Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவிற்கு சுமந்திரன் அனுப்பிய சர்சைக்குரிய ஆவணம்: கூட்டமைப்பிற்குள் விரிசல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

ரஞ்சித்,

இதே போல் சில கேள்விகளை பராபரனும் இன்னொரு திரியில் எழுப்பினார். அவர் அந்த கேள்விகளை rhetorical questions ஆக எழுப்புகிறார் (இதுக்கு என்ன தமிழ்?) என் நினைத்ததால், அவரையே பதிலையும் எழுதும்படி கேட்டேன்.

குணாவின் வீடியோவையும் நான் பார்க்கவில்லை. 

பராபரன் பதிவிடாமல் விட்டால், இந்த கேள்விகளை எல்லாம் ஒரு பட்டியல் இட்டு, அடுத்து என்ன நடக்கும், மனித உரிமை கவின்சில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றினால், அடுத்த படி என்ன, ஐசிசிக்கு எப்படி போவது? அங்கே வழக்காடும் தரப்பாக யார் இருப்பர் இவற்றை எல்லாம் அலசி எனக்கு தெரிந்தவற்றை ஒரு பதிவு போடலாமா என நினைத்தேன். 

ஆனால் யோசித்து பார்த்தால் இது எல்லாம் ஆடு அறுக்க முதல் செவியை அறுக்கும் வேலையாகவே தெரிகிறது.

முதலில் பின்வரும் மூலோபாய கேள்விக்கு நாம் விடை தேடுவதே இப்போ அவசியமானது.

எமது இலக்கு என்ன?

1. 2009 நேரம் அதிகாரத்தில் இருப்பவர்களை தண்டிப்பதா?

2. தண்டிக்க பட போகிறீர்கள் என்ற பயத்தை காட்டி நமக்கு கிடைக்க கூடிய தீர்வை பெற முயல வேண்டுமா?

1இன் படி அவர்களை நாம் தண்டித்து விட்டால், 2இன் படி எமக்கு தீர்வை தர அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை.

மகிந்தவை, கோட்டவை மின்சார கதிரைக்கு அனுப்பியே விட்டால்? நாமல் வருவார் அவரை எதை வைத்து மேற்கு மிரட்டும்?

இதிலே இவர்களை தண்டிக்கும் போக்கில் கூட்டமைப்பும், மேற்கும் மெதுவான முறையை எடுப்பதற்கு இதுதான் காரணம்.

ஆனால் தொடர்ந்தும் இலங்கை முரண்டு பிடித்தால் - மனித உரிமை கவுன்சிலில் ஒரு காரசாரமான பிரேரணை நிறைவேறலாம்.

இங்கே இந்த பிரேரணையின் காரம் என்ன, கால அவகாசம் என்ன என்பதெல்லாம் உண்மையில் மேற்கும் இந்தியாவும் மட்டுமே தீர்மானிக்கும் விடயங்கள்.

அவர்களின் தீர்மானம் இலங்கை தமக்கு சாதகமாக நடக்கிறதா இல்லையா என்பதில்தான் முழுக்க முழுக்க தங்கியுள்ளது.

இங்கே தமிழர் தரப்பு கால அவகாசம் பற்றியோ, பிரேரணை நிழக்சி நிரல் பற்றியோ முடிவெடுக்கும் தரப்பு அல்ல.

ஆனால் நாம் இலங்கை மீது காரசாரமான தீர்மானம் வேண்டும் என கோர முடியும். அதுதான் நடக்கிறது.

சிலவேளை நீங்கள் கோரினாலும் இந்த முறை இது சாத்தியமில்லை என யூஎஸ் சுமந்திரனுக்கு சொல்ல கூடும்.

ஆனால் சுமந்திரன் ராஜதந்திரமாக செயல்படின் இதை வெளியே சொல்லாமல், நாங்கள் இப்போதே வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம், நீங்கள் உங்கள் முடிவுபடி நடவுங்கள் என அமெரிகாவிடம் சொல்ல வேண்டும். 

