Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரையறிவுக்காய் கிளிநொச்சியில் பாலுமகேந்திரா நூலகம்.! - சி. மௌனகுரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரையறிவுக்காய் கிளிநொச்சியில் பாலுமகேந்திரா நூலகம்.!

Screenshot-2020-12-31-22-58-35-341-org-m

ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஓர் அழைப்பும் விடுத்தனர்

“நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்”

சரி என ஒப்புக்கொண்டேன்

பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் அண்ணன் எனவே அழைப்போம்.

எனது 10 வயதிலிருந்து 15 வருடங்கள் தொடர்ச்சியாக அவருடனான நெருக்க உறவு இருந்தது அவர் தந்தையார் பாலநாதன் புகழ் பெற்ற கணித ஆசிரியர் தந்தையின் பெயரைத் தன்னுடன் இணைத்து பாலு மகேந்திரா என பெயர் வைத்துகொண்டார் மகேந்திரன்.

பின்னாளில் இந்த பாலுமகேந்திரா எனும் பெயரே நிலைத்து விட்டது அவரது உறவினர்கள் இன்றும் என் அருகில் வசிக்கிறார்கள் மகேந்திரன் அண்ணா என்றே சிறு வயதில் அவரை நான் அழைப்பேன் அடிக்கடி மகேந்திர அண்ணர் வீடு செல்வேன்

அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிக்க வயது அது. அவர் தனது தோற்றத்தாலும், பேச்சாலும், செயற்பாடுகளாலும் எம்மை மிகவும் கவர்ந்தார்.

தரமான கலை இலக்கிய ஈடுபாடு கொண்டவர் அவர். அவர் சிந்தனைகள் எம்மீதும் தாக்கம் செலுத்தின.அவரோடு உரையாடிய நாட்கள், அவரது கலைத் துறை ஆசைகள் , அவரது கலைப் பெரு வெறிகலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவரது அதீத வெறிக்குணம் எமது சிறு வயதில் அந்த வெறியினை எமக்கும் ஊட்டியமை , அவர் இளவயது மனப்போக்கு அவரது குசும்புத்தனம், அவரது ஊர் அனுபவங்கள் அனைத்தையும் சிறுவனாகவும் வாலிபனாகவும் அருகிலிருந்து பார்த்த அந்த ஞாபகங்கள் வந்தன.

இளசுகள் ஆகிய இந்த இளம் தலை முறையினர் ஆர்வம் காரணமாக ஒரு சிறு வீட்டில் ஓர் நூல் நிலையம் ஆரம்பிக்கிறார்கள் என எண்ணிய ஒப்புதல் தந்த எனக்கு அக்கலையகம் பற்றி அதன் தலைவர் ரம்மியா காட்சிகளுடன் நடத்திய அழகான அறிமுக உரையும் அதனூடாக வெளிப்பட்ட அக்கலையகத்தின் அமைப்பும் அங்கிருக்கும் நூல்கள் ,காணொளிகள் பற்றிய தகவல்களும் பெரு வியப்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தன

27.12 2020 இந்நூலகத் திறப்பு விழா நடந்தேறியது

பலர் இணைய மூலம் இணைந்து கொண்டனர்.

Screenshot-2020-12-31-23-21-22-242-org-m

உலகப்பிரசித்தி பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனராகிய மஜீத் மஜீதி அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்

கனடா, ஐக்கியராச்சியம், இந்தியா, இலங்கை இருந்து பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அந்நூல் நிலையத்தில் 10 000 க்கு மேற்பட்ட திரைப்பட இறுவட்டுகளும் பாலேந்திரா சேகரிப்பில் இருந்து அவர்கள் குடும்பத்தினர் கொடுத்த 2000 இறு வட்டுகளுமாக மொத்தம் 12000 க்கு மேற்பட்ட இறுவட்டுகள் இருக்கின்றன என அறிகிறேன்

அத்தோடு பாலுமகேந்திரா குடும்பம் அளித்த அவர் வீட்டில் இருந்த 750 சினிமா சம்பந்தமான நூல்களும் ஈழத்து எழுத்தாளர்களின் 700க்கு மேற்பட்ட நூல்களும் அங்கு இருக்கின்றன என ரம்மியா கூறினார்

இப்படி அதிகளவு இறுவட்டுகள் கொண்ட நூல் நிலையம் இலங்கையில் எங்கும் இல்லையென நினைக்கிறேன் ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.

