மார்கழியில் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்த முறைப்பாட்டைப் பாவித்த ராணுவம், அத்தாய்மார்களைத் தொடர்புகொண்டு, "கடத்தியது கருணா குழு என்பதை மாற்றி, இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டனர்" என்று கூறும்படி அழுத்தம் கொடுத்திருந்தது. பின்னர் இந்த முறைப்பாடுகள் விசாரணைக்காக 2007 இல் பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும்

image009.jpg

கடத்தல்களுக்காக கருணா பாவிக்கும் ஏ 11 நெடுஞ்சாலையின் ஒருபகுதியும், அங்கே அமைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரச ராணுவத்தின் சோதனைச் சாவடியும் 

 

இவையெல்லாவற்றிற்கும் மேலாக கருணா குழுவுக்கு பாதுகாப்பினையும், முகாம்களையும், வளங்களையும் வழங்கி காத்து வருவது அரசுதான் என்பதற்கு கருணாவினால் கடத்தப்பட்ட சிறுவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும்  முகாம்கள் அமைந்திருக்கும் பகுதியினைப் பார்க்கும்போது நன்கு தெளிவாகிறது. 

வெலிக்கந்தைப் பகுதியில் கருணாவுக்காக அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்குத் தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோரின் கூற்றுப்படி இம்முகாம்கள் முற்றான ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர். கருணாவின் முகாம்களுக்குச் செல்லும் பெற்றோர் தொடர்பான விபரங்களை சோதனைச் சாவடியில் உள்ள ராணுவ வீரர்கள் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பாவித்து கருணா குழுவின் முகாம்களுக்கு வழங்கிவருவதை இப்பெற்றோர்கள் கண்டிருக்கின்றனர். கருணா குழுவின் முகாம்களுக்குச் செல்வதற்கு ஏ 11 பாதையில் இருந்து செவனப்பிட்டிய எனும் சிங்களக் கிராமத்திற்கு பல சோதனைச் சாவடிகளூடாகவே பேரூந்துகளில் இப்பெற்றோர்கள் பயணித்து வருகின்றனர். இச்சோதனைச் சாவடிகளிலேயே இப்பெற்றோரின் பெயர் விபரங்கள், கடத்தப்பட்ட பிள்ளையின் பெயர் ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் ராணுவ வீரர்கள் அதனை உடனடியாகவே குறிப்பிட்ட கருணா குழு முகாமின் உறுப்பினர்களுக்கு அறியத் தருகின்றனர். பலவிடங்களில் பேரூந்துகளை விட்டு இறங்கியவுடன் தயாராக நிற்கும் முச்சக்கரவண்டிகளில் ஏற்றப்படும் இப்பெற்றோர்களை அப்பகுதி சிங்கள்வர்கள் கருணா குழுவின் முகாம்களுக்குக் கொண்டு சென்று இறக்கிவிடுகின்றனர்.

இப்பகுதியில் கருணா குழுவின் ஆயுததாரிகள் அனைவருமே ராணுவத்தினரின் சீரூடைகளையே அணிந்து உலாவருகின்றனர் என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர் . "சோதனைச் சாவடியில் ராணுவத்தினர் எனது பெயர், அடையாள அட்டை இலக்கம், கடத்தப்பட்ட எனது மகனின் பெயர், கடத்தப்பட்ட நாள், அவரைத் தடுத்து வைத்திருக்கும் கருணா முகாம்  ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொண்டபின்னர் , என்முன்னாலேயே அவர் தொலைபேசியில் கருணா குழுவின் முகாமைத் தொடர்புகொண்டு நான் வந்திருப்பதுபற்றிக் கூறிவிட்டு, என்னைத் தொடர்ந்து பயணிக்க அனுமதியளித்தார்" என்று கடத்தப்பட்ட தனது 16 வயது மகனைத் தேடிச் சென்ற தாயொருவர் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் கூறினார்.


மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு வழங்கிய செவ்வியில் பல பெற்றோர்கள் தாம் வெலிக்கந்தைக்கு வந்திருப்பது தமது பிள்ளைகளைத் தேடித்தான் என்பது நன்கு தெரிந்தும், அவர்களை விடுவித்து எம்முடன் அனுப்பிவைக்க எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை, மாறாக அம்முகாம்களுக்கு சகலவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கி, கருணாவின் கடத்தல்களை ஊக்குவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர்.

"முதுகல பகுதியில் கருணாவுக்காக ராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு நாம் முதல்முறையாகச் சென்றபோது , அருகிலிருந்த ராணுவ முகாமிலிருந்து வந்த இரு படைவீரர்கள் நாம் எதற்காக இங்கே நிற்பதாகக் கருணா குழுவினரிடம் கேட்டனர். அவர்கள் தமது பிள்ளைகளைப் பார்க்க வந்திருப்பதாக கருணா குழு ஆயுததாரிகளால்  கூறப்பட்டது. அதன்பின்னர் சிங்களத்தில் எம்மிடம் பலகேள்விகளை அப்படைவீரர்கள் கேட்டதுடன்,  இவர்களை இங்கே நிற்க விட வேண்டாம், உடனடியாக வெளியேறச் சொல்லுங்கள் என்று கருணா குழுவிடம் கூறியபோது, எம்மை அப்பகுதியிலிருந்து கருணா குழுவினர் விரட்டினர்" என்று அப்பெற்றோர்கள் கூறுகின்றனர் . 

மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு கொடுக்கப்பட்ட முறைப்பாடொன்றில், வெலிக்கந்தைப் பகுதி கருணா குழு முகாம் ஒன்றிலிருந்து தப்பியோடிய சிறுவன் அருகிலிருந்த ராணுவ முகாமில் தஞ்சமடைந்து, தன்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டபோது, அம்முகாமிலிருந்த ராணுவ வீரர்கள் அச்சிறுவனை மீண்டும் கருணாகுழு முகாமிற்கு இழுத்துச் சென்று, அவனைக் கடத்திவந்தவர்களிடமே கையளித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வெலிக்கந்தையெனும் சிங்களக் குடியேற்றப்பகுதியுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையாக ஏ 11 இருக்கிறது. ராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டிலும், பூரணமாக ராணுவமயப்படுத்தப்பட்ட நிலையிலும் இப்பிரதேசம் இயங்கிவருகிறது. இப்பகுதியில் ஐந்து பாரிய முகாம்களை அமைத்து பலநூற்றுக்கணக்கான கடத்தப்பட்ட சிறுவர்களை இப்பகுதிக்குக் கொண்டுவந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதென்பது ராணுவத்தினருக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சாத்தியமேயில்லாதது. சாதாரண மக்களுக்கே இப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், சோதனைகளும் விதிக்கப்படுமிடத்து, பல வாகனங்களில், ஆயுதங்கள் சகிதம் கருணா குழு இப்பாதையினூடாக இப்பிரதேசத்தினுள் நுளைவது எப்படிச் சாத்தியம்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும்

 

பல பெற்றோர்கள் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை தாம் மட்டக்களப்பு நகரில் அமைந்திருக்கும் கருணாவின் அரசியல் அலுவலகத்தில் கண்டதாகக் கூறுகின்றனர். சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் தாம் இதே அலுவலகத்தில் ஆயுதம் தரித்த சிறுவர்களைக் கண்டதாகக் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி இந்த அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகள் இந்த அலுவலகத்திற்கு சூழவுள்ள மூன்று பக்கங்களில் இருந்து பொலீஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். கருணாவின் இந்த நகர்ப்பகுதி அலுவலகத்திற்கான கட்டட வேலைகள் ஆரம்பமாகிய காலத்திலிருந்தே இக்கட்டடத்திற்கு கடுமையான பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதை சர்வதேச தொண்டுநிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறே அக்கரைப்பற்றில் கருணாவின் அரசியல் அலுவலகத்திற்கான பாதுகாப்பினை விசேட அதிரடிப்படையும், திருகோணமலை நகரில் அமைந்திருக்கும் கருணாவின் அலுவலகத்திற்கு இலங்கைக் கடற்படையும் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனிதவுரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

துணைராணுவக் குழுவான கருணா குழுவினருக்கான அரசின் பாதுகாப்பு, புலிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவே என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் நம்புகின்றது. ஆனால், இந்த அலுவலகங்களுக்கு ராணுவத்தினரின் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டே இங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைக் கண்டபின்னரும் இக்கடத்தல்கள் தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாதென்று அரசு கூறுவது ஏற்றுக்கொள்ளக் கடிணமாக இருப்பதாக கண்காணிப்பகம் கூறுகிறது.

இலங்கை அரசாங்கமும், கருணா குழுவும் தமக்கிடையே ஒத்துழைப்பு இருக்கிறதெனும் குற்றச்சாட்டினை மறுத்தே வருகின்றன. இதுபற்றி அரசின் ஊடகப் பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல கூறுகையில், " எங்களுக்கும் கருணா குழுவுக்கும் இடையே இருப்பதாக கூறப்படும் ஒத்துழைப்பினை நாம் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறோம்" என்று கூறினார். அவ்வாறே கருணாவும் இதுபற்றிக் கூறுகையில், " நாங்கள் ராணுவத்தோடு சேர்ந்து செயற்படவில்லை, அவர்களும் எம்மோடு சேர்ந்து செயற்படவில்லை" என்று கூறினார். மேலும், உங்களின் உறுப்பினர்களுக்கு சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறதே என்று கேட்டதற்கு, "எமது உறுப்பினர்களில் 30 பேர் ஆயுதங்களுடன் நடமாடியதற்காக ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், கிழக்கு மாகாண மக்கள் கருணா குழுவும் ராணுவமும் மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாள்தோறும் அவதானித்தே வருகின்றனர். மட்டக்களப்பில் இயங்கும் இரு சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகளைக் கேட்டபோது, "கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நாம் ராணுவத்தையே நாடுகிறோம், அவர்கள் மிக இலகுவாக கருணாவுடனான தொடர்புகளை எமக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள்" என்று கூறினர்.

தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதும், சிறுவர்கள் கடத்தப்பட்டு ராணுவப் பயிற்சியிலும் அதன்பின்னரான யுத்த நடவடிக்கைகளிலும் பாவிக்கப்படுவதைத் தடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இதனைச் செய்யும் கடமையிலிருந்து அரசாங்கம் தவறியிருக்கிறது என்றும் கண்காணிப்பகம் கூறுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் இயங்கும் படைகள்

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் ராணுவம், கடற்படை, பொலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படை ஆகிய படைப்பிரிவுகள் தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 2006 இல் இப்பகுதிக்கு விஜயம் செய்த மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் தகவல்ப்படி இந்தப் படைப்பிரிவுகளின் விபரங்கள் வருமாறு,

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பினை ராணுவமே பொறுப்பேற்றிருக்கிறது. இதனை தனது பாரிய முகாம்கள் மூலமாகவும், சிறிய முகாம்கள் மூலமாகவும் அது நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மாவட்டத்தில் மூன்று பிரதான பிரிகேட் தரப் பிரிவுகள் நிலைகொண்டுள்ளன.

Security Forces Headquaters East

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கான பாதுகாப்பினை கேணல் வீரமன் தலைமையிலான 231 ஆவது பிரிகேட்டும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கிற்கான பாதுகாப்பினை கேணல் நாபகொட தலைமையிலான 232 ஆவது பிரிகேட்டும், மட்டக்களப்பு நகருக்கான பாதுகாப்பினை லெப்டினன்ட் கேணல் அநுர சுதசிங்ஹெ தலைமையிலான 233 ஆவது பிரிகேட்டும் பொறுப்பெடுத்திருக்கின்றன. இம்மூன்று பிரிகேட் படைப்பிரிவுகளும் பிரிகேடியர் தயா ரட்னாயக்க தலைமையில் வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருக்கும் 23 ஆவது பிரிவின் தலைமையகத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 2006 இன் பெரும்பகுதிவரை கிழக்கு மாகாண படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் நிசன்க விஜேசிங்ஹெ செயற்பட்டு வந்ததுடன், 2006 இன் இறுதிப்பகுதியில் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய இந்த பிரிகேட் தலைமையகத்திற்குப் பொறுப்பேற்றார். 

Entrance of the Sri Lanka Navy Trincomalee Eastern Command Naval Base

திருகோணமலை மாவட்டத்தில் மேஜர் ஜெனரல் சமரசிங்ஹெ தலைமையில் 22 ஆவது பிரிவு பாதுகாப்பு வழங்கிவருகிறது. இதற்கு மேலதிகமாக திருகோணமலையில் அமைந்திருக்கும் பாரிய கடற்படைத்தளத்தினையொட்டி கடற்படையின் பெரும்பகுதியொன்றும் அங்கே நிலகொண்டுள்ளதாகவும், திருகோணமலைப் பகுதியின் பாதுகாப்பிற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமிரதுங்கவே பொறுப்பாக இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே முப்படைகளின் தளபதியாக இருப்பதோடு, பாதுகாப்பு அமைச்சினையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். மேலும் பாதுகாப்புச் செயலாளராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றிற்கு அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷெ பொறுப்பாகவிருக்கிறார்.  அத்துடன் பாதுகாப்புப் பிரதானிகளின் அதிகாரியாக எயர் வைஸ் மார்ஷல் டொனால்ட் பெரேராவும், ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக்காவும் இருக்கிறார்கள். 

http://s3.amazonaws.com/themorning-aruna/wp-content/uploads/2021/01/29050330/STF.jpg

ஆடி 2006 இலிருந்து ராணுவத்தின் வடக்கு நோக்கிய முன்னேற்றத்திற்கு ஏதுவாக விசேட அதிரடிப்படை கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இக்காலப்பகுதியிலேயே மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பினை விசேட அதிரடிப்படை பொறுப்பெடுத்துக்கொண்டது.

http://4.bp.blogspot.com/_otWn2PlEOdY/Rx67OZhOUxI/AAAAAAAACHA/Do0NuhPowbQ/s1600/TMVP..jpg

கிழக்கின் மாவட்டங்களுக்கான கருணா குழுவின் தளபதி யாரென்பதில் இன்னும் சரியான தெளிவு எவருக்கும் இருக்கவில்லை. கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், உள்ளூர் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரின் கூற்றுப்படி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான கருணா குழுவின் தலைவராக பிரதீபன் என்பவர் செயற்பட்டு வருவதாகவும், இவரது அலுவலகம் மட்டக்களப்பு நகரில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரைப்போன்றே இதே பகுதியில் மங்களன் எனப்படும் ஆயுததாரியும் செயற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அக்கரைப்பற்றில் சிந்துஜன் எனப்படும் ஆயுததாரி கருணா குழுவின் தலைவராகச் செயற்பட்டு வருகிறார். அதேபோல வெலீகந்தைப் பகுதியில் கருணா குழுவினரால் கடத்தப்பட்டுக் கொண்டுவரப்படும் சிறுவர்களுக்குப் பொறுப்பாக பாரதி எனப்படுபவர் அமர்த்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம்

Sri Lanka fights back over UN claim | Sri Lanka News | Al Jazeera

 

2006 கார்த்திகை மாதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களின் நலன்களுக்கான ஐ நா வின் விசேட பிரதிநிதி அலன் ரொக் இக்கடத்தல்கள்பற்றி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு ஐ நா வுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட சிறுவர் நலன் தொடர்பான இணக்கப்பாடு குறித்து மீள் உறுதிப்படுத்துவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்புடன் ஒத்துழைத்து வேலை செய்வதாக அரசும், புலிகளும் இணங்கியிருந்ததுடன் தமது படைகளில் இருக்கும் சிறுவர்களை நீக்கிவிடுவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தனது 10 நாள் விஜயத்தின் இறுதியில் நாட்டின் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த அலன், ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் தனது விசாரணைகள்பற்றித் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். 

இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின்படி தமது படைகளிலிருந்து சிறுவர்களை நீக்குவதை புலிகள் முற்றாகக்ச் செய்யவில்லையென்று கடிந்துகொண்ட அலன், கருணா குழு தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்துபேசிய அவர் 2006 இன் இறுதி 6 மாதங்களில் மட்டும் கருணா 135 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். 

கருணாவின் சிறுவர் கடத்தல்களுக்குத் துணைபோவதாக அரச ராணுவத்தைச் சாடிய அலன் ரொக், கருணாவுக்கான பாதுகாப்பினையும், அவ்வப்போது கருணாவின் கடத்தல்களில் பங்களிப்பினையும் அரச ராணுவம் செய்துவருவதாக  மேலும் கூறினார்.

Sri Lanka fights back over UN claim | Sri Lanka News | Al Jazeera

அலன் ரொக் தலைமையிலான குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்களின் பெற்றோருடன் உரையாடியிருந்தது. இக்கலந்துரையாடல்களிலிருந்து கருணா குழுவின் கடத்தல்களில் அரச ராணுவம் பெருமளவு பங்களிப்பினை வழங்கியிருந்ததாக அலன் ரொக் கூறுகிறார். அரச ராணுவத்தின் படைப்பிரிவுகள் கருணா குழுவினருடன் கடத்தல்களில் நேரடியாகவே பங்குகொண்டிருந்ததை சாட்சிகள் வாயிலாக இக்குழு அறிந்துகொண்டது.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அலன் ரொக், அரசும் கருணா குழுவும் யுனிசெப் அமைப்பின் ஆலோசனைப்படி சிறுவர்களை தமது படைகளிலிருந்து விடுவிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார். 

அத்துடன் அரச ராணுவத்தினர் கருணா குழுவுக்காக சிறுவர்களைக் கடத்துவது தொடர்பான விசாரணைகளை உடனடியாகவே ஆரம்பிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அலன் ரொக் கூறினார். அரச ராணுவத்தினர் கடத்தல்களில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மகிந்த தன்னிடம் கூறினார் என்று அவர் மேலும் கூறினார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம்

Sri Lanka Buddhist monks hold placards in front of the United Nations...  News Photo - Getty Images

சிறுவர் கடத்தல்கள் தொடர்பான அலன் ரொக்கின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, அவைபற்றி விசாரிக்கப்போவதாக உறுதியளித்திருந்தபோதும், அரசின் ஏனைய தலைவர்களும் பெளத்த குருமார் மற்றும் சாதாரண சிங்களவர்கள் அலன் ரொக்கின் விமர்சனம் குறித்த கடுமையான கண்டனங்களை முன்வைத்திருந்தனர். 

482 Mangala Samaraweera Photos and Premium High Res Pictures - Getty Images

அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறும்பொழுது அலன் ரொக் ராஜதந்திரியொருவரின் எல்லைகளை மீறிச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். "சர்வதேச சமூகத்தின் மதிப்பிற்குரிய அதிகாரியொருவர் ஒரு அரசாங்கத்தின்மீது இவ்வாறான கடுமையான கண்டனங்களை வெளிப்படையாக முன்வைப்பது நாகரீகமற்றது" என்று அவர் கூறினார். "அவர் சொல்வது உண்மையாக இருந்தாலும், அதனை அரசாங்கத்திடம் நாசுக்காகக் கூறியிருக்கவேண்டும், இப்படிப் பகிரங்கமாக அரசை விமர்சிப்பது தவறு" என்றும் அவர் கூறினார். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதான பத்திரிக்கையான் டெயிலி நியூஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில், " ஒரு இறைமை நாட்டின்மீது அலன் ரொக் போன்றவர்கள் முன்வைக்கும் விமர்சனம் அந்நாட்டின் தேசிய நலன்களுக்கு பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்துவைத்திருப்பது நல்லது" என்று தொனிப்பட எழுதியிருந்தது.

