ஈரான் ஹோர்மூஸ் கடல்வழி பாதையில் கண்ணி வெடிகள் வைத்தால் , ஈரான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அழிவை எதிர்கொள்ளும் : ட்ரம்ப் !
அதாவது அணுகுண்டு தாக்குதல் கூட நடத்துவோம் என்று மறைமுகமாக சொல்றார்.
அதுசரி , ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்தினீங்க?
ட்ரம்ப்: அது வந்து அவங்க அணு ஆயுதம் செய்யுறாங்க . அதனால் சூழல் மாசடைந்து உலகம் பாதிக்கப்படும் அதுதான்.
இந்த உலகம் விசித்திரமானது !
இந்த ஐ.நா சபையில் சிறுவர்களுக்கு என்று ஏதோ ஒரு பிரிவு இருக்குதே , அது ஈரானில் ஒரு பாடசாலையில் அத்தனை மாணவிகள் உயிரிழந்ததுக்கு ஏதாவது கருத்து சொல்லிச்சா ?
இந்த உலகம் விசித்திரமானது!
அமெரிக்காவை நம்பியதற்கு மத்தியகிழக்கு நாடுகள் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாலும் , அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது கூறினார்களா ?
அவர்கள் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க ரெடி . ஆனால் ஈரான் முன்னேறி விடக்கூடாது . காரணம் மத்திய கிழக்கில் புத்தி ஜீவிகளை அதிகம் கொண்ட நாடு ஈரான். குழப்பங்கள் அதிகம் ஏற்படாமல் விட்டால் , ஈரான் அறிவியலில் தங்களை வென்று விடுவார்கள் என்ற பயம் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அப்படி ஈரான் முன்னேற கூடாது என்று ஏன் நினைக்கிறார் என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதை சொன்னால் இந்த பதிவை மடை மாற்றி விடுவார்கள்.
இப்போதைய நிலையில் நாம் தனிப்பட்ட நபர்களாக நம்மை பார்த்துக்கொள்வதும் , பெற்றோல் புல் டேங் அடித்து வைப்பதும் , சாப்பாடு தட்டுப்பாடு வந்தால் சமாளிக்கூடிய அளவு ஏற்பாடு செய்து வைப்பதுமே செய்யக்கூடியவை.
செய்திகள் வாசிக்கும் , தொகுக்கும் ஆர்வம் காரணமாக இரு பக்க செய்திகளை ஆராய்ந்து போலி செய்திகளை ஒதுக்கி உண்மையான செய்திகளை எழுதினால் சண்டைக்கு வருகிறார்கள்.
நேற்று அப்படி சண்டை பிடித்த ஏராளமானோரை ப்ளொக் பண்ணினேன்.
அதற்கு முன் அவர்களின் புரோபைலை பார்த்தால் அநேகமானோர் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்வோர். ஈரான் அடிக்கும் குண்டு அவர்கள் தலைமீது விழுந்து விடுமோ என்று ஊரில் உள்ள அவர்கள் வீட்டில் குடும்பத்தார் பயந்துகொண்டு இருப்பார்கள்.
அவர்களால் வெளிப்படையாக அவர்கள் வாழும் நாட்டை திட்ட முடியாது. அந்த ஆதங்கத்தை என்னைப் போன்றோரை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த யுத்தத்தால் , யாராவது வந்து நான் வசிக்கும் இடத்தில் குண்டு போட்டால் மட்டுமே எனக்கு பாதிப்பு வரும்.
மற்றப்படி எனக்கு பெரிய பாதிப்பு இல்லை.
பொருட்கள் விலை உயர்வோ , பெற்றோல் விலை உயர்வோ என்னைப் பாதிக்கப்போவதில்லை.
ஆனால் சின்ன விலை உயர்வைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத பெருமளவு மக்கள் தொகை உள்ளது.
உலகம் பூராக அப்படியொரு மக்கள் கூட்டம் உள்ளது.
அந்த வீட்டு பிள்ளைகளை நினைத்தால்தான் பாவம்.
யுத்தம் காரணமாக அமெரிக்கா பிள்ளை இறக்காது. இஸ்ரேல் மீது எத்தனை குண்டு போட்டாலும் , அந்த நாட்டு பிள்ளைகள் நிலக்கீழ் அறையில் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த யுத்தத்தில் ஈரான் எவ்வளவு பதிலடி கொடுத்தாலும் இஸ்ரேலில் ஒரு குழந்தையாவது இறந்ததா ?
ஆனால் ஈரானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளாவது இறந்திருக்கும்.
காசாவில் எத்தனை குழந்தைகள் இறந்தன?
ஒரு காலத்தில் யுத்தம் என்றால் யுத்தப் பிரகடனம் செய்து குழந்தைகள் , முதியோர்களை எல்லாம் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்துதான் யுத்தம் நடக்கும்..அரச காலத்தில் இருந்த அந்த நாகரீகம் கூட இப்போது இல்லை.
இதையெல்லாம் நாம் மாற்ற முடியாது.
உலகத்தின் நியதி இதுதான்.
அமெரிக்கா அடி வாங்குது , இஸ்ரேல் அடிவாங்குது என்று சந்தோசப்பட என்னால் முடியாததுக்கு காரணம் அதுதான்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் தாக்குதலால் வந்த இழப்பு அந்த நாட்டு தலைவர்கள் , அரசர்களின் பொக்கட் மணி.
அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் செலவு என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2200 பில்லியன். அதாவது அமெரிக்காவின் பத்து பணக்காரர்களின் பொருளாதார பலம் இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 25 மடங்கு அதிகம்.
இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை திருப்பி அடிக்க பயமென்றால் ஆட்சியை என்னிடம் தாருங்கள் என்று சஜித் காமெடி பண்ணிட்டு இருக்கார்.
நாமும் அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் நட்டம் என்று சந்தோசப் பட்டுடுட்டு இருக்கம்.
யுத்தம் முடிய ட்ரம்ப் வந்து இலங்கை பொருட்களுக்கு இறக்குமதி வரியை கூட்டப் போறேன் என்றால் , உங்கட வரி காசில் இலங்கை அரசில் இருந்து கொஞ்சம் பேர் போய் ட்ரம்பின் காலில்தான் விழனும் -whatsapp-
By
உடையார் ·
Archived
This topic is now archived and is closed to further replies.