Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளியேற்றப்பட்ட தமிழருக்கு அசௌகரியம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறோம்: ஜெனீவாவில் மகிந்த.

Featured Replies

லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்படோருக்கு அசெளகரியம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குழப்பகரமான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவிக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலளார்களின் 93ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்:

பொருளாதார நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி ஆகியவற்றின் பொது கொள்கையொன்றை ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். 14 வயதிற்கு கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்வி, அத்தோடு அரசாங்க பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கைத்தொழில் தொடர்பான கல்வியை இலவசமாக கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

நாட்டில் சகல மக்களுக்கும் இலவசமாக வைத்திய உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஏழ்மையான மக்களுக்கு நிவாரண அடிப்படையில் நுகர்வுப் பொருட்கள் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புடைவை கைத்தொழிலை மாற்றியுள்ளோம். மனித அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்பட்டதினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வெளிப்பாட்டில் இலங்கைக்கு 93ஆவது இடம் கிடைத்துள்ளது. கிராம மட்டத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக கடந்த 10 வருடங்களாக தூரநோக்கோடு செயற்பட்டு வருகின்றோம். எதிர்காலத்தில் அந்த நோக்கோடு கொண்டுள்ள எமது கொள்கையை முன்னெடுத்துச் செல்வோம். பிரச்சினைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மனிதர்களுக்கிடையில் சில குறைப்பாடுகள் காணப்படும். அந்த குறைப்பாடுகளை கொள்கை அடிப்படையில் மக்கள் முன்கொண்டு சென்று தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற பயங்கரவாத செயற்பாடுகள் எங்கள் சமூக அபிவிருத்தியையும் சீர்குலைத்துக்கொண்டு இருக்கின்றது. நாங்கள் பல அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுத்து பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

யதார்த்த உலகத்தில் பயங்கரவாதம் இல்லாத இடமில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் பயங்கரவாதத்திற்கு தலைகுனிய நாம் எப்போதும் தயார் இல்லை. நாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டில் நீங்கள் இருந்தால் உங்களுடைய அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு முன் கீழ் பணிவதற்கு விரும்பாது.

-Tamilwin-

Edited by யாழ்வினோ

ஆகா தமிழனை அழிக்க 10 வருட தூரநோக்கோடு செயல்படுறன் என சொல்லுறான் அது சரி துர நோக்குக்கு அர்த்தம் தெரியுமா இந்த மோட்டு சிங்களவனுகு

  • தொடங்கியவர்

தழிழர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏதாவது சர்ச்சை எழுந்தால் அதை சமாளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் டக்கிளசையும் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்.

erikwithdonkeysia1.gif

Edited by யாழ்வினோ

தெருவோரத்தில் குரங்கு வித்தை காட்டுபவன் அட்ரா ராமா, அட்ரா ராமா என்று சொல்லச் சொல்ல அந்த குரங்கு மாறி மாறி கரணம் அடிப்பது போல, கரணம் அடிக்க வேண்டிய நிலைக்கு சிறீலங்கா அரசு வந்து விட்டது.

முதல் கரணம்: பிரதமர் ரத்னசிரி நாடுகடத்தலுக்காக தமிழரிடம் மன்னிப்பு கேட்டது.

இரண்டாம் கரணம்: சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயின் இனவெறி அறிக்கை - "மன்னிப்பு கேட்டது பிரதமர் ரத்னசிரியின் தனிப்பட்ட கருத்து. அது அரசின் கருத்தல்ல. பாதுகாப்பு படையினர் தமிழர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது சரி தான்"

மூன்றாம் கரணம்: அமைச்சர் பிரியதர்சன யாப்பாவின் அறிக்கை - "பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை. பிரதமர் கவலை மட்டுமே தெரிவித்தார். பிரதமர் கருத்தே அரசின் கருத்து. மேலும் எதிர்காலத்திலும் பாதுகாப்பு படைகள் தேவையேற்பட்டால் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்".

நான்காம் கரணம்: ஜெனீவாவில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அறிக்கை - "தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்காக வருந்துகிறோம்".

கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். இப்படியே தப்பும் தவறுமாக கரணம் அடித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசுக்கும் மரணம் நிச்சயம் என்பதை அரசியல் நுணுக்கம் அறிந்தவர் யாவரும் அறிவர்.

NB: As Sri Lankan president Mr. Mahinda Rajapaksa claims, eviction of Tamils from colombo lodges cannot be considered as a mere event in which only a 300 Tamils out of 20000 thousand Tamil lodge dwellers were forcibly evicted. We have enough reasons to believe that the eviction drama of Sri Lankan government was staged as an experimental operation with an intention to carry out a fully fledged ethnic clensing of Tamils in and around Colombo in near future. .Provided, there were no strong oppositions and condemnations from international community for this fascist activity, there is a good chance Sri Lankan government would have gone ahead with its well planned subsequent phases of the operation of ethnic clensing of Tamils

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 16 8:25:31 EEST 2007

தமிழர் வெளியேற்றம் குறித்து அரசு வருந்துகிறது; ஜெனிவா மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவதாகக் கூறுவது தவறு என்கிறார்

தலைநகர் கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட் டமை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசின் வருத்தத்தை ஜெனிவாவில் வெளியிட்டிருக் கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தொழி லாளர் சம்மேளனத்தின் மாநாட்டு அமர்வில் நேற்று சிறப்புரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "எங்கள் அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அப்பாவி மக்களுக்கு அதனால் அசௌகரியம் ஏதும் ஏற்பட்டி ருக்குமானால் அதற்காக அதிகம் வருத்தமடைகிறோம்' என்று தெரிவித்திருக்கிறார்.

உலகத் தொழிலாளர் சம்மேளனத்தின் 96ஆவது வருடாந்த அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உரையாற்றினார். சுவிற்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இந்த அமர்வு நடைபெற்றது.

ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்ததாவது:

கவனமாக அபிவிருத்தி செய்யப்பட்ட எமது சமூக அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்களில் ஒன்று பயங்கரவாத அச்சுறுத்தல். இது இன்று உலகத்தின் கவ னத்தையும் ஈர்த்து வருகின்றது.

இரக்கமற்ற பயங்கரவாதக் குழுவான விடு தலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து எமக்கு சவால் விடுத்துவருகின்றது. வருடக்கணக் கில் எம்மால் கட்டி எழுப்பப்பட்ட பிரமா ணங்களை விட்டுக்கொடுக்குமாறு எம்மை நிர்ப்பந்திக்கக் கங்கணம் கட்டியுள்ளது.

சமகால உலகில்பயங்கரவாதத்துக்கு இடமில்லை. ஓர் அரசாங்கம் என்ற அடிப் படையில், எத்தகைய இன்னல்களின் மத் தியிலும், பயங்கரவாதத்துக்கு மண்டியிட நாம் தயாரில்லை.

எங்கள் நிலைப்பாட்டில் உங்களின் எந்த ஓர் அரசும் தன்னைப் பயங்கரவாதத்துக்கு ஒப்படைத்திருக்கிறதா?

எது எப்படி இருப்பினும், நாம் உறுதிப் பாடாக இருக்கிறோம். எங்களுக்குரியது போன்ற ஒரு ஜனநாயக அமைப்பில், அர சியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளி யிடலாம். பேச்சு வார்த்தைகள், பேச்சு வார்த்தை, இணக்கப்பாடு ஆகியவற்றின் வாயிலாக அரசியல் இலட்சியங்களை உணர்ந்துகொள்ளலாம்.

மிதவாதத்துக்கு இடமில்லை. வன் முறைக்கு கிஞ்சித்தும் இடம் கிடயாது.

13 ஜனநாயக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து எனது அரசாங்கம் ஒரு கூட்டமைப்பை உருவாக்கக் கூடிய நிலை யில் இருந்தது. நாட்டின் மேம்பாட்டுக்காக, இணக்கப்பாட்டோடு செயற்படும் பொருட்டே இது அமைக்கப்பட்டது.

நாங்கள் பல்லின மக்களைக் கொண்ட ஓர் அரசுக்குரியவர்கள். இத்தகைய ஓர் அர சும் சிறுபான்மைக் குழுக்களை ஒரு போதும் பாரபட்சமாக நடத்தாது, நடத்தப்போவது மில்லை.