கருணா குழுவினருடன் தமக்கு எதுவிதமான தொடர்புகளும் இருக்கவில்லையென்று மறுதலித்த இலங்கை ராணுவம் அலன் ரொக்கின் விமர்சனம் மக்களையும், சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாகவும், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மீது பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்த வல்லன என்றும் சாடியிருந்தது. 

http://www.lankaweb.com/news/items/wp-content/uploads/2013/06/Articlepdf3.jpg


அலன் ரொக்கின் மீதான கடுமையான விமர்சனங்களை பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படும் "தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம்" எனும் அமைப்பு வெளியிட்டிருந்தது. தனது இணையவழி விமர்சனத்தில் "யார் இந்த அலன் ரொக்?" என்று தலைப்பிட்ட கண்டனத்தை முன்வைத்த இலங்கை ராணுவம் கனடாவின் முன்னாள் அமைச்சரான இவர் புலம்பெயர் தமிழரின் பணத்திற்கு வேலை செய்வதாகவும், கனடாவில் புலிகள் தடைசெய்யப்படுவதை இவர் தடுத்துவருவதாகவும் கடுமையாகச் சாடியிருந்தது. மேலும் கனடாவில் வாழும் தமிழர்களின் உதவியுடனும், பணபலத்துடனும் புலிகளின் அனுதாபிகளின் உதவியினூடாகவும் அலன் ரொக் ஐ நா வில் ஒரு பதவியைப் பெற்றுக்கொண்டார் என்றும் அது மேலும் விமர்சித்திருந்தது.

http://www.dailynews.lk/sites/default/files/styles/node-detail/public/news/2017/02/12/Screen%20Shot%202017-02-12%20at%2011.26.10%20AM.png?itok=CQUs48T1

 ஆரம்பத்தில் யுனிசெப் அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த கருணா, பின்னர் அலன் ரொக்கின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அலன் ரொக்கும் ஐ நா வும் உண்மைக்குப் புறம்பான, மிகவும் தவறான, கற்பனைத்தனமான குற்றச்சாட்டுக்களை தேச விரோதிகளின் தூண்டுதலை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்திருப்பதாகக் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் இடர் நிவாரண மற்றும் மனிதவுரிமையமைச்சர் மகிந்த சமரசிங்ஹெ கூறுகையில், அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை, ஆதாரமற்றவை, தனது குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்கள் எதனையும் முன்வைக்காது அலன் ரொக் பேசுவது நகைப்பிற்குரியது என்று அவர் கூறினார். 

2006, கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி அலன் ரொக் இலங்கை ஜனாதிபதி மகிந்தவுக்கு அனுப்பிய கடிதத்தில் தன்னால் விசாரித்துக் கண்டறியப்பட்ட ஆதாரங்களோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்ததுடன், கருணா குழுவினருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு தொடர்பாக உடனடியாக பக்கச் சார்பற்ற உண்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரியிருந்தார்.
 
அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அரசின் வெளிப்படையான எதிர்வினையென்பது நகைப்பிற்குரியது. ஏனென்றால், 2006 இன் ஆரம்பத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில்க் கருணா குழுவினராலும், அரச ராணுவத்தாலும் கடத்தப்பட்டுவரும் சிறுவர்கள் தொடர்பாக பொலீஸாரிடமும், ராணுவத்திடமும் பலநூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இக்கடத்தல்கள்பற்றி அரசு நன்கு தெரிந்து வைத்திருந்தபோதும்கூட, அச்சிறுவர்களை விடுவிக்க எதுவிதமான முயற்சிகளையும் அது எடுத்திருக்கவில்லை. 

2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கருணா குழுவினரின் சிறுவர்கள் கடத்தல்கள் தொடர்பான தனது விரிவான அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதன்படி, "எமது சாட்சியங்களின் ஊடாக கருணா குழுவின் கடத்தல்களில் இலங்கை ராணுவமும் ஈடுபட்டுவருகிறதென்பதை நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று சாரப்பட கூறியிருந்தது. இதற்குப் பதிலளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கருணா குழுவுக்கும் எமக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி தொடர்பேதும் இருப்பதாக மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறினால், அதற்கான சாட்சியங்களை எம்மிடம் தரவேண்டும், பின்னர் அதுபற்றி நாம் பரிசீலிக்கலாம்" என்று விசமத்தனமாக கூறியிருந்தார்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான கருணாவின் பதில்

மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளிவந்த மறுநாள் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த அமைப்பினைத் தொடர்புகொண்டு தன்மீதான குற்றச்சட்டுக்கள் குறித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடையாளம் காணப்படாத இடமொன்றிலிருந்து தொலைபேசியூடாகப் பேசிய கருணா அம்மான், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்ததோடு சிறுவர் கடத்தல்களிலோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் சிறுவர்களை ஈடுபடுத்துவதிலோ தனது குழு ஈடுபடவில்லை என்று கூறினார்.

"இவ்வாறான விடயங்களை நான் வெறுக்கிறேன். சிறுவர்களைக் கடத்துவதோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதோ நான் விரும்பும் செயல்கள் அல்ல" என்று அவர் கூறினார்.

தனது குழுவில் இணைவதற்கான மிகக் குறைந்த வயது 20 என்று கூறிய கருணா அம்மான், இதற்குக் குறைந்த வயதுடைய இளைஞர்களை குழுவில் சேர்க்கும் பொறுப்பாளர்களுக்கெதிராக தான் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அவ்வாறனவர்களை தான் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

image010.jpg

மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாவின் அலுவலகத்தின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை. இதே அலுவலகத்தில்த்தான் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை கருணா குழுவினர் அடைத்துவைத்திருப்பதைப் பெற்றோரும், மனித்கவுரிமை ஆர்வலர்களும் கண்ணுற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால், கருணாவின் இந்த கூற்று, அவரது அமைப்பின் பேச்சாளர் இலங்கை அரச பத்திரிக்கைச் செவ்வியில் பகிரங்கமாக "சிறுவர்கள் எமது அமைப்பில் இருக்கிறார்கள்" என்ற கூற்றிற்கு முற்றிலும் முரணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. "நாம் சிறுவர்களைக் கடத்தி வரவில்லை, அவர்கள் தாமாகவே எம்முடன் இணைகிறார்கள்" என்று செங்கலடி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார்.

கருணா தொடர்ந்தும் மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகளுடன் பேசுகையில், "எமது அமைப்பிற்கென்று கட்டுக்கோப்பான வரையறைகளை வைத்திருக்கிறோம், அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைகின்றன, உங்களுக்கும் வெகு விரவில் இக்கட்டுப்பாட்டு வரையறைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பிவைப்போம்" என்று கூறியிருந்தார். ஆனால் இவ்வறிக்கை வெளிவரும்வரை அவ்வாறானதொரு ஆவணத்தினை கருணா எம்மிடம் அனுப்பிவைக்கவில்லையென்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கை ராணுவத்துடனான கருணா குழுவின் தொடர்பு பற்றிக் கேட்டபோது, "அது அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே" என்று அவர் கூறினார். "இலங்கை ராணுவத்திற்கும் எமக்கும் இடையே ராணுவ ரீதியிலான தொடர்புகள் ஏதும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக நான் சில தொடர்புகளை ராணுவத்தினருடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்" 
 என்று அவர் கூறினார். உங்களது ஆயுதம் தரித்த குழுவினர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக உலாவருவது எப்படி என்று கேட்டபோது, "எமது அரசியல்ப் பிரிவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொலீஸாரின் உதவியுடன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், எமது ராணுவப் பிரிவினர் கருணாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுமே ஆயுதங்களுடன் உலவுகிறார்கள். இப்பிரதேசங்களை நாம் புலிகளிடமிருந்து போராடி மீட்டெடுத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவர்களைக் கடத்துவதாகக் கூறுவது புலிகளாலும், புலம்பெயர் தமிழராலும் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் : கருணா 

karuna1

கருணாவின் கூற்றுப்படி அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் 16 அலுவலகங்களை நடத்தி வருகிறது. உங்களின் அரசியல் அலுவலகங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "எமது அரசியல் அலுவலகங்களுக்குள் எவரும் வரலாம், நாம் எதனையும் மறைக்கவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நிகரான வெளிப்படைத் தன்மையினை நாம் எமது அரசியல் அலுவலகங்களில் பேணிவருகிறோம். எனது அலுவலகங்களில் 20 வயதிற்குக் குறைந்த எவரையும் நாம் கொண்டிருக்கவில்லையென்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எவரும் எமது அலுவலகத்தினை வந்து பார்வையிட முடியும்" என்று அவர் பதிலளித்தார்.

ஆனால், உங்களின் அமைப்பு பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, "இது புலிகளாலும், அவர்களுக்குச் சார்பான புலம்பெயர் தமிழர்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரமாகும், இதில் உண்மையெதுவுமில்லை" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.

