Jump to content

அம்மா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
உங்கள் வாழ்க்கையில் இறைவனை உணர்ந்து உள்ளீர்களா? சிறு கதைதான் பேருண்மையை உணரவைக்கிறது. 
 
அன்றைக்கும் வழக்கம் போல் பாட புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஆங்காங்கே உடலில் அரிப்பு ஏற்படுவதை போன்ற உணர்வு.பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவசரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் பள்ளிக்கு சென்று விட்டேன்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து உடலில் மீண்டும் அரிப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் பொறுக்க முடியாமல் கைகளை கொண்டு தேய்ப்பது சுரண்டுவது என்று நான் ஆரம்பிக்க.

உடம்பில் அலர்ஜி போல பொரிப்பொரியாக தோல் வீங்க ஆரம்பித்தது.ஏதோ விபரீதம் என்று உணர்ந்து ஆசிரியரின் அருகே போய் நிலமையை எடுத்து சொல்ல அவரோ

வகுப்பை கட் அடிக்க நான் திட்டம் போடுவதாக நினைத்து திட்ட ஆரம்பித்தார்.பொறுமையாக எல்லா வசைபாடுகளையும் வாங்கி கொண்டே "அவ்வைசண்முகி" படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போல சட்டையை திறந்து திடீரென்று ஆசிரியர் முன்பு காண்பித்தேன் வாயடைத்துப்போனார்.

பின்பு சூழ்நிலையை புரிந்து கொண்டு வீட்டுக்கு தகவல் கொடுக்க அந்த சமயத்தில் அப்பா வேலை விஷயமாக வெளியூரில் இருந்ததால் அம்மா அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பி வந்தார்.

பின்பு அங்கிருந்து என்னை கூட்டி கொண்டு மருத்துவமனைக்கு போக அங்கிருந்தவர்கள் இது போன்ற அலர்ஜிக்கு நாட்டு மருந்து தான் சிறந்த பலனை கொடுக்கும் என்று கூற கடைசியாக "நாட்டு மருத்துவம்" செய்யும் வயதான தாத்தாவிடம் சென்றோம்.

என்னை சோதித்து பார்த்து விட்டு சில நாட்டு மருந்துகளை கொடுத்தார்.அடுத்த 10 நாளைக்கு சரியான நேரத்தில் மருந்தை எடுத்து கொள்வது மட்டுமின்றி 3 வேளையும் உப்பு போடாத கஞ்சியை மட்டும் குடிக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்.

அன்று முதல் ஒரு வாரம் கசப்பு மருந்து,உப்பில்லாத கஞ்சி என்று சாப்பிட்டே வாழ்க்கை வெறுத்து விட்டது.எப்பிடியாவது ருசியான உப்பு போட்ட கஞ்சியை சாப்பிட வேண்டும் என்று திட்டம் போட்டு அம்மாவிடம்

"நீங்களும் என் கூட உட்கார்ந்து சாப்பிடுங்கம்மா " என்று கெஞ்சி கூத்தாடி ஒத்துக்க வைத்தேன்.

கொஞ்ச நேரத்தில் என் திட்டப்படி அம்மாவிடம்

"அம்மா விக்குது தண்ணி வேணும்" என்று கூற உடனே சமயலறைக்குள் தண்ணியை எடுக்க சென்றார்.

இது தாண்டா நமக்கு கிடைச்ச நல்ல சான்ஸ் என்று எண்ணி அம்மா தட்டுல இருந்த கஞ்சியை அள்ளி வாயில் போட்டேன்.அடுத்த நிமிஷம் உடல் சிலிர்த்து விட்டது ஏனென்றால் அந்த கஞ்சிலயும் உப்பே இல்ல.

பின் அம்மா வந்து உட்கார்ந்த போது மெதுவாக அம்மாவிடம் கேட்டேன் "எனக்கு தானம்மா பிரச்சனை நீங்க எதுக்கு உப்பில்லாம சாப்பிடுறிங்க"என்று கேக்க

ஒரு புன்னகை மட்டுமே அம்மாவிடம் இருந்து பதிலாக கிடைத்தது.

இறைவன் வேறு எங்கும் இல்லை என் அருகிலே எப்போதும் கூடவே இருப்பதை அன்று உணர்ந்தேன்.

"பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம்

அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா"

என்ற பாடல் வரிகளின் அர்த்தத்தை அன்று நேரில் கண்டேன்.

 

,

 

Posted

அன்னையரின் தியாகங்களை உணர்த்தும் நல்ல ஒரு குட்டிக்கதை. பகிர்வுக்கு நன்றி பாஞ்ச் அண்ணா.

எனக்குப் பிடித்த இன்னொரு அன்னையர் பாடல்:

"விண்ணைப் படைத்தான், மண்ணைப் படைத்தான்;
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்...
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை...
சாமி தவித்தான்; தாயைப் படைத்தான்!"

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.