(இதை playing for the domestic audience என்பார்கள். பிரெக்சிற் விசயத்தில் இதை யூகே அரசு செய்வதை காணலாம்).

ஆனால் அப்படி செய்யாமல், மக்களுடன் ஒளிவு மறைவின்றி பேசும் நல்லெண்ணதிலோ அல்லது எனக்கு அமெரிக்கா நண்பன் என காட்டும் அவசர குடுக்கைதனத்திலோ, சுமந்திரன் “கால அவகாசம் கொடுப்போம்” என்று ஏதோ அது தனது (எமது) முடிவு என்பது போல சொல்ல (இந்த முறை வரைபில் இது இல்லை) தருணம் பாத்திருக்கும் கஜனும், விக்கியும் அவரை துவைத்து தொங்க விடுகிறார்கள்.

இதுதான் நடக்கிறது.

சரி இதுவரை மனித உரிமை கவின்சிலின் பிரேரணையின் வீச்சும், காலமும், பாதையும் யாரால் (மட்டுமே) தீர்மானிக்கபடுகிறது அதில் எமது வகிபாகம் என்ன என்பதை நாம் பார்த்து விட்டோம்.

அடுத்து நாம் விரும்பியவாறே தீர்மானம் நிறைவேறிவிட்டது. இலங்கை போர்குற்றம் இழைத்தது என பிரேரணை வந்தாகி விட்டது என வைப்போம். சரி, அடுத்து என்ன?

இஸ்ரேலுக்கு எதிராக நூறூக்கு மேற்பட்ட பிரேரணைகள் உள்ளன. ஆனால் அவற்றை இஸ்ரேலும் கணக்கில் எடுப்பதில்லை. இதன் பயனாக பாலஸ்தீனருக்கு ஒரு சிறிய விடிவுதானும் கிடைக்கவில்லை.

மியன்மாரில் இனப்படுகொலை நடந்ததாக தீர்மானம் ஆயிற்று. என்ன நடந்தது?

இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் முழுக்க முழுக்க தீர்மானிக்க போவது புவிசார் அரசியல் மட்டுமே.

இலங்கை மீதான தீர்மானம் வெற்று காகிதமாகவும் போகலாம். அடுத்து சர்வதேச விசாரணைக்கும் உள்ளாகலாம் ( எப்படி உள்ளாகலாம் என்பது இப்போதைக்கு ஆட்டின் செவி அறுக்கும் வேலை -நடக்கும் போது ஆராய்வோம்). 

ஆனால் இந்த வழித்தடத்தின் ஒவ்வொரு இஞ்சியும் புவிசார் அரசியலால் மட்டுமே தீர்மானிக்கபடும்.

நாம் எல்லாரும் விடும் மின்பெரிய பிழை உள்நாட்டு சட்டகோவை போல சர்வதேச சட்டமும் இருக்கும் என எதிர்பார்ப்பதே.

ஆனால் சர்வதேச சட்டத்தில் நடுநிலையான “பொலீஸ்” இல்லை. பலமான நாடுகள் கூட்டாகவோ, குழுக்களாகவோ, தனியாகவோ தேவைக்கேற்ப (தமது தனி அல்லது கூட்டு தேவைக்கு ஏற்ப) பொலீஸ் உத்தியோகம் பார்ப்பார்கள்.

ஆகவே சர்வதேச சட்டத்தில் சட்டத்துக்கு முன் எல்லாரும் சமன் இல்லை (சிலர் சர்வதேச சட்டம், சட்டமே இல்லை அது ஒருவகை மாபியா-விதி என்பார்கள்). 

பொலீஸ்கார் எமது நண்பனா, பொலீச்காரரின் நலனுடன் எமது நலனை எப்படி ஒருங்கிணைத்து வெல்லுவது என்பவைதான் இங்கே வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவை

எமது விடயம் போல் ஒரே விடயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொலீஸ்காரகள் இருந்தால், எந்த பொலீஸ்காரை, எப்படி “கவர்” பண்ணுவது என்றும் பார்க்க வேண்டும்.