ஐ நா வின் சிறுவர் நலன்களுக்கான விசேட தூதர் அலன் ரொக் கருணா குழுமீது முன்வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த கருணா, "நிச்சயமாக அலன் ரொக் புலிகளின் பின்புலத்துடன் தான் அரசுக்கும் தனக்கும் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார். "புலிகள் போலியான குடும்பங்களைத் தயார் செய்து அலன் ரொக்கின் முன்னால் கடத்தப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் என்று நாடகமாட வைத்திருக்கின்றனர். அலன் ரொக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவையுமே அவரிடம் இல்லை. அவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது இதுபற்றி தெளிவாக அவருக்கு விளக்கியிருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

Radhika Coomaraswamy Short listed for top UN Post | Lanka on Globe

மனிதவுரிமைக் கண்காணிப்பகத்துடனான தனது உரையாடல் நடைபெற்று 5 நாட்களின் பின்னர் யுத்தங்களில் இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்கள் நலன் தொடர்பான ஐ நா வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் கருணா பேசியிருந்தார். இந்த பிரதிநிதியால் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் சிறுவர்களைப் பாவிக்கும் அமைப்புக்களின் பட்டியலில் கருணாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுபற்றிப் பேசவே கருணா ராதிகாவுடன் தொடர்புகொண்டிருந்தார். ஐ நா வின் அறிக்கைப்படி கருணா தான் சிறுவர்களை இணைப்பதைக் கைவிடுவதாகவும், யுனிசெப் அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறுவர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்  ஒத்துக்கொண்டிருந்தார்.

சிறுவர் நலன் பேணுதல் தொடர்பாக யுனிசெப் அமைப்பிற்கும் தனது குழுவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி பின்வரும் விடயங்களைத் தான் செய்யவிருப்பதாக கருணா ஒத்துக்கொண்டிருந்தார்.

1. கருணா குழுவின் அனைத்துத் தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சிறுவர்களை இணைப்பதோ, யுத்தத்தில் ஈடுபடுத்துவதோ அனுமதிக்கப்பட முடியாது என்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது.

2. சிறுவர் நலன் தொடர்பான பயிற்சிகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவின் பொறுப்பாளர்களுக்கு அளிப்பது.

3. யுனிசெப் மற்றும் ஏனைய மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களிடமே கையளிப்பது.

4. தனது முகாம்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை யுனிசெப் அமைப்பிற்கு வழங்கி எத்தருணத்திலும் தனது அமைப்பில் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லையென்பதனை உறுதிசெய்தல்.

கருணாவின் இந்த அறிக்கையினை வரவேற்ற ராதிகா குமாரசாமி, சிறுவர்கள் இலங்கையில் ஆயுதக் குழுக்களால் போரில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக இது காணப்படுவதாகக் கூறியிருந்தார். "களத்தில் இந்த முயற்சிகள் நண்மைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா, புலிகளிடமிருந்து இம்மாதிரியான ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

2007 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி தனது ராணுவ அமைப்பிற்கான கட்டுப்பாடுகளை கருணா யுனிசெப் அமைப்பிடம் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் தனது அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும், இணையவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பிறப்பு அத்தாட்சிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டு, சுய விருப்பத்துடனேயே இணைகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. 
இந்தச் சட்டங்களை மீறும் தளபதிகளுக்கு முகாமில் சமையலில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதே ஆவணத்தில் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்பின் உறுப்பினர்களை  பொலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களை இழிவுபடுத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் காலத்திலேயே கருணா குழு புதிதாக குறைந்தது 21 சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்கா இ நியூஸ் எனும் இணையவழி ஆங்கில ஊடகத்திற்கு கருணா 2009, சித்திரை 18 இல் வழங்கிய செவ்வி

பாகம் - 01

karuna2.jpg

 

கேள்வி : ஒருமுறை நீங்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறினீர்கள், இப்போது இல்லையென்கிறீர்கள், நாம் எதனை நம்புவது?

கருணா : இது தவறான செய்தியாகும். நாம் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது எமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தோம். ஆனால், நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றபின்னர் எனது தோழர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள். இன்று ஆயுதங்களைக் கொண்டிருப்பது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான்.

கேள்வி : எதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தீர்கள்? 

கருணா: அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரானவர்களே. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு தெளிவான நோக்கம் கிடையாது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் சிறு சிறு கழகங்கள் போல செயற்படுகிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெரிய கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்தேன்.

நான் சுதந்திரக் கட்சியில் இணைந்தபின்னர் எனது அமைப்பிலிருந்த 1000 உறுப்பினர்களை இலங்கை ராணுவத்தில் சேர்த்துவிட்டேன். அவர்களில் 300 பேர்வரையில் தற்போது தொப்பிகல காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 1500 பேர் ராணுவத்துடன் இணைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுள் 1200 பேரை சேர்க்கும் முயற்சிகள் பூர்த்தியடைந்துவிட்டன. இதேபோல இன்னொரு பிரிவினர் இலங்கைப் பொலீஸ் சேவையில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த எனது அலுவலகங்கள் அனைத்துமே அப்பகுதிகளுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறான 80 அலுவலகங்கள் உள்ளன, இவற்றுக்கான பாதுகாப்பினை பொலீஸார் வழங்கிவருகின்றனர். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை மட்டக்களப்பு நகரில் திறந்துவைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சில போராளிகளை மட்டுமே இன்று கொண்டிருக்கிறது.

கேள்வி : உங்களின் அமைச்சரவை அந்தஸ்த்தினைக் கொண்டு மக்களுக்கு எவ்வகையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள்?

கருணா : எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மீள் கட்டுமான அமைச்சினை நான் பெரிதும் மதிக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பிளவுபட்டிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களை இணைக்க இந்த அமைச்சினைப் பாவிப்பேன்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கான முக்கிய தடைக்கல் மொழியாகும். தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்பது அவசியம். வெளிநாட்டு உதவிகள் மூலம் எனது அமைச்சு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஜனாதிபதிக்கு இதுதொடர்பாக நான் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் கல்வியமைச்சிற்கு எனது ஆலோசனைகளை வழங்கவிருக்கிறேன்.

ராணுவத்தினரை தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் அவர்களுக்கிடையேயான உறவு தடைப்படுகிறது. ஆகவே ராணுவ வீரர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்பிப்பதை நான் வழிமொழிகிறேன்.

புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகளுக்கான புணர்வாழ்வினை எனது அமைச்சினூடாக நான் செய்யவிருக்கிறேன். இவ்வாறான 6000 முன்னாள்ப் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். இதேபோல பலர் வடமாகாணத்திலும் இருக்கிறார்கள், அவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகிறோம்.

கேள்வி : நான்காவது ஈழப்போரில் புலிகளின் திருப்புமுனையான தோல்வியென்று எதனைக் கருதுகிறீர்கள்?

கருணா : முதலாவது திருப்புமுனையான தோல்வி நான் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது ஏற்பட்டது. பிரபாகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக இதனை நான் கருதுகிறேன்.

இரண்டாவது திருப்புமுனை, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வினை பிரபாகரன் ஏற்க மறுத்தது. ஒஸ்லோவில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு சம்மதிப்பதுபற்றி பாலசிங்கம் தயங்கியபோது, நான் அவரை தைரியப்படுத்தி அதனைச் சம்மதிக்க வைத்தேன். முதலில் கையெழுத்து இடுங்கள், பின்னர் பிரபாகரனுக்குத் தெரிவிக்கலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தினைக் கசக்கி எறிந்ததுடன், எங்களையும் துரோகிகள் என்று கடிந்துகொண்டார். மக்கள் போரற்ற சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றினையே விரும்பினார்கள்.

நான்காம் ஈழப்போரின் ஆரம்பித்திலேயே போரிடும் விருப்பினை புலிகள் இழந்துவிட்டிருந்தார்கள். அது ஒரு தேவையற்ற போராக அவர்கள் கருதினார்கள். 

மூன்றாவது முக்கிய திருப்புமுனை ராணுவம் கைக்கொண்ட புதிய போர் உத்திகளால் ஏற்பட்டது. அவர்கள் தமது ராணுவ நடவடிக்கைக்கு "ஜயசிக்குரு" என்று பெயர்கள் இட்டு அழைக்கவில்லை. சிறிது சிறிதாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிச் சென்றார்கள். 

கேள்வி : தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் அவர்களின் போராட்டம் எவ்வகையான வடிவத்தினை எதிர்காலத்தில் எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்?

கருணா : போருக்குப் பின்னரான காலத்தில், மாகாணசபை அடிப்படையிலான தீர்வே சாத்தியமானது. ஆனால், பொலீஸ் அதிகாரம் போன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதை தமிழர்கள் மறந்துவிடவேண்டும். அப்படி தமிழர்கள் கோருமிடத்து இரு சமூகங்களுக்கிடையே மீண்டும் சந்தேகங்களும், சிக்கல்களும் உருவாகும். இப்போது தமிழர்களுக்குத் தேவையானது சுதந்திரமான நடமாட்டமும், அபிவிருத்தியும் மட்டும் தான். அபிவிருத்தியை நாம் ஆரம்பித்துவிட்டோம். பிணக்குகளையும், சிக்கல்களையும் தீர்க்க காலம் எடுக்கும். 

உதாரணத்திற்கு, புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகாலங்களில் காலூன்றியபோது தமிழர்களுக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக ஒரு தமிழரும் துன்புறுத்தப்படவில்லை. 1983 ஆம் ஆண்டு ராணுவம் மீதான தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளையடுத்தே கொழும்பிலிருந்து தமிழர்கள் மட்டக்களப்பிற்கு வந்திறங்கினார்கள். இவ்வாறு வந்திறங்கிய தமிழர்களைப் பாவித்து புலிகள் இனவாதத்தினைப் பரப்பினார்கள். அதன் பின்னர் நான் உட்பட 15 பேர் புலிகளுடன் இணைந்தோம். இவ்வாறே யாழ்ப்பாணத்திலும் சிங்களவகர்ளுக்கெதிரான இனவாதத்தினை புலிகள் பரப்பினார்கள். இதனாலேயே இரு சமூகங்களுக்கிடையிலான விரிசல் ஏற்பட்டது. ஆனால், இதனைச் சரிசெய்யும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 02

karuna1.jpg

கேள்வி : இனி புலிகளின் எதிர்காலம் என்ன? 