இனச்சுத்திகரிப்பில் ஈடுபடவில்லை

நாங்கள் இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருக் கிறோம் என்ற தவாறான பிரசாரமும், பிழை யான புரிந்துணர்வும் இன்று உள்ளன. இது முற்றிலும் தவறானது.

1980களின் ஆரம்பத்திலிருந்தே பெரும் இனச்சுத்திகரிப்பை நாடியிருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே என்பதைக் கடந்த ஓகஸ்டில் இங்கு நடந்த கூட்டத் தில் நான் நினைவு படுத்தியிருந்தேன். அவர்கள் சிங்களவர்களையும், முஸ்லிம்களை யும் வடக்கிலிருந்து வெளியேற்றினார்கள்.

பயங்கரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு தாங்கள் எதனை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது நன் றாகத் தெரியும் இத்தகைய பயங்கரவாத அமைப்புகளை இலகுவாக அடக்கிவிட முடியாது விடுதலைப்புலிகளை அடக்கு வதில் நமது ஆயுதப்படையினரும் பொலி ஸாரும் விசேட திடத்துடன் செயற்பட வேண்டியுள்ளனர்.

எமது படையினர் மனித உரிமைகளை மதிப்பவர்கள்

உலகில் மிகவும் உயர்ந்த ஒழுக்க முள்ள தரப்புகளில் நமது ஆயுதப் படைகளும், பொலிஸாரும் அடங்குவர் என்பதை நான் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகிறேன். மனித உரிமைகளை அவர்கள் பெரியள வில் மதிக்கிறார்கள். இதில் அவர்கள் தவறு விட்டால் சரியான விசாரணைகள் நடத் தப்பட்டு தவறைச் சீர் செய்யும் நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆனால், இலங்கைப் படைகளுக்கும் பொலிஸாருக்கும் எதிராக பெரியளவில் தவ றான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன என்பதையும், உலகு அதை உண்மை எனக் கருத்தில் எடுக்கின்றது என்பதையும் குறிப்பிடுவதில் நான் கவலையடைகிறேன்.

அண்மையில் நாம் கொழும்பில் சில விடு திகளைத் துப்புரவு செய்தபோது பெரியள வில் கவலை தெரிவிக்கப்பட்டது. சராசரி யாக இருபதாயிரம் பேர் இந்த விடுதி களைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், ஆக 302 பேரே வெளியேற்றப்படுவதற்கு உள்ளானார்கள். உண்மையில் அவர்களில் பலர் தாமாகவே விரும்பி வெளியேறினர்.

கொழும்பில் வசிப்போரில் அறுபது சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர் களும், முஸ்லிம்களும் என்பதை மறந்துவிடா தீர்கள். அனேகமாக எல்லாத் தற்கொலைத் தாக்குதல் நபர்களும் இத்தகைய விடுதி களிலிருந்தே செயற்படுகின்றர்கள் என்பதால் அவை குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எங்கள் அரசு ஏற்கனவே அறிவித்த படி, அப்பாவி மக்களுக்கு அதனால் அசௌ கரியம் ஏதும் ஏற்பட்டிருக்குமானால் அதற் காக நாம் அதிகம் வருத்தமடைகிறோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சில கொலைகள் குறித்து விசாரிப்பதற்கு ஜனா திபதி விசாரண ஆணைக்குழு ஒன்று அமைக் கப்பட்டுள்ளது. அதன் செயற்பாடு, சர்வ தேச நாடுகளின் சுயாதீனப் பிரமுகர்கள் குழுவினரால் கண்காணிக்கப்படுகின்றது.

உண்மை நிலை நிறுத்தப்பட வேண்டும் என நாம் விரும்புவதால் எல்லாக் கண் காணிப்பாளர்களும் எமது கோரிக்கை யின் பேரில் அழைக்கப்பட்டுள்ளார்கள். இப் படி நாம் செய்தமை போன்று சில அரசு களினால் மட்டுமே செய்யமுடியும். ஆனால், வேறு எந்த அரசும் இதுவரை இப்படிச் செய்யவில்லை.

