Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். – அருட்தந்தை ம.சக்திவேல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். – அருட்தந்தை ம.சக்திவேல்

WhatsApp-Image-2020-12-12-at-1.50.01-PM-
 22 Views

அரச தரப்பின் மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பகடைக்காயாக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ம.சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக அவரிடம் ‘இலக்கு’ மின்னிதழ் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலின் கருத்து வடிவம்.

அரசியல் சுயலாபம் கருதி கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக பல தடவைகள் ஆட்சியாளர்களுடன் பேசப்பட்டுள்ளது. தொடர்சியாக நாம் பேசி வந்துள்ளோம்.

இந்த நிலையில், கடந்த தேர்தல் காலத்தில் தற்போது அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கைதிகள் தொடர்பில் ஒரு பெயர்ப் பட்டியலை பிரதமர் மகிந்தவிடம் கையளித்திருந்தார். ஆதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு பெயர்ப் பட்டியலை கையளித்தார். பின்னர் நீதியரசர் க.விக்னேஸ்வரனும் ஒரு பட்டியலை கையளித்திருந்தார்.

இப்போது இரண்டாம் கட்டமாக அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சருடன் சந்திப்பை மேற்கொண்டு, அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மகஜரை கையளித்துள்ளதுடன்,  ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு நாள் குறித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து அரச தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முதல் கட்டத்தில்  போட்டி மனப்பான்மையுடன் அரசியல்  வாக்குவங்கியை தக்கவைப்பதற்கு அரசியல் கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஒன்றன் பின் ஒன்றாக பிரதமரிடம் கொடுக்கப்பட்டது.  அரச தரப்பு அதை ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா என அவர்களுக்கு தெரிந்தும் சுயலாபம் கருதி அந்த பட்டியல் கொடுக்கப்பட்டது.

இப்போது அரசியல் கொலை குற்றச்சாட்டில் மரணதண்டனைக் கைதியாக உள்ள துமிந்த சில்வாவை விடுதலை செய்ய வேண்டும் என அரச தரப்பினர், எதிர்த் தரப்பினர் இணைந்து கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக, மனசாட்சி உந்தப்பட்டவர்களாக தான் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள். இதில் பெரும் அரசியல் சுயலாபம் முன்வைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இது உண்மையான அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வேண்டுகோளா? அல்லது அரசியல் கட்சிக் காரர்களின் சுயநலமா என்ற கேள்வி எழுகிறது.

நல்லாட்சியில் கைதிகளை விடுவிக்க முயற்சி செய்யவில்லை

அரசியல் கைதிகள் தொடர்பில் காலத்துக்குகாலம் கோரிக்கைகளை முன்வைக்கிறார்களே தவிர தொடர்சியான தீர்வுக்கு மக்கள் பிரதிநிதிகள் வேலை செய்யவில்லை என எமக்கு தெரியும்.  தமிழ் தலைமைகள் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு வந்து முகம் கொடுப்பதும், அறிக்கைகள் விடுவதுடனுமே நின்று விட்டார்கள். வேறு ஒன்றும் செய்யவில்லை.

நல்லாட்சிக் காலத்தில் இவர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது. இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இப்போது ஏன்  கூட்டுச் சேர்ந்தார்கள். இந்த கூட்டில் சந்தேகம் உள்ளது.

egypt-prison-300x209.jpg

தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள்.

அரச தரப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலைக்காக அரசியல் கைதிகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். அரசியல் கைதிகளை அவர்கள் பாவிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் தலைமைகள் இதற்கு இடம் கொடுக்கப் போகிறார்களா?

எமக்கு தெரியும். இந்த ஆட்சியளர்கள் பதவிக்கு வரமுன்னரே இந்த நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை. பொருளாதார பிரச்சனைதான் உள்ளது என கூறி ஆட்சிக்கு வந்தார்கள்.  இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனையில்  மக்களை உசுப்பேத்தி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.

இந்த நிலையில், அரசியல் கைதிகளை விடுவித்தால் இந்த நாட்டில் அரசியல் பிரச்சினை இருப்பது என்பதை ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும். அதற்கு இந்த அரசு முன்வருமா? அதை நாம் சிந்திக்க வேண்டும்.

அரசியல் கைதிகளை வகைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கைதிகளை எந்த வகையில் விடுதலை செய்யப் போகிறார்கள். எந்த வகையில் வகைப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது. அரசியல் கைதிகள் பல வகையினர் உள்ளனர். இவர்களை வகைப்படுத்தல்  என்பது அரசியல் கைதிகளை சிதைத்து விடும்.

எனவே அரச தரப்பினர்  சிங்கள பேரினவாதத்தை சிரத்தின் மேல் கொண்டுள்ள இந்த காலத்தில், அரசியல் கைதிகள் என்போரை விடுதலை செய்வதற்கு எந்த வகையில் துணிந்து இருப்பார்கள்.