இது சட்டம் என்ற போர்வையில் நடக்கும் சர்வதேச புவிசார் அரசியல் சதுரங்கம்.

இதில் நாம் காய்கள் கூட இல்லை, சதுரங்க மட்டையில் வீழ்ந்து கிடக்கும் தூசிகள்.

இவற்றை உணர்துகொண்டால் இந்த பிரச்சனையில் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை கட்டமைக்க தொடங்கலாம். 

கோஷான்,

நன்றி உங்கள் நீண்ட பதிலுக்கு. எனது கேள்வியை ஒரு பொருட்டாக மதித்து எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் கூறியதிலிருந்து தொடர்கிறேன்.

போர்க்குற்ற விசாரணைகள் என்பதுடன் எமது முயற்சிகள் நின்றுவிடுமா என்றால், நிச்சயமாக அப்படி நின்றுவிடக் கூடாதென்பதே எனது அவா. அதற்காக, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை என்பதல்ல. அவை வேண்டும், அவற்றின் மூலம் எமது நீண்டகால அவலங்களுக்கான அரசியல் ரீதியிலான நிரந்தரத் தீர்வு வேண்டும். இதுதான் எமது இறுதி இலக்காக இருக்கவேண்டும். போர்க்குற்ற விசாரணைகளும், இனக்கொலையாளிகளைத் தண்டிப்பதும் எமது இறுதி இலக்கிற்குச் செல்லும் பாதையின் மைல்கற்களே ஒழிய, அவையே இறுதி இலக்கல்ல.

ஆனால், இவை எல்லாமே இன்று பேசுவதற்கு இலகுவான, நியாயமான கோரிக்கைகளாக இருப்பினும் கூட, இவை எதுவுமே இப்போதுள்ள நிலையில் சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. 

நீங்கள் கூறியதன்படி இன்றிருப்பது நீதியின்பால் நடக்கும் சர்வதேச சக்திகள் அல்ல. தமது நலன் தொடர்பாகவும், பிராந்திய பாதுகாப்புத் தொடர்பாகவும், வர்த்தகப் போட்டி தொடர்பாகவும் இயங்கும் சக்திகள் மட்டும் தான். இவை எமக்குச் சார்பாக நடப்பதற்கு எம்மிடம் இன்று எவையுமில்லை. ஆனால், சிங்களவனிடம் முழுநாடும், அதிகாரமும், பேரம் பேசும் வல்லமையும் இருக்கிறது. அதனால் அவனால் சர்வதேச சக்திகளுடன் பேரம் பேசவோ, வெட்டி ஆடவோ முடிகிறது. இன்று சர்வதேசத்தை தனது சொல்லுக்கும் செயலுக்கும் அடிபணியவைக்கும் பலமும், தந்திரமும் அவனிடம் இருக்கிறது. சிங்களத்தினைத் தாண்டி எம்மீது சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கவைக்க எம்மிடம் இப்போது எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. சர்வதேசம் தானாக எம்மைத் தனது தேவைக்காகப் பாவித்தாலன்றி எமது இருப்பே வெளித்தெரியப்போவதில்லை.

அதேவேளை, எம்மைத் தமது தேவைக்காகப் பாவித்துவிட்டு, அவை ஈடேறியபின் சர்வதேசம் சிங்களத்துடன் மீண்டும் சமரசம் செய்துவிட்டால், எமது நிலை இன்றிருப்பதைக் காட்டிலும் பலவீனமாகிவிடும் என்பதையும் நான் உணர்கிறேன்.