கருணா : புலிகள் இனிமே மீள எழ முடியாது. காடுகளில் மறைந்திருக்கும் சிறு கெரில்லாக் குழுக்கள் சில சிறிய தாக்குதல்களை நடத்த முயலலாம். ஆனால், ஒரு அமைப்பாக மீண்டும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணித்து புறந்தள்ளி விட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் நடந்தது இதுதான். யாழ்ப்பாண மக்களே புலிகளை முதலில் நிராகரித்தவர்கள். அவர்கள் இனிமேல் ஒருபோது புலிகளுடன் இணையப்போவதில்லை.

புலிகளிடம் ஆட்கள் இல்லை. புலிகளுக்கான ஆட்பலம் கிழக்கிலிருந்து இதுவரை கிடைத்துவந்தது. 8500 கிழக்கு மாகாணப் போராளிகள் வன்னிக் களமுனைகளில் பலியாகியுள்ளனர். புலிகளின் பொருளாதார மையம் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறது. ஆனால், தற்போது ஆட்பலத்தையும், பொருளாதாரப் பலத்தையும் புலிகள் ஒருங்கே இழந்திருக்கின்றனர். வன்னி மக்களும் புலிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எதிர்காலத்தில் வன்னி மக்கள் நிச்சயம் புலிகளை எதிர்ப்பார்கள் என்பது திண்ணம்.

புலிகளை முடிக்க ராணுவத்திற்கு சிறிது காலமே போதுமானது. கிழக்கு மாகாணத்தைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வெறும் ஒன்றரை ஆண்டுகளே ஆகின்றன. சில சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் அமைதி நிலவுகிறது. காலம் எல்லாவற்றையும் மாற்றும். 

கேள்வி : புலம்பெயர் தமிழர் தொடர்பான உங்களின் கருத்தென்ன ? 

கருணா : இங்கிருக்கும் உண்மையான நிலவரம் தொடர்பாக அவர்களுக்கு எதுவுமே தெரியாது. புலிகளின் பொய்யான பிரச்சாரத்தினால் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், தெற்கில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர் போன்று தவறாக வழிநடத்தப்படவில்லை. புலம்பெயர் தமிழரைப் பொறுத்தவரை பிரபாகரனைக் காப்பற்றினாலே போதுமானது, தமிழர்கள் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் பிரபாகரனே காரணம். அவர் ஒரு தலைவர் கிடையாது. ஒரு சரியான தலைவர் தனது மக்களை ஒருபோதும் பகடைக்காய்களாகப் பாவிக்கப்போவதில்லை. போர் தொடங்குமுன்னமே பொதுமக்களை அவர் வன்னியிலிருந்து வெளியேறிச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும். மக்களை விடுவிப்பதை விடுத்து, மக்களின் பின்னால் தன்னை பிரபாகரன் ஒளித்துக்கொண்டார். தங்களைத் தப்பிச் செல்லவிட்டிருந்தால் தமிழர்கள் அவருக்கு நன்றியாக இருந்திருப்பார்கள்.

புலம்பெயர் தமிழர் ஒருபோதுமே இலங்கைக்கு மீண்டும் வரப்போவதில்லை. இலங்கையில் யுத்தமும், அழிவும் இடம்பெற்றால் மட்டுமே அவர்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் வாழமுடியும். அதற்காக வன்னி மக்கள் பாரிய விலையினைக் கொடுக்கவேண்டியிருக்கிறது. லண்டனில் ஒருலட்சம் மக்கள் திரண்டதாகக் கூறுவது முழுப்பொய்யாகும், எனக்குத் தெரிந்ததன்படி 20,000 இற்கும் குறைவானவர்களே அங்கே கூடியிருந்தார்கள்.

கேள்வி : புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை தொடர்பாக பல்வேறான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனவே, இதுபற்றிய உங்கள் கணிப்பென்ன? 

கருணா : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் மூன்று லட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருக்கிறார்கள் என்பது முழுப் பொய்யாகும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெறும் 180,000 மக்களே முன்னர் இருந்தனர். போர் தொடங்கும்போது குறைந்தது 90,000 பொதுமக்கள் போர்க்களத்தை விட்டு தப்பி வந்துவிட்டனர். மீதியாயிருந்த 90,000 பொதுமக்களில் 65,000 பேர் புலிகளின் கட்டுப்பாட்டினை மீறி அரச பக்கம் வந்துவிட்டனர். எனது கணிப்பின்படி 30,000 இற்கும் குறைவான மக்களே யுத்த சூனியப் பிரதேசத்தில் அகப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி : தற்போது ஒரு யுத்த நிறுத்தம் அவசியமானது என்று நினைக்கிறீர்களா?

கருணா : தற்போது நிச்சயமாகத் தேவையில்லை. பிரபாகரன் ஒருபோதுமே இதயசுத்தியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு வரப்போவதில்லை.

கேள்வி : பிரபாகரன் தற்போது எங்கே இருக்கலாம் என்று யூகிக்கிறீர்கள்? 

கருணா : அவர் யுத்த சூனியப் பிரதேசத்தில் இல்லையென்று நினைக்கிறேன். சிலவேளை அவர் காட்டிற்குள் தப்பி ஓடியிருக்கலாம். அவர் இன்னொரு வெளிநாட்டிற்கு இதுவரையில் தப்பியோடவில்லை. அவரால் ஒருபோதுமே இந்தியாவுக்குள் நுழைய முடியாது. வேண்டுமானால் இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டிற்குத் தப்பிப் போகலாம், ஆனால் நெடுநாள் அங்கும் ஒளிந்திருக்க முடியாது. சிலவேளை நோர்வேயில் அடைக்கலம் தேடலாம். ஆனால், அவர் கட்டாயம் இறந்தேயாக வேண்டும். 

அவரது இரண்டாம் நிலைத் தளபதிகள் பலர் இறந்துவிட்டனர். பாணு, சொர்ணம் போன்றவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். பாணுவும் பொட்டு அம்மானுமே முஸ்லீம்களை யாழில் இருந்து 24 மணித்தியாலத்தில் வெளியேற்றியவர்கள். நான் எவ்வளவோ மறுத்தும், அவர்கள் அதைக் கேட்கவில்லை.

கேள்வி : குறைந்தது உங்கள் குழுவினரால் 400 தமிழ் இளைஞர்கள் தெற்கில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன, இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? 

கருணா : இவ்வாறான எண்ணிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும், மணோ கணேசனாலுமே முன்வைக்கப்படும் முழுப் பொய்கள் ஆகும். இவற்றுள் பெரும்பாலனவை பொய்யான தகவல்களாகும். நான் இதுபற்றி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசி தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

கேள்வி : உங்கள் அமைப்பிற்கும் இக்கடத்தல்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது பற்றி ?

கருணா : இது மிகவும் தவறான செய்தி. பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரே கப்பம் கோரித் தமிழ் இளைஞர்களைக் கடத்துகிறார்கள். அவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியை அவர்கள் எப்படிக் கொன்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிள்ளையான் குழுவின் அநீதிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எமது ஜனாதிபதி பொலீஸாருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறார்.

கேள்வி : தனிச் சிங்களச் சட்டத்தினைக் கொண்டுவந்ததன் மூலம் இனப்பிரச்சினையினை ஆரம்பித்துவைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் நீங்கள் தற்போது இணைந்திருக்கிறீர்கள். தற்போது அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கருணா : பல அரசியல்வாதிகள் கடந்தகாலங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தினைப் பரப்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றோ மக்கள் அவ்வாறில்லை. அவர்களுக்கு இப்பிரச்சினை தொடர்பான சிறந்த தெளிவு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது தெற்கில் வன்முறைகள் பரவின. ஆனால், இன்று புலிகளால் தெற்கில் எத்தனை தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும்கூட சிங்கள மக்கள் தமிழர்கள் மேல் கைவைப்பதில்லை. புலிகள் கிழக்கு மாகாணப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரைக் கொன்றபோதும், ஒரு தமிழ் மாணவனாவது தெற்கில் துன்புறுத்தப்படவில்லை. கிழக்கு மாகாணத்தின் மிகச் சிறந்த சிங்கள வைத்தியர் ஒருவரைப் புலிகள் கொன்றனர். ஆனால், ஒரு தமிழ் வைத்தியரும் சிங்களவரால் துன்புறுத்தப்படவில்லை. மக்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் இனவாதிகள் அல்ல. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சியல்ல. கடந்த காலங்களில் வடக்கில் எத்தனை வாக்குகளை எமது கட்சி பெற்றுக்கொண்டது? போரின் நடுவிலும் கூட, சந்திரிக்காவுக்கு அமோக ஆதரவினை கிழக்கு மாகாண மக்கள் வழங்கியிருந்தனர்.

கேள்வி : இந்தியாவுடனான உங்களின் உறவு எப்படியானது?

கருணா : மிக நன்றாக உள்ளது. நான் அண்மையில்க் கூட இந்திய உயர்ஸ்த்தானிகரைச் சந்தித்தேன். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தினை அபிவிருத்தி செய்ய அவர் விருப்பம் தெரிவித்தார்.

கேள்வி : தமிழ்நாட்டுடனான உங்களின் உறவு எப்படியிருக்கிறது ?

கருணா : பெரிதாக இல்லை. ஆனால், அங்கிருக்கும் பல ஊடகவியலாளர்களோடு தொடர்பில் இருக்கிறேன்.

கேள்வி : இந்தியாவில் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டீர்களா?

கருணா : ஆம், இந்திய ராணுவம் எங்களுக்குப் பயிற்சியளித்தது.

கேள்வி : இறுதியாக தனிப்பட்ட கேள்வியொன்று, உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

கருணா : ஆம், மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது மனைவி எனது வேலைகளில் தலையிடுவதில்லை. நான் புலிகளுடன் இருந்தபோதும் சரி, விலகிய பின்னரும் சரி அவர் எனது நடவடிக்கைகளில் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். நான் தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்கிறேன். 