அவர்கள் செயல் திட்டங்கள் அவர்களின் அதீத ஆசையை பெரும் கனவுகளைக் காட்டின. பல வகைகளில் இது எனக்கு ஓர் முக்கிய செயற்பாடக முன்னெடுப்பாக எனக்குப்பட்டது

balu.jpg

அவையாவன

1. மட்டக்களப்பிலே ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பாலு மகேந்திராவுக்கு, வன்னியில் கிளிநொச்சி எனும் கிராம நகரத்தில் ஓர் நினைவாலயமும் நூல் நிலையமும் அமைக்கப்படுவது

முக்கியமாக இக்காலகட்டச் சூழலில் வரவேற்கப்பட வேண்டிய மிகவும் ஓர் முக்கிய அம்சம்

2. இதனை ஒழுங்கு செய்பவர்கள் பல்கலைக்கழகத்தில் ஊடக வியல் . திரைப்பட அறிமுகம் பயின்று வெளியேறிவர்கள் அதிலும் மிகவும் இளம் தலை முறையினர் அதிலும் முக்கியமாகப் பெண்கள்

3. இந்த ஆரம்பவிழாவுக்கு அவர்கள் ஈரானிய திரைப்பட நெறியாளர் மஜீத் மஜீதி , சிங்கள திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதான, தமிழ் திரைப்பட பட நெறியாளர் பாரதிராஜா போன்றோரையும்

4. உள்நாட்டின் திரைப்படத் துறையில் ஈடுபடும் ஞானதாஸ், சோமித்ரன் விரிவுரையாளார் கலாநிதி ரகுராம் போன்றோரையும்

அப்துல் ஹமீட், தாஸீசியஸ், தம்பிஐயா தேவதாஸ் போன்றோரையும்

இன்னும் சிலரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தும் இருந்தனர். இது அவர்களின் இன மொழி நாடு கடந்த மிகப் பரந்த மனப்பான்மைக்கு அடையாளம்

5. நேற்று இணைய கருத்தரங்கில் இணைய வந்திருந்தோரிடையே

80 வயதை அண்மிக்கும் முது வயதுக் கலைஞர்களும்,

50 வயதினரான நடுவயதுக் கலைஞர்களும்

20 வயதினரான இளவயதுக் கலைஞர்களும் காணப்பட்டனர்.

இந்த தலைமுறை சங்கமம் இக்காலகட்டத்தில் மிக மிக முக்கியமானது.

முது வயதினரிடமிருந்தும் நடு வயதினரிடமிருந்தும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இதனை ஒழுங்கு செய்த இளம் தலை முறையினர் மேலே பயணம் செய்ய ஆயத்தமாக இருந்தனர் என்பதனை இக் காலசங்கமம் காட்டியது

இவையாவற்றையும் கூறி பாலு மகேந்திராவின் இளவயது அனுபவங்களும், பாலிய வயது அனுபவங்களும் எவ்வாறு அவர் படங்களில் வெளிப்பட்டது என ஓரிரு உதரணம் காட்டினேன்

கலைஞனை என்றும் இயக்குவது அவனது இந்த ஆழ்மன அனுபவங்களே பாலு மகேந்திராவின் தந்தையார் பாலநாதன் ஒர் கல் வீடு கட்ட எடுத்த சிரமம் துயரம் துன்பம் அலைச்சல் என்பன இளம் பாலு மகேந்திராவின் அடி மனதில் ஆழப்பதிந்த ஒன்று அந்த ஆழ்மன அனுபவமே அவரது வீடு திரைப்படமானது

எமது இருவரின் ஊரான அமிர்தகளி அங்கிருக்கும் மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் அதனது குளம் என்பன பிரசித்தமானவை அந்த மாமாங்கபிள்ளையார் மாமாங்கக் குளத்தில் ஒருவர் மூழ்கி இறந்து விட்டார்,,அவரது உடல் வெளியே கிடத்தப்பட்டு இருந்தது அதனை பார்க்க ஊரே கூடியது

மகேந்திர அண்ணரும் அதனை காண ஓடோடி வந்தார் அந்த உடலும் சூழலும் ஊரின் அழுகையும் அவர் மனதில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவ்வுடலை அவரும் நானும் சென்று அருகே இருந்து பார்த்தோம் அந்த சோகம் எம்மைக் கௌவியது

“எத்தனை கனவுகளுடன் இவர் இருந்திருப்பார்

என அவர் கவலையுடன் கேட்டமையும் ஞாபகம் வருகிறது அந்த அனுபவமும் மகேந்திர அண்ணரின் பாடசாலைப் பருவச் சேட்டைகளும் அழியாத கோலம் எனும் திரைப்படத்தில் அழகாக வெளிப்பட்டது