உலகின் அனைத்து முஸ்லீம் நாடுகளின் அரவணைப்பு இருந்தபோதும் கூட இன்றுவரை பாலஸ்த்தீனர்கள் ஒரு ஆக்கிரமிப்பிற்குள்ளேயே ஏன் வாழவேண்டும் என்பதும், ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் ரொஹிங்கியர்கள் மேல் நடத்தப்பட்டது போர்க்குற்றம்தான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தவிர வேறு ஏதும் நடக்கவில்லையென்பதும் சொல்லும் ஒரே விடயம் சர்வதேசம் என்பது நீதியின்பால் நடக்கவில்லை என்பதைத்தான். 

நான் இங்கே நீங்கள் உட்பட பலர் விவாதிக்கும் சுமந்திரனின் நகல் பற்றிப் படிக்கவில்லை. எனது தேசியத்தலைவர் தொடர்பாகவும், , எமது தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் சுமந்திரனின் நிலைப்பட்டினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அது அவரது நிலைப்பாடு, அதைச் சொல்ல அவருக்கு இருக்கும் சுதந்திரம்பற்றி நான் கேள்விகேட்க முடியாது. அதேவேளை, கஜனும் விக்கி ஐய்யாவும் சுமந்திரனுடன் சேர்ந்து பயணிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நாம் ஒற்றுமையாகச் செயற்படுவது எவருக்கும் தேவையில்லாமல் இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட எமக்கு அது நிச்சயம் தேவை. அதை, இவர்கள் இப்போதாவது உணரவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஒருமித்துக் குரல்கொடுக்கும் அரிய சந்தர்ப்பம் ஒன்று இப்போது கிடைத்திருக்கிறது. இதனை சுயகெளரவத்திற்காக எவரும் போட்டுடைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் எமக்கு ஒரு விடிவைப் பெற்றுத்தருமா அல்லது அதன் இலக்கு நோக்கி நகர்த்துமா என்றால் எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதாவது செய்தாகவேண்டும். எம்மக்களின் இழப்புக்களும் அவலங்களும் உலகின் கண்களில் இருந்து முற்றாக மறைத்து அகற்றப்படுமுன்னர் அவற்றுக்கான நீதி கிடைக்க நாம் உழைக்கவேண்டும். அதன் முதற்படியாக எமக்குள் ஒற்றுமையும், ஒருமித்த வேலைத் திட்டமும் இருப்பது அவசியம். இதனை சுமந்திரனும், கஜனும் விக்கி ஐய்யாவும் உணரவேண்டும் என்று விரும்புகிறேன். 

இவர்களைவிட்டால் எமக்கு இப்போது வேறு வழிகளும் இல்லை. பார்க்கலாம்.

  • Replies 78
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

1. இலங்கையரசை தீர்வுக்கு இணங்க வைக்கும் உறுதியான துருப்புச் சீட்டு யாரிடமும் இல்லை. சீனாவிடமிருந்து பிரிக்க அமெரிக்கா ஏதாவது செய்யும் என்றும் இதன் பக்க விளைவாக தமிழருக்கு ஏதாவது கிடைக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து பைடன் நிர்வாகப் பேச்சுக்களை அன்றாடம் பார்க்கிறேன். எனக்கு விளங்குவது அடுத்த 2 வருடங்கள் பொருளாதாரத்தை மீள நிமிர்த்தத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இதற்கு சீனாவுடன் ஒட்டிப் போகா விட்டாலும் win-win என்ற போக்குத் தான் பைடனின் அதிகாரிகளால் எடுக்கப் படும். 

இது பைடன் வரும்போதே எதிர்பார்க்கப்பட்டதுதான். அமெரிக்காவினைத் தூக்கி நிறுத்துவதே அவரின் தலையாய பொறுப்பாக இருக்கப்போகிறது. இதன்பிறகே ஏனைய விடயங்கள் எல்லாம். இதில் இந்துசமுத்திரத்தில் இலங்கையினை பணியவைத்து சீனாவை அகற்றுவதென்பது நாம் நினைக்கும் சில கால எல்லைக்குள் நடக்கப்போவதில்லை என்பதையும் உணர்கிறேன். அப்படி நடந்தாலும், அதற்குள் எமது நலன்கள் காக்கப்படுமா அல்லது அவையே பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டுவிடுமா என்கிற நியாயமான கவலையும் இருக்கிறது.