முற்றும்

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எப்போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வேலை செய்யும் - பிரபாகரன் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும்"   பிள்ளையான்

சர்வதேச புலம்பெயர்ந்த இலங்கையர்கள் எனும் இணையத்தள செய்திச் சேவைக்கு பிள்ளையான் வழங்கிய செவ்வி 

நாள் : 29 ஆம் நாள், பங்குனி 2009

பகுதி 1
 

TMVP Leader “Pillaiyaan” Implicated in Assassinations of TNA  Parliamentarians Pararajasingham and Raviraj – News site for Tamils

"கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்துவருவதனாலும், புலிகள் இயக்கத்தை நாட்டிலிருந்தே முற்றாகத் துடைத்தழிக்க நடவடிக்கை எடுத்துவருவதனாலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முற்றான ஆதரவினை வழங்கி அவரின் கரங்களை வலுப்படுத்துவதற்கு தனது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ச்சியாக வேலை செய்யும்" என்று அக்கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான  பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்திருக்கிறார்.


"புலிகள்" எனப்படும் சொல்லை தனது கட்சியின் பெயரிலிருந்தே நீக்கப்போவதாக தெரிவித்திருக்கும் பிள்ளையான், தான் அரசுக்கெதிராகச் செயற்படுவதாகப் பரவிவரும் வதந்திகளை முற்றாக மறுத்தார். 

சிறுவனாக புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்ட பிள்ளையான் தற்போது 33 வயதை அடைந்திருப்பதுடன், தனது அரசியல் அதிகாரத்தை ஸ்த்திரப்படுத்தும்வரை திருமணம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். தனது கட்சி அனைத்து விமர்சனங்களுக்கும் சனநாயக ரீதியில் பதிலளிக்கக் காத்திருப்பதாகவும், தமிழ் மக்களுக்கு ஆயுதக் கலாசாரம் தேவையற்றது என்பதனால், தாம் கிழக்கு மாகாணத்தை ஆயுதச் சூனியப் பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவரது செவ்வியின் முழு வடிவமும் கீழே !

கேள்வி : உங்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பெருமளவு உறுப்பினர்கள் கருணாவுடன் சேர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த பின்னரும் நீங்கள் தொடர்ச்சியாக தாக்குப் பிடிப்பது எப்படி ?

பிள்ளையான் : கிழக்கு மாகாண மக்கள் தமக்கென்று தனியான அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்று அமைவைதையே விரும்புகிறார்கள். இதுவரை பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஆளும் அரசுகளுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். ஆனால், நாங்களோ இந்த அரசின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே இருக்கிறோம்.

கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை, அப்பிரச்சினைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே தீர்த்துவைக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனாலேயே கடந்த தேர்தல்களில் எமக்கான மக்கள் ஆணையினை அவர்கள் வழங்கினார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே தமக்கான அரசியல் பிரதிநிதிகளாக அவர்கள் தேர்வுசெய்திருக்கிறார்கள்.

கருணா அம்மான் சுதந்திரக் கட்சியில் இணைந்திருக்கின்றபோதும் கூட, நாம் புதிதாக இணையத் தேவையில்லை. ஏனென்றால், நான் தற்போதும் சுதந்திரக் கட்சி அரசில் ஒரு முக்கிய அங்கமாகவே இருக்கிறோம்.

தெற்கு மக்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றைத்தான். அதாவது, நாம் எப்போதும் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த அரசுக்கு ஆதரவாக தொடர்ந்தும் இருப்போம். அரசுக்கெதிராக செயற்படுவதாக வரும் வதந்திகள் வேண்டுமென்றே எமக்கெதிராக செய்யப்படும் விஷமத்தனமான பொய்களேயன்றி வேறில்லை.

கேள்வி : அனால், கருணாவுடன் சேர்ந்து உங்கள் கட்சியைச் சேர்ந்த குறைந்தது 2000 உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்திருக்கிறார்களே? 

பதில் : (சிரித்துக்கொண்டே) நான் இதுபற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

கேள்வி : உங்களது கட்சி எதிர்காலத்தில் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும் என்று எந்தளவு தூரத்திற்கு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் ?

பிள்ளையான் : எமது கட்சியின் அரசியல் எதிர்காலம் 100 வீதம் உறுதியானது. எங்களால் எந்தவொரு தேர்தலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பலம் இருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியில் தலைவர் என்கிற ரீதியில் எனது அரசியல் இலட்சியத்தினை காலத்திற்குக் காலம் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எங்களிடம் மிக உறுதியான கொள்கைகள் இருக்கின்றன. நான் எல்லா அரசியல் கட்சிகளுடனும் சமரசத்தில் ஈடுபடுவோம். கிழக்கு மாகாண மக்கள் நெடுங்காலமாக அரசியல் அநாதைகளாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால், அந்த குறையினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிவர்த்தி செய்திருக்கிறது. தமது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக எமது கட்சி செயற்பட்டுவருவதால், எமக்கான ஆதரவினை அவர்கள் தந்திருக்கிறார்கள்.

 

கேள்வி : உங்களுக்கும் பிரதியமைச்சர் கருணாவுக்கும் இடையே ஏதாவது பிரச்சினை இருக்கின்றதா? 

 பிள்ளையான் : நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. நாம் 2004 இல் கொழும்பிற்கு வந்தபோது, தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியைத் தூர எறிந்த கருணா, "நாம் ஆயுதங்களைக் களைந்துவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும்" என்று கூறினார். நான் உட்பட பல உறுப்பினர்கள் கருணாவின் உயிருக்கான பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருக்க, பல போராளிகள் புலிகளுடனேயே இருந்துவிட்டார்கள்.

கருணா நாட்டைவிட்டு வெளியேறியபின்னர், நான் அரசுடன் சேர்ந்து உழைத்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சியை ஆரம்பித்தேன். நானே கருணாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அறிமுகப்படுத்தினேன். அவர் நாட்டில் இல்லாத காலத்தில் நான் அரசுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்தேன்.

அவருடன் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், சரியோ தவறோ தலைமைப்பதவியைக் கைப்பற்றவும், எல்லாவற்றையும் தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டுவரும் ஆதிக்க மனோநிலையும் அவருக்கு இருக்கிறது. அவர் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக இருந்தபோது, அவர் சொல்வதைக் கேட்டு நாம் அடிபணிந்து செயற்பட்டோம். அவரின் செயல்கள் சரியோ, தவறோ நாம் கேள்விகேட்காமல் செய்துவந்தோம். ஆனால், நான் இன்று இருப்பதோ ஜனநாயக வெளி. இக்களத்தில் எவரும், எவரையும் விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. அதனால், நாம் அவரது நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்கும்போது, எம்மை தனது எதிரிகளாக அவர் பார்க்கிறார். எது எப்படியிருந்தாலும், நாம் இன்றிருப்பது ஒரு ஜனநாயக களம், எம்மை எவரும் அதிகாரத்தைப் பாவித்து கட்டுப்படுத்த முடியாது.

TMVP Leader “Pillaiyaan” Implicated in Assassinations of TNA  Parliamentarians Pararajasingham and Raviraj – dbsjeyaraj.com

கேள்வி  கிழக்கில் நடந்துவருவதாகக் கூறப்படும் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமாணம் குறித்து நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீர்களா?

பிள்ளையான் : கடந்த இரு தசாப்த்தங்களாக கிழக்கில் அபிவிருத்தியே நடைபெறவில்லை. அதே போல எமது மக்களுக்கான அரசியல் தலைமைகளும் இருக்கவில்லை. ஆனால், இப்போது கிழக்கில் அபிவிருத்தி முழு வீச்சில் நடந்துவருகிறது. கல்வி, சுகாதாரம் என்று அனைத்துமே அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக விசேட கரிசனை கொண்டிருப்பதால், அவரின் கிழக்கு மாகாண அபிவிருத்தியின் ஜனாதிபதிக்கான ஒருங்கிணைப்பாளராக இருப்பது குறித்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றேன். ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவும் கூட கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்கும் தன்னாலான உதவிகளைச் செய்துவருகிறார். நாம் அனைவரும் சேர்ந்து கிழ்க்கு மாகாண அபிவிருத்திக்கான பல திட்டங்களைத் தீட்டி வைத்திருக்கிறோம்.

Pillayan to attend first new Parliament sitting | ONLANKA News - Sri Lanka

கேள்வி : ஆனால் உங்களின் மாகாண சபை ஆட்சியில் பல ஊழல்களும், முறைகேடுகளும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறதே ?

 பிள்ளையான் : நான் இக்குற்றச்சட்டுக்களை முற்றாகவே மறுக்கிறேன். மக்களுக்குத் தெரியும் நாம் செய்துவரும் சேவைகள். அப்படி முறைகேடுகள் இடம்பெறுவதாக அவர்கள் கருதினால், அவர்கள் ஏன் இதுவரை எமது மாகாணசபை அரசுக்கெதிராக முறையிடவில்லை. 

கேள்வி : கிழக்கு மாகாண அபிவிருத்தியெனும்போது, எந்த துறைகளில் அபிவிருத்தி செய்யப்படுதல் அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

பிள்ளையான் : முழுக் கிழக்கு மாகாணமுமே அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் முற்றாக அழிக்கப்பட்டு, அபிவிருத்தியில் பின்தங்கிவிட்டது. கிராமப்புறப் பகுதிகளிலேயே அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 2

Members Thamil Makkal Viduthalai Pulihal tmvp Tamil Editorial Stock Photo -  Stock Image | Shutterstock

கேள்வி : அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சில ஆயுதங்களைக் கையளித்தது. எதிர்காலத்தில் உங்கள் கட்சி ஆயுதங்களைத் தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தினை வழங்குவீர்கள்?