அவரது இளம் வாழ்வில் அவரது வாலிப வாழ்வில் குறுக்கிட்ட பெண்கள் அதன் காரணமாக எழுந்த ஆண் பெண் உறவுகள் – முரண் பாடுகள் என்பன அவரது பல படங்களில் வெளிப்பட்டன அவற்றை அவரது படங்களோடு இணைத்துப் பார்ப்பது அவரைப் புரிந்துகொள்ள உதவும்

அவர் மிக மென்மையானவ்ர்

மெல்லுணர்வுகள் கொண்டவர்

நேர்மையானவர்

.தன்னை எப்போதும் விமர்சித்துகொண்டு வாழ்ந்தவர்

சந்தியா ராகத்தில் சொக்கலிங்க பாகவதரை வாகன நெருக்கடி சூழலில் நடக்கவைத்து வருத்தியதையும் அதனால் தன் மனம் மிக வருந்தியதையும் அவர் கூறியுள்ளார்

தன்னையே விமர்சிக்கும் குணம் அது

அவர் ஓர் இலக்கிய ஆர்வலர்,

சிறுகதை ஆசிரியர்,

இலக்கியப்பத்திரிகை ஆசிரியர்,

கவிஞர்

,திரைப்பட எழுத்தாளர்

படப்பிடிப்பாளார்

சிறந்த வாசகர்.

சிந்தனையாளர்

என பல திறன்கள் கொண்டவர் இப்பல் திறன் ஆற்றலே அவரை அவர் துறையில் பலரும் வியக்கும் மனிதராக்கியது தனது வேகத்திற்கு இலங்கையில் இடம் இல்லை எனவும் திரைப்படத் துறையில் அதிகம் அறிய வேண்டும் எனவும் எண்ணிய அவர் இலங்கை விட்டகன்றார், வெளி நாட்டில் பட்டம் பெற்றார், பூனா திரைபடக் கல்லூரியில் முறையாக திரைப்படம் பயின்றார் அத் துறையில் தொழிநுட்பத் தேர்ச்சி பெற்ற பின்னரேயே அத் துறையில் இறங்கினார்

இந்த திறமைகள், அர்ப்பணிப்பு ,தேடல், ஈடுபாடு அவரிடமிருந்து இன்று சினிமா செய்யப் புறப்படும் இளம்தலைமுறை கற்க வேண்டியவை அவர் ஒரு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய படம் ஒரு மலையாளப்படம் அதனை செய்தவர் செம்மீன் புகழ் ராமுகரியத்.

balumahendra.jpg

அவரின் நெல்லு எனும் படம் வெளி வந்தது 1972 ஆம் ஆண்டில் அப்போது பாலு மகேந்திராவுக்கு வயது 31. அவருக்கு தெலுங்கு சங்கராபரணம் பெரும் புகழ் தந்தது. அவர் முதல் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப் படம் முள்ளும் மலரும் . அதில் நாயகன் ரஜனிகாந்த் அதன் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன, இயற்கை ஒளியையே அதில் அவர் அதிகம் பாவித்தார். இயற்கையை விட வேறு என்ன ஒளி இருக்கிறது என்பார் இது வந்தது 1977 இல் அப்போது பாலு மகேந்திராவுக்கு வயது 38

அவரது அழியாத கோலங்கள் திரைப்படம் 1978 இல் வருகிறது அப்போது பாலு மகேந்திராவுக்கு வயது 39 அவரது முதிர் சிந்தனைகளை பிரதிபலிக்கும்

வீடு ( 1988)

சந்தியா ராகம் ( 1990)

போன்ற படங்கள் பின்னால் வருகின்றன

தன் காலத்துக்குள் பல மாற்றங்களைக் கண்டவர் அவர்

தமிழர் சமூக அமைப்பில்

அரசியலில் போராட்டங்களில்

பொருளாதாரம் மாறியதில்

தொழில் நுட்ப முன்னேற்றத்தில்

எல்லாம் தீவிர மாற்றங்களைக்கண்டார் அவற்றைப் புரிந்து கொண்டார் உள் வாங்கிக் கொண்டார் இவற்றையெல்லம் உள்வாங்கி வளர்ந்த அவர் கடைசியாக நடித்த படம் தலைமுறைகள்

1_16a0810188e.1268495_949779552_16a08101

தாத்தா பேரன் உறவுக் கதை அது

அழியாத கோலங்களில் விடலை பெடியனாக உலகை பார்த்த அவர் தலைமுறைகளில் 70 வயது கடந்த தாத்தாவாக உலகைப்பார்க்கிறார்