இத்தகைய திறந்த ஆய்வுக்கு நாம் இணங்கியுள்ளோம் ஏனெனில், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரம் ஆகியவற்றை நாம் மதிக்கிறோம் என்பதால்.

துரதிஷ்டவசமாக, எமது இத்தகைய விட்டுக்கொடுப்பும், நேர்மைப் போக்கும் அரச சார்பற்ற சமூகத்தினால் மேலும் தமது பங்களிப்புக்கான நிபந்தனைகளை எம் மீது விதிக்க அவற்றைத் தூண்டியுள்ளன.

இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை

இராணுவத் தீர்வில் எங்களுக்கு நம்பிக் கையில்லை. அதனால்தான் நாடாளுமன் றத்தில் உள்ள அனைத்து ஜனநாயக அர சியல் கட்சிகளையும் சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைத்துள்ளேன்.

சிறுபான்மையினரின் அபிலாஷை களைக் கவனிக்கக் கூடிய அரசியல் சீர்திருத் தத்தை உறுதிப்படுத்தும் அரசியல் கட்ட மைப்பு யோசனையை உருவாக்குவதே சர்வகட்சி மாநாட்டின் நோக்கமாகும்.

சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு யோச னைகளைப் பரிசீலிக்கும் செயற்பாட்டில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஈடுபட்டுள் ளது. இந்தக் குழுவின் பெறுபேறு திருப்தி கரமாக அமையும் என நான் திடமாக நம்புகின்றேன்.

இந்தத் தேவையான நேரத்தில் எங்களுக்கு உதவுமாறு உலகில் உள்ள எங்கள் நண்பர் களை எதிர்பார்க்கிறோம்.

மாவட்ட மட்ட அதிகாரப் பகிர்வை நடை முறைப்படுத்துவதன் மூலம் அடிவேர் மட்டத்தில் உள்ள மக்களுக்கும் அதிகாரம் கிட்டும் என நாம் நம்புகிறோம்.

சரியான அரசியல் சீர்திருத்தத்துக்கு வழி செய்யும் இத்தகைய தீர்வு முயற்சி தொடர்ச் சியாக இடம்பெற்றுப் பயனளிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

என்றாலும், சர்வகட்சி மாநாட்டின் உறுப் பினர்களிடையே இணக்கத்துடன் கூடிய சீர் திருத்த யோசனைத் திட்டம் ஒன்று சர்வ கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் கலந்தா லோசனையின் பெறுபேறாக வரும் என எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். (அசி)

உதயன்

Posted on : Sat Jun 16 8:25:31 EEST 2007

தமிழர் வெளியேற்றம் குறித்து அரசு வருந்துகிறது; ஜெனிவா மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவதாகக் கூறுவது தவறு என்கிறார்

உதயன்

As Sri Lankan president Mr. Mahinda Rajapaksa claims, eviction of Tamils from colombo lodges cannot be considered as a mere event in which only a 300 Tamils out of 20000 thousand Tamil lodge dwellers were forcibly evicted. We have enough reasons to believe that the eviction drama of Sri Lankan government was staged as an experimental operation with an intention to carry out a fully fledged ethnic clensing of Tamils in and around Colombo in near future. Provided, there were no strong oppositions and condemnations from international community for this fascist activity, there is a good chance Sri Lankan government would have gone ahead with its well planned subsequent phases of the operation of ethnic clensing of Tamils

தமிழ் சரிவர வாசிக்கத் தெரியாமல் உளவு பார்க்கும் ஒரே நோக்கத்திற்காக யாழ் இணையத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஒரு சில அன்பர்களின் வசதி கருதி நமது மேற்சொன்ன கருத்து ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. தவறிருந்தால் மன்னிக்கவும்

Edited by vettri-vel

தழிழர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏதாவது சர்ச்சை எழுந்தால் அதை சமாளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் டக்கிளசையும் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்.

erikwithdonkeysia1.gif

தமிழர் இரத்தத்தை சிங்களவரோடு சேர்ந்து உறிஞ்சிக் குடித்து ஒரு பிராணி ஊதிப்பெருத்திருக்கும் தோற்றத்தை பாரீர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.