 

6 hours ago, Justin said:

சர்வதேச விசாரணைகளின் பயன் என்ன?பாகிஸ்தானின் ஷியாவுல் ஹக் காஷ்மீர் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டது போல "பானையை கணக்கான கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும்" என்ற கருத்தே எமக்கும் பொருந்தும். இலங்கையை விலகிச் செல்ல அனுமதிக்காமல் ஒரு பொறிமுறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதே சாத்தியமான வழி. இதை ICC, ICJ இல் செய்ய முடியுமா என்பது எனக்குத் தெரியாது. தெரிந்த, இந்தப் பொறிமுறைகளை முன்மொழியும் கஜேந்திரகுமார் தான் சொல்ல வேண்டும். மனித உரிமைப் பேரவையில் இது இயலும் என்பது பொதுவான கருத்து.

எமது அவலங்கள் பற்றிய தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெறுவது அவசியம். கஜனின் நீங்கள் கூறிய அமைப்புக்கள் அல்லது பொறிமுறைகள் பற்றி நான் அறியவில்லை. ஆனால், அவ்வாறா ஒன்றின் மூலம் எமது கோரிக்கைகள் முன்னோக்கி தள்ளப்படலாம் என்றால் மகிழ்ச்சியே.

 

6 hours ago, Justin said:

தீர்வுக்கு என்ன வழி? சமாந்தரமான வழி தான். இலங்கையில் இருப்போர் தான் முன்மொழிவுகளைத் தயாரிக்க வேண்டும் (தயாரிக்கிறார்கள் என அறிகிறேன்). அது தமிழ் தரப்பின் யாராக இருந்தாலும் தயாரித்து பகிரங்கப் படுத்த வேண்டும் என்பது தான் எனது கருத்து. இந்தப் பகிரங்கப் படுத்தல் சிங்கள மக்களையும் சென்றடையக் கூடியவாறு இருக்க வேண்டும். ஏன்? சிங்கள அரசியல் வாதிகள் சொல்வது போல தமிழர்களுக்கான தீர்வு சிங்களவர்களுக்கு ஆப்பு அல்ல என்பது சொல்லப் பட வேண்டும். இது என் அபிப்பிராயம். இப்படிச் சிங்கள மக்களுக்குச் சொன்னால் அவர்கள் தேர்தல் மூலம் ஆணை வழங்குவார்களா? இது மில்லியன் டொலர் கேள்வி. எனக்கும் பதில் தெரியாது.  

இது ஒரு தேவையான விடயம். ஆனால், முன்னெப்போதைக் காட்டிலும் சிங்களச் சமூகம் உருவேற்றப்பட்டு, இனவாத மயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சமூகத்தை இதே நிலையில் வைத்திருக்கவே இன்றைய ஆளும் சக்திகள் விரும்புகிறார்கள். அரச நிர்வாகம், ராணுவம், சமூக அமைப்புக்கள் தொடங்கி சாதாரண சிங்கள மக்கள் வரை அனைவருமே சிங்கள பெளத்த இனவாத அலையினுள் மூழ்கியிருக்கிறார்கள். இப்படியான நிலையில் தமிழருக்கான எந்தவிதத் தீர்வுபற்றிய புரிதல்களும் அவர்களுக்குத் தேவையானதாக இருக்கப்போவதில்லையென்பதுடன், நிச்சயமாக அவற்றுக்கெதிராக மிக இலகுவாக இம்மக்களை இன்றைய ஆளும் வர்க்கம் திருப்பிவிடும். ஆனால், சாதாரண சிங்களவர்களுக்கு எமது அவலங்கள் தொடர்பாகவும், நாம் கேட்கும் ஒரு நாட்டிற்குள் கெளரவமாக சம அந்தஸ்த்துடன் வாழ்தலின் அவசியம் பற்றியும் நிச்சயம் புரியவைக்கவேண்டும். அதனை யார் செய்வது, எப்படிச் செய்வது என்பது ஒரு பிரச்சினைதான். அதேவேளை, தமிழரின் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தித்தான் அவர்களது அவலங்கள் சிங்களவர்களுக்குப் புரியவைக்கப்படவேண்டும் என்றால், நிச்சயம் அது எமக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தரப்போவதுமில்லை, சிங்களவர்கள் தாம் செய்ததும் செய்வதும் தவறென்பதையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

