Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அரங்கில் எழுப்பிவரும் உரிமைக்குரல் எமக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கிறது - சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 12-06-2007 15:30 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

உலக அரங்கில் எழுப்பிவரும் உரிமைக்குரல் எமக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கிறது - சு.ப.தமிழ்ச்செல்வன்

'' தேசவிடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக விளங்கும் தேசப்பற்றானது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஆட்கொண்டு நிற்கும் ஒரு அபூர்வமான சக்தி '' என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு செயல்வடிம் கொடுப்பது போல தாயயக தேசத்தின் மீதான பற்றுதலை மனதிலே தாங்கிக் கொண்டு அதனது விடிவிற்காய் அயராது உழைக்கின்ற எம் உறவுகளுக்கு வணக்கங்கள். '' வெல்க தமிழ் '' எனும் எழுச்சிப் பேரணியில் பங்குகொண்டு தாயக பாசத்துடன் தேசத்தின் விடுதலைக்காக, உலக அரங்கில் நீங்கள் எழுப்பிவரும் உரிமைக்குரல், ஒடுக்கப்பட்டு எமது மக்களிற்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்துநிற்கிறது. தேசியத் தலைமைக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

எந்த இனமுமே சம்பாதித்திராத அரும்பெரும் சொத்தாகிய உங்களின் பேராதரவும், தீராத விடுதலை முனைப்புமே இன்று தாயகத்தில் பெரும் வெற்றிகளை குவித்து தமிழினம் வீறுநடைபோட வைத்திருக்கிறது என்பதனை யாருமே மறுத்துவிட முடியாது. தாயகத்திலிருந்து வெகு தொலைவு சென்ற துயரம் மனதை அடைக்கின்ற போதும், தாங்க முடியாத கலாச்சார பண்பாட்டுச் சுமைகள் ஒரு தோளிலும் தாயகத்து உறவுகளின் வாழ்வாதாரத்தையும் மறு தோளிலுமாக சுமந்துகொண்டு மண்ணின் விடுதலை நோக்கி உங்களது தார்மீக ஆரவை நல்கும் அரும்பணி காலத்தால் நினைவுகூரப்படும்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போதெல்லாம் பொங்கியெழுந்து உலக மனச்சாட்யின் கதவுகளை தட்டி நியாயம் கேட்கும் உங்கள் தாயகப் பற்றை மெச்சுகின்றோம் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற ''வெல்க தமிழ்'' நிகழ்வுக்காக தனது வாழ்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் முழுவடிவத்தைப் பார்வையிட பக்கம் ஒன்று பக்கம் இரண்டை அழுத்துங்கள்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மடிகின்ற எம் உறவுகளினதும் போராளிகளினதும் தியாகங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறிய முயற்சி அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு இடர்கள் வந்தாலும் விடுதலையை வென்றெடுப்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் - பா.நடேசன்

தமிழீழ விடுதலைப் போராட்டமானது சிறீலங்கா அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு முனைகளில் தமிழீழ மக்களால் நடாத்தப்படும் ஓர் புரட்சிகர தேசிய விடுதலைப் போராட்டமாகும. தமிழ் மக்கள் அனைவரும் ஒரே தலைவரின் கீழ் புரட்சிகர விடுதலைக் கோட்பாடே தமது இலட்சியமாக கொண்டு அரச பயங்கரவாதத்தை முறியடித்து தமிழீழ தனியரசை நிறுவதற்கான ஓர் புரட்சிகர சுந்திரப் போராட்டத்தினை நடாத்திக்கொண்டிருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.