Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் மற்றும் , தம்பிகளின் விசமத்தனமான பொய்ப் பிரசாரத்திற்கான உண்மைப் பதில் ! ஆவணங்கள் இணைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் மற்றும் , தம்பிகளின் விசமத்தனமான பொய்ப் பிரசாரத்திற்கான உண்மைப் பதில் ! ஆவணங்கள் இணைப்பு

 

33147C61-8594-4A6F-A8A8-F6227FC8EAFD-300

விசமத்தனமானதும் , வெறும் பொய்யானதுமான பிரச்சாரங்கள் மூலமாக மக்களை ஏமாற்றும் செயற்பாட்டினை MPகளும் சில தம்பிகளும் , அரசியல் தேவைக்காக செய்து வருவதை அறிய முடிகிறது .
அண்மையில் வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள காலபோட்ட மடுவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட சந்திரகாந்தன் பா. உ மூலமாக பிரசார நோக்கில் தவறான விடயமொன்று கூறப்பட்டுள்ளது . அது பற்றி அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள் . மேலும் அப்பேச்சு நேரலை மூலமாகவும் அம்பலமாகியது. அதாவது முன்னாள் பா.உ சிறிநேசன் சொந்தவூருக்கான வீதியையே அமைக்கவில்லை இவர்கள் எப்படி மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப் போகின்றார்கள் . என்று கூறியிருந்தார் .

உண்மையில் வீதியமைப்பு , பால அமைப்பு , வீடமைப்பு , அரிசியாலையமைப்பு , ஆலய தேவாலயங்களின் அபிவிருத்தி , பாடசாலை அபிவிருத்தி , மைதான அபிவிருத்தி , குடிநீர் வழங்கல் , இராணுவ முகாம்கள் அகற்றல் , காணி விடுவிப்பு , ஊடகச் சுதந்திரம் , ஆட்கள் கடத்தப்படாதிருத்தல் , கப்பம் பெறப்படாமல் இருத்தல் , மயிலத்தமடு மாதவணை காணி அபகரிப்புகளைத் தவிர்த்தமை என்று பொருளியல் , அரசியல் , சமூகம் என்று பல அபிவிருத்திகள் சார்ந்ததும் , உரிமைகள் சார்ந்ததுமான பல அபிவிருத்திகளைச் செய்துள்ளோம் . இவற்றுக்காக பல்வேறு அமைச்சுகள் ஊடாகப் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை அபிவிருத்திக்காகப் பெற்றுக் கொடுத்துள்ளோம் .

 

மகிழவட்டவான் வீதி (றொபேட்சன் வீதி ) கரவெட்டி வீதிகளை அமைக்காமைக்கான காரணங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும் .

I ROAD
(Intergrated Road – ஒருங்கிணைந்த வீதி) என்ற செயற்றிட்டத்தில் ADP ( ஆசிய அபிவிருத்தி வங்கி ) நிதி மூலமாக 125 வீதிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாகாண சபை உறுப்பினர்களும் ( 2012 – 2017 காலப்பகுதியில் ) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் உட்பட பிரதமச் செயலாளர் DMS அபய குணவர்தன, ACLC சித்திரவேல் போன்றவர்கள் கூறியிருந்தார்கள் . இந்த
I ROAD இனுள் மகிழவட்டவான் , கரவெட்டி வீதிகளும் உள்ளடங்கியிருந்தன .

தரமான காபற் வீதி அமைக்கவுள்ளதால் அவற்றை தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டியதில்லை என்று அப்போது மாகாண சபை உறுப்பினர்கள் கூறியிருந்தார்கள். இதனை அப்போதைய மா.ச.உ சந்திரகாந்தன் மறந்திருக்க நியாயமில்லை . மறந்திருந்தால் ஆவண ரீதியாக நினைவூட்ட விரும்புகின்றேன் .

வீதியமைப்புக்காக RDAஅமைச்சு , கிராம எழுச்சித்திட்டம் , கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கள் ஊடாக அபிவிருத்திப் பிரேரணைகள் மூலமாக சுமார் 100 கோடி ரூபாய்களுக்கும் அதிகளவான நிதிகளை நாம் பெற்றிருந்தோம் . இந் நிதியிலிருந்து மகிழவட்டவான், கரவெட்டி வீதிகளைச் செய்வதற்கு முயன்ற போது I ROAD செயற்றிட்ட வீதிகளைத் தவிர்க்குமாறு மாகாண சபை உறுப்பினர் சிலரும் , RDA அதிகாரிகளும் ஆலோசனை கூறியிருந்தனர் . இதனால் அந்த நிதியைக் கொண்டு வாகரையில் இருந்து துறைநீலாவணை வரை ஒவ்வொரு வட்டாரங்களிலும் இயன்ற வரை நானும் சக பாராளுமன்ற உறுப்பினர்களும் பல அபிவிருத்திகளைச் செய்திருந்தோம்.

SUN POWER, NAVALOGA, MAGA என்ற கம்பனிகள் I ROAD வீதிகளை 2020 இல் இருந்து காலம் கடந்து செய்து வருவதை இப்போதைய MPகள் அறியாமல் இருக்க முடியாது.

 

ஆட்சி மாற்றத்திற்கு முன்பு 2020 இல் Sun Power கம்பனி இவ் வீதிகளை அமைக்க ஒப்பந்தம் செய்திருந்தது . ஆட்சி மாற்றத்தின் பின்னர் , மகிழவட்டவானில் வீதி அமைப்பதற்காக குவிக்கப்பட்டிருந்த கற்கள் மீண்டும் அள்ளப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது . இது ஏன் என்று தற்போதைய ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும் . இது ஏன் நடைபெற்றது என்று எனக்குத் தெரியாது.

களுவங்கேணி வீதி நீண்ட காலமாகச் செய்யப்படாமல் இருந்ததற்கான விளக்கத்தினை சந்திரகாந்தன் பா.உ அறிவார் . இது பற்றி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்ட போது,

“வோட்டுப் போடவில்லை அதனால் றோட்டுப் போடவில்லை” என்று யார் மாகாணசபையில் சொன்னார் என்பதை மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள் .

பொய்களை சொல்லவதற்கு சிறப்புரிமை இருக்கின்றது என்றால் உண்மைகளைச் சொல்வதற்கு எமக்கும் உரிமை உள்ளது . இந்த உண்மையை சொல்வதற்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றி .
பொய்கள் சொல்லப்படும் பொதேல்லாம் உண்மை விளக்கங்கள் அளிக்கப்படும்.

தயவு செய்து பண்ணையாளர்களின் மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரைக் காணிகளை மீட்டுக் கொடுங்கள் ஏற்கனேவே நாங்கள் மீட்டுக் கொடுத்ததை பண்ணையாளர்கள் அறிவார்கள்.

மேலும் தொல்லியல் இடங்கள் என்று காணிகள் அபகரிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துங்கள்,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வைக் கொடுங்கள் அரசியல் கைதிகளை விடுவிக்க பாருங்கள் தவறான பிரச்சாரங்களைத் தவித்துக் கொள்ளுங்கள் .

AEB1ED1D-CE47-4DF1-A1DC-803E239378DE-225

7DFC4F77-4E90-4872-9D5E-8C6AA893C1FC-225

C8C82C75-B49B-4163-A295-52DDA1E719E4-225

841967A0-8517-44D7-B460-46EF43467A3D-225


 

https://www.meenagam.com/பிள்ளையான்-மற்றும்-தம்ப/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.