மகிந்த ஆட்சிக் காலத்திலேயே அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விடுதலை செய்யப்படவில்லை. அவர் போராளிகளை சமூகமயப்படுத்தினார். அதற்கு சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை. அப்போது விடுதலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. எனவே இவை அரசியல் நாடகம்.  நாம் சிந்திக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுதலைக்கு முதலில் நாட்டில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆனால் அதைச் செய்ய அரசு எந்தவகையிலும் ஆயத்தாமாக  இல்லை. இப்போது கைது செய்யப்படுபவர்கள் அந்த சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்ததாக அரசியல் தீர்மானம் எடுத்து, கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு எமது அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறர்கள் என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும். அதில் தான் அவர்கள் விடுதலை தங்கியுள்ளது.

அரசு தமது இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டல், இவர்கள் என்ன செய்யப் போகிறர்கள் என தீர்க்கமான முடிவு. தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை. அதை பதிவு செய்யவும் இல்லை. எனவே இவ்வாறான செயற்பாடுகள் அவர்களின் அரசியல் நலன் சார்ந்ததாகவே உள்ளது. அவர்களிடம் இருந்து விடுதலையை எதிர்பார்க்க முடியாது.

அரச மற்றும்  எதிர்த் தரப்பினரை ஒரு மையப்புள்ளியில் இணைக்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகளின் அரசியல் சிதைவு, கட்சி முரண்பாடு என்பன பெரும் பிரச்சனையாகவுள்ளது. இவர்கள் சுயமாக கைதிகள் விடயம் குறித்து பேசவில்லை சூழ்நிலைதான் இந்த நிலைக்கு இவர்களைத் தள்ளியுள்ளது. ஆனால் அதைக்கூட இவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என தெரியவில்லை

எனவே கைதிகளின் விடுதலைக்காக நாம் பெரும் வேலைத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். அதாவது ஆளும் தரப்பினரையும், எதிர்த் தரப்பினரையும் ஒரு மையப்புள்ளியில் இணைக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம். தற்போது கொரோனா சூழலில் தாமதமடைந்துள்ளது. இந்த செயற்பாட்டின் ஊடாகத்தான் எமது கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஊடாக ஒரணியில் அரசியல் தீர்மானம் எடுக்கலாம். இதன் மூலமே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும். அதுவரை அரசியல் கைதிகளை வகைப்படுத்த கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறோம்.

https://www.ilakku.org/?p=37461

ஐயா பாதிரியாரே, உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை. ஒடுக்கப்படடவர்களுக்கும்,துன்பப்படுவோர்க்கும் ஆதரவளிப்பதும், அநீதியை எதிர்ப்பதும் ஒரு நொண்டி சாட்டு என உங்கள் தமிழ் (?) அன்பர்களே உங்களை இழிவாக பேசும் போது உங்களுக்கு இது தேவையோ? அல்லது அவர்கள் சொல்வது உண்மையா என்பதை நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

நீங்கள் உங்கள் வேலையே மட்டும் பார்த்தால் போதும். தமிழர் தங்கள் பிரச்சினையை பார்த்துக்கொள்ளுவார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு பேசுகிறீர்களோ எனக்கு தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுவது கொரோனாவை விட ஆபத்தானது”

1-117.jpg
 30 Views

இலங்கை அரசின் ஊடக இணை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பிலவும் அவர் தோழர்களும் ” நாட்டில் அரசியல் கைதிகளோ, தமிழ் கைதிகளோ இல்லை” எனக் கூறுவது கொரோனாவைவிட ஆபத்தானது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“பேரினவாதத்தின் சிறை கைதிகளாக இருக்கும் அரசின் ஊடக இணை பேச்சாளர் கம்மன்பிலவும் அவர் தோழர்களும் ” நாட்டில் அரசியல் கைதிகளோ, தமிழ் கைதிகளோ இல்லை” எனக் கூறுகின்றனர்.

இது கொரோனாவை விடப் பயங்கரமானது.  அத்தோடு தமிழர்களையும் அரசியல் கைதிகளையும் புண்படுத்தும் கூற்றுமாகும். இதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்க்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

அரசியல் கைதிகள் உள்ளனர் என ஏற்றுக் கொண்டால் நாட்டில் அரசியல் பிரச்சனைகள்  உள்ளன என்றாகிவிடும்.  இப் பிரச்சினைய தீர்க்க வேண்டிய கடப்பாடும் ஆட்சியாளர்களுக்கு  உள்ளது  என்ற இந்த உண்மை நிலையை மறைக்க இவ்வாறு கூறுகின்றனர்.  அத்தோடு நாட்டில் அரசியல் பிரச்சனை இல்லை, இருப்பது அபிவிருத்தி பிரச்சினையும், பொருளாதார பிரச்சினையும் என்றே தேர்தல் காலங்களில் கூறினர்.