பிள்ளையான் : உங்களுக்கு எமது சரித்திரம் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் ஆயுத மயப்படுத்தப்பட்டுவிட்டது. பல இளைஞர்கள் தமது படிப்பறிவைக் கைவிட்டு விட்டார்கள். 

தமிழர்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுக்கிறார்கள். கடந்த இரு தசாப்த்தங்களாக எமது மக்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து விட்டார்கள். முன்னர் முழுக் கிழக்கு மாகாணமுமே ஆயுதக் கலாசாரத்தில் மிதந்தது. ஆனால், இன்று அப்படியில்லை, மக்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுத்துவிட்டார்கள். அதனால், எவருமே தற்போது இங்கே ஆயுதங்களைக் கொண்டுசெல்வதில்லை, ஆகவேதான் நாமும் ஆயுதங்களை ஒப்படைத்துவருகிறோம்.

எமது கட்சி தற்போது ஆயுதங்களை முற்றாகக் கைவிட்டு விட்டது.

Police looking for Pilleyan's man in connection with Varsha's murder | your  views on the situation in Sri Lanka


கேள்வி : நீங்களும் உங்கள் கட்சியும் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டதாகக் கூறினாலும், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஆயுததாரிகள் திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியொருவரைக் கப்பப் பணத்திற்காக கடத்திச் சென்று படுகொலை செய்திருக்கிறீர்களே? அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? 

பிள்ளையான் : நான் கடுமையாக இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இந்தப் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுகிறேன். படுகொலையில் ஈடுபட்டவர் எனது கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, தேர்தல் காலத்தில் மட்டும் எம்முடன் சேர்ந்து செயற்படுவார். நான் பொலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு வருவோர் குறித்து அவதானமாக இருக்கும்படி கேட்டிருக்கிறேன். எமது கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்த சில சதி வேலைகளில் ஈடுபட்டுவருவது குறித்து நாம் அறிந்தே வைத்திருக்கிறோம்.

TamilNet: 13.03.09 Six-year-old girl recovered dead in Trincomalee town

நாம் இந்த படுகொலையினை கண்டிக்கிறோம். இது ஒரு துரதிஷ்ட்டமான சம்பவம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களிடையே பிரபலமாகி வருவதால் எமது பெயரைக் களங்கப்படுத்தவே இவ்வாறான படுகொலைகளுடன் எம்மைத் தொடர்புபடுத்தி பேசுவதற்கான காரணம்.

நாம் மக்களை அறிவுமயப்படுத்திவருகிறோம். எமது உறுப்பினர்களுக்கான விசேட அடையாள அட்டைகளை விநிதியோகித்து வருகிறோம்.

BBCSinhala.com | Sandeshaya | TMVP president shot dead

கேள்வி : புலிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதாக முன்னர் கூறீர்கள். புலிகளின் உறங்குநிலைப் போராளிகளின் பிரசன்னம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் வேளையில், உங்கள் பாதுகாப்புக் குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்?

பிள்ளையான் : புலிப் பயங்கரவாதிகளின் உறங்குநிலை உறுப்பினர்களோ அல்லது அவர்கள் மூலமான பாதுகாப்புப் பிரச்சினையோ எமக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால், தலைமைத்துவமும், கட்டளையும் இன்றி அவர்களால் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. அவர்கள் வெற்றிகரமாகச் செயற்படுவதென்றால் அவர்களுக்கென்று சரியான தலைமை வேண்டும், ஆனால் அது தற்போது இல்லை. புலிப் பயங்கரவாதிகளின் தலைமையினை எமது ராணுவம் முற்றாக அழித்ததன் பின்னர், உறங்குநிலைப் போராளிகளின்  செயற்பாடும் அழிந்துவிடும். 

Eastern Province Chief Minister and former Tamil rebel Pillayan (C) is  escorted by army commandos as he walks to the scene of a shooting in  Athurugiriya, a suburb of Colombo November 14,


கேள்வி : இறுதியாக, தமது இறுதிநாட்களை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பிள்ளையான் : மிக விரைவில் எமது ராணுவ வீரர்கள் அவரை கைதுசெய்வார்கள் அல்லது அவர் தானாகவே தற்கொலை செய்துகொள்வார். புலிப்பயங்கரவாதிகளில்  20,000 போராளிகள் எமது வீரர்களால் கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்களும் பிரபாகரனின் மடமையினால் கொல்லப்பட்டு விட்டார்கள், அது அவருக்கும் நன்கு தெரியும். தமிழ் இனத்திற்குச் செய்த மிகப்பெரிய அழிவிற்காக அவர் கொல்லப்படவே வேண்டும். பிரபாகரனின் மரணம் இந்த நாட்டுத் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய ஆறுதலாக, நிம்மதியாக இருக்கும். 

மாற்றுக் கருத்தில்லை, அவர் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் !!!

 

முற்றும்

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை சிறுமி வர்ஷாவின் கொலையைச் செய்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் துணைராணுவக் குழுவே 

சிறிலங்கா டயஸ்போரா இணையத்தள செய்திச் சேவையில் வெளிவந்த கட்டுரை

கார்த்திகை 2, 2009

****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************** 

****
****

****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் பிள்ளையான் தலைமையிலான துணைராணுவக் குழுவினரால் 30 லட்சம் ரூபாய்கள் கப்பப் பணத்திற்காககக் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த வர்ஷா எனும் 6 வயதுச் சிறுமியின் கொலைபற்றி அறிந்திருப்பீர்கள். இக்கடத்தல் மற்றும் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்ட இரு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழு உறுப்பினர்கள்  அடைத்துவைகப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தது நினைவிலிருக்கலாம். தற்போது வந்துள்ள தகவல்களின்படி இவ்விரு உறுப்பினர்களும் இப்படுகொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சம்பந்தப்பட்டிருப்பதை மறைப்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.

 

இந்த சம்பவங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக, இக்கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் இருவர் இருநாட்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், இப்படுகொலை மற்றும் இதன் பின்னாலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக சில உறுப்பினர்களைக் கொலை செய்திருக்கும் பொலீஸார், இந்த இரு உறுப்பினர்களின் மரணங்களை புலிகள் மேல் போட்டுவிட்டு தப்பிக்க முயல்கிறது. திருகோணமலை பொலீஸ் அத்தியர்ட்சகர் வாஸ் குணவர்த்தண இதுபற்றிக் கூறிகையில், கைதுசெய்யப்பட்டிருந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தற்கொலை அங்கிகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் ஒன்றினைப் பார்வையிடச் சென்ற வேளையில் அங்கிருந்த புலிகள் தம்மீது தாக்குதல் நடத்தியவேளை அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாகவும், சில பொலீஸாரும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் கூறுகிறார்.

 

இத்தளத்தில் முன்னர் வெளிவந்த செய்திகளின்படி, சிறுமி வர்ஷாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைதுசெய்யப்பட்டிருந்தவர்களை அகற்றும் முயற்சிகள் ஆளும்தரப்பிற்கு விசுவாசமான நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறியிருந்தோம்.

வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மிக முக்கிய குற்றவாளியான ஒஷ்வின் மேர்வின் ரினவுஷன் எனப்படும் ஆயுததாரி பொலீஸ் வாகனத்தில் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பொலீஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 

அவ்வாறே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் உப்புவெளி அலுவலகத்தின் பொறுப்பாளர் மரியராஜன் ஜனார்த்தன் சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமடைந்ததாக உப்புவெளி பொலீஸார் கூறியிருந்தனர்.

 

இக்கொலை பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலீஸ் அதிகாரியை காரணங்கள் ஏதுமின்றி இடமாற்றம் செய்திருந்தது, அரசின் அதிகார மட்டங்கள் இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை காப்பாற்றுவதற்காகவே என்பது தெளிவாகிறது. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய தினேஸ் குணவர்த்தன இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை மறைக்கும் கைங்கரியத்தில் வெளிப்படையாகவே பேசியது நினைவிலிருக்கலாம்.

அடுத்ததாக  , இக்கொலையின் இரண்டாவது குற்றவாளியான ஜனார்த்தனின் முகம் முற்றாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது, அவர் சயனைட் உட்கொண்டுதான் இறந்தாரா இல்லையா என்பதை பிரேதப் பரிசோதனைமூலம் கண்டறிவதை இதன் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் விரும்பியிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

 


இப்படுகொலையினைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பல விடயங்கள் இதன் பின்னால் அரசுக்கு ஆதரவான குழுவொன்று இருந்திருக்கிறதென்பத்கை கோடிட்டுக் காட்டுகின்றது. அண்மையில் அரசின் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன், பிள்ளையான் குழுவினர் தாம் வாக்குறுதியளித்தபடி தமது ஆயுதங்களை அரசிடம் இன்னும் முற்றாகக் கையளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். கண்துடைப்பிற்காக ஒரு சில ஆயுதங்களை மட்டுமே கையளித்த பிள்ளையான் குழுவினர், கொள்ளைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் உட்பட பல்வேறான குற்றச் செயல்களுக்காக  இன்னும் பெருமளவு ஆயுதங்களை தம் வசம் வைத்திருப்பதாக கருணா மேலும் தெரிவித்திருந்தார். 

 


அண்மையில் தினமின எனும் நாளிதழுக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "பிள்ளையான் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார் என்பது உண்மையானாலும் கூட, அவர் கையளித்த ஆயுதங்களின் அளவைப் பார்க்கும்பொழுது இதனைக் காட்டிலும் அதிகமாக அவரிடம் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதினோம்" என்று கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "அவர்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எமக்கு ஒரு பிரச்சினையல்ல, அவர்கள் ஆயுதங்களைக் கையளிக்க ஒத்துக்கொண்டதே நல்ல முயற்சிதான், அவர்களிடம் மேலும் ஆயுதங்கள் இருப்பின் அவற்றினை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகளை எம்மால் செய்யமுடியும்" என்றும் கூறியிருந்தார்.