kajenthirakumar.jpeg?resize=678%2C381&ss
 

“அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இத்தகைய விடயங்களை பிடிகொடுக்காமல் நாசூக்காக செய்வதற்கு பழக்கப்பட்டவராக சுமந்திரன் இருந்தாலும் அவரின், இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயல்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்துவருகின்றார்.

வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் என்னோடும் எமது கட்சியின் செயலாளரோடும் கதைத்திருந்தார். அப்போது, ஜெனிவா அமர்வில் இந்த முறை இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஜரை தயாரித்துள்ளது. இதனை ஒரு பொது மகஜராக, ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஜீவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஆவணமாக வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதன் பிரதியொன்றை வழங்கினார்.

இதன் பின்னர் எம்முடைய அமைப்பு எங்கள் சட்ட ஆலோசகர்களிடமும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் செயலாற்றுபவர்களுடனும் பேசியதன் பிற்பாடு நாங்கள் அந்த வரைபை நிராகரிக்கும் நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 7 பக்கங்கள் கொண்டதாக அந்த அறிக்கை இருக்கின்றது. அதில், பெரும்பாலானவை கூட்டமைப்பு முன்னர் எடுத்த விடயங்களை நியாயப்படுத்துகின்றன.

மேலும், இப்படியெல்லாம் செய்தும்கூட தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அதை முழுமையாக நாம் தொகுத்துப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம். ஆகவே, அந்தப் பிண்ணணியில் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. இந்த நிலைமை சுமந்திரனுக்கே நன்றாகத் தெரியும்” என்றார்.

https://dailysri.com/2020/12/22/302768/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் என்னோடும் எமது கட்சியின் செயலாளரோடும் கதைத்திருந்தார். அப்போது, ஜெனிவா அமர்வில் இந்த முறை இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஜரை தயாரித்துள்ளது. இதனை ஒரு பொது மகஜராக, ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஜீவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஆவணமாக வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதன் பிரதியொன்றை வழங்கினார்.

அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அதை முழுமையாக நாம் தொகுத்துப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம். ஆகவே, அந்தப் பிண்ணணியில் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. இந்த நிலைமை சுமந்திரனுக்கே நன்றாகத் தெரியும்” என்றார்.

https://dailysri.com/2020/12/22/302768/

சுமந்திரன் தந்த ஆவணத்தில்:

1. ஆகவே இனி காலஅவகாசம் கொடுக்க கூடாது.

2. உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் வழங்கப்பட வேண்டும்.

என்ற மாற்றங்களை செய்து கையொப்பமும் போட்டு, அந்த ஆவணத்தை சுமந்திரனிடம் ஏன் இவர் கொடுக்கவில்லை?

இன்றுவரை கஜேந்திரகுமார் ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றுக்கு இந்த பொறுப்பு கூறலை பாரப்படுத்துமாறு ஆவணம் ஒன்றை தயாரித்து அனைவரையும் ஆதரவு தருமாறு கேட்கவில்லை?

ஏனென்றால் அப்படியான ஆவணத்தை அவரால் தயாரிக்கவும் முடியாது, அப்படி தயாரித்தாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் எதுவும் சிறிலங்காவை விசாரிக்கும் உரிமையை கொண்டிராத காரணத்தால் ஆவணம் குப்பை கூடைக்குள் போய்விடும். இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நன்றாக தெரியும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.