அதனைகாக்கவுமே தொடர்ந்து அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனக் கூறுகின்றனர். மேலும் அரசியல் கைதிகளுக்கு பிணை அல்லது விடுதலை செய்ய வேண்டு மெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது அதனை நீக்க வேண்டும்.

இதனை செய்வதற்கு ஆட்சியாளர்கள் முன்வரப் போவதில்லை. ஏனெனில் பயங்கரவாத தடைச் சட்டமே எதிர்காலத்திலும் வட கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டிருக்கும் இனவாத, மத வாத செயற்பாடுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் பயங்கர வாத சிந்தனையும் காரணமாகும்.

பயங்கர வாத தடைச் சட்டம் எதிர்காலத்தில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும். அதுவே உண்மை. ரதுபஸ்வலை சம்பவமும் மகர சம்பவமுமே நல்ல உதாரணமாகும்.

தற்போது அரசியல் கைதிகள் விடயத்தில் அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேரவேண்டிய காலத்தின் கட்டாயம் தோன்றியுள்ளது. தமது சுய அரசியலுக்கு அப்பால் நின்று நீண்ட கால பிரச்சினையாக உள்ள அரசியல் கைதிகள் விடயத்தைக் கையாண்டு அரசியல் கைதிகளை வகைபடுத்தாது விடுதலையை பெற்றுக் கொடுக்க செயற்படுவதே அவர்களுக்கான கௌரவமாக அமைவதோடு தமிழர்களின் அரசியலுக்கான அங்கீகாரமாகவும் அமையும்.

https://www.ilakku.org/?p=37519

2 hours ago, Robinson cruso said:

அட நீங்கள் தமிழரில்லையா, இப்படி அடிக்கடி நிறம் மாறுகின்றீர்களே😎, உங்களுக்கே நீங்கள் என்ன பதிகின்றீர்கள் என்று ஞாபகமில்லையா, அல்லது பொழுது போக்கிற்காக பதிகின்றீர்களா.

உங்களையும் சிலர் தூக்கி பிடித்தார்களே மறதமிழனென்று😂

எப்பவும் ஒரே சொல் செயலாக இருக்கவேண்டும், இப்படி அடிக்கடி நிறம் மாறக்கூடாது நீங்களும் உங்களுக்கு வக்காலத்து வாங்கியவர்களும்👍

13 hours ago, உடையார் said:

உடையாரே, தமிழன் எண்டால் நீங்கள் நினைக்கிற மாதிரி எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு சார்பாக எழுதினால் மறதி தமிழன், உண்மையாய் எழுதினால் சிங்களவன். நிறம் மாற வேண்டி, பயந்து நாட்டிடை விட்டு ஓடியவர்கள் நாங்கள் இல்லை. நாங்கள் துணிந்துதான் இங்கு இருக்கிறோம். ஒரு வேளை நீங்கள் உங்கள் வசதிப்படி பாதிரிமாரைப்பற்றி கேவலமாக எழுதுவீர்கள், இன்னொரு வேளை ஆதரவாக  கொதித்தெழுவீர்கள். நீங்கள்தான் பச்சோந்திகளே தவிர நாங்கள் பச்சோந்திகள் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Robinson cruso said:

நிதானமாக எழுங்கள், உங்களை தரத்தை உங்கள் எழுத்து மூலம் நிருபிக்க வேண்டாம். .

ஒரே ஒரு பதிவைக்காட்டுங்கள் பாதிரி மாரை இழிவாக எழுதியதை.

ஏன் இழிவாக எழுத வேண்டும் அவர்களை ப்பற்றி கூறமுடியுமா????????

பயந்துதான் ஓடி வந்தோம் உங்களை போன்ற கை பொம்மைகளால்😂

 நீங்கள் நேரத்திற்கு ஏற்ற மாதிரி மற தமிழன் என்பீர்கள் பின் மறதி தமிழனாகி  கிறிஸ்தவனாகிவிடுவீர்கள், மறதி போக மற தமிழனாகிவிடுவீர்கள், ஒரு நிலையில்லா மனிதானக நடமாடுகின்றீர்கள், உங்களுக்கு முட்டுகட்டை கொடுக்க ஒரு சில கை பொம்மைகள்

Just now, உடையார் said:

நீங்கள் எழுதவில்லை எண்டாலும்  , உங்களுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழர்கள் எழுதுகிறார்கள். நீங்கள் எழுதினத்தை நான் இன்னும் காணவில்லை. அப்படி எழுதினத்தை காணவில்லை எண்டால் நீங்கள் எல்லா செய்திகளையும் வாசிப்பதில்லைபோல இருக்கிறது. மாட்றவர்களிடம் இருந்து எனக்கு அத்தாட்சி பத்திரமோ வேறு எதுவுமோ தேவை இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

 மற்றவர்களைப்பற்றி என்னிடம் கதைப்பதேன், அவர்களிடம் தான் இதை நீங்கள் கூறியிருக்க வேண்டும், களத்தில் உள்ள எல்லா திரிகளையும் பார்க்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.