 

 

ஆகவே, பிள்ளையான் தனது குழுவினரிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையுமே கைய்யளிக்கவில்லையென்பதும், அரசாங்கம் இதுபற்றி அதிகம் அக்கறை காட்டவில்லையென்பதும் புலனாகிறது.

வர்ஷாவின் கொலையில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருப்பதை மறைக்க பொலீஸார் எடுத்த முயற்சியின் ஒரு அங்கம்தான் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சாட்சியமளிக்கும் முன்னரே பொலீஸாரால் நாடகபாணியில் சுட்டுக் கொல்லப்பட்டது. அதே போல, ஏனைய இரு உறுப்பினர்களின் கொலைகளும் பொலீஸாரினால் மிகவும் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு பிள்ளையானின் கொடிய கரம் சிறுமி வர்ஷாவின் படுகொலையின் பின்னால் இருந்ததை மறைத்திருக்கிறார்கள். கடத்தலுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்கள் நால்வரும் கொல்லப்பட்டு, சாட்சியங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதானது பிள்ளையானைக் காப்பாற்ற அரசு எவ்வளவு தூரம் முயன்று வருகின்றது என்பதையே காட்டுகிறது.

பிள்ளையான் ஆயுததாரிகளால், கடத்தப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்ட 6 வயதுச் சிறுமியான வர்ஷாவின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், அரசு அவரைப் பாதுகாக்க இறுதிவரை துணைநின்றதும் இச்சம்பவங்கள் மூலம் நிரூபணாமாகிறது.

ஆங்கிலத்தில் சுகத் குமார அழகக்கோன்

Edited by நியானி
படுகொலை செய்யப்பட்ட சிறுமியினது படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • Like 1
  • Sad 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கிழக்கைச் சேர்ந்த பிள்ளையான்,கருணா போன்றோர் தாம் பிறந்த மண்ணைச் சார்ந்த தமது மக்களையே இல்லாதொழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதும், அதற்கு அதே மண்ணைச் சேர்ந்தவர்களையே அடியாட்களாக (இத்தொடரில் பிள்ளையானிற்காக 700 பேர் சேவகம் செய்கின்றதாக எழுதப்பட்டிருந்தது)  வைத்திருப்பதையும் பார்க்க - தமிழர் மண் பறிபோவதை எண்ணி - வேதனையாக இருக்கிறது .

ஆனால் தாம் பிறந்த மண்ணையும் இனத்தையும் தாமே அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும்  கிழக்கைச் சேர்ந்த துணைக்குழு உறுப்பினர்களை எண்ணி அழுவதா  சிரிப்பதா என்றே தெரியவில்லை.

"என்னமோ போங்கடா.... உங்கட தலையில நீங்களே கொள்ளிக்கட்டையைச் செருகாமல் இருந்தால் சரி"
 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கிழக்கு மாகாணம் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் இந்தியாவின் பீகாரை மிஞ்சுகிறது.

 கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழுக்களினால் நடத்தப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பில் ஆசிய மனிதவுரிமைக் கமிஷன் வெளியிட்ட அறிக்கை

திகதி :24, பங்குனி 2009

 

சிறுமி வர்ஷாவின் கடத்தலும், கடத்தல்காரர்களை சட்டத்திற்குப் புறம்பான முறையில் படுகொலை செய்தலும்.

 கடந்தவாரம் திருகோணமலை நகரில் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட 6 வயது வர்ஷா ஜூட் ரெஜி என்றழைக்கப்பட்ட சிறுமியின் உடலை தமது தொலைக் காட்சிப் பெட்டிகளிலும், செய்தித் தாள்களிலும் கண்ட இலங்கையர்கள் அனைவரும் அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்தார்கள் என்று கூறினால் அது மிகையில்லை. இக்கடத்தல்பற்றியும், படுகொலைபற்றியும் பலராலும் எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டாலும் கூட, இந்த அக்கிரமம் நடத்தப்பட ஏதுவாக இச்சமூகம் உருவாக்கப்பட்டிருக்கிறதெனும் செய்தியை நாம் இலகுவாகக் கடந்து செல்ல முடியாது.

 

வர்ஷாவின் கடத்தலும், படுகொலையும் நடத்தப்பட்டிருக்கும் பிரதேசம் அண்மைக்காலமாக பல்வேறு கடத்தல்கள், கப்பம் கோரல்கள் ஆகியவற்றினைச் சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத் தக்கது. நீதியின் நிழல் கூட மிதிக்காத இப்பிரதேசத்தில் உயிர்வாழ்தலுக்கான உத்தரவாதத்தினை இழந்து நடைபிணங்களாக உலாவரும் இந்த மக்கள் கூட்டம், அப்பாவிகளைக் கடத்திச் சென்று கொல்லும் அக்கிரமக்காரர்கள் இன்னொரு பகுதியினரால் படுகொலை செய்யப்படும்போது அகமகிழ்வது நடக்கிறது. நீதியற்ற சமூகத்தில் இவ்வாறான மலினமான சந்தோசங்கள்  இடம்பெறுவது ஒன்றும் வியப்பில்லை. இதே வகையான கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெறும் இடமாக இந்தியாவின் பீகார் மாநிலம் திகழ்கிறது. இந்தியாவில் பல மாநிலத்தவர்களால் பொதுவாகக் கூறப்படும் "நீ பீகாரைச் சேர்ந்தவன் என்று எவரிடமும் கூறாதே" எனும் வாக்கியம் தற்போது இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு பொருந்திப் போகிறது, "நீ கிழக்கைச் சேர்ந்தவன் என்று எவரிடமும் சொல்லாதே".

 

 

6 வயதுச் சிறுமியான வர்ஷா கடந்த பங்குனி மாதம் 11 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றிருந்தாள். அன்று பின்னேரம் அவளது குடும்பத்திற்குப் பழக்கமான, வர்ஷாவுக்கும் அவளது சகோதரனுக்கும் கணினிப்பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒருவனால் கடத்தப்பட்டாள். அவனை வர்ஷாவும் அவளது சகோதரனும் "கம்பியூட்டர் மாமா" என்றே செல்லமாக அழைத்து வந்திருக்கிறார்கள். கடத்தியவர்கள் வர்ஷாவின் குடும்பத்துடன் கப்பப் பணத்திற்கான பேரம்பேசலை ஆரம்பித்திருக்கிறார்கள். "உங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை இனிமேல் அரசு வழங்காது, ஆகவே தமிழர்களைக் கடத்திச் சென்று உங்களுக்குத் தேவையான பணத்தினை அறவிட்டுக் கொள்ளுங்கள்" என்று கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கோத்தபாயவினால் வழங்கப்பட்ட ஆசீர்வாதத்தினைப் பாவித்து, கடத்திச் சென்றவர்கள் தமது பேரத்தில் கடுமையாக இருந்திருக்கிறார்கள். வர்ஷாவின் தந்தையானவர் மத்திய கிழக்கில் வேலை பார்த்துவருவதை நன்கு அறிந்து வைத்திருந்த கடத்தல்காரர்கள் 300 லட்சம் ரூபாய்களை தந்தால் ஒழிய வர்ஷாவை உயிருடன் பார்க்கமுடியாதென்று கூறிவிட, தம்மால் இப்போதைக்கு 10 லட்சம் ரூபாய்களை மாத்திரமே தரமுடியும் என்று அவளின் குடும்பம் கடத்தல்காரர்களிடம் வேண்டியிருக்கிறது. கடத்தல்காரர்கள் கேட்ட 300 லட்சம் ரூபாய்களை வழங்கமுடியாமல் அக்குடும்பம் தவித்துக்கொண்டிருக்க படுகொலைசெய்யப்பட்ட வர்ஷாவின் உடல் உரம் இறக்குமதி செய்யப்படும் வெள்ளைநிறப் பைய்யொன்றில் இருந்து 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. திருகோணமலை நகரின் இதயப்பகுதியில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மோர் வீதியில் , கழிவு நீர் ஓடும் வாய்க்கலுக்கு அருகில்  அவளது உடல் கடத்தல்க்காரர்களால் வீசப்பட்டிருந்தது.

 

 இக்கடத்தல் நாடகம் வர்ஷாவின் படுகொலையுடன் நின்றுவிடவில்லை. மாறாக இன்னும் நான்கு உயிர்களைப் பலியெடுத்த பின்னரே மூடிமறைக்கப்பட்டு அவசர அவசரமாக முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.

 

இக்கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒஸ்வின் மேர்வின் ரினவுஷன் மற்றும் வர்தராஜன் ஜனார்த்தன் ஆகிய இருவருமே மர்மமான முறையில்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொலீஸாரின் கூற்றுப்படி கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்ட ரினவுஷனை தாம் வெளியே அழைத்துவரும்போது அவர் தம்மைத் தாக்கியதாகவும், தமது பதில்த் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல ஜனார்த்தனின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட பொலீஸார், கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட ஜனார்த்தன் எப்படியோ அருகில் இருந்த சயனைட் வில்லையினைக் கண்டெடுத்து உட்கொண்டு மரணமனாதாகக் கூறியிருக்கிறது. இக்கடத்தலில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கும் நிலையில், அவர்கள் கைதுசெய்யப்படுமிடத்து அவர்களுக்கும் இவ்வாறான மர்ம மரணங்கள் பொலீஸாரினால் அரங்கேற்றப்படும் என்பது உறுதி.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
    • பூனை கண்ணை மூடிக்கொண்டாள் . .......!  😍
    • திரு .சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!  💐
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.