Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு வாரங்களைத் தொடும் அம்பிகையின் அறப்போர்- மெல்ல உருகும் பிரித்தானிய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரு வாரங்களைத் தொடும் அம்பிகையின் அறப்போர்- மெல்ல உருகும் பிரித்தானிய அரசு

 
PHOTO-2021-03-11-18-47-37-696x392.jpg
 45 Views

பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அம்பிகையின் அறப்போர் இன்றுடன் 13 ஆவது நாளை எட்டியுள்ளது.

இனப் படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும்  சிறீலங்கா அரசிற்கு மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா இடமளிக்கக்கூடாது உட்பட நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையாவது பிரித்தானியா நிறைவேற்ற வேண்டுமென நீரை மட்டு அருந்தி உண்ணாமல் தன்னை உருக்கிவரும் அம்பிகையின்  உடல் நிலை  இரு  வாரங்களை அண்மிக்கும் நிலையில் மிகவும் மோசமடைந்துள்ளது.

அம்பிகையின் கோரிக்கைக்கு பதிலளித்து போராட்டத்தை இடைநிறுத்தி அவரை காப்பாற்ற வேண்டிய பிரித்தானிய அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது. எனினும் பிரித்தானிய அரசியல் மட்டத்தில் தற்போது இப்போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமையை அறிய முடிகின்றது.

இந்நிலையில், அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒவ்வொரு நாழும் நடைபெறும் மெய்நிகர் எழுச்சி நிழகழ்வு வழமைபோல் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  மும்மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இன்றைய நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், மற்றும் ஆதரவாளர்களின் சிறப்புரைகளும் எழுச்சி கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, நேற்றைய 12 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வு சித்தி விநாயகர் ஆலயம், ஹரோ, லண்டனில் சிவகாமரத்தினம் சிவஸ்ரீ வாமதேவ வாமராஜ குருக்களினால் நிறைவேற்றப்பட்ட அம்பிகைக்கான சிறப்பு பூஜையுடனும் மன்னார் ஆயரின் சார்பில் மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம், தாயகத்திலிருந்து மௌலவி ரியாஸ் ஆகிய மதத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து, ஆளுங்கட்சியான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Dean Russel (Watford MP) அவர்கள் அம்பிகையின் போராட்டத்துக்க ஆதரவு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.

அதனையடுத்து முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) ஜேர்மனி சார்பாக திரு. தர்மலிங்கம் குமணன், தமிழகத்திலிருந்து திரைப்பட இயக்குநர்  சோழன் மு. களஞ்சியம் ஆகியோரின் சிறப்புரைகளும் தாயகத்திலிருந்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமாகிய வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகாவின் அம்பிகையின் போராட்டம் தொடர்பில் தாயக மக்களின் எதிர்பார்ப்பு பற்றிய கருத்தும் கவிதையும் கவிஞர் காசியானந்தனின் வரிகளில் தேனிசை செல்லப்பா பாடிய ‘உலகே உனக்கு கண்ணில்லையா?’ என்ற பாடலை தனபாரதி நேமனின் இசையில் சந்திரமோகன் பிரதியாக்கம் செய்து சிறப்புப்பாடலும் இடம்பெற்றது.

இதனிடையே, அம்பிகையின் போராட்டத்தின் எதிரொலியாக பிரித்தானிய பிரதான அரசியல் கட்சிகளிடையே இடம்பெற்றுள்ள நகர்வுகள் மற்றும் அரசிடமிருந்து கசிந்துள்ள முக்கிய தகவல்கள் தொடர்பில் முன்னாள் தமிழீழ வைப்பக ஆளுகை மேலாளரும் பொருளாதார ஆய்வாளருமான திரு. பாலா மாஸ்டர் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அத்துடன் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இணைய வழியூடாக நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தொடரில் பிரதான அமர்வின் போது அன்னை அம்பிகை செல்வகுமார் வழங்கிய உரை ஒளிபரப்பப்பட்டது.

13 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

 

https://www.ilakku.org/?p=44385

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகை அம்மையாரின் போராட்டத்தை அனைவரும் பலப்படுத்துவோம் – த.தே.ம.முன்னணி!

AdminMarch 11, 2021
FB_IMG_1615500735996.jpg?resize=536%2C54

11.03.2021
திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு
அனைவரும் ஒத்துழைப்போம்.

திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் 13வது நாளை எட்டியிருக்கும் நிலையில், தமிழ்மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அவரது அகிம்சைப் போராட்டத்துக்கு வழங்கிவரும் ஆதரவுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

அம்மையாரின் அகிம்சை முறையிலான போராட்டத்தினை சர்வதேச தரப்புக்கள் மதித்து, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல் மற்றும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை திறம்பட விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்-

சிரியாவில் நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (I.i.i.M) வலியுறுத்தியும், இதன்மூலம், சிறிலங்கா அரசின் சர்வதேச விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்கான சான்றுகள் மற்றும் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சேகரிக்கப்பட்டு குற்றவியல் வழக்குகளுக்கு சிறிலங்காவைப் பாரப்படுத்த வேண்டும் என்பதையும், உருவாக்கப்படும் i.i.i.M மிகக்குறுகிய காலஅவகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இலங்கையில் தற்போதும் மேற்கொண்டு வரும் தமிழர் உரிமை மீறல்களுக்காக தொடர்ந்து கண்காணிக்கவும், இலங்கையில் OHCHR கள இருப்பைக் கொண்டிருக்கவும் விசேட பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்பதையும்,

இலங்கையின் வடகிழக்குத் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதுடன், சுயநிர்ணய உரிமை கோரும் உரித்துடையவர்கள் என்பதன் அடிப்படையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்மானிக்கும் வகையில், ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைக்கவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தி அம்மையாரின் உணவு தவிர்ப்புப் போராட்டம் 13வது நாளாக நடைபெற்று வருகின்றது.

ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக சர்வதேச அரங்கில் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா, சர்வதேச நடவடிக்கைக்கான ஐ.நா. மனித உரிமை ஆணையரின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை உதாசீனம் செய்வதும், தன்னுடையதும் தனது அணிசார்ந்த நாடுகளதும் பூகோள நலனை மட்டும் கருதி பிரித்தானியா செயற்படுவதும், ஈழத்தமிழ் மக்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையளித்துள்ளது

தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு பிரித்தானியாவும் பொறுப்புக்கூறவேண்டிய கட்டாயம் உள்ளது. காலணித்துவ ஆட்சியின் முன்னர் தமிழர்கள் தேசமாகவே வாழ்ந்திருந்தோம்.
சிறிலங்காவிற்கு சுதந்திரத்தை வழங்கும்போது, தமிழர்களுக்குரிய அந்தஸ்தை வழங்கும் வகையில் பிரித்தானியா பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், தமிழர்கள் ஒடுக்குமுறைகளையும், இனவழிப்பையும் சந்தித்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்மக்கள் இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குள் சிக்குண்டே வாழ்ந்து வருகின்றோம்.

திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 13 வது நாளை அடைந்திருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு தனது நீதிக்கான கதவுகளை இதயசுத்தியுடன் திறந்து, தமிழர் வாழ்வில் ஒளியேற்ற முன்வரவேண்டும்.
அத்துடன், ஏனைய சர்வதேச சக்திகளையும், தமிழர் தரப்பின் நீதிக்காக செயற்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்,

செல்வராசா கஜேந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர்.
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.
 

http://www.errimalai.com/?p=62059

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.