உங்களுக்கு மற்றவர்களின் அத்தாட்சி பத்திரம் தேவையில்லை என்றால் பிறகு என்னதிற்கு மற்றவர்களுக்கு உங்கள் அத்தாட்சி பத்திரத்தை கொடுக்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சை.....இந்த மறத்தமிழன் பிரச்சனை இன்னும் ஓயேல்லையா...விடுங்கடாப்பா...சலிப்பு தட்டுது.

ஆனால் இந்த பாதிரியார் சொன்னதில் எனக்கும் உடன்பாடில்லை. 

அரசியலாகவே போகட்டும். துமிந்த சில்வாவை விடுவிக்க எடுக்கபடும் நாடகமாகவே இருக்கட்டும். 

நமக்கு என்ன வேண்டும் அரசியல் கைதிகள் விடுதலை மட்டும்தானே? அது என்ன விதத்திலாவது வரட்டுமே?

2 minutes ago, உடையார் said:

 மற்றவர்களைப்பற்றி என்னிடம் கதைப்பதேன், அவர்களிடம் தான் இதை நீங்கள் கூறியிருக்க வேண்டும், களத்தில் உள்ள எல்லா திரிகளையும் பார்க்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.

உங்களுக்கு மற்றவர்களின் அத்தாட்சி பத்திரம் தேவையில்லை என்றால் பிறகு என்னதிற்கு மற்றவர்களுக்கு உங்கள் அத்தாட்சி பத்திரத்தை கொடுக்கின்றீர்கள்

கருது எழுத்து முன்னர் உங்கள் அடியாட்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பாருங்கள். நான் யாருக்கும் நட்சட்ச்சி பாத்திரம் வழங்குவதில்லை. வழங்கி  இருந்தால் அது நேர்மையான , உண்மையான செய்தியாக இருந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

கருது எழுத்து முன்னர் உங்கள் அடியாட்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பாருங்கள். நான் யாருக்கும் நட்சட்ச்சி பாத்திரம் வழங்குவதில்லை. வழங்கி  இருந்தால் அது நேர்மையான , உண்மையான செய்தியாக இருந்திருக்கும்.

எனக்கு அடியாட்களா😂

, யார் அந்த அடியாட்கள் எனக்கே தெரியாமல், ஆதரமின்றிய வதந்தி பரப்ப வேண்டாம். 

Just now, உடையார் said:

எனக்கு அடியாட்களா😂

, யார் அந்த அடியாட்கள் எனக்கே தெரியாமல், ஆதரமின்றிய வதந்தி பரப்ப வேண்டாம். 

நாங்கள் அடிபடவில்லையா? அப்ப அடியாட்கள்தானே? நான் வதந்தி பரப்புவதில்லை😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

நாங்கள் அடிபடவில்லையா? அப்ப அடியாட்கள்தானே? நான் வதந்தி பரப்புவதில்லை😜

நான் அப்படி கருதவில்லையே, உங்களை நட்புடன்தான் பார்க்கின்றேன், சக கள உறவாக, கருத்தில் மட்டுமே வித்தியாசம், அதை தாண்டி உங்கள் எங்கள் நோக்கம் மக்களின் விடிவே, இல்லையா?

Just now, உடையார் said:

நான் அப்படி கருதவில்லையே, உங்களை நட்புடன்தான் பார்க்கின்றேன், சக கள உறவாக, கருத்தில் மட்டுமே வித்தியாசம், அதை தாண்டி உங்கள் எங்கள் நோக்கம் மக்களின் விடிவே, இல்லையா?

அது சரி உடையார். என்னதான் இதில் அடிபடாலும் எமது நோக்கம் தமிழனுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்பதே. வேலைக்குப்போனால் இவர்களைப்பற்றி சிந்திக்கவோ பேசவோ நேரம் இல்லை. இப்படி எழுதி கொஞ்ச நேரம் செலவு செய்யும்போதுதான் வேறு எதையும் பற்றி சிந்திக்கவேண்டியதில்லை. மற்றப்படி எதையும் சீரியஸாக எடுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து இருக்கும்போதுதான் அங்கு சுவாரசியம் இருக்கும். ஆனாலும் தமிழ் மக்களின் போராட்டத்தில் , அவர்களுடன் நிட்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.