இப்பார்வைகளை அவருக்கு அவரது உலக அனுபவமும் நூல் வாசிப்பும் அளித்துள்ளன ஆரம்பத்தில் இலங்கைச் சினிமா உலகும் பின்னர் தென்னிந்திய திரைப்பட உலகும் கவனிக்காது விடப்பட்ட இவரே பின்னால் கொண்டாடவும் பட்டார்

அத்தோடு திரைப்படத் துறையில்

4 தேசிய விருதும்

3 மாநில விருதும்

2 பிலிம் பேர் விருதும்

2 நந்தி விருதும்

பெற்றார்

அவர் ஓர் தலை முறையையும் உருவாக்கியுள்ளார்

இயக்குனர் பாலா , ஓளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் அதன் பின்னால் அவரின் வழியில் இன்று பலர் உருவாகியுள்ளார்கள்

மகேந்திர அண்ணரை நான் நீண்ட நாட்களுக்குபிறகு 1998 இல் சென்னையில் சந்திக்கிறேன், மிக மிக நீண்ட நாட்களின் பின் ஏறத்தாள 35 வருடங்களின் பின் அது ஓர் அற்புதமான உணர்ச்சிகரமான சந்திப்பு

சில நிமிட நேரம் அவரது அணைப்புக்குள் நான் உட்பட்டேன்.

பழைய நினைவுகளை மீட்டினோம்

ஊரின் ஓவ்வொரு இடத்தையும் கேட்டார்

ஊரின் புற்கள் இலைகள் நதிகள் மரங்களை நுணுக்கம் நுணுக்கமாகக் கேட்டார்

இந்தப் பின்னணியில் அவரது பழைய நண்பர்களை அவர்களின் இன்றைய வாழ் நிலைமைகளை இன்னும் நுணுக்கம் நுணுக்குமாக வினவினார்

மிகத் தேர்ந்த அனுபவம் மிக்க கமராக் கண்ணின் கேள்விகள் அவை அவர் எல்லாவற்றையும் அந்த கமராக் கண் கொண்டே பார்த்தார் அவரது படங்களில் இயற்கையும் மனித உணர்வுகளும் இடம் பெறுவதன் காரணம் எனக்கு நன்கு புரியலாயிற்று

அவரிடமிருந்து இளம் தலைமுறை கற்க வேண்டியவை இவை

1. சுய கற்றல் ( இது அவரது 5 வயது தொடக்கம் 15 வரை நடந்தது)

2. தேடிக்கற்றல் ( இது அவரது 20 வயது தொடக்கம் 25 வரை நடந்தது)

3. முறையாகக் கற்றல் ( இது அவரது 25 வயது தொடக்கம் 30 வரை நடந்தது)

4. தனது வாழ்வனுபவங்களைபடமாக்குதல் ( இது அவரது 30 வயது தொடக்கம் 60 வயது வரை நடந்தது

5. வாழ்வனுபவம், அறிவு மூலம் ஓர் ஞானியாக பரிணமித்தல்( இது அவரது 70 வயதுக்குபிறகு நடந்தது)

ஒரு கலையில் ஈடுபடும் ஓர் கலைஞனின் அதி உயர் நிலை அதுவாகவே மாறி ஒர் பற்றற்ற நிலை எய்துதல் என்பர் அறிஞர்

பாலு மகேந்திரா அண்ணரை நினைக்கையில் இவ்வாக்கியமே ஞாபகம் வருகிறது வாழும் வரை கற்க வேண்டும் என்ற படிப்பினை அவரிடமிருந்து இத்தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்

படிப்பு, கற்றல் என்பன இந்த இளம் தலை முறை வைத்திருக்கும் வெற்றுப் பானையை மிகவும் நிறைக்கும் அதாவது அவர்கள் சட்டி நிறையும் சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி.

14-balu-mahendra533-600.jpg

இளம் தலை முறைஅதி உயர் தொழிநுட்பம் எனும் தங்க அகப்பை வைத்திருந்தாலும் தங்க சட்டி வைத்திருந்தாலும் சட்டியில் எதுவும் இல்லாது விடின் எதனைப் பரிமாறுவார்கள்?

நிறைந்த பல் துறை வாசிப்பாலும்

சிந்தனையாலும்

வாழ்பனுவங்களாலும்

விமர்சன சிந்தனையாலும்

இளம் தலைமுறை ஆர்வலர்களின் சட்டி நிறைவதாக

-நாடத்துறைப் பேராசிரியர் சி. மௌனகுரு

நன்றி- முகநூல்

https://vanakkamlondon.com/stories/2020/12